Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்குமாறு ஜே.வி.பி.யிடம் ஐ.தே.க கோரிக்கை?

Posted: 05 Oct 2014 10:39 PM PDT

unp_jvp

unp_jvpஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்குமாறு ஜே.வி.பி யிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளார். எனவே ஜே.வி.பி.யின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக ஜே.வி.பி.யிடம் கோரிக்கை விடுக்க உள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து விரைவில் பேசவுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடாது பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஜே.வி.பி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிறிஸ் நோனிஸ் வெற்றிடத்திற்கு சானக தல்பாஹேவா நியமனம்!

Posted: 05 Oct 2014 10:28 PM PDT

chris_nonis

chris_nonisபிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையை அடுத்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் நிர்வாகக் கடமைகளை பொறுப்பேற்குமாறு மாலைதீவின் உதவி உயர்ஸ்தானிகர் சானக்க எச் தல்பாஹேவா கேட்கப்பட்டுள்ளார். தம்மை அமெரிக்காவில் வைத்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தாக்கியதை அடுத்து கிறிஸ் நோனிஸ் பதவிவிலகினார். இந்தநிலையில் குறித்த பதவிவிலகல் தொடர்பாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அதனை நோனிஸ் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவரின் பதவிவிலகலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. தற்காலிக அடிப்படையில் பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தல்பஹேவாவிற்கு பணிகளை பொறுப்பேற்றுக்கொள்ள உடனடியாக லண்டன் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய வெளிவிவகார அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! எட்டோபிகோக் பகுதியில் பரபரப்பு

Posted: 05 Oct 2014 10:06 PM PDT

Corso

Corsoகனடாவில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம் அடைந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் இந்த விபத்து The Queensway and St. Lawrence Avenue, west of Islington. என்ற பகுதியில் உள்ள தொடர்மாடி வீட்டு மொட்டை மாடியில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக டொரண்டோ ஹைட்ரோ பவர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நடந்த போது மூன்று நபர்கள் இருந்ததாகவும், அதில் ஒருவருக்கு மட்டும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், அவரிடம் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.எஸ்.ஐ.எஸ். மனித வேட்டையாளர்களின் அடுத்த இலக்கு அமெரிக்க பிணைக்கைதி?

Posted: 05 Oct 2014 09:54 PM PDT

isis

isisஅமெரிக்கா- இஸ்லாமிய தீவிர வாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ்.இனரிடம் பிணைக்கைதிகளாக அகப்பட்டுக்கொண்டவர்களில் அமெரிக்காவை சேர்ந்த பீட்டர் எட்வேட் காஸ்சிக் என்பவரையும் கொல்லப் போவதாக மிரட்டல் விடுப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. பீட்டர் எட்வேட் காஸ்சிக் என்பவரும் தொண்டு பணிகள் செய்து வந்தவர். பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிசெய்து வந்த இவரை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய தீவிர வாதிகள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஈராக் சிரியாவில் தீவிரவாதிகளிற்கெதிராக அமெரிக்காவின் தலைமையிலான வான்வெளி கூட்டுத்தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இதனை எதிர்த்து தங்களிடம் பிணைக்கைதிகாளக இருந்த மூவரின் தலைகளை துண்டித்து கோரக்கொலை செய்து அதனை வீடியோ படமாக்கி உலகம் முழுவதும் அதிர்ச்சி அடைய செய்தனர். தங்களது கோரத்தாண்டவத்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளாது அண்மையில் நாலாவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொணடு நிறுவன பணியாளர் அலன் ஹென்னிங் என்பவரையும் படுகொலை செய்து அதனையும் படமாக்கி உலகத்திற்கு மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். கடைசியாக அனுப்பபட்டிருந்த வீடியோவின் இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர் எட்வேட் காஸ்சிக்கையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது. இதனால் அவருக்கும் உயிராபத்து என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதம மந்திரி கேமரூன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மிரட்டலை கேள்விப்பட்டதும் தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு அடுத்த பலி தங்கள் மகன் என அதிர்ச்சியும் பீதியும் கொண்ட பீட்டரின் பெற்றோர் தங்கள் மகனை உயிருடன் விட்டு விடும்படி தீவிரவாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™