Tamil Star |
- முறையாக போட்டியிட முடியுமா? முடியாதா? உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் மகிந்த
- விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு?
- மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட் வெளியிட்டார் நிலக்கீழ் தொடரூந்துப் பாதைகளை அமைக்கும் திட்டம்!
- அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கப்போவதாக ஒபாமா சூளுரை!
| முறையாக போட்டியிட முடியுமா? முடியாதா? உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் மகிந்த Posted: 04 Sep 2014 03:10 AM PDT
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் சட்ட விளக்கத்தை கோரியுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதம் ஜனாதிபதியின் செயலகத்தினால் நேற்று மாலை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் ரகசியத்தை பேண உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேற்படி சட்ட விளக்கம் தொடர்பான விசாரணைகளை பிரதம நீதியரசரின் அலுவலக அறையில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இவ்வாறான தேசிய முக்கியத்துவமிக்க சட்ட விளக்க கோரல்கள் ரகசியமான முறையில் நடத்தப்படுவதில்லை. சிரேஷ்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு அரசியலமைப்புச் சட்டம் ஆராயப்படும். ஆனாலும் ஜனாதிபதியின் இந்த விளக்கம் கோரல் ரகசியமான முறையில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த சட்ட ஆய்வு அமர்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஈவா வனசுந்தர, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நீதியரசர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் இவர்களில் பிரியந்த ஜயவர்தன அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார். இவரது சகோதரர் உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் விளக்கங்களை முன்வைத்திருந்தனர். 18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடைகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியும். எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மாத்திரமே வகிக்க முடியும் என்ற சட்டம் அமுலில் இருக்கும் போதே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றதால், அவர் மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியை வகிப்பது உட்பட பல திருத்தங்களுடன் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு? Posted: 04 Sep 2014 03:01 AM PDT
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம்மை இழிவுபடுத்தியதாகத் தெரிவித்து கடுவெல நகரசபையின் தலைவர் ஜீ.எச்.புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 2014ம் ஆண்டில் விமலின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியினால் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகையொன்றில் தம்மை இழிவுபடுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாயுதம் என்ற பெயரில் இந்த பத்திரிகை பிரசுரமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச ஐந்து கோடி ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென புத்ததாச கோரியுள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கட்சியின் செயலாளர்ப பிரியன்ஜன் விதாரனகே ஆகியோருக்கு எதிராக இவ்வாறு நட்ட ஈடு கோரி நகரசபைத் தலைவர் புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட் வெளியிட்டார் நிலக்கீழ் தொடரூந்துப் பாதைகளை அமைக்கும் திட்டம்! Posted: 04 Sep 2014 02:09 AM PDT
நிலக்கீழ் தொடரூந்துப் பாதைகளை அமைக்கும் திட்டம் ஒன்றை ரொறன்றோ மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட் வெளியிட்டார். 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இத்திட்டத்திற்கு ஒன்பது பில்லியன் டொலர் தேவைப்படுமென அவர் கூறினார். அந்தத் திட்டத்திற்கான பணம் சமஷ்டி, மற்றும் மாகாண அரசுகளிடம் இருந்தும், ஏனைய வழிகளில் இருந்தும் பெறப்படுமென கூறிய அவர், ரொறன்றோ மாநகர மக்கள் அதிக வரிப்பணத்தைச் செலுத்தவேண்டி இருக்காதென தெரிவித்தார். ஆனால், அவரது திட்டம் நடைமுறைச் சாத்தியமற்றதென ஏனைய மாநகர முதல்வர் வேட்பாளர்கள் குறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கப்போவதாக ஒபாமா சூளுரை! Posted: 04 Sep 2014 01:59 AM PDT
சமகாலத்தில் கொடூர தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார். ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திய தீவிரவாதிகள், அதனை விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க குர்திஷ் படையினர் போராடி வருகின்றனர். அதற்கு உதவும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் மற்றும் ஜேம்ஸ் போலே ஆகியோரை சிறைப்பிடித்திருந்த நிலையில், அவர்களை சிரச்சேதம் செய்து கொலை செய்துள்ளனர். ஸ்காட்லாப்பின் தலையை துண்டித்த தீவிரவாதி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எச்சரிக்கும் தோனியில் பேசியிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாப் கொல்லப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க தடவியல் துறை அதிகாரிகள் அது உண்மையானது தான் என தெரிவித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தங்கள் நாட்டை சேர்ந்த இரு நல்ல இளைஞர்களை கொன்றதற்காக மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்த அமெரிக்க பிராந்தியத்திற்கும், ஈராக் நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அவர்களை அழிக்க வேண்டியது உலக நன்மைக்கு நல்லது என்று கூறினார். தீவிரவாதிகளின் எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் தோற்றுப்போவார்கள்.அச்சுறுத்தல் வரும் போது தான் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எனவே தீவிரவாதிகளை ஒழிப்பது உறுதி என ஒபாமா மேலும் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




