Tamil Star |
- ஜீன் டிரோலுக்கு பொருளாதாரத்துக்கான நோபல்!!
- மிகவும் செல்வாக்குமிக்க டீனேஜர்கள் பட்டியலில் ஒபாமா மகள்கள், மலாலா!
- கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கேள்வி
- மூன்றாவது தடவையாகவும் மஹிந்த போட்டியிட முடியுமா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம் ஆலோசனை?
- பிறந்த குழந்தையை இறப்பதற்காக குப்பை தொட்டிக்குள் எறிந்த 13-தாய்?
- ஆரோக்கியப் பெட்டகம் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு
- காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை : ஐ.நா தலையிட பாகிஸ்தான் கடிதம்
- தமிழில் தேசிய கீதம் : தமிழ் ஆசிரியருக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு!
| ஜீன் டிரோலுக்கு பொருளாதாரத்துக்கான நோபல்!! Posted: 13 Oct 2014 11:21 PM PDT
குறிப்பிட்ட துறைகளில் மிகவும் வலுவான நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வரையறுத்த பிரான்ஸ் பொருளாதார நிபுணர் ஜீன் டிரோல் (61), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார். இந்தியரான சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் டவுலோஸ் பொருளாதார பள்ளியில் பணியாற்றி வரும் ஜீன் டிரோல் பொருளாதார நோபலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிவியலுக்கான ராயல் ஸ்வீடிஷ் அகாதெமி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒரு குறிப்பிட்ட சந்தையில், குறிப்பிட்ட மிகவும் வலுவான அல்லது போட்டியே இல்லாத நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு பொதுவான கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பது குறித்து பல ஆய்வுகள் உள்ளன. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கக் கூடிய வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை வரையறுத்துள்ளார் டிரோல். இவரது ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொருளாதார சிக்கல் ஏற்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் அவர் வகுத்துள்ளார். நிறுவனங்களை இணைப்பது அல்லது பிரிப்பது போன்றவற்றின்போது சந்தையில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர் ஆராய்ந்துள்ளார். அந்த நிலையில் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் டிரோல் வகுத்துள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் அறிவிப்புடன், இந்தாண்டுக்கான அனைத்து நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நோபல் பரிசுகளில் பொருளாதாரத்துக்கென முன்பு வழங்கப்படாமல் இருந்தது. 1968ம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி பொருளாதாரத்துக்கான நோபலையும் சேர்த்தது. பரிசு: ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசு தொகையாக 6.76 கோடி கிடைக்கும். ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்: மருத்துவம் மூளை செல் அமைப்பை பற்றி ஆராய்ந்த இங்கிலாந்து அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீப் மற்றும் நார்வே டாக்டர் தம்பதி மேபிரிட் மோசர், எட்வர்ட் மோசர். இயற்பியல் எல்.இ.டிபல்பு கண்டுபிடித்த ஜப்பானை சேர்ந்த பேராசிரியர்கள் இசாமு அகசாகி, ஹிரோசி அமனோ, நகமுரா. வேதியியல் செல்லின் மூலக்கூறுகளை மிக தெளிவாக ஆராயும் நோனோஸ்கோப் கருவி உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹெல், அமெரிக்க விஞ்ஞானிகள் பெட்சிக் மற்றும் வில்லியம் மோனர். இலக்கியம் நாஜிக்களின் ஆக்ரமிப்பு மற்றும் அதனால் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுதிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான பாட்ரிக் மோடியானோ. அமைதி குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்தி, பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிகவும் செல்வாக்குமிக்க டீனேஜர்கள் பட்டியலில் ஒபாமா மகள்கள், மலாலா! Posted: 13 Oct 2014 10:33 PM PDT
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், நோபல் பரிசு வென்ற மலாலா உள்ளிட்டவர்கள் டைம் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க பதின்வயதுடையோர்(டீனேஜர்) பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை மிகவும் செல்வாக்குமிக்க பதின்வயதுடையோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் எவ்வளவு பிரபலமாக உள்ளார்கள், வியாபாரத்தில் வெற்றி, கலாச்சாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்கும் முதலாவது, இரண்டாவது என்று இடங்கள் வழங்கப்படவில்லை. 25 பேர் அடங்கிய பட்டியலில் 20 பேர் சிறுமிகள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள்கள் மால்யா(16) மற்றும் ஷாஷா(13) ஆகியோர் செல்வாக்கு மிக்க டீனேஜர்கள் ஆவர். அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள பாகிஸ்தானி சிறுமி மலாலா யூசப்சாயும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கிராமி விருது பெற்ற 17 வயது நியூசிலாந்து பாடகி லூர்து டைம் பத்திரிக்கையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டைம் பத்திரிக்கையின் செல்வாக்குமிக்க டீனேஜர்கள் பட்டியிலில் இடம்பிடித்துள்ள மிகவும் இளம் வயது நபர்கள் என்றால் அது ஒபாமாவின் இளைய மகள் ஷாஷா(13) மற்றும் பிலடெல்பியாவைச் சேர்ந்த பேஸ்பால் வீராங்கனை மோன் டேவிஸ்(13) ஆகியோர் தான். ஹாலிவுட் தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜாடா பிங்கட் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்(16) டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கேள்வி Posted: 13 Oct 2014 10:12 PM PDT
தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, தானும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரையும் தொடர்ந்து சிங்களவர்களையும் ஏமாற்றும் ஜனாதிபதி மஹிந்தவின் கூற்று அர்த்தமற்றது. அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார். நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும். அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன. குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் பலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் கருதுகின்றார். ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிடுவதானது வேடிக்கையாக இருக்கின்றது. உண்மையிலேயே ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. இது வெறுமனே சிங்கள மக்களை திசை திருப்புவதற்காக ஜனாதிபதியின் முயற்சியாகும். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் அர்த்தமற்றவையே. இக்கருத்துக்கள் தொடர்பில் சிங்கள மக்களே தெளிவு பெறவேண்டியவர்களாக உள்ளனர் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூன்றாவது தடவையாகவும் மஹிந்த போட்டியிட முடியுமா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம் ஆலோசனை? Posted: 13 Oct 2014 09:53 PM PDT
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா இல்லையா என்பது குறித்து சர்வதேச நிபுணர்களிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம் கோரியுள்ளது. 18ம் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் சட்ட பீட பேராசிரியராக கடமையாற்றி வரும் பேராசிரியர் ஒருவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. குறித்த பேராசிரியரின் விளக்கம் இந்த மாதம் 18ம் திகதி சட்டத்தரணிகள் சங்க கேட்போர் கூடத்தில் வெளிப்படுத்தப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றி வரும் பேராசிரியர் சூரி ரத்னபாலவிடம் இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் நிபுணத்துவ அறிவுடைய பேராசிரியர் அரசியலமைப்பு தொடர்பில் நூல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா இல்லையா என்பது குறித்து நாட்டில் விவாதிக்கப்பட்டு வருவதாக உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து சர்வதேச சட்ட நிபுணர்களிடம் விளக்கம் கோரத் தீர்மானிக்கப்பட்டதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிறந்த குழந்தையை இறப்பதற்காக குப்பை தொட்டிக்குள் எறிந்த 13-தாய்? Posted: 13 Oct 2014 08:58 PM PDT
கலிபோர்னியாவில் குப்பை தொட்டியை கிளறிய மனிதர் ஒருவர் அதற்குள் போடப்பட்டிருந்து பிறந்த குழந்தையை கண்டுபிடித்துள்ளார். குப்பைத்தொட்டியை கிளறும் போது ஏதோ அசைவது போன்ற சலசலப்பை கேட்டுள்ளார். இச்சம்பவம் திங்கள் கிழமை காலை ஒரு தொடர்மாடி கட்டிட பகுதியில் இடம்பெற்றது. சலித்து பார்க்கையில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று தொப்புள் கொடி இன்னமும் இணைக்கப்பட்ட நிலையில் துவாய் ஒன்றினால் சுற்றப்பட்டு கிடந்ததை கண்டுள்ளார். உடனே உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். சத்தத்தை கேட்டு அந்த தொடர்மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் Annette மற்றும் Jimmy Alvarez ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். குழந்தையை தனது நெஞ்சில் வைத்து தட்ட அவள் சத்தம் போட்டதாக Annette தெரிவித்தார். குழந்தை குப்பை மற்றும் ஈக்களால் மூடப்பட்டு கிடந்துள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டு பரிசோதிக்கப்பட்ட போது அவள் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். குழந்தையின் தாயாரை பொலிசார் கண்டு பிடித்தனர். 13-வயதுடைய தாய் குழந்தை தன்னுடையதென ஒத்து கொண்டுள்ளாள். குழந்தையை தொட்டிக்குள் கிடந்து வெளியே எடுத்த Annette மற்றும் Jimmy Alvarez தாங்கள் குழந்தையை தத்தெடுக்க விரும்பவதாக தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆரோக்கியப் பெட்டகம் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு Posted: 13 Oct 2014 02:31 AM PDT
பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் இனிமையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. டயட் செய்கிறவர்கள், நீரிழிவுக்காரர்கள் போன்றோருக்கு கூடவே கூடாது என அறிவுறுத்தப்படுகிற பட்டியலில் முதலிடம் கிழங்கு வகையறாக்களுக்கே. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு. அப்படியா என அதிசயிக்கிற வர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் அடுத்தடுத்து சொல்லப் போகிற தகவல்கள் நிச்சயம் வியப்பைக் கூட்டும். என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல் 86 கிலோ கலோரி கொழுப்பு 0 கொலஸ்ட்ரால் 0 சோடியம் 55 மி.கி. பொட்டாசியம் 337 மி.கி. நார்ச் சத்து 3 கிராம் சர்க்கரை 4.2 கிராம் புரதம் 1.6 கிராம் ''மாவுச் சத்து நிறைந்த வேர் காய்கறியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஃப்ளாவனாயிட்ஸ், ஆன்ட்டி ஆக்சிடன்ட், தாதுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது. வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய இது, பல நிறங்களில் விளைகிறது. மாவுச் சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும் என்பதால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள்கூட குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் செயல்படுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாடுகளுக்கும் நல்லது. நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன. இன்னும் என்ன சிறப்பு? 100 கிராம் கிழங்கில் இருப்பது வெறும் 86 கலோரிகள் மட்டுமே. தவிர, அறவே கொழுப்பற்றது என்பது கூடுதல் சிறப்பம்சம். உருளைக்கிழங்கில் இருப்பதைவிட, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அமிலேஸ் அளவு அதிகம். அமிலேஸ் என்பது ரத்தத்தில் சர்க் கரையின் அளவை மிக மெதுவாக அதிகரிக்கக் கூடியது. அத்தியாவசிய வைட்டமின்களான பேன்ட்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின், தையாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அபரிமிதமாகக் கொண்டது. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு அவசியம் தேவைப்படுபவை இவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்றவையும் போதுமான அளவில் உள்ளன. இதில் உள்ள ஆன்த்தோசயானிடின்ஸ், ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மூன்றும் காயங்களை ஆற்றும் குணம் கொண்டவை. இவற்றில் ஆன்த்தோசயானிடின்ஸுக்கு வயிறு, கழுத்து, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்குக் காரணமான செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் குணமும் உண்டு. ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதையும் ரத்தம் உறைவதையும் தடுக்கும் குணமும் இந்தக் கிழங்கில் உண்டு. அதன் தொடர்ச்சியாக இதய நோய்கள் வரும் அபாயங்களும் குறையும். எப்படித் தேர்வு செய்வது? பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக, மென்மையான தோல் கொண்டதாக, உறுதியாக இருக்க வேண்டும். தொட்டால் அமுங்குகிற அளவுக்கு மென்மையான, வதங்கிய வேர்களைக் கொண்ட கிழங்குகளைத் தவிர்க்கவும். உருளைக்கிழங்கைப் போலவே இதிலும் முளைவிட்ட கிழங்குகள் நல்ல தன்மைகளை இழக்கின்றன. கிழங்கை வாங்கியதும் நிறைய தண்ணீர் விட்டு, மண் போக அலசி, ஈரம் போனதும், காற்றோட்டமான, இருட்டான இடத்தில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். எச்சரிக்கை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள ஆக்சாலிக் அமிலமானது ஆக்சலேட் கற்களாக உருமாறி, கிட்னி ஸ்டோன் பிரச்னைக்கு காரணமாகலாம். எனவே. இந்தக் கிழங்கை எடுத்துக் கொள்ளும் போது கூடவே வழக்கத்தைவிட அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். டயட் ரெசிபி சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல் என்னென்ன தேவை? வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், புளிக் கரைசல் - (ஒரு எலுமிச்சை அளவு புளியிலிருந்து கரைத்தது), உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு, துவரம் பருப்பு - வெந்தது 2 கப்.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணை, கடலைப் பருப்பு. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். புளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த பின் மசித்த கிழங்கு, பருப்பு வகைகளைப் போட்டு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைத்து தாளிக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப் என்னென்ன தேவை? சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, வெங்காயம் -1, ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், கறி தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகு - சிறிது, முந்திரி - அலங்கரிக்க. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆங்காங்கே குத்திவிட்டு, 10 நிமிடங்கள் வேக விடவும். ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் தனியே எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி-பூண்டை விழுதாக்கி சேர்த்து வதக்கவும். கறி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்க்கவும். கிழங்கு மசியலையும் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தீயைக் குறைத்து, தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 5 நிமிடங்கள் குறைந்த தணலிலேயே வைத்திருக்கவும். சூப் பதத்துக்கு வந்ததும் இறக்கி, மிளகு சேர்த்து, முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு -தயிர் சாலட் என்னென்ன தேவை? மீடியம் சைஸ் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுத்தம் செய்து, வட்டமாக ஸ்லைஸ் செய்யவும்) - 1, வெள்ளரிக்காய் (வட்டமாக ஸ்லைஸ் செய்தது) - 1, சிவப்பு குடைமிளகாய் (நீளமாக நறுக்கியது) - 1, கடுகு - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, தயிர் - 300 மி.லி., எலுமிச்சைச் சாறு - சிறிது, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கடுகை வெறும் கடாயில் பொரிக்கவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஆவியில் மெத்தென வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு அத்துடன் வெள்ளரிக்காய், குடைமிளகாய், கடுகு, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து தயிரும் எலுமிச்சைச்சாறும் சேர்க்கவும். மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும். தேவையானால் இன்னும் சிறிது தயிர் சேர்த்துப் பரிமாறவும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| காஷ்மீர் எல்லையில் பதற்ற நிலை : ஐ.நா தலையிட பாகிஸ்தான் கடிதம் Posted: 13 Oct 2014 12:45 AM PDT
''காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், இதில் ஐ.நா தலையிட்டு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்'' என அதன் பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு பாகிஸ்தான் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாபாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது. அதில் இப்பிரச்னையில் ஐ.நா தலையிட கோரி கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் ஆசிஸ், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் தொடர் தாக்குதலால், பாகிஸ்தான் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான வழியில் தீர்வு காண்பதையே பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்து அறியப்பட வேண்டும் என்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஐ.நாவிடம், பல ஆண்டுகளாக பாகிஸ் தான் நினைவூட்டி வருகிறது. இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் ஆசைக்கு எதிரான கொள்கையை இந்தியா எடுத்துள்ளது துரஅதிர்ஷ்டம். ஐ.நா சபையில் காஷ்மீர் பிரச்னையை பிரதமர் நவாஸ் ஷெரிப் எழுப்பியதால், வெளியுறவுத்துறை செயலாளர் இடையேயான பேச்சுவார்த்தையை எந்தவித நியாயமும் இல்லாமல் இந்தியா ரத்து செய்தது. இப்பிரச்னையை ஐ.நா.வில் எழுப்புவதால், இருதரப்பு பிரச்னை தீராது என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் ஐ.நா தலையிட்டு முக்கிய பங்கு வகிக்க முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழில் தேசிய கீதம் : தமிழ் ஆசிரியருக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு! Posted: 13 Oct 2014 12:36 AM PDT
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. இங்கு 'முன்னேறு வாலிபா...எனத் தொடங்கும் தமிழ்பாடல், தேசிய கீதமாக உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளிலும், அந்நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் இந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, சீனா மற்றும் மலேசிய மாணவர்களும் இதனை விரும்பி பாடுகின்றனர். இதனை ஜேசுதாசன் என்ற தமிழாசிரியர் இயற்றியுள்ளார். 1966ல் ரேபிள்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற பள்ளியில் அவர் பணியாற்றியபோது, தமிழர்களுக்காக தமிழில் தேசிய கீதத்தை இயற்றும்படி, அப்பள்ளி முதல்வர் அவரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தமிழாசிரியர் ஜேசுதாசன், முன்னேறு வாலிபா பாடலை எழுதினார். 45 ஆண்டு காலமாக தமிழாசிரியராக இருந்த அவர், அப்பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது, அவருக்கு 84 வயது ஆகிறது. இந்த நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக சிங்கப்பூர் அரசு பாராட்டு விழாவை நடத்தியுள்ளது. விழாவில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம், தமிழாசிரியர் ஜேசுதாசனை பாராட்டினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









