Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உஷார்! தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!தீவிரமடைந்தது வடகிழக்கு பருவமழை

Posted:

சென்னை:'வங்கக் கடலில், மன்னர் வளைகுடா பகுதியில், காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில், அனேக இடங்களில் இன்று கன மழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கி, இன்றுடன், ஏழு நாட்கள் நிறைவடைந்து உள்ளது. இந்த சீசனில், இதுவரை, இயல்பை விட, 33 சதவீத மழை அதிகமாக கிடைத்துள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை ...

ஜம்மு - காஷ்மீர் வெள்ள சேதங்களை சீரமைக்க.. ரூ.745 கோடி..!வடமாநில தீபாவளி தினத்தில் மோடி அறிவிப்பு

Posted:

ஸ்ரீநகர் :வட மாநில மக்கள் தீபாவளி கொண்டாடிய நாளான நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு விஜயம் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க, 570 கோடி ரூபாய் மற்றும் ஆறு முக்கிய மருத்துவமனைகளை புதுப்பிக்க, 175 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. செப்டம்பர் மாத முற்பகுதியில், இந்த மாநிலத்தில், பேய் மழை பெய்தது.கடந்த, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் ...

பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு

Posted:

புதுடில்லி:வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. அதனால், முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது. நம்முடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.காங்., விமர்சனம்:இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ...

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்?பட்நாவிஸ் - கட்காரி ஆதரவாளர்கள் கடும் போட்டி!

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை பிடிக்க, அம்மாநில பா.ஜ., தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் கட்காரி ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சி, 122 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக உள்ளது. விரைவில், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்தோ அல்லது உதிரி கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்க உள்ளது.'மகாராஷ்டிராவில் அமையும் புதிய அரசின் முதல்வராக, அம்மாநில பா.ஜ., தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்வு செய்யப்படுவார். அவரே முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்' என்றும், ...

பா.ஜ.,வின் எழுச்சியும் காங்கிரசின் வீழ்ச்சியும்

Posted:

- நிகழ் களம் - பா.ஜ., கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தங்களது கட்சியின் நாடாளுமன்றத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில், மே 20ம் தேதி கூடினர். அவர்களிடையே பேசிய அக்கட்சியின், 'பீஷ்ம பிதாமகர்' அத்வானி, 'இத்தகைய பெரும் வெற்றி தேடித் தந்ததன் மூலம், மோடி கட்சிக்கு பெரும் உதவி செய்திருக்கிறார்' என, நா தழுதழுக்க குறிப்பிட்டார். இறுதியுரை ஆற்றிய மோடி உணர்ச்சிப் பொங்க, 'நான் கட்சிக்கு உதவியதாக அத்வானிஜி சொல்லக் கூடாது. ஏனெனில் ஒரு மகன் தன் தாய்க்கு பணி செய்வது எப்படி உதவியாகும்? தாய்க்கு பணி செய்ய அர்ப்பணிக்கப்பட்டவன் மகன். கட்சி ...

அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Posted:

தீபாவளியை முன்னிட்டு, ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடாததால், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தீபாவளியை கொண்டாடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சொந்த ஊருக்கு போகாமல், சென்னையில் தங்கி விட்டனர். இதனால், மந்திரிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த, கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.அதிர்ச்சியில்...: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில், 193 பேர் அதிர்ச்சியில் இறந்ததாக, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு:தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்

Posted:

நெய்வேலி:தொடர் மழை காரணமாக, என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் மின் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மூன்று சுரங்கங்கள்:கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால், என்.எல்.சி., நிறுவனத்தின் மூன்று சுரங்கங்களிலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சுரங்கங்களில், நிலக்கரி சேமித்து வைக்கும் பகுதியான, 'பங்கர்'களில் நிலக்கரியும் காலியாகி வருகிறது. கையிருப்பாக உள்ள நிலக்கரியும், மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாதவாறு அதிக ஈரத் தன்மையுடன் ...

ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர்

Posted:

திருச்சி :முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அக்கட்சியினர் புது பட்டம் வழங்கி, திருச்சியில், 'ப்ளக்ஸ் பேனர்' வைத்துள்ளனர்.வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 17ம் தேதி ஜாமின் பெற்று, 18ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.இதற்காக, ஜெயலலிதாவை வரவேற்று, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் ப்ளக்ஸ் பேனர்களை வைத்தனர். திருச்சி, கோகினுார் பஸ் ஸ்டாப்பில் வைத்திருந்த பேனரில், ...

கடற்படை தளத்தில் கிளம்புது ஊழல் புகார்: அம்பலப்படுத்திய வீரருக்கு சிக்கல்

Posted:

திருநெல்வேலி :நெல்லை கடற்படை தளத்தில் ஊழலை அம்பலப்படுத்திய வீரரை தாக்கியதாக அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. 'மனநோயாளி' எனக் கூறி அதிகாரிகள் பழி தீர்ப்பதாக மனைவி தெரிவித்தார்.இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ்., கட்டபொம்மன்' படைத்தளம் நெல்லை விஜயநாராயணத்தில் உள்ளது. இங்கு கமாண்ட்டென்ட் விஜய்ஜான் தலைமையில் 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர்.இங்கு தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கிய 'டிவி'க்களை விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டியது, பராமரிப்பு பணிகள் செய்ததாக கணக்கு காட்டி பணம் எடுத்தது... என அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™