மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரியானாவில் ரூபாய்க்கு 1 கிலோ உணவு தானியம்: பா.ஜனதா தேர்தல் அறிக்கை
- ரூ.500 கோடி வறட்சி நிவாரணம்: மராட்டியத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
- 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர்: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
- ஜெயலலிதா வேறு அறைக்கு மாற்றம்: தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி
- தட்கல் ரெயில் டிக்கெட் விலை மேலும் உயர்வு: இன்று முதல் அமல்
- ஆசிய கபடி போட்டி: ஆடவர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது
- அமெரிக்க கல்வியாளர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் எடுக்க புதிய உடன்பாடு
- விவேகானந்தரின் பேப்பர் அடங்கிய அரிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த ஒபாமா
- ஜெயலலிதாவுக்கு சிறையில் வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை: ஜெயில் அதிகாரி தகவல்
- தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்
- மேற்கு வங்காள ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 14 குழந்தைகள் பலி
- தூய்மை இந்தியா: கிராம பஞ்சாயத்திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு- கட்காரி
| அரியானாவில் ரூபாய்க்கு 1 கிலோ உணவு தானியம்: பா.ஜனதா தேர்தல் அறிக்கை Posted: 02 Oct 2014 11:19 PM PDT அரியானாவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும், ரூபாய்க்கு 1 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரியானா சட்டசபை தேர்தல் வருகிற 15–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா தேர்தல் அறிக்கையை கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டார். |
| ரூ.500 கோடி வறட்சி நிவாரணம்: மராட்டியத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி Posted: 02 Oct 2014 11:13 PM PDT மராட்டியத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான உச்சவரம்பு குறைப்பு, ரூ.500 கோடி வறட்சி நிவாரணம் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. வருகிற 15–ந்தேதி நடைபெறும் மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மராட்டிய முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவி ராஜ் சவான் ஆகியோர் வெளியிட்டனர். |
| 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர்: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார் Posted: 02 Oct 2014 11:05 PM PDT ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது 4 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தால் 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என சந்திரபாபுநாயுடு தெரிவித்தார். அதன்படி இந்த திட்டம் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் காந்தி ஜெயந்தி தினமான நேற்று தொடங்கப்பட்டது. |
| ஜெயலலிதா வேறு அறைக்கு மாற்றம்: தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி Posted: 02 Oct 2014 10:29 PM PDT ரூ. 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். பெண்களுக்குரிய சிறைப் பகுதியில் அறை எண். 23–ல் வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். 27–ந்தேதி அந்த அறைக்கு சென்ற அவர் யாரிடமும் பேச விரும்பாமல் உள்ளார். உடனடியாக ஜாமீன் கிடைக்காததால் அவர் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. |
| தட்கல் ரெயில் டிக்கெட் விலை மேலும் உயர்வு: இன்று முதல் அமல் Posted: 02 Oct 2014 10:22 PM PDT இந்தியாவில் ஓடும் ரெயில்களில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரம் இருக்கை–படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 71 ஆயிரம் இருக்கை, படுக்கை வசதிகள் தட்கல் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 2677 ரெயில்களில் இது நடைமுறை படுத்தப்படுகிறது. |
| ஆசிய கபடி போட்டி: ஆடவர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது Posted: 02 Oct 2014 10:19 PM PDT ஆசிய விளையாட்டுகளுக்கான கபடி போட்டியின் ஆடவர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஈரான் அணியை 27-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஏற்கனவே மகளிர் பிரிவுக்கான கபடி போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. |
| அமெரிக்க கல்வியாளர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் எடுக்க புதிய உடன்பாடு Posted: 02 Oct 2014 07:21 PM PDT பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தியாவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளிடமிருந்து கல்வி கற்கும் அனுபவங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அரசு ஒரு புதிய திட்டத்தை சென்ற மாதம் நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டின் பிரதான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்துவரும் 5000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் நாடு முழுவதும் |
| விவேகானந்தரின் பேப்பர் அடங்கிய அரிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த ஒபாமா Posted: 02 Oct 2014 03:07 PM PDT அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது? |
| ஜெயலலிதாவுக்கு சிறையில் வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை: ஜெயில் அதிகாரி தகவல் Posted: 02 Oct 2014 01:38 PM PDT பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வி.ஜ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மற்ற சாதாரண கைதிகளை போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் ஜெயில் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். |
| தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் சுப்பிரமணியசாமி வலியுறுத்தல் Posted: 02 Oct 2014 10:14 AM PDT சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு |
| மேற்கு வங்காள ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 14 குழந்தைகள் பலி Posted: 02 Oct 2014 02:05 AM PDT மேற்கு வங்காளத்தில் உள்ள பர்த்வான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 குழந்தைகள் பலியாகியுள்ளனர். நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை 6 குழந்தைகள் இறந்துள்ளனர். அதற்கு முன் 8 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என்று மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும், ''இறந்த குழந்தைகள் அனைவரும் 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். தற்போது துர்கா பூஜை நடைபெற்று |
| தூய்மை இந்தியா: கிராம பஞ்சாயத்திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு- கட்காரி Posted: 02 Oct 2014 12:02 AM PDT தூய்மை இந்தியா: கிராம பஞ்சாயத்திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு- கட்காரி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |