Tamil Star |
- ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 1 கோடி கையளிப்பு: மும்முனை போட்டி!
- யாழ்தேவியை மஹிந்தவுடன் இந்திய தூதரும் சேர்ந்து திறந்து வைப்பார்!!
- மேற்கு ஆபிரிக்க நாடுகளில் உள்ள கனடியர்களை நாடு திரும்பும்படி கனேடிய அரசு அறிவித்துள்ளது!
- இள வயதில் நோபல் பரிசு பெறும் Malala Yousafzai கனடாவின் கௌரவ குடியுரிமை பெற வருகின்றார்!
| ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 1 கோடி கையளிப்பு: மும்முனை போட்டி! Posted: 11 Oct 2014 09:36 AM PDT
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிதியைக் கொண்டு, பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளதாக கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கும் என அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தமது வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்துள்ளது. எனினும் நிறுத்த போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரைஅந்த கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவரை பொது வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது. இதனிடையே லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து மற்றுமொரு வேட்பாளரை நிறுத்த தயாராகி வருகின்றன. இந்த வேட்பாளருக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழ்தேவியை மஹிந்தவுடன் இந்திய தூதரும் சேர்ந்து திறந்து வைப்பார்!! Posted: 11 Oct 2014 09:32 AM PDT
பளையிலிந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைப்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ரயில் முற்பகல் 10.30 மணிக்கு யாழ். பிரதான ரயில் நிலையத்தை வந்தடையும். இதேவேளை, வரும் வழியில் கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய ரயில் நிலையங்களையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேற்கு ஆபிரிக்க நாடுகளில் உள்ள கனடியர்களை நாடு திரும்பும்படி கனேடிய அரசு அறிவித்துள்ளது! Posted: 11 Oct 2014 09:15 AM PDT
இபொலா நோய் பரவி வரும் மேற்கு ஆபிரிக்க நாடுகள் மூன்றில் உள்ள கனடியர்கள் நாடு திரும்பும்படி கனேடிய சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. கினி. சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் 216 கனடியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பும்படி அறிவுறுத்துவதாக சுகாதார அமைச்சர் ரோனா அம்ரோஸ் (Rona Ambrose) தெரிவித்தார். போக்கு வரத்து வசதிகள் தடைப்படுவதற்கு முன்னதாக கினி, சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் உள்ள கனடியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இபோலா நோய் பரவியுள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள், நோய் பிடித்தமைக்கான அறிகுறி காணப்படும் பட்சத்தில் விமான நிலையத்தில் வைத்திய பரிசோதனைக்கு இலக்காக வேண்டும் எனவும் அமைச்சர் அம்ரோஸ் தெரிவித்துள்ளார்This posting includes an audio/video/photo media file: Download Now |
| இள வயதில் நோபல் பரிசு பெறும் Malala Yousafzai கனடாவின் கௌரவ குடியுரிமை பெற வருகின்றார்! Posted: 11 Oct 2014 09:08 AM PDT
இந்த ஆண்டிற்கன நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான Malala Yousafzai கனடாவின் கௌரவ குடியுரிமை பெறுவதற்காக ஒக்டோபர் மாதம் 22-ந்திகதி கனடா வருகின்றார். கனடிய பிரதம மந்திரி Stephen Harper, Yousafzai-யை ஒரு கனடிய கௌரவ பிரஜையாக்குவதாக கடந்த வருடத்தின் பாராளுமன்ற உரையின் போது உறுதியளித்திருந்தார். இச்செய்தியை வெள்ளிக்கிழமை மனிரோபாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கௌரவத்தை பெறுவதற்கு இம்மாத இறுதியில் கனடா வருவார் எனவும் கூறியுள்ளார். கனடாவின் கௌரவ குடியுரிமை பெறும் ஆறாவது நபர் Yousafzai-ஆவார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





