மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இந்தியாவில் புதிய கிளை தொடக்கம்: அல்-கொய்தா பெயரில் பாகிஸ்தான் சதி?
- தேசிய கொடியை அவமதித்ததாக மல்லிகா ஷெராவத் மீது வழக்கு
- திருப்பதி போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம்
- ஆந்திரா தலைநகராக விஜயவாடா அறிவிப்பு: ராயலசீமாவில் மாணவர்கள் கண்டனபேரணி–மறியல்
- நாளை ஓணம் பண்டிகை: சபரிமலையில் இன்று நடை திறப்பு
- ரகசிய வாக்குமூலம் வாங்குவதாக கூறி சிறுமியை கற்பழித்த மாஜிஸ்திரேட்டு
- மத்திய அரசு உத்தரவின்பேரில் ஒரு லட்சம் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுகேட்பு
- கற்பித்தல் என்பது வேலை அல்ல, வாழ்வியல் முறை: பிரதமர் மோடி கருத்து
- முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு: முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேட்டி
- ஆபத்தில்லாத மெக்னீசியம் பேட்டரி: ஐதராபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- இந்தியாவில் தினந்தோறும் 92 பெண்கள் கற்பழிப்பு
- காஷ்மீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
- எய்ம்ஸ் மருத்துவமனையில் யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகம்
- சாரதா சிட்பண்ட் மோசடி: மம்தா பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை
- மோடியின் உரையை கேட்க முடியாத காஷ்மீர் மாணவர்கள்
- ராகுல் அமைதியாக இருக்காவிட்டால் காங். நிலைமை மேலும் மோசமாகும்: அமித் ஷா எச்சரிக்கை
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு
- சொந்த கட்சியினரே ராகுல் பேச்சை கேட்பதில்லை; நாங்கள் ஏன் கேட்கவேண்டும்? - பா.ஜ.க. பதிலடி
- விலைவாசி பற்றி கவலைப்படாமல் ஜப்பானில் மேளம் தட்டுகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
- பதான் பாலியல் வழக்கில் 3 பேருக்கு ஜாமின்
| இந்தியாவில் புதிய கிளை தொடக்கம்: அல்-கொய்தா பெயரில் பாகிஸ்தான் சதி? Posted: 04 Sep 2014 11:03 PM PDT மேற்காசிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அந்த இயக்கத்தின் தலைவராக அய்மான்–அல்–ஜவாஹிரி செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை குறிவைத்து அல்கொய்தா இயக்கம் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது. |
| தேசிய கொடியை அவமதித்ததாக மல்லிகா ஷெராவத் மீது வழக்கு Posted: 04 Sep 2014 10:53 PM PDT மல்லிகா ஷெராவத் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விளம்பரபடுத்தி சமீபத்தில் மும்பை மற்றும் தெலுங்கானாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் மல்லிகா ஷெராவத் ஆடைக்கு பதில் தேசிய கொடியை உடுத்தி இருப்பது போன்ற படம் இடம் பெற்று இருந்தது. இந்த போஸ்டருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இரண்டு பேர் கோர்ட்டுக்கு சென்றனர். தேசிய கொடியை மல்லிகா ஷெராவத் அவமதித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் |
| திருப்பதி போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் Posted: 04 Sep 2014 10:38 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே போல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது தினமும் 3 ஆயிரம் |
| ஆந்திரா தலைநகராக விஜயவாடா அறிவிப்பு: ராயலசீமாவில் மாணவர்கள் கண்டனபேரணி–மறியல் Posted: 04 Sep 2014 10:35 PM PDT ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சட்ட சபையில் நேற்று அறிவித்தார். புதிய தலைநகருக்கான நிலம் கையகப்படுத்த புதிய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சியை ஏற் படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார். அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும் வசதிகளையும் பட்டியலிட்டார். |
| நாளை ஓணம் பண்டிகை: சபரிமலையில் இன்று நடை திறப்பு Posted: 04 Sep 2014 09:46 PM PDT பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு, மண்டல விளக்கு பூஜைகளின் போது நடைபெறும் விழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றது. இது போல ஒவ்வொரு மாத பிறப்பின்போதும் கோவில் நடை திறக்கப்படும். திருவோண பண்டிகை நாளை (6–ந்தேதி) கொ |
| ரகசிய வாக்குமூலம் வாங்குவதாக கூறி சிறுமியை கற்பழித்த மாஜிஸ்திரேட்டு Posted: 04 Sep 2014 08:06 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் செய்தன. இப்போது ஒரு ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டே கோர்ட்டில் உள்ள தனது சேம்பரிலேயே சிறுமியை கற்பழித்துவிட்டதாக அந்த சிறுமி புகார் கொடுத்திருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் அசம்காரில் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி கற்பழித்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் கூறியிருந்தாள். இது |
| மத்திய அரசு உத்தரவின்பேரில் ஒரு லட்சம் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுகேட்பு Posted: 04 Sep 2014 07:56 PM PDT இந்தியாவில் தொலைபேசி பேச்சுகளை ஒட்டுகேட்டு, டேப் செய்யும் விவகாரம் அவ்வப்போது பெரிய அளவிலான பிரச்சினைகளை கிளப்புவது வழக்கம். அதுபோல தான் 2010-ம் ஆண்டு பிரபல கம்பெனிகளுக்கு விளம்பர ஆலோசகராக இருந்த நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு |
| கற்பித்தல் என்பது வேலை அல்ல, வாழ்வியல் முறை: பிரதமர் மோடி கருத்து Posted: 04 Sep 2014 05:17 PM PDT நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் (செப்டம்பர்-5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பான கல்விச்சேவைக்காக நாடு முழுவதும் 350 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை டெல்லியில் இன்று நடக்கிற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பிக்கிறார். |
| முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு: முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேட்டி Posted: 04 Sep 2014 03:55 PM PDT சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கேரள கவர்னராக பதவி ஏற்றுக் கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் கோவையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றார். |
| ஆபத்தில்லாத மெக்னீசியம் பேட்டரி: ஐதராபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted: 04 Sep 2014 02:46 PM PDT யு.பி.எஸ் மற்றும் இன்வெர்ட்டர்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் மிக ஆபத்தான லெட் ஆசிட் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஐதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிக ஆபத்தில்லாத மெக்னீசியம் பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளனர். |
| இந்தியாவில் தினந்தோறும் 92 பெண்கள் கற்பழிப்பு Posted: 04 Sep 2014 01:51 PM PDT கடந்த வருடத்தில் இந்தியாவில் சராசரியாக 92 பெண்கள் ஒவ்வொரு நாளும் கற்பழிக்கப்படுகிறார்கள். இது தேசிய தலைநகரில் மிக அதிக அளவாக 1,636 வழக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற நகரங்களை காட்டிலும் இங்கு பெண்களின் மீதான கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை அதிகம். |
| காஷ்மீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் Posted: 04 Sep 2014 01:16 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதில், ராஜவுரி மாவட்டம் அருகே ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 20 பேர் பலியாயினர். 45 -க்கும் மேற்பட்டவர்கள் |
| எய்ம்ஸ் மருத்துவமனையில் யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி அறிமுகம் Posted: 04 Sep 2014 12:39 PM PDT புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து நோயாளிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவங்களான யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் புனானி மருத்துவ முறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. |
| சாரதா சிட்பண்ட் மோசடி: மம்தா பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை Posted: 04 Sep 2014 11:53 AM PDT மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் உரிமையாளர், ஊழியர்கள் பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் 2013 ஏப்ரலில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதுகுறித்த வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டால் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு மேற்கு வங்கள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு |
| மோடியின் உரையை கேட்க முடியாத காஷ்மீர் மாணவர்கள் Posted: 04 Sep 2014 11:31 AM PDT ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை சிறப்பு உரையாற்றுகிறார். இந்த உரையை மாணவர்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட |
| ராகுல் அமைதியாக இருக்காவிட்டால் காங். நிலைமை மேலும் மோசமாகும்: அமித் ஷா எச்சரிக்கை Posted: 04 Sep 2014 08:07 AM PDT ராகுல் காந்தி அமைதியாக இருக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மேலும் மோசமாகும் என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறந்துவிட்டு பிரதமர் மோடி, ஜப்பானில் மேளம் கொட்டுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இவ்வாறு கூறியதுதான் தாமதம், ஆளும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு ராகுல் காந்தியையும் காங்கிரசையும் சரமாரியாக விமர்சித்தவண்ணம் உள்ளனர். |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு Posted: 04 Sep 2014 07:42 AM PDT மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. தொழில் துறையில் 2013 ஜூலை 1ஆம் தேதி முதல் 2014 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், சில்லறை பண வீக்க விகிதம் 7.25 சதவீதமாக இருந்தது. இதனால், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதம் |
| சொந்த கட்சியினரே ராகுல் பேச்சை கேட்பதில்லை; நாங்கள் ஏன் கேட்கவேண்டும்? - பா.ஜ.க. பதிலடி Posted: 04 Sep 2014 06:33 AM PDT விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகள் நாட்டை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, ஜப்பானில் மேளம் கொட்டுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு ஆளும் பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. |
| விலைவாசி பற்றி கவலைப்படாமல் ஜப்பானில் மேளம் தட்டுகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு Posted: 04 Sep 2014 06:03 AM PDT அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:- விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகள் நாட்டை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, ஜப்பானில் மேளம் கொட்டுகிறார். |
| பதான் பாலியல் வழக்கில் 3 பேருக்கு ஜாமின் Posted: 04 Sep 2014 05:24 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் பிணமாகத் தொங்கினர். அவர்களை கடத்தி கற்பழித்து கொலை செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |