Tamil Star |
- மறதி ஏற்படுவதற்கான விந்தையான 9 காரணங்கள்!!!
- நியூயார்க்கில் மோடி பேச்சின்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டார்!
- சர்வதேச விவகாரங்களைக் கையாள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நியமனம்!
- யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது: நிர்மல கொதலாவல கருத்து
| மறதி ஏற்படுவதற்கான விந்தையான 9 காரணங்கள்!!! Posted: 28 Sep 2014 10:55 PM PDT
மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிலர் இயற்கையாகவே மறதியை கொண்டுள்ளனர் என கூறுவோம். அதே போல் சிலருக்கு கூர்மையான ஞாபக சக்தி இருக்கும். அனைவருக்குமே நல்ல ஞாபக சக்தி இருக்காது என்பது உண்மையே. இருப்பினும் பெரியவர்களுக்கு ஏற்படும் மறதிக்கான காரணத்தை லேசாக விடக்கூடாது. உங்கள் நினைவாற்றலின் மீது நீங்கள் கட்டுப்பாட்டை கொள்ள முடியாது. அதனால் நாள்பட நாள்பட, உங்கள் மறதியின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது என்றால், மறதிக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாகும் போது அதற்கேற்ப உங்கள் மூளையும் தேயும். குழந்தைகளின் மூளை ஸ்பாஞ்சை போன்றது; தங்களை சுற்றியுள்ள அனைத்தையும் அவர்களால் ஈர்த்துக் அவைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் உங்களுக்கு வயது ஏறும் போது, உங்கள் மூளையில் பல விஷயங்கள் குடியேறும். இதனால் மறதியும் வந்து விடும். அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளால் தான் மறதி ஏற்படுகிறது. மருந்து மற்றும் போதை பொருட்கள் உங்கள் மூளையின் கூர்மையை இழக்கச் செய்யும். உங்கள் நினைவாற்றலின் அடிப்படையில், உங்களுக்கு வந்திருப்பது ஞாபக மறதியா அல்லது மூளைத்தேய்வா என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனால் மறதியின் காரணங்களைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள். பெரியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது தூக்கமின்மை. தினமும் இரவில் 8 மணி நேர அமைதியான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் புத்தி தெளிவில்லாமல் இருக்கும். அதனால் விஷயங்களை மறந்து குழப்பத்தில் இருப்பார்கள். ஒரு கால கட்டத்தில், தூக்க இழப்பு மூளை தேய்வை உண்டாக்கி விடும். மதுபானம் அருந்தினால், ஹேங் ஓவர் போன பிறகும் கூட அது உங்களை தாக்கும். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், தகவல்களின் மீதான உங்கள் கவனம் சிதறும். குடிக்கும் அளவு அதிகரிக்கையில் குறுகிய கால மறதியும் கூட ஏற்படலாம். ஒரு கட்டத்தில் எல்லாமே மறந்து போகும். சில வகையான மருந்துகள் உங்கள் மூளையை தெளிவில்லாமல் ஆக்கி விடும். சளிக்காக இருமல் மருந்தை கொஞ்சமாக குடித்தாலும் கூட அதனால் உங்களுக்கு கொஞ்சம் மறதி ஏற்படலாம். ஆனாலும் அழுத்தத்தை நீக்க உண்ணும் மாத்திரைகளும் ஹார்மோன் மாத்திரைகளும் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூயார்க்கில் மோடி பேச்சின்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டார்! Posted: 28 Sep 2014 10:45 PM PDT
நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட் செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகையாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென தாக்கப்பட்டார். அவரை கேலி செய்த மோடி ஆதரவாளர்கள் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளனர் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்தீப் விடுத்துள்ள டிவிட் செய்தியில், நல்லவேளை என்னைத் தாக்கியவர்களை நாங்கள் கேமராவில் படம் பிடிக்க முடிந்தது. இப்படிப்பட்டவர்களை வெட்கப்பட வைக்க அவர்களது முகத்தை அம்பலப்படுத்துவதுதான் என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச விவகாரங்களைக் கையாள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நியமனம்! Posted: 28 Sep 2014 10:38 PM PDT
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை நகரசபை பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், கட்சியின் செயற்பாடுகளை மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்திய ரீதிகளில் மேம்படுத்துவது பற்றியும் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இதன்போது அனைவரினதும் விருப்பத்துக்கிணங்க உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக அரசியல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் குழுவிற்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் தலைமை தாங்குகிறார். குழுவின் உறுப்பினர்களாக, கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி., பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராஜா, எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த அரசியல் குழு கூடுகின்ற வேளைகளில் தேவையேற்படும்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோரையும் இணைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரினதும் விருப்புக்கிணங்க இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக மாவட்ட ரீதியில் உப மாநாடுகளை நடத்துவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதலாவது உப மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது: நிர்மல கொதலாவல கருத்து Posted: 28 Sep 2014 10:28 PM PDT
எதிர்க்கட்சிகளின் சார்பில் யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்துள்ளார். நொண்டிச் சாக்கு சொல்லும் நோக்கிலேயே பொது வேட்பாளர் என்ற விடயம் பற்றி பேசப்படுகின்றது. எந்த ஐயா அல்லது அம்மணி தேர்தலில் போட்டியிட்டாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவே வெற்றியீட்டுவார். வேட்பாளரின் பெயர், பிரபல்யம், ஆளுமை போன்ற காரணிகள் தேர்தலில் தாக்கத்தை செலுத்தும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும் வேட்பாளர் போட்டியிடும் கட்சிகளின் கொள்கைகள் அதனை விடவும் முக்கியமானது. 2005ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இதனையே பறைசாற்றி நிற்கின்றது. 2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட்ட வேட்பாளர் பொலிவுட் நடிகருக்கு உரிய பிரபல்யத்தை பெற்றிருந்தார். எனினும் மக்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைகள் இன்று வரையில் மாற்றம் பெறவில்லை. மக்கள் தெளிவான அரசியல் கொள்கை ஒன்றையே விரும்பி நிற்கின்றனர் என நிர்மல கொதலாவல சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



