மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இடநெருக்கடியால் சந்திரபாபு நாயுடு வீடு மாறுகிறார்: அரசு பங்களாவுக்கு செல்கிறார்
- மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு குஷ்பு ஆதரவு
- மத்திய மந்திரிசபையில் 5 புதிய மந்திரிகள்: பிரதமர் மோடி முடிவு
- கேரள மந்திரியை தாக்க முயன்றதாக இடுக்கி எம்.பி. மீது வழக்கு
- திருப்பதியில் பக்தர்களுக்கு செய்த ஏற்பாடுகள் குறித்து சந்திரபாபு நாயுடு விசாரணை
- ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் குண்டு வீச்சில் இந்தியர்கள் 5 பேர் பலி
- மேகாலயாவில் கொடூரம்: மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை
- பக்ரீத் பண்டிகை: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து
- மேற்கு வங்காளத்தில் இந்திய விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
- சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தகர்க்க சதி: குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்
- மின் பகிர்மான நிலையத்தின் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பரிதாப பலி
- போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு பா.ஜனதா கண்டனம்
- நேபாளத்தில் சார்க் மாநாடு: பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் சந்தித்து பேச வாய்ப்பு
- கூட்டணி ஆட்சிக் காலம் எல்லாம் மலையேறி விட்டது: மோடி தேர்தல் பிரசாரம்
- நாகாலாந்தில் குண்டுவெடித்து சிறுவன் படுகாயம்
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இணையதளம்: பிரதமர் மோடி 16-ந் தேதி தொடங்கிவைக்கிறார்
- ஜம்மு: வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு யாத்திரை சென்றவர் மாரடைப்பால் மரணம்
- காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்: இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
- மேற்கு வங்காளத்தில் நண்டு பிடிக்க சென்றவரை புலி பிடித்துச் சென்று தின்றது
| இடநெருக்கடியால் சந்திரபாபு நாயுடு வீடு மாறுகிறார்: அரசு பங்களாவுக்கு செல்கிறார் Posted: 05 Oct 2014 11:00 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் சொந்த வீடு உள்ளது. நீண்ட வருடமாக இந்த வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 10 ஆண்டு காலம் முதல்– மந்திரியாக இருந்தபோதும், 9 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் அவர் அரசு வீட்டுக்கு செல்லவில்லை. 6 ஆயிரம் சதுரஅடி கொண்ட இவரது வீட்டில் 3 படுக்கை அறைகள்தான் உள்ளது. |
| மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு குஷ்பு ஆதரவு Posted: 05 Oct 2014 10:58 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரதீய ஜனதாவில் அவர் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பு தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார். கட்சி தலைமையை தேர்ந்தெடுப்பது குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதால் முன்னணி தலைவர்களின் கோபத்துக்கு ஆளானதால் அவரது வீட்டில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து கடந்த ஜூன் மாதம் வெளியேறினார். |
| மத்திய மந்திரிசபையில் 5 புதிய மந்திரிகள்: பிரதமர் மோடி முடிவு Posted: 05 Oct 2014 10:48 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த மே மாதம் பதவி ஏற்றது. அவரது மந்திரி சபையில் 45 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இது மத்திய அரசின் மிகச் சிறிய மந்திரி சபையாக கருதப்படுகிறது. மத்திய மந்திரிகளில் சிலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அருண் ஜெட்லியிடம் நிதி இலாகாவும், பாதுகாப்பு துறையும் உள்ளது. |
| கேரள மந்திரியை தாக்க முயன்றதாக இடுக்கி எம்.பி. மீது வழக்கு Posted: 05 Oct 2014 10:47 PM PDT கேரள மாநிலம் எளம்பல சேரி அருகே வனப்பகுதியில் சிறு சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்றது. பொதுப்பணித்துறை சார்பில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட இந்த பாலத்தை வனத்துறையினர் இடித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள வனத்துறை மந்திரி திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு காரில் அவர் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது இடுக்கி தொகுதி எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ் மந்திரியின் காரை வழிமறித்தார். இதனால் அவருக்கும் மந்திரி திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அது தள்ளுமுள்ளாகவும் மாறியது. |
| திருப்பதியில் பக்தர்களுக்கு செய்த ஏற்பாடுகள் குறித்து சந்திரபாபு நாயுடு விசாரணை Posted: 05 Oct 2014 10:16 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த (செப்டம்பர்) மாதம் 26–ந் தேதியில் இருந்து கடந்த 4–ந்தேதி வரை 9 நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. பிரம்மோற்சவ விழா முடிந்தும், ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. தசரா பண்டிகை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. அதேநேரத்தில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு கடந்த 3–ந்தேதியில் இருந்து நேற்று |
| ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு Posted: 05 Oct 2014 10:13 PM PDT டெல்லிக்கு அடுத்த படியாக ஐதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் குண்டு வீச்சில் இந்தியர்கள் 5 பேர் பலி Posted: 05 Oct 2014 10:08 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள ராணுவ நிலைகள் மற்றும் இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 100 தடவைக்கும் மேல் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி உள்ளது. இந்த மாதத்தில் கடந்த 1–ந்தேதி |
| மேகாலயாவில் கொடூரம்: மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை Posted: 05 Oct 2014 09:36 PM PDT மேகாலயாவில் கரோ ஹில் பகுதியில் காணாமல் போன 15 வயது பெண் தலை வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அடர்ந்த காட்டில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். ஆடையற்ற நிலையில் காணப்பட்ட அப்பெண் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள போலீசார், அப்பெண்ணின் தந்தையே அவளை கற்பழித்து கொன்றிருக்ககூடும் என்று அவளது தாயாரே புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர். |
| பக்ரீத் பண்டிகை: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து Posted: 05 Oct 2014 08:15 PM PDT பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், 'இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகம், வாய்மை மற்றும் வழிபாட்டை உணர்த்தும் பக்ரீத் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்திருநாளில் நாட்டிலும், உலகத்திலும் அன்பு, |
| மேற்கு வங்காளத்தில் இந்திய விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை Posted: 05 Oct 2014 05:19 PM PDT மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூரில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து சக அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். |
| சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தகர்க்க சதி: குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் Posted: 05 Oct 2014 05:08 PM PDT சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரில் தகர்ப்பதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்தது தொடர்பான உளவுத் தகவல்கள் மத்திய உளவு அமைப்பான ஐ.பி.க்கு தெரிய வந்தது. |
| மின் பகிர்மான நிலையத்தின் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பரிதாப பலி Posted: 05 Oct 2014 05:06 PM PDT வடகிழக்கு டெல்லியின் ஹர்ஷ் விஹார் பகுதியில் வன்பொருள் விற்பனை செய்யும் கடையை கமல் என்பவர் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவனான தனது மகன் பிரகாஷ் ராணாவை அவர் நேற்று தனது கடைக்கு அழைத்து வந்திருந்தார். இதே பகுதியில் துணை மின் பகிர்மான நிலையம் ஒன்று உள்ளது. இந்த நிலையத்துக்கு நேற்று சரக்குகளை ஏற்றிவந்த ஒரு லாரி அங்குள்ள மின் கம்பத்தின் மீது மோதியதில் கம்பம் சரிந்து விழுந்தது. |
| போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு பா.ஜனதா கண்டனம் Posted: 05 Oct 2014 04:40 PM PDT இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. அதை மீறி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த மாதத்தில் 10-வது தடவையாக நேற்று பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. பூஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு |
| நேபாளத்தில் சார்க் மாநாடு: பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் சந்தித்து பேச வாய்ப்பு Posted: 05 Oct 2014 04:33 PM PDT சார்க் என்னும் தெற்காசிய பிராந்திய நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு அடுத்த மாத(நவம்பர்) இறுதியில் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய 8 நாடுகள் கலந்து கொள்கின்றன. |
| கூட்டணி ஆட்சிக் காலம் எல்லாம் மலையேறி விட்டது: மோடி தேர்தல் பிரசாரம் Posted: 05 Oct 2014 04:32 PM PDT மராட்டிய மாநில சட்டசபைக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள கோண்டியா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- மராட்டியத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, இந்த மாநிலத்தின் பணத்தை மட்டும் சுரண்டவில்லை. பெருமையையும் சேர்த்து சுரண்டி எடுத்து விட்டது. |
| நாகாலாந்தில் குண்டுவெடித்து சிறுவன் படுகாயம் Posted: 05 Oct 2014 03:51 PM PDT நாகாலாந்தில் உள்ள கோமாவில் தேவாலய அலுவலகம் கட்டும் இடத்தில் இருந்து அதிகசக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் ஒரு சிறுவனுக்கு கிடைத்தது. இதனை பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்பதற்காக குப்பை பொறுக்கும் மற்றொரு சிறுவனிடம் கொடுத்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குண்டு வெடித்து சிதறியது. இதில் சிறுவன் |
| தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இணையதளம்: பிரதமர் மோடி 16-ந் தேதி தொடங்கிவைக்கிறார் Posted: 05 Oct 2014 03:22 PM PDT தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள், சந்தாதாரர்களாக உள்ளனர். இவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, 'யு.ஏ.என்' என்னும் உலகளாவிய கணக்கு எண் வழங்கி உள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுகிறபோதும், இந்த எண்ணை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். |
| ஜம்மு: வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு யாத்திரை சென்றவர் மாரடைப்பால் மரணம் Posted: 05 Oct 2014 03:10 PM PDT வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி ஆலயமும் ஒன்றாகும். கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 5200 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள், அன்னை வைஷ்ணவி தேவியின் அருள் வேண்டி வருகின்றனர். |
| காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்: இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் Posted: 05 Oct 2014 02:53 PM PDT காஷ்மீர் எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நேற்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த 5 நாட்களில் நடத்தப்பட்ட 10-வது தாக்குதல் இதுவாகும். காஷ்மீர் எல்லையையொட்டி இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. |
| மேற்கு வங்காளத்தில் நண்டு பிடிக்க சென்றவரை புலி பிடித்துச் சென்று தின்றது Posted: 05 Oct 2014 01:56 PM PDT மேற்கு வங்காள மாநிலம், 24-வது தெற்கு பர்கானா மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அடர்ந்த சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள திர் காலி வனப்பகுதியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த குளத்தில் நேற்று நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, புதர் மறைவில் பதுங்கிப் பதுங்கி, குளத்தின் அருகே வந்த ஒரு புலி, ஒரே பாய்ச்சலில் அவர்களில் ஒருவரின் கழுத்தை பிடித்து கவ்விச் சென்றது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |