மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மராட்டியத்தில் பா.ஜ.க. ஆட்சி; அரியானாவில் இழுபறி: புதிய கருத்து கணிப்பு
- பேய் விரட்டும் பூஜையில் மாணவி பலி: மந்திரவாதி உள்பட 3 பேர் கைது
- மோடி ஒரு பலவீனமான பிரதமர்-பாகிஸ்தான் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை: காங்.பாய்ச்சல்
- குஜராத் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது
- கிரைம் போலீசார் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் 8 கிலோ தங்க நகை கொள்ளை
- நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்தி-சோனியா காந்தியுடன் சந்திப்பு
- ஆந்திராவில் புயல் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
- சீரடி சாய்பாபாவை அவமதிப்பதாக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு
- முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு: திடீர் தரையிறக்கம்
- 2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகன், மகள் நியமனம்
- ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை: கர்நாடக மந்திரி
- ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் கோரத்தாண்டவம்: பலி 21 ஆக அதிகரிப்பு
- உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி
- சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது
- விருப்ப ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் வேலை கேட்டு வழக்கு: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
- கட்சியினரின் புகாருக்கு விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்: தரூர் கருத்து
- ராஜஸ்தானில் இரு கார்களால் மோதி போலீஸ்காரர் படுகொலை
- பேஸ்புக் நண்பர்களுக்கு கட்டணமின்றி உடனடியாக பணப் பரிமாற்றம்: புதிய சேவை அறிமுகம்
- மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்
| மராட்டியத்தில் பா.ஜ.க. ஆட்சி; அரியானாவில் இழுபறி: புதிய கருத்து கணிப்பு Posted: 13 Oct 2014 10:37 PM PDT மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் நடந்தது. நேற்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. |
| பேய் விரட்டும் பூஜையில் மாணவி பலி: மந்திரவாதி உள்பட 3 பேர் கைது Posted: 13 Oct 2014 10:06 PM PDT கேரள மாநிலம் வடக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் ஆதிரை (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அவரது |
| மோடி ஒரு பலவீனமான பிரதமர்-பாகிஸ்தான் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை: காங்.பாய்ச்சல் Posted: 13 Oct 2014 10:03 PM PDT எல்லைப்பகுதியில் நிலவி வரும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத், 'பலவீனமான பிரதமராக இருக்கும் மோடியை பாகிஸ்தான் சீரியசாக எடுத்துக் கொள்வதே இல்லை. மோடி பதவி ஏற்றதில் இருந்து எல்லைப்பகுதியில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் இதற்கு போதுமான எடுத்துக்காட்டாக உள்ளது' என்று குற்றம்சாட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத் கூறியதாவது:- 1947-ம் ஆண்டில் இருந்து தாக்குதல் நடத்த துணியாத கதுவா, சம்பா, ஜம்மு ஆகிய பகுதிகளில் 1971-ம் ஆண்டு போரின்போது |
| குஜராத் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது Posted: 13 Oct 2014 09:05 PM PDT அரசுப் பணியிடங்களில் இனி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என குஜராத் முதல் மந்திரி ஆனந்திபென் பட்டேல் அறிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, குஜராத் மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்யும்போது, 30 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்படுகின்றது. அந்த ஒதுக்கீட்டினை மேலும் 3 சதவீதம் உயர்த்தி, அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் |
| கிரைம் போலீசார் போல் நடித்து நகைக்கடை ஊழியர்களிடம் 8 கிலோ தங்க நகை கொள்ளை Posted: 13 Oct 2014 08:42 PM PDT மும்பையில் உள்ள பிரபல நகைக் கடைகள் அளிக்கும் ஆர்டரின் பேரில் தங்க நகைகள் செய்து தரும் பல நிறுவனங்கள் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் இயங்கி வருகின்றன. இவ்வகையில், ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளைப் பெற்றுக் கொண்ட மும்பை நகைக்கடையின் பணியாளர்களான ஜித்தேன் பிரசாத், தேவேந்திரா ஆகியோர் ஐதராபத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு செல்லும் திட்டத்தில் லக்காடி கா புல் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். |
| நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்தி-சோனியா காந்தியுடன் சந்திப்பு Posted: 13 Oct 2014 08:16 PM PDT உலகிலேயே உயர்ந்த விருதான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்தி, நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மனைவி சுமேதா மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து, அவர்களை மீட்கும் தனது இயக்கத்தின் அலுவலக ஊழியர்களுடன் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் |
| ஆந்திராவில் புயல் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு Posted: 13 Oct 2014 07:51 PM PDT வங்க கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் நேற்று முன்தினம் மதியம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இந்த புயல் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக |
| சீரடி சாய்பாபாவை அவமதிப்பதாக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு Posted: 13 Oct 2014 05:01 PM PDT மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலை நிர்வகித்து வரும் சாய்தாம் அறக்கட்டளை சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''புனித துறவியான சீரடி சாய்பாபாவை அவமதிக்கும் வகையில் துவாரகா பீடாதிபதி ஸ்வரூபானந்தா அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். எனவே அவர் சாய்பாபா குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது |
| முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு: திடீர் தரையிறக்கம் Posted: 13 Oct 2014 01:24 PM PDT முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு கோண்டியாவில் இருந்து நாக்பூருக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். |
| 2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி Posted: 13 Oct 2014 12:44 PM PDT மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் பம்பரம் போல சுழன்று வந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். |
| ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகன், மகள் நியமனம் Posted: 13 Oct 2014 10:53 AM PDT முகேஷ் அம்பானியின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் இந்தியாவின் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் நிறுவனம் மற்றும் சில்லரை நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் ஆகாஷ் இருவரும் இரட்டை குழந்தைகள். 23 வயதாகும் இவர்களுக்கு ஆனந்த் என்றொரு சகோதரரும் உள்ளார். இங்கிலாந்தில் தனது படிப்பை அவர் தொடர்ந்து வருகிறார். |
| ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை: கர்நாடக மந்திரி Posted: 13 Oct 2014 08:30 AM PDT சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு வருகிற 17–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. |
| ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் கோரத்தாண்டவம்: பலி 21 ஆக அதிகரிப்பு Posted: 13 Oct 2014 08:02 AM PDT அந்தமான் அருகே உருவான ஹூட் ஹூட் புயல் நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புடிமட்கா என்ற இடத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்ததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. |
| உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி Posted: 13 Oct 2014 07:41 AM PDT உ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்த காமக்கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பரேலி மாவட்டம் பரித்பூர் பகுதியில் உள்ள கேமானக்லா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது இளம்பெண், இன்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அந்த சிறுமியை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றுள்ளார். |
| சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது Posted: 13 Oct 2014 05:35 AM PDT மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (15–ந்தேதி) நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரியானா மாநிலத்தில் 90 தொகுதிகள் இருக்கின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் புதன்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. |
| விருப்ப ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் வேலை கேட்டு வழக்கு: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் Posted: 13 Oct 2014 03:57 AM PDT நாகலாந்து மற்றும் கோவா சட்டசபைகளின் செயலகங்களில் பல்வேறு பொறுப்புகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் நிறைந்த கோதண்டராமன் என்பவர், டெல்லியில் உள்ள பாராளுமன்ற செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்த அவர், கடந்த 6-6-2008 அன்று பாராளுமன்ற தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக மனு அளித்தார். தலைமைச் செயலாளரும் அந்த மனுவினை பரிசீலனை செய்து கோதண்டராமன் விருப்ப ஓய்வில் |
| கட்சியினரின் புகாருக்கு விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்: தரூர் கருத்து Posted: 13 Oct 2014 03:25 AM PDT மோடி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணையுமாறு கூறிய மோடியின் அழைப்பை ஏற்பதாகவும் கூறிய சசி தரூரை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சி நீக்கியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மோடியை பாராட்டிய தரூர் மீது |
| ராஜஸ்தானில் இரு கார்களால் மோதி போலீஸ்காரர் படுகொலை Posted: 13 Oct 2014 02:41 AM PDT ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பனிபார்க் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த மஹேஷ் சோலாங்கி(50) நேற்றிரவு வேலைக்கு செல்வதற்காக சாலையோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த இரு கார்கள் ஒரே நேரத்தில் மஹேஷ் சோலாங்கி மீது மோதியதில், கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். |
| பேஸ்புக் நண்பர்களுக்கு கட்டணமின்றி உடனடியாக பணப் பரிமாற்றம்: புதிய சேவை அறிமுகம் Posted: 13 Oct 2014 02:30 AM PDT சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'கேபே' (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு |
| மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் Posted: 13 Oct 2014 02:12 AM PDT தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு விடுத்தது புதிதான ஒன்றல்ல என்றும், ஏற்கனவே வாக்களிப்பது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |