Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கொலம்பியாவில் விமானம் விழுந்து 10 பேர் பலி!

Posted: 08 Sep 2014 06:48 AM PDT

colombiya-flight-accident

colombiya-flight-accidentகொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 2 பேர் விமானிகள். இந்த விமானம் மாலை 3 மணியளவில் திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே அதை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் அது தென்மேற்கில் புயர்டேர் சன்டான்டர் பகுதியில் உள்ள ஒரு காட்டில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் 18வது திருத்தச் சட்டம்!

Posted: 08 Sep 2014 05:06 AM PDT

Rajabaksa

Rajabaksa18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தின் குறைபாடுகள் காரணமாக மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமுடியாது என முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொழில்சார் அமைப்புகளும் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றன. அத்துடன் இந்த பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. 18வது திருத்த சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். அதேவேளை மகிந்த ராஜபக்ஷ, மூன்றாவது தடையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால், வழக்கு தொடரப்படும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாக அரசாங்கத்திற்கு ஆதரவான சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாகவும் இதனால், மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வாதங்களை தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிட முடியும் மற்றும் முடியாது என்று வாதங்களை முன்வைக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ள வேண்டிய பாரதூரமான பிரச்சினை ஒன்று இருப்பதாக தோன்றுகிறது. சாதாரணமான இப்படியான சிக்கல்களை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் திருத்தங்கள் மூலமே அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கம் அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள அக்கறை செலுத்தாமல் இருப்பது சட்டதுறையினரின் சந்தேகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்படியான சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றம் சட்ட விளக்கங்களை வழங்க முடியும் என்றாலும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் ஒன்றில் குறைபாடுகள் இருக்குமாயின் 18வது அரசியல் அமைப்புத் திருத்த சட்டத்தை மீண்டும் திருத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ளுமாறு அறிவிக்க மாத்திரமே நீதிமன்றத்திற்கு முடியும். எது எப்படியிருந்தாலும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு மகிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், அரசாங்கத்தின் புதிய வேட்பாளருடன் 2016 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீரழிக்க மேற்கத்தேய நாடுகள் முகநூலை பயன்படுத்துகின்றன: விமல் வீரவன்ச

Posted: 08 Sep 2014 04:55 AM PDT

Vimal-viravan

Vimal-viravanஇலங்கை நாட்டை சீரழிக்க மேற்கத்தேய நாடுகள் பேஸ்புக் என்ற முகநூலை பயன்படுத்தும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபை தேர்தலை முன்னிட்டு கிராந்துருகோட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 50வீத வாக்குகளை பெறுவதைக்கூட மேற்கத்தேய நாடுகள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். எனினும் இந்த மேற்கத்தேய நாடுகள் ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க அல்லது மாதுலேவாவே சோபித தேரர் ஆகியோரை போட்டியிட வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள வாக்குகளை பெறமுடியாமல் செய்வதே நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார். இவ்வாறு சிங்கள வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் எவரும் 50வீத வாக்குகளை பெறமுடியாமல் செய்வதே மேற்கத்தேய நாடுகளின் திட்டம் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பலத்தை பெறாது போகும் சந்தர்ப்பத்தில் முகநூலை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பதே மேற்கத்தேய நாடுகளின் நோக்கம் என்றும் வீரவன்ச கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேர்ட்டா மாகாண PC கட்சியின் தலைவராக ஜிம் பிரென்ற்ரிஸ் தேர்வாகியுள்ளார்!

Posted: 08 Sep 2014 04:40 AM PDT

jim-prentice

jim-prenticeஅல்பேர்ட்டா மாகாண புறோகிறசிவ் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவராக ஜிம் பிரென்ற்ரிஸ் (Jim Prentice) தெரிவாகியுள்ளார். மேலும் அல்பேர்ட்டா மாகாண முதல்வர் பதவிக்கும் அவர் நியமிக்கப்படவுள்ளார். மாகாண புறோகிறசிவ் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஜிம் பிறென்ற்ரிஸ் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஜிம் பிறென்ற்ரிஸ் 17,963 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட றிக் மக்ஐவர் (Ric McIver) 2,742 வாக்குகளையும், தோமஸ் லுக்கஸுக் (Thomas Lukaszuk) 2,681 வாக்குகளையும் பெற்றனர். நேற்று எட்மன்டன் நகர Expo Centre இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து உரையாற்றிய ஜிம் பிறென்ற்ரிஸ், அல்பேர்ட்டா மாகாணத்திற்கு இதுவொரு புதிய அத்தியாயம் எனத் தெரிவித்தார். புறோகிறசிவ் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவாகியது மட்டுமன்றி, அல்பேர்ட்ட மாகாண முதல்வராகவும் பிறென்ற்ரிஸ் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிகிச்சை பெற்றுக்கொண்டமை தொடர்பில் வெளிப்படையாக விளக்கமளித்த ரொரன்ரோ நகரபிதா ரொப் போர்ட்!

Posted: 08 Sep 2014 04:32 AM PDT

Rob

Robஇந்த வருடத்தில் தனது நகரபிதா கடைமைகளை சிறிது காலம் ஒதுக்கி வைத்துவிட்டு புனர்வாழ்வு சிகிச்சையினை பெற்றுக்கொண்ட ரொரன்ரோ நகரபிதா ரொப் போர்ட், அது தொடர்பில் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார். ரொரன்ரோவில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், புனர்வாழ்வு சிகிக்சையினை பெற்றுக்கொள்ளும் முடிவினை வேறு யாருடைய வற்புறுத்தலும் இன்றி தான் தனித்தே முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னரே இந்த சிகிச்சையினை பெற்றுக்கொள்ள தான் திட்டமிட்டிருந்த போதிலும், இந்த வருடத்திலேயே அது சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மது, போதை தொடர்பிலான பாதிப்புகளால் பலத்த சர்ச்சைகளைச் சந்தித்துவந்த ரொரன்ரோ நகரபிதா, அவற்றில் இருந்து மீள்வதற்கு தான் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது என்பது தொடர்பில் விளக்கமளித்ததுடன், அவை சாத்தியமாக நிலையில் தான் புனர்வாழ்வு சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக விபரித்துள்ளார். உள்ளூர் மட்டத்தில் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்த இந்த போதைப் பொருள் விவகாரம் இடம்பெற்று சுமார் ஒரு மாதத்தில், கடந்த மே மாதம் ஒன்ராறியோவின் Bracebridge பகுதியி்ல் உள்ள கிரீன்ஸ்டோன் நிலையத்தில் இரண்டு மாதங்கள் தங்கிருந்து ரொரன்ரோ நகரபிதா சிகிச்சை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™