Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அதை எப்படி நீக்குவது

Posted: 23 Oct 2014 01:32 PM PDT

நண்பர்களே நான் hp லப்டப் வங்கி உள்ளேன் அதை என் மகனுக்கு கொடுக்க இருக்கிறேன் அதில் என்னுடைய Skype அccஔண்ட் உள்ளது அதை எப்படி நீக்குவது என்னால் நீக்க முடிய வில்லை விண்டோஸ் 8.1 டஜ் ஸ்க்ரீன் தயு செய்து விளக்கமாக sollauom

தமிழகத்தில்ரூ.175 கோடிக்கு மதுபானம் விற்பனை:

Posted: 23 Oct 2014 01:19 PM PDT

தீபாவளிக்கு, டாஸ்மாக் கடைகளில், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.இந்த கடைகளில், நாள்தோறும், அரசு நிர்ணயித்துள்ள விலையில், சரசாரியாக, 75 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகின்றன.டாஸ்மாக் கடைகளில், கடந்த, 2012, தீபாவளி, 126 கோடி; 2013ல், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின.நடப்பாண்டில், தீபாவளிக்கு, 175 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனை செய்ய, அதிகாரிகள் முடிவு ...

40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் துபாய் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு

Posted: 23 Oct 2014 12:59 PM PDT

பதிவு செய்த நாள் 24 அக் 2014 01:05 துபாய் : கேரளாவிலிருந்து, 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, கண்டுபிடிக்கப்பட்டார். இதனால், அவரின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளா திருச்சூர் மாவட்டம், சாக்கவாடுவை சேர்ந்தவர் அப்துல்லா புனதில் உஸ்மான், 60. கடந்த, 70ம் ஆண்டுகளில் துபாய் சென்று, அங்குள்ள ஹோர் அல் அன்ஸ் பகுதியில், 'அராப் நேஷனல் ஹவுஸ்' என்ற இடத்தில், சமையல்காரராக பணியாற்றியுள்ளார். அதன்பின் காணாமல் போன ...

இந்தியருக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted: 23 Oct 2014 12:46 PM PDT


பதிவு செய்த நாள்
23 அக்
2014
23:55 வாஷிங்டன்:அமெரிக்க வாழ் இந்திய மாணவர்சகீல் தோஷிக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் சாதனம் கார்பன் டை ஆக்சைடு மாற்றுகிறது கரியமலவாயுவை குறைக்கிறது. அவரின் இந்த சாதனையை பாராட்டி அமெரிக்காவின் டிஸ்கவரி எஜூகேஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து கவுரபடுத்தியிருக்கிறது.

தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்?

Posted: 23 Oct 2014 12:43 PM PDT

தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், வழக்கமாக வெளியிடப்படும் வாழ்த்துச் செய்தி, இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை. அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச் செயலரும், தமிழக அரசின் சார்பில், முதல்வரும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவர். பொதுச் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர், இதுவரை ஒருவராகவே இருந்ததால், ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி மட்டும் வெளியாகும்.தற்போது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் உள்ளனர். அதனால், இருவரும், தனித்தனியாக தீபாவளி வாழ்த்து ...

திரை விமர்சனம் » கத்தி

Posted: 23 Oct 2014 12:41 PM PDT

படம் : கத்தி நடிகர் : விஜய் நடிகை : சமந்தா இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ் திரை ''குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் ...

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்

Posted: 23 Oct 2014 11:46 AM PDT

பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில் தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான் தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு. ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட. தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் ...

தெளிவு தேவை

Posted: 23 Oct 2014 10:59 AM PDT

ஆன்லைனில் தங்கம் வாங்குவது சரியா தவறா தெளிவு படுத்தவும்...

ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தீர்ப்பு

Posted: 23 Oct 2014 09:32 AM PDT

ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தீர்ப்பு அளித்திருப்பதின் மூலமாக கீழ்கண்ட நாடுகளில் இனிமேல் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம். புலிகள் மீதான தடையை இந்திய அரசும் உடனே நீக்க வேண்டும். 1.ஆஸ்திரியா... 2.பெல்ஜியம்.. 3.பல்கேரியா.. 4.குரோவசியா.. 5.செக் குடியரசு.. 6.சைபிரஸ்... 7.டென்மார்க்.. 8.எஸ்டோனியா.. 9.பின்லாந்து.. 10.பிரான்ஸ்.. 11.ஜெர்மனி.. 12.கிரீஸ்.. 13.ஹங்கேரி.. 14.அயர்லாந்து... 15.இத்தாலி.. 16.லாத்வியக் குடியரசு.. 17.லித்துவேனியா.. 18.லக்ஸம்பர்க்.. 19.மால்ட்டா.. 20.நெதர்லாந்து.. 21.போலாந்து... 22.சிலோவாக்கியா.. 23.போலாந்து.. 24.போர்ச்சுக்கல்.. 25.சுலோவீனியா.. 26.ருமேனியா.. 27.ஸ்பெயின்.. 28.ஸ்வீடன்.. 29.இங்கிலாந்து

உதவி தேவை - வால்பேப்பரில் பெயர் எழுத தள முகவரி வேண்டும்

Posted: 23 Oct 2014 09:06 AM PDT

வால்பேப்பரில் பெயர் எழுத தள முகவரித் தேவை
நான் அப்லோடு செய்யும்  வால்பேப்பரில் பெயர் எழுத தள முகவரித் தேவை..
உதவுங்கள்  நண்பர்களே...

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!

Posted: 23 Oct 2014 07:49 AM PDT

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….! இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதயத் ...

ஆன்மீக ஆர்வலர்களுக்கு அருமையான விளக்கங்கள்.

Posted: 23 Oct 2014 07:47 AM PDT

கனடாவில் இருக்கும் மருத்துவர் டாக்டர் லம்போதரன் அவர்களின் ஆன்மீக தொண்டு அளப்பரியது. அவருடைய இணையப்பக்கத்துக்கு சென்று பாருங்கள். அத்துடன் அவருடைய வானொலி நிகழ்ச்சிகளையும், நேரடி விளக்கங்களையும் கேட்டு பயன் பெறுங்கள். லிங்க்:- http://joomla1526.knowingourroots.com/ யு டியுப் லிங்க்:- http://www.youtube.com/channel/UCgKugqndTF2IJhN1f092ZAA உங்களுக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினால் கனேடிய கீதவாணி வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கனேடிய நேரம் 10.15-11.30 க்கு ...

துபாயில் அனுபவித்ததை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம்!

Posted: 23 Oct 2014 07:34 AM PDT

வெற்றிப் பாதையின் ரகசியம்

Posted: 23 Oct 2014 07:20 AM PDT

சிப்பிக்குள் இருந்த முத்து சேதுவால் அண்டத்திற்கே அறிமுகமானது காதலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள போராட்டத்தை நந்தா மூலமாக ஆர்ப்பரித்தது சேதுவையும் நந்தாவையும் இணைத்து உருவான பிதாமகனால் காதல் பைத்தியம் பிடித்தது நான் கடவுள் இல்லை என்று சொல்லி மிக எளிமையான மனித கடவுள் என்று பெயரெடுத்தது அவன் இவன் என்று ஏற்றத்தாழ்வு பாராமல் நான் கடவுளுடன் திமிரை சேர்த்து பிரமிக்க வைத்தது பலராலும் பரதேசி என்று ஏசப்படும் பட்டத்தை தேசமே பரபரக்கிரற அளவுக்கு சிகரத்தை எட்டியது தார தப்பட்டை அடித்து ...

சீன மொழியில் அசத்திய பேஸ்புக் நிறுவனர்

Posted: 23 Oct 2014 07:01 AM PDT

பதிவு செய்த நாள் 23 அக் 2014 17:00 பீஜிங்: சீனா சென்றுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க், அங்கு சீன மொழியான மான்டரினில் பேசி அசத்தினார். பிரபல வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சுகர்பெர்க், சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சீன தொழிலதிபர்களுடன் அவர் உரையாடினார். சீன தொழிலதிபர்களின் கேள்விகளுக்கு மான்டரின் மொழியிலேயே அவர் பதிலளித்தார். சுமார் 30 நிமிடங்கள் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி நீடித்தது. இந்நிகழ்ச்சி ...

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., மருத்துவமனையில் அனுமதி!

Posted: 23 Oct 2014 06:30 AM PDT

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை ...

திரும்பிய பக்கமெல்லாம் திகில் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted: 23 Oct 2014 06:24 AM PDT

இப்போது தமிழ் சினிமாவில் திகில் பட சீசன். முனி பட வரிசையில் இருந்து இந்த சீசன் தொடங்கினாலும் பீட்சாவுக்கு பிறகுதான் சூடு பிடித்தது. அந்தக் காலத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் பொம்மை என்ற திகில் படத்தை எடுத்தார். அதன் பிறகு அவ்வப்போது திகில் படங்கள் வரும். ஆனால் தயாராகும் படங்களில் 75 சதவிகிதம் திகில் படங்களாக இருப்பது தமிழ் சினிமா கண்டிராத ஆச்சர்யம். பெருகும் திகில் சமீபத்தில் வெளியான யாமிருக்க பயமே, அரண்மனை படங்களின் வெற்றி திகிலை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது எந்த சினிமா ...

ஒரு கதை, மூன்று நடிகைகளுக்கு ரீ என்ட்ரி!

Posted: 23 Oct 2014 06:20 AM PDT

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் நடிப்பதற்கு குட்பை சொன்ன நடிகைகளை மீண்டும் மேக்கப்போட வைத்திருக்கிறது ஒரு கதை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் கதைதான் அது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, அவருக்கு இப்படம் மூலம் மேலும் நல்ல பெயர் கிடைத்தது. ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா நடிப்பில் தமிழிலும் ரீ-மேக்காகிறது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு ...

ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல் ! - தன்னம்பிக்கை கட்டுரை !

Posted: 23 Oct 2014 06:11 AM PDT

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை... துயரமின்றி உயரமில்லை... துன்பமின்றி இன்பமில்லை... அடிகளால் அனுபவங்கள் ...

அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்!

Posted: 23 Oct 2014 06:03 AM PDT

ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர். நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 23 Oct 2014 05:54 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

திரை விமர்சனம் » பூஜை

Posted: 23 Oct 2014 02:32 AM PDT

படம் : பூஜை நடிகர் : விஷால் நடிகை : ஸ்ருதிஹாசன் இயக்குனர் :ஹரி ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''. கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் ...

உணவுகளின் போட்டோகள் ! :) - ஷோகன் ஹல்வா !

Posted: 23 Oct 2014 02:05 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

தீபாவளி பலகாரங்கள் ! - 'ஷோகன் ஹல்வா' :) photo vudan

Posted: 23 Oct 2014 02:02 AM PDT

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !

Posted: 23 Oct 2014 01:45 AM PDT

கத்தி திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, சென்னையில் சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது கற்களை வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கத்தி படத்தை வெளியிடுவதைத் ...

அறிமுகம்

Posted: 23 Oct 2014 12:30 AM PDT

மறைந்த காதல்........... சுகமான சுமையாய் இருந்தாய் இருதயத்தில் பிடிக்காமல் போயிருந்தால் முடிவெடுக்காமல் போயிருப்பேன் பிடிகொடுக்காமல் போனமையால் பிடிப்பே இல்லாமலானது என் வாழ்க்கை ஒத்துவராது என்ற போது காதிற்கு கேட்டாலும் என் காதலுக்கு கேட்கவில்லை சிறகடித்து மிதந்தவனை சிறகொடித்து சிறையிலடைத்தாய் இருந்தாலும் என் காதல் மட்டும் குறையவில்லை இன் று நீ போன இடம் தெரியாவிட்டாலும் இறுதியாக போகும் இடம் தெரிந்தமையால் போகின்றேன் உன் முன் உன்னை வரவேற்க அவசரப்பட்டு வந்துவேடாதே என்னைப்போல் ...

பேசியே பத்த வெக்கிறதிலே கில்லாடி ஆச்சே…!

Posted: 23 Oct 2014 12:28 AM PDT

--- இன்னைக்கு என்ன பரபரப்பு நியூஸ்…? - சரவெடியில் ஒரு வெடி வெடிக்காததுக்காக யாரோ ஒருத்தர். நுகர்வோர் கோர்ட்டிலே பட்டாசுக்கடைக்காரர் மேலே கேசு போட்டிருக்கிறார்…! – -கவுதமன் - ————————————————- - என்ன சொல்கிறாய், நம் மன்னருக்கு ஒரு லட்சம் பாலோயர்ஸ் இருக்கிறார்களா..? - ஆமாம், போரில் இருந்து நம் மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது, படை வீரர்கள் அத்தனை பேரும் மன்னரை ஃபாலோ பண்ணி வந்து விடுவார்கள்…! - –கொளக்குடி சரவணன் - ———————————————– - வெடியைப் பார்த்து அம்மா ஏதோ பேசிட்டு இருக்காங்களே..? - தெரியாதா…அவங்க ...

உலகச் செய்திகள்!

Posted: 23 Oct 2014 12:27 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961

Posted: 22 Oct 2014 11:29 PM PDT

ஈகரை உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இன்றைய தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961.

பதிவிறக்க

எங்கள் சிவாஜி

Posted: 22 Oct 2014 11:14 PM PDT

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

ஈகரை உறவுகளுக்கு தீபாவளி பரிசு - ஞானப் பொக்கிஷம் - மின்நூல்

Posted: 22 Oct 2014 09:46 PM PDT

ஞானப் பொக்கிஷம் பி.என்.பரசுராமன் வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய 'லைட் ரீடிங்' புத்தகங்கள். சில 'கூகுள்' புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் ...

பாமரர் தேவாரம்

Posted: 22 Oct 2014 08:24 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™