Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு: சகஜ நிலை திரும்ப 10 நாட்களாகும்

Posted: 08 Sep 2014 10:29 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்ததால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த தொடர் மழை காரணமாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலைக்கு மாறியுள்ளன. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 200–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஏராளமானவர்களை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

Posted: 08 Sep 2014 10:29 PM PDT

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்பதால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரியாகி ஆட்சி அமைத்தார். ஆனால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி அவர் ஆட்சியில் இருந்து 49 நாட்களில் விலகினார்.

சி.பி.ஐ. இயக்குனர் மீது பிடி இறுகுகிறது: கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு

Posted: 08 Sep 2014 10:16 PM PDT

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டினார். இது 2ஜி வழக்கு விசாரணையை திசை திருப்பும் செயல் என்று சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு?: இறுதி அறிக்கையில் குறைக்கப்பட்டது

Posted: 08 Sep 2014 10:13 PM PDT

1993–ம் ஆண்டு முதல் 2010–ம் ஆண்டு வரை நாடெங்கும் 218 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த சுரங்க ஒதுக்கீடுகளில் பெருமளவு ஊழல் நடந்து இருப்பதை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தபோதுதான் அதிக முறைகேடுகள் நடந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறை

திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

Posted: 08 Sep 2014 10:08 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 21–ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4–ந் தேதி வரை நடக்கும் விழாவில் 1–ந் தேதி தங்க ரத பவனி நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரமோற்சவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்பசாமி உலா வருகிறார். புதிய தங்க ரதம் தயார் நிலையில் உள்ளது.

கர்நாடகாவில் பஸ்–லாரி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Posted: 08 Sep 2014 09:49 PM PDT

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேருவில் பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை உள்ளது. கர்நாடக எல்லையை யொட்டி உள்ள இந்த பண்ணையில் ஆந்திரா, கர்நாடக தொழிலாளர்கள் 34 வேலை செய்கிறார்கள். பெங்களூரில் இருந்து திருப்பதி சென்ற அரசு பஸ்சில் ஏராளமான தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

கேரளாவில் மதுபான பார்களை மூடுவதால் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு: உம்மன்சாண்டி

Posted: 08 Sep 2014 09:27 PM PDT

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அடுத்த 10 ஆண்டுக்குள் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. அதன் முதல் கட்டமாக வருகிற 13–ந் தேதிக்கு பிறகு கேரளாவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பார்கள் செயல்படும். மற்ற இடங்களில் உள்ள 800–க்கும் மேற்பட்ட பார்கள் அனைத்தும் மூடப்படும். அந்த பார்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை அரசே வாங்கி கொள்ளும் எனவும் அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெ

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம்

Posted: 08 Sep 2014 04:38 PM PDT

திருப்பதி மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். காளி கோபுரம் அருகில் சென்ற பக்தர்கள் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை பார்த்ததாக கூறி அலறியடித்து ஓடினார்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை: நிர்மலா சீதாராமன்

Posted: 08 Sep 2014 04:05 PM PDT

அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்காக பல்பொருள் (மல்டி பிராண்ட்) சில்லறை வர்த்தக துறையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கியது. பின்னர் இந்த துறையில் 51 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு முந்தைய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு அப்போதே பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தமிழக அரசுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்

Posted: 08 Sep 2014 02:25 PM PDT

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதை எதிர்த்து, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு இலவச சிம் கார்ட்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Posted: 08 Sep 2014 02:15 PM PDT

இந்திய குடிமக்களுக்கு குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் ஜன் தன் திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 28-8-2014 அன்று புது டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது. தமிழகத்தின் காஞ்சிபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, இதர பகுதிகளில் புதிய வங்கிக் கண்க்கு தொடங்கும் பணிகள் நடைபெற்றும் வருகின்றது.

பாராளுமன்றத்தில் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: எம்.பி. தருண் விஜய்

Posted: 08 Sep 2014 02:03 PM PDT

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் அலுவலக மொழி மீதான உயர்மட்ட பாராளுமன்ற குழுவின் முதல் கூட்டம் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய், பாராளுமன்றத்தில் அலுவலக மொழிக்குழுவின் சார்பில் திருவள்ளுவர்

13 லட்சம் ஊழியர்கள் ரெயில்வே துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்: சதானந்த கவுடா

Posted: 08 Sep 2014 01:56 PM PDT

தேசிய ஜனநாயக கூட்டணியின் 100 நாள் சாதனை குறித்து ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளாக அவர் கூறியதாவது:– கடந்த 100 நாட்களில் ரெயில்வே இலாகாவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் திறனும் மேம்பட்டு இருக்கிறது. இந்திய ரெயில்வேயில் பயணிகள் பயணம் செய்வது 4.73 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதேபோல் ரெயில்வே இலாகாவின் வருமானம் முந்தைய ஆண்டை விட 23 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.

மத்திய அரசு பணியாளர்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யும் இறுதிக்கெடு டிச.31 வரை நீட்டிப்பு

Posted: 08 Sep 2014 01:50 PM PDT

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின்படி, மேற்கண்ட பிரிவுக்குள் வரும் சுமார் 23 லட்சம் அதிகாரிகள் தங்களது பெயரிலும், மனைவி அல்லது கணவர் மற்றும் மகன், மகள் பெயரில் உள்ள அசையா சொத்துக்கள், வாகனம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விபரங்கள், வங்கி சேமிப்பு, பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்ட தங்களது சொத்துக் கணக்கினை ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும். மத்திய அரசில் பணியாற்றும் ஏ., பி., சி., பிரிவு பணியாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வரும் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ்., தலிபான் தலைவர்களின் தலைக்கு தலா ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ள இந்திய ஷியா இயக்கம்

Posted: 08 Sep 2014 01:08 PM PDT

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த இயக்கத்தில் சேர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும்,

வினாயகர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பலி

Posted: 08 Sep 2014 12:40 PM PDT

நாடு முழுவதும் வினாயகர் சதுர்த்தியின் போது ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த வினாயகர் சிலைகள் கடந்த நான்கு நாட்களாக நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பொருண்டா நகரில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த வினாயகர் சிலைகள் அப்பகுதியில் உள்ள குட்டையில் நேற்று கரைக்கப்பட்டன. சிலைகளுடன் குட்டைக்குள் இறங்கிய சில இளைஞர்கள் உற்சாக மிகுதியில் நீரின் ஆழமான பகுதிக்கு சென்று நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது, புதைச்சேற்றில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த துர்கா சிங்(25), பிரதீப் சிங்(19), அபிஷேக் சிங்(18) மற்றும்ஹேப்பி சிங்(17) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

10 ஆயிரம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரும் இந்திய அரசு

Posted: 08 Sep 2014 12:26 PM PDT

மத்திய அரசின் உணவுப் பொருள் பொது வினியோக முறை பெரும்பாலும் ரெயில் போக்குவரத்தை சார்ந்தே அமைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை முன்பைப் போல் சரளமான முறையில் கொண்டு செல்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, எதிர்வரும் காலங்களில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏறபடாத வகையில் இப்பகுதிகளுக்கு அரிசியை சப்ளை

காஷ்மீர் வெள்ளத்தில் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்பு: 200 பேர் பலி

Posted: 08 Sep 2014 11:46 AM PDT

ஜம்மு-காஷ்மீரின் வரலாறு காணாத வெள்ளத்திற்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். முழுவீச்சில் நடந்து வரும் மீட்புபணியில் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

டெல்லியில் ஆட்சியை பிடிக்க ரூ.4 கோடி லஞ்சம்: வீடியோவுக்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. நோட்டீஸ்

Posted: 08 Sep 2014 11:08 AM PDT

புதுடெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் சில நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நீண்ட நாட்களாக டெல்லி சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.

சீனாவுடனான இந்திய உறவு ஒத்துழைப்பையும் போட்டியையும் கொண்டது: சுஷ்மா சுவராஜ்

Posted: 08 Sep 2014 10:37 AM PDT

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், வெளியுறவு துறையின் மூன்று மாத அறிக்கையை அத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், சீனாவுடன் நாம் நல்ல உறவு வைத்துள்ளோம். ஆனால் சீனாவுடனான நமது உறவு ஒத்துழைப்பு மற்றும் போட்டியை கொண்டது என தெளிவுபட தெரிவித்து கொள்கிறேன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™