Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உடல் நலக்குறைவால் ஜெயலலிதா அவதி: ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Posted: 28 Sep 2014 10:59 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு எழுந்த அவர் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்து விட்டு நடை பயிற்சி செய்தார். பிறகு அவர்

பிரமோற்சவ விழா: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Posted: 28 Sep 2014 10:26 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 26–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 3–வது நாளான நேற்று பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கோவில் அருகில் உள்ள கொலு மண்டபத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஊஞ்சல்

திருப்பதியில் சீட்டு விளையாடிய மாணவர்கள்: அதிகாரியை கண்டித்த சந்திரபாபு நாயுடு

Posted: 28 Sep 2014 10:22 PM PDT

திருப்பதி திருமலையில் மது, புகையிலை போன்ற போதை வஸ்துகள் விற்கவோ, வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு சூதாடவோ, வேற்று மத பிரசாரம் செய்யவோ கூடாது. இந்த தடையை மீறுபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திருமலையில் உள்ள வராக சாமி விடுதியில் மாணவர்கள் 5 பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை

திருப்பதியில் நாளை கருட சேவை

Posted: 28 Sep 2014 10:04 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதையொட்டி விழாவின் 3–வது நாளான நேற்று இரவு முந்து பந்தல் வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

கர்நாடக ஐகோர்ட்டில் இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு: ராம்ஜெத்மலானி வாதாடுகிறார்

Posted: 28 Sep 2014 10:03 PM PDT

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்ப்பால் ஜெயலலிதா முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள மத்திய சிறையில்

சிவசேனாவின் ஆனந்த் கீதே மத்திய மந்திரிசபையில் நீடிப்பாரா?: ராஜ்நாத் சிங் பதில்

Posted: 28 Sep 2014 08:39 PM PDT

மராட்டியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்து வந்த சிவசேனாவும், பா.ஜனதாவும் அண்மையில் தங்களுடைய கூட்டணியை முறித்துக் கொண்டன. இதைத் தொடர்ந்து மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில் சிவசேனா சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள ஒரே மந்திரியான ஆனந்த் கீதே தொடர்ந்து பதவியில்

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி இந்தி நடிகரின் வாய்க்கொழுப்பு விமர்சனம்

Posted: 28 Sep 2014 08:17 PM PDT

வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் சுமார் 450 பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், ஷக்தி கபூர்(56). ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன அறிமுக விழாவில் பங்கேற்கவந்த இவர், சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைப் பற்றி தாறுமாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் இந்து பாராளுமன்ற உறுப்பினரான துல்சி கப்பார்டை சந்தித்தார் பிரதமர் மோடி

Posted: 28 Sep 2014 05:19 PM PDT

அமெரிக்கா நாட்டின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இந்து மதத்தை சேர்ந்த துல்சி கபார்டு பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது மோடிக்கு கப்பார்டு பகவத் கீதையை பரிசாக வழங்கினார். வேதங்களை பற்றியும் மோடியுடன் அவர் சிறிது நேரம் விவாதித்தார். இச்சந்திப்பின்போது தான் இந்தியா விரும்புவதாக மோடியிடம் கப்பார்டு தெரிவித்தார்.

ஐ.நா.வில் நவாஸ்ஷெரீப் பேச்சுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 28 Sep 2014 04:39 PM PDT

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: 288 பதவிகளுக்கு 7000 பேர் வேட்பு மனு தாக்கல்

Posted: 28 Sep 2014 04:00 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 7401 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு ஐந்து முனை போட்டி ஏற்படுவது உறுதியாகிவிட்டது. அதிகபட்சமாக நான்டெட் தெற்கு தொகுதியில் 91 பேரும், குறைந்த பட்சமாக குகாகர், மாஹிம் மற்றும் குடல் தொகுதிகளில் தலா 9 பேரும் மனு தாக்கல் செய்ததாக தெரியவந்துள்ளது.

மத்தியப்பிரதேச மந்திரியின் ஓட்டலை தகர்க்கப்போவதாக மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 28 Sep 2014 03:30 PM PDT

மத்தியப்பிரதேச மாநில அரசில் போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியாக உள்ள பூபேந்திர சிங்கிற்கு சொந்தமான ஓட்டலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக ஈ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்களது விசாரணையில் முதலில் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் மிரட்டல் விடுத்தவர் பெயரும் பூபேந்திர சிங் தான்.

2 நாள் சுற்றுப்பயணமாக சோனியா, ராகுல் காந்தி இன்று காஷ்மீர் பயணம்

Posted: 28 Sep 2014 02:24 PM PDT

இந்த மாத தொடக்கத்தில் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஒருவாரம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். அவர்களது பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. தற்போது

லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

Posted: 28 Sep 2014 01:40 PM PDT

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 85-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், சகோதரி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் நீடூழி வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

வதோதராவில் வகுப்புவாத மோதல்: 40 பேர் கைது

Posted: 28 Sep 2014 01:18 PM PDT

குஜராத்தில் உள்ள வதோதராவில் இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாக கல் வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றன. இதையடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மொபைல் இன்டர்நெட், குறுந்தகவல் அனுப்புவது தடை செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக எல்லையில் தொடர்ந்து பதற்றம்: கர்நாடக பஸ்கள் 2-வது நாளாக இயக்கப்படவில்லை

Posted: 28 Sep 2014 12:40 PM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூருக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட கர்நாடகா அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது மோடி ஆதரவாளர்கள் தாக்குதல்

Posted: 28 Sep 2014 11:19 AM PDT

இந்தியாவிலுள்ள சி.என்.என். ஐ,பி.என் தொலைக்காட்சி சேனலில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றும் ராஜ்தீப் சர்தேசாய் நியூயார்க்கில் மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். அங்குள்ள மேடிசன் பூங்காவில் மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டியெடுத்துக்கொண்டிருந்த போது தீடீரென தாக்கப்பட்டார். அவரை கேலி செய்த மோடி ஆதரவாளர்கள் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளனர் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பீகாரில் முதலமைச்சர் வந்து சென்ற பின் சிலைகளை கழுவிய கோவில் நிர்வாகம்

Posted: 28 Sep 2014 10:51 AM PDT

பீகாரில் முதலமைச்சராக பதவி வகிக்கும் ஜித்தன் ராம் மஞ்ஜி தலித் சமூகத்தை சேர்ந்தவர். இந்நிலையில் அவர் தலைநகர் பாட்னாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள மதுபானி மாவட்டத்தின் பர்மேஸ்வரிஸ்தான் பகுதியிலுள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் தன்னை கோவிலுக்கு வருமாறு அழைத்ததால் தான் அங்கு சென்றதாக கூறிய மஞ்ஜி, ஆனால் தான் வந்து சென்ற பின் கோவிலில் உள்ள சிலைகளை தண்ணீர் ஊற்றி கழுவியதாக தனக்கு தெரியவந்தது என கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் சாவு

Posted: 28 Sep 2014 10:21 AM PDT

சத்தீஷ்கார் மாநிலம் ரெய்கார் நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹரிகர்கஞ்சுக்கு காலை ஒரு பஸ் சென்றது. அந்த பஸ்சின் கூரையில் ஒரு சைக்கிள் ஏற்றப்பட்டு இருந்தது. ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் வைஷ்ராம்பூர் அருகே பஸ்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் காலூன்ற விரும்புகிறார்கள்: மேடிசன் பூங்காவில் மோடி பேச்சு

Posted: 28 Sep 2014 10:20 AM PDT

பாரதப் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் நியூயார்க் சென்ற அவர் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். தற்போது அவர் அங்குள்ள மேடிசன் பூங்காவில் 20000க்கும் மேல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் முன் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; "உலக அளவில் இந்தியாவின் முகத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்து வருவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்ததில் கர்நாடக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை: சித்தராமையா

Posted: 28 Sep 2014 07:20 AM PDT

"ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்ததில் கர்நாடக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை" என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.பெங்களூர் விதானசவுதா முன்பு காலையில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சித்தராமையா கூறியதாவது:–


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™