Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் மாற்றமில்லை: அமெரிக்கா

Posted:

மனித உரிமை விடயங்கள் உள்ளிட்ட இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும், மென்மைப்போக்குகளும் இல்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. 


Read more ...

கத்தி, உத்தம வில்லன் - செளந்தர்யா செய்தது சரியா?

Posted:

வேண்டியவங்க இருந்தா விளக்கு திரிக்கு தீப்பெட்டி கூட தேவையில்ல.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வதற்கு கொள்கையளவில் இணக்கம்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அங்கத்துவக் கட்சிகளுக்கிடையே கொள்ளையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்து சமுத்திரப் பிராந்தியமும், செஞ்சீனத்தின் ஆதிக்கமும்! (கோவை.நந்தன்)

Posted:

சீன அதிபர் ஜீ ஜின்பிங் அண்மையில் இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணம் சர்வதேச அளவில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 


Read more ...

இலையுதிர் காலத்தின் அழகான மாற்றம் முன்னும் பின்னும் : புகைப்படங்கள்

Posted:

பெரும்பாலான நாடுகளில் தற்போது கோடை காலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாரி காலமும் கூடவே இணைந்துள்ளது.


Read more ...

ஐம்பதுக்கும் அதிகமான அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சியோடு இணையத் தயார்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted:

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 50க்கும் அதிகமானோர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 


Read more ...

யான் - விமர்சனம்

Posted:

கொண்டை ஊசி கிடைக்கலேன்னு கோணி ஊசிய சொருகிக் கொண்ட மாதிரி, கே.வி.ஆனந்த் ஸ்டைல் படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கியிருக்கிறார். இருவருமே ஒளிப்பதிவு மேதைகள்! நல்லவேளை... ஆனந்த் நிரூபித்துவிட்டார். சந்திரனுக்குதான் ‘கிரகணம்!’


Read more ...

டி20 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் கொல்கத்தா-சென்னை அணிகள் மோதவுள்ளன

Posted:

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் டி 20 அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : 4'400 மீற்றர் ஓட்டத்தில் இந்தியா மீண்டும் தங்கம்

Posted:

ஆசிய விளையாடுப் போட்டிகளில், 4'400 மீற்றர் தொடர் ஓட்டத்தில், டிண்டு லூக்கா, பூவம்மா உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. பந்தயத் தூரத்தை 3 நிமிடம், 28.68 வினாடிகளில் கடந்து இந்திய அணி முதலிடம் பிடித்தது.


Read more ...

டி20 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் கொல்கத்தா வெற்றி

Posted:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹோப்ராட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது டி20 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


Read more ...

ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது:குன்ஹா

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.


Read more ...

இருவார ராசி பலன்கள்

Posted:

அக்டோபர் 1 - 15 வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


Read more ...

நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பீர்கள்?:வாழ்க்கை முறை கொண்டு கணிப்பிடும் கடிகாரம்

Posted:

இன்றிலிருந்து நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பீர்கள் என்பதை வருடங்கள், மாதங்கள், நாட்கள், மணித்தியாலங்கள், நிமிடங்கள் மற்றும் விநாடிகள் என்ற ஒழுங்கில் உங்களுக்கு எப்போதும் காண்பித்துக் கொண்டிருக்கும் மரணக் கைக் கடிகாரம் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

தேங்க்யூ விஷால்

Posted:

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இணைய பத்திரிகையாளர்களுக்குமான சண்டையை சற்று ஆவேசமாகவே தீர்த்து வைத்துவிட்டார் விஷால்.


Read more ...

பூரண கட்டுப்பாடு இன்றி இணையப் பாதுகாப்பை (cyber security) வலுப்படுத்த ரஷ்யா திட்டம்!

Posted:

ரஷ்யா தனது இணையப் பாதுகாப்பை (cyber security) இணையம் மீது பூரண கட்டுப்பாடின்றி அதிகரிப்பது அவசியம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.


Read more ...

நிராகரிப்பின் வலி!

Posted:

'மயக்கம் என்ன' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். தனுஷ், தான் மிக மதிக்கும் நபர் நம்பிக்கைத் துரோகம் செய்தது  தெரிந்ததும், அவரிடம் வந்து குமுறிவிட்டுப் போகும்போது அழுதுகொண்டே திரும்பிப் பார்ப்பாரே ஒரு பார்வை! தன்னை நிரூபிக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்காதவனின் துயரம், நம்பிக்கைத் துரோகத்தின் தாக்கம், நிராகரிப்பின் வலி, அங்கீகாரத்துக்கான ஏக்கம் - எல்லாமே அந்தப் பார்வையில்!

நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது. அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது. அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, இழந்து விட்டதாகக் கருதும் வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.

ஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பதுதான் பெரும்சோகம்!

நிராகரிப்பையும், நம்பிக்கைத் துரோகத்தையும் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்காத மனிதர்கள் யாரேனும் இருக்கமுடியுமா?  எத்தனை பேருக்கு தம் வாழ்வில் நினைத்ததை சாதித்த திருப்தி வாழ்நாளின் இறுதியில் கிடைக்கிறது?

எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது!

A Beautiful Mind திரைப்படத்தில் ஜோன் நாஷ் (John Nash) கதாபாத்திரத்தினூடாகச் சொல்லப்படுவது அங்கீகரிக்கப்படாத மனதின் வலி. உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான Princeton, அமெரிக்கா. அங்கு படிப்பவர்கள் எல்லோரும் எதிர்கால விஞ்ஞானிகள். அங்கே ஜோன், நம்மைச்சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையுமே, அறிவியலின் அடிப்படையில் சமன்பாடுகளால் விளங்கப்படுத்த முடியுமென்கிறார். அதை எழுதியும் காட்டுகிறார். உதைபந்தாட்டத்தில் பந்து கொண்டுசெல்லப்படும் முறைக்கு, குருவிக் கூட்டத்துக்கு தீனி போட்டதும் அவை எப்படி கவரப்படுகின்றன என்பதற்கெல்லாம் Formula எழுதுகிறார். யாருக்கும் புரியவில்லை. அவர் சொல்வது கிறுக்குத்தனமாகத் தோன்றுகிறது மற்றவர்களுக்கு. விளைவு? கிண்டல் செய்யப்பட, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் ஜோன். அவருக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. இருந்தாலும் எதையாவது சொல்லித் தெறித்து ஓட வைத்துவிடுவார். தனிமை, தனது திறமைகளைப் புரிந்து கொண்டவர் யாருமில்லை என்ற வலி மனதைச் சோர்வடையச் செய்கிறது.


மற்றவர்கள் போல இல்லாமல் புதுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென நினைக்கும் அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் போகலாம் என்கிறார் அவருடைய ஆசிரியர். ஆசிரியரும், ஜோனும் ஒருநாள் கல்லூரி உணவகத்தில்அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கு ஒருவருக்கு எல்லோரும் தங்கள் பேனாவைக் கொடுத்து வாழ்த்திவிட்டுச்  செல்வார்கள். தாங்கள் எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு   மரியாதை செய்யும் வழக்கம் அது. அப்பொழுது ஆசிரியர் ஜோனைக் கேட்பார்.

Teacher : What do you see, John?

John : Recognition

Teacher : Try seeing accomplishment

சாதனையாளர்கள் நிச்சயம் திறமைசாலிகள்தான். ஆனால் சாதிக்காமல் இருப்பவர்கள் எல்லோருமே திறமையற்றவர்கள் எனக்கூறமுடியாதே! மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலோ, அங்கீகாராம் கிடைக்காதவர்களாகவோ இருக்கக் கூடுமல்லவா?

அதீத திறமை இருந்தும், அதை நிரூபிக்க வாய்ப்புக்கள் அமைந்தும் சந்தர்ப்ப வசத்தால் அல்லது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் வாழ்க்கையையே தொலைத்து விட்டவர்களின் வலி மிகக் கொடுமையானது.

அவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். கொஞ்சம் நரை தவிர முகத்தில் இளமை. நாளின் அதிக நேரத்தைக் கோவில் பூசை, பூசைக்கு பூப்பறித்தல் என்றே செலவிடுவதாலோ என்னவோ எப்போதும் வேஷ்டி. எப்போதும் யாருடன் பேசும்போதும் வெள்ளந்தியாக சிறு புன்னகையுடனேயே பேசுவார்.

எல்லோரிடமும் வேறுபாடின்றி புன்னகையுடன் பேச்சை ஆரம்பிப்பது தமிழர்களின் வழக்கம் அல்லவே. இது இயற்கைக்கு மாறானது இல்லையா? ஆக, அவர் சற்று மனநிலை பிறழ்ந்தவர் என்பதை நாம் பார்த்தவுடன் உணர்ந்துகொள்ள முடியும். தினசரிகள் படிப்பாரென்பது அவரது கிண்டலான அரசியல் பேச்சின் மூலம் தெரியும். சிலவேளைகளில் நானும், நண்பர்களும் அந்தக் கோவிலடியில் நின்று அரட்டையடிப்பதுண்டு. அந்தப்பொழுதுகளில் புன்னகையுடன் கடந்து செல்வார். எங்களிடம் பேசியதில்லை.

ஒருநாள் நண்பர்களிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். கணிதப் பிரிவில் படிப்பதாகத் தெரிந்தவுடன், கல்குலஸ் பற்றி ஆர்வமாக நிறையப் பேசியிருக்கிறார். ஒரு சிக்கலான கணக்கு ஒன்றை உடைப்பது பற்றி பேச, நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். அவரிடம் அதை யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னர், அயலிலுள்ள ஒருவர் சொன்னார். அவர் எஞ்சினியரிங் சித்தியடையும்போது அதியுயர் புள்ளிகள் பெற்று 'ஸ்கொலர்ஷிப்' கிடைத்து வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்றவர். அங்கு ஒரு பேராசிரியரிடம் பாடம் தொடர்பாக முரண்பட, அவ்வளவுதான்! அதைப் பிரச்சினையாக்கித் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இப்படியாகிவிட்டார்!

நான்கு வருடங்களுக்குப் முன் அதே கோவிலடியில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கூட நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் இருவர் ஊரின் மிகப் பெரும் செல்வந்தர்கள். படித்தவர்களல்ல. பேச்சினிடையே படிப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும்.

"படிச்சு என்ன செய்யிறது?"

அவர் வழமை போல சிரித்தவாறே கேட்டார். எந்த சலனமும் அவரிடம் இல்லை. யாரும் பதில் பேசவில்லை. அந்த வார்த்தைகளின் பின்னாலுள்ள வலியை அந்தக் கணத்தில் அவரைத் தவிர அனைவரும் உணர்ந்தார்கள், நானும்!

புகழின் உச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன் தனது பெயர், அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப் படும்போது அவனது உணர்வுகள் எப்படியிருக்கும்? பொதுவாக சினிமாவிலேயே இதற்கான சாத்தியங்கள் அதிகம். தியாகராஜ பாகவதர் தவிர, பெரும்பாலும் நடிகைகளின் கதைகளையே இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம்.

கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, நடத்தைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் கூட அவர்களின் வாழ்க்கையை சடுதியாக மாற்றிவிடலாம். ஹாலிவுட்டில்  மாற்றியிருக்கிறது.

மௌனப் படங்கள் பேசும்படங்களானபோது, சிலர் காலத்துக்கேற்ப, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பாணியையும் மாற்றிக் கொண்டார்கள், சார்லி சாப்ளின் போன்ற சிலர் பிடிவாதமாக தங்கள் பாணியில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டார்கள். சிலர் ஈடுகொடுக்க முடியாமல், விரும்பாமல் தொலைந்தும் போனார்கள்.

The Artist (2011) படம் அது பற்றிப் பேசுகிறது. 1929ஆம் ஆண்டு. பேசும் படம் அறிமுகமாகிறது. அது ஜார்ஜுக்கு முட்டாள்தனமாகப் படுகிறது. சினிமாவில் காட்சிதானே எல்லாமே கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? ஆனால் அதுதான் எதிர்கால சினிமா என்கிறார் அவன் தொடர்ந்து பணிபுரியும் ஸ்டூடியோ முதலாளி. அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்டூடியோ முதலாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? அவன் வாழ்க்கை எவ்வாறு மாறிப் போகிறது? ஒருவகையில் தொழில்நுட்ப மாற்றத்தால் புறக்கணிக்கப்பட்ட ஏராளமான கலைஞர்களின் வாழ்வைச் சொல்லும் ஆவணம் போலவும் படுகிறது.

காலத்துக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்பவர்கள் நின்று நிலைபெற அல்லது பிழைத்துக் கொள்ள முடிகிறது. சாதாரண ஒரு மனிதனின் வாழ்க்கையிலிருந்து, பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டு பிடிப்புகள் வரை இதுதான் அடிப்படை.

நண்பனின் அம்மா இறந்து போயிருந்தார். கிரியை நடைபெற்றுக் கொண்டிருந்தது. முற்றத்தில் பறை இசைக்கும் குழுவினர் அமர்ந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. இறுதி ஊர்வலங்களிலும், சில கோவில் திருவிழாக்களிலும் பறை இசைக்கப்படுவது வழமை. வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்தது. அவர்கள் யாழ்ப்பாணத்தின் பிரபலமான 'இன்பம்' குழுவினர். இறுதிப் பறையடிக்கும் குழுவாகக் கூட இருக்கலாம் என் அவரே வருத்தப்பட்டு ஒரு பத்திரிகையில் பேட்டியளித்திருந்ததாக ஞாபகம். இன்பம் எப்போதும் சிரித்த முகத்துடன், கனத்த சரீரத்துடன் கருப்பாக, வெள்ளை வேட்டியும், நீல சால்வையும் கடுக்கனும் அணிந்திருப்பார் அப்போது. S.இன்பம் என் எழுதப்பட்ட ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். இன்பம் வெளியே எங்கோ சென்றிருந்தார். அவர் குழுவிலிருந்த வயதான ஒரு பெரியவரும் இன்னும் இரு இளைஞர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கத்திலேயே 'பாண்ட்' வாத்தியம் இசைப்பவர்களும் அமர்ந்திருந்தார்கள். பெரும்பாலான இறுதி ஊர்வலங்களில் பறைக்குப் பதிலாக முன்னர் புலிகளின் இறுதி ஊர்வலங்களில் மட்டுமே இசைக்கப்பட்டு வந்த'பாண்ட்' இடம்பிடித்திருந்தது.

அளவளாவிக் கொண்டிருந்த பறை இசைக்கும் இளைஞர்களில் ஒருவர், ஏதோ தோன்றியிருக்க வேண்டும். ஒருவேளை நீண்டநாட்களாக நினைத்திருந்திருக்கலாம். பக்கத்திலிருந்த பாண்ட் வாத்தியத்தில் ஒற்றை விரலால் மெல்லியதாக ஒரு தட்டு, ஒரேயொரு தட்டு தட்டினார். "டேய்.." திடுக்கிட வைத்த அந்தக் குரல்கேட்டு, ஒரு நிமிடம் அந்த இளைஞர் மட்டுமன்றி நாமெல்லோரும் ஆடிப் போய்விட்டோம். பறை இசைக்கும் அந்தப் பெரியவரின் குரல் அது. ஒரு சில நொடிகள் இளைஞரை உறுத்துப் பார்த்த பெரியவர் பின்னர் எதுவும் பேசவில்லை. எல்லோரும் அமைதியானார்கள். பின்னர் நேரம் நீண்டுகொண்டிருந்தது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. அந்தப் பெரியவரின் குரலில், உற்றுத்துப் பார்த்த அந்தச் சிலநொடியில் அவரின் கண்களில், தொடர்ந்த மௌனத்தில் இருந்தது என்ன? காலமாற்றம் கொடுத்த நிராகரிப்பு?

உச்சிவெயில், தகிக்கும் தார் வீதி எதுவுமே அவருக்கு ஒரு பொருட்டல்ல. கால்களில் செருப்பில்லை. கலைந்த, அடர்ந்த நீண்ட முடி, தாடி. அழுக்கான சாரமும், சேர்ட்டும். கையில் ஒரு பை நிறைய ஏதேதோ செடிகள், புற்கள் சகிதம் அவர் பயணம் தொடரும். ஆழ்ந்த சிந்தனை, நேரான கூர்மையான பார்வை. யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை. யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உங்களோடு எனக்கென்ன சம்பந்தம் அற்ப மனிதர்களே? என்பதுபோலவே அவர் நடவடிக்கைகள். அவரால் யாருக்கும் தொந்தரவில்லை.

யாரும் அவருடன் பேச முயன்றும் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக திட்டிவிடக்கூடும் என அனைவருக்கும் புரிந்திருந்தது. எங்கு தங்குவார்? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? அந்தப்பையில் என்ன? எதற்கு? எங்கே போகிறார் எதுவுமே தெரியாது! அவர் மட்டும் தான் செய்யும் செயலில் எந்தக்குழப்பமும் இல்லாதவராக சீரான வேகத்தில் கொஞ்சம் விரைவாக நடந்து செல்வார்.

எங்கள் வீட்டருகிலிருந்த வயதான பெண்மணி சொன்னார். அவர் ஒரு எஞ்சினியர். மிகுந்த கெட்டிக்காரராம். காதல் தோல்வி காரணமாக அப்படி ஆகிவிட்டார் என்று. அவரை ஏமாற்றிய தாகக் கூறப்பட்ட அந்தப் பெண்மணி யாரென்பதைக் கூறி, "அவள் செய்த பாவத்துக்குத்தான் இன்னும் கடவுள் அவளைக் குழந்தையில்லாம தவிக்க விட்டுட்டார்!" - என்று கடவுளின் இருப்பு பற்றிய தனது நம்பிக்கையை நிலை நிறுத்தினார். அந்த முன்னாள் காதலியையும் அவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டிருப்பாரோ? சில வருடங்களில் கடவுளின் இருப்பைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கிவிட்டு அந்தப் பெண்மணிக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டதைத் தெரிந்துகொள்ளாமலே இறந்துவிட்டார் அந்த அம்மம்மா.

ஒருநாள் எப்போதோ தனக்குப் படிப்பித்த தமிழாசிரியரை வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலில் கண்டதும் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஏதுவும் பேசாமலே எந்த சலனமுமின்றி விடுவிடென நடந்து சென்றார். எந்தவித பாசாங்குமற்ற, உண்மையான அன்பையும், மரியாதையையும் அங்கு கண்டேன். முதன்முறையாக அவர் ஒரு மனிதனை மதித்ததை, பொருட்படுத்தியத்தை, தான் மிக நேசித்த மனிதனுக்கு கொடுத்த, மரியாதையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போதும் கூட அவர் தனது நடைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பார். எந்த சலனமுமின்றி, யாரையும் பொருட்படுத்தாது, ஓய்வின்றி... காலத்தைப் போல! காலமும் யாரையும் பொருட்படுத்துவதில்லை, சலனமின்றி, இயல்பாக தன் பாட்டுகுக் கடந்துசெல்கிறது. காலம் யாருக்கும் காத்திருப்பதோ, எந்தக்கேள்விக்கும் பதில் சொல்வதோ கிடையாது. காலவோட்டத்தில் தீராத எங்கள் கேள்விகளுக்கான பதில்களை கண்டறிய முடியுமா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

காலம் எந்த வலியையும் ஆற்றுவதுமில்லை. காலம் செல்லச் செல்ல வலி பழகிவிடுகிறோம்! மறந்துவிடுகிறோம்… இல்லை சரியாகச் சொன்னால் மறந்துவிட்டதாக நம்பிக் கொள்கிறோம். ஆனாலும் ஏதோ ஒரு சினிமாவோ, பாடலோ, உரையாடலோ சமயங்களில் வாசனைகளோ கூட அந்த வலியை அதே வீரியத்துடன் நொடியில் உணரச் செய்து விடுகின்றது!

காலத்தின் போக்கில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அப்படியே கைககட்டி வேடிக்கை பார்க்க வேண்டியதுதானா? துரோகங்களும், தோல்விகளும் நினைவுகளில் துரத்த, கழிவிரக்கத்திலும், சுயபச்சாதாபத்திலும் வீழ்ந்து மூழ்கிப்போவதுதானா வாழ்க்கை? ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்து நின்று காட்டவேண்டாமா? 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என மீண்டும் வீறு கொண்டெழுந்து வாழ்ந்து காட்டுவதுதானே துரோகத்திற்கு நாம் கொடுக்கும் உச்சபட்சப் பரிசு? என்பான் என் நண்பன். சாதாரண வார்த்தைகளல்ல அவை!

கூடவே இருந்த உற்ற நண்பனின் நம்பிக்கைத் துரோகம் ரணமாகத் தாக்க, தன்மானம் மட்டுமே துணையிருக்க மூன்று வருடங்கள் இரவுபகலாக உழைத்து உருவாக்கிய நிறுவனத்தைவிட்டு வெறுங்கையுடன் வெளியேறிவிட்டான். இலட்சங்களில் கடன், மன உளைச்சல், அழுது தீர்த்துவிட முடியாத வலி, சமயங்களில் பசி, எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் கைவிடப்பட காதல், பகிர்ந்துகொள்ள நண்பர்கள் யாருமற்ற தனிமை, திடீரென இருண்டுவிட்டதுபோல எதிர்காலம் பயமுறுத்த தூக்கமில்லாத இரவுகள். எந்த நம்பிக்கையின் கீற்றும் தென்படாத அந்தச்சூழலில் தனக்குத்தானே நம்பிக்கையூட்டி அதை ஓர் ஒளிக்கீற்றாகக் கற்பனை செய்து அதையே பற்றிக் கொண்டு மீண்டும் உயிர்த்து, துயரங்களை, தடைகளை அடித்து நொறுக்கி மீண்டும் தன்னம்பிக்கையுடன், கர்வத்துடன் நிமிர்ந்து நிற்கும் நண்பனின், "நடக்கும் பாஸ்.. அடிச்சாடலாம் பாஸ்!" என்கிற வார்த்தைகள் கொடுக்கும் உத்வேகம் சாதரணமானதல்ல!

மயக்கமென்ன தனுஷ், A Beautiful Mind ஜோன் நாஷ், The Artist ஜார்ஜ் இவர்கள் மூவரும் தமது சோதனைக் காலத்தைக் கடந்து வாழ்க்கையை வெற்றி கொள்கிறார்கள். அவர்களோடு எப்போதும் உறுதுணையாக இருப்பவள் ஒரு அன்பான பெண். மனைவியாக, காதலியாக தோழமையுடன் அரவணைத்துச் செல்லும் ஒரு பெண்! ஆனால் யதார்த்தம் பெரும்பான்மையாக அப்படி இருப்பதில்லை.

இங்கே யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லவோ, அரவணைக்கவோ வருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பது உகந்ததல்ல. காலம் போலவே நின்று பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். வருவதை எதிர்கொண்டு சென்றுகொண்டே இருக்க வேண்டும். நாம் விழுந்துவிட்டோமா? தூக்கிவிட யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாமே மெதுவாக கையூன்றி எழுந்து கொள்ளலாம். வலியா? நமது வலி தீரும் வரை அழுது தீர்த்து, நாமே துடைத்துக் கொண்டு மீண்டும் ஓட ஆரம்பிக்க வேண்டியதுதான்… நின்று பார்க்காமல், காலம் போல! எதுவும் கடந்து போகும்!

- 4தமிழ்மீடியாவிற்காக: ஜீ.உமாஜி



Read more ...

அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் இரகசிய சேவை பிரிவின் (secret service) இயக்குனர் பதவி விலகல்!

Posted:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட அந்நாட்டு அதிபர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தனிப்பட்ட ரீதியில் பாதுகாப்பு அளிக்கும் முக்கிய கடமையைச் செய்யும் குழு இரகசிய சேவை (secret service) என அழைக்கப் படுகின்றது.


Read more ...

உத்திரப் பிரதேசத்தில் அரசு துறையில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் திருமணத்தின்போது வரதட்சணை வாங்க அனுமதி ...

Posted:

உத்திரப் பிரதேசத்தில் அரசு துறையில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் திருமணத்தின்போது வரதட்சணை வாங்க அனுமதி இல்லை என்று அம்மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™