Tamil Star |
- பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா: பட்டர்பிளை பூங்கா விரைவில் துவக்கம்
- வயது 100 கடந்தோர் ஜப்பானில் அதிகம்: இந்தியாவில் ஆந்திரா முதலிடம்!
- விலைகள் குறைக்கப்பட்டாலும் மக்களின் வாழ்க்கைச் செலவை அரசாங்கத்தினால் குறைக்க முடியாது!– ரணில்
- மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்களின் விலை குறைப்பு !
- எம்.சி கெயின் ஆனியன் ரீங்ஸ் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது!
- மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்!!!
- டி20 அணிக்கு மீண்டும் கேப்டனானார் சாகித் அப்ரிடி: பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!
- சாய்னாவுக்கு ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் காத்திருக்கிறது சவால்!
- வைரஸை கட்டுப்படுத்த 3,000 ராணுவத்தினரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் அமெரிக்கா!
- பணக்காரர்களில் பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேற திட்டம்!
- தமிழர்கள் சிங்களம் பேச வேண்டும்! யாழ். இந்திய துணைத் தூதரின் கருத்துக்கு வெளியுறவுத்துறை விளக்கம்!
- ஜனாதிபதி நிவாரணங்களை எடுத்து வரவில்லை! சஜித் பிரேமதாச கருத்து
- மேயர் ராப் போர்டு அவர்களின் டிரைவர் வழக்கு ஒன்றுக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்
- தங்கமீன் ஒன்றிற்கு உயிர்காக்கும் சத்திரசிகிச்சை! நம்ப முடியவில்லையா? ஆனால் உண்மை!
| பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா: பட்டர்பிளை பூங்கா விரைவில் துவக்கம் Posted: 16 Sep 2014 08:48 PM PDT
துபாயில் பெரிய ஆறுகளோ, தொடர்ச்சியான மழையோ இல்லை என்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் மேற்கொண்டு மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர். இந்நிலையில் சென்ற வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 4.5 கோடி பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரமாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா அமைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மலர் தோட்டங்களில் இது ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். கோடை காலத்தையொட்டி தற்காலிகமாக ஜூன் மாதம் மூடப்பட்ட இப்பூங்கா எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கப்படும் எனத் தெரிகிறது. விரைவில் அங்கு ஆயிரக்கணக்கான வண்ண, வண்ண வண்ணத்து பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பூங்காவும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயது 100 கடந்தோர் ஜப்பானில் அதிகம்: இந்தியாவில் ஆந்திரா முதலிடம்! Posted: 16 Sep 2014 08:38 PM PDT
100 வயதைக் கடந்தவர்களை சென்டினேரியன் என்று அழைக்கிறார்கள். உலக அளவில் சென்டினேரியன்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 58,820. அதாவது ஒரு லட்சம் பேரில் 46.21 பேர் 100 வயதைக் கடந்தவர்கள். உலக சாதனைக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தின் சமீபத்திய கணக்கின்படி தற்போது உயிரோடு இருப்பவர்களில் மிகவும் வயதான ஆண் என்ற பெருமையை தட்டி செல்கிறார் 111 வயதாகும் ஜப்பானின் சகாரி மோமாய். 116 வயதாகும் மிசோவா ஒகாவா, தற்போது உயிரோடு இருக்கும் மிகவும் வயதான பெண்ணாக உள்ளார். 2010ம் ஆண்டு கணக்கின்படி அமெரிக்கா 53,364 பேருடன் முதலிடத்தில் இருந்தது. 2012ம் ஆண்டுவரை ஜப்பான் 51,376 பேருடன் இரண் டாம் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது ஜப்பான். கடந்த 1963ம் ஆண்டு ஜப்பானில் 153 பேர் 100 வயதைக் கடந்தவர்களாக இருந்தனர். 1998ல் 10 ஆயிரத்தை தாண்டியது. 2003ல் 20 ஆயிரத்தை தாண்டியது. 2009ல் 40 ஆயிரத்தை தாண்டியது. இந்த அளவுக்கு வேகமாக உயர்ந்தால், 2050ம் ஆண்டில் ஜப்பானில் 2.72 லட்சம் பேர் 100 வயதை தாண்டியவர்களாக இருப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி 2012ம் ஆண்டு உலகெங்கும் 3.16 லட்சம் பேர் 100 வயதை தாண்டியவர்கள். உலகெங்கும் சராசரியாக 10 லட்சம் பேரில் 44 பேர் 100 வயதை தாண்டியவர்கள். கின்னஸ் சாதனை புத்தகத்தின்படி இதுவரை உலகிலேயே மிக அதிக வயது வாழ்ந்த பெண் பிரான்ஸ் நாட்டின் ஜீன் கால்கென்ட். 1997ம் ஆண்டில் தனது 122 வயது 164 நாளில் உயிரிழந்தார். ஜப்பானின் ஜீரோமான் கிமுரா, கடந்த ஆண்டு தனது 116 வயது 54 நாளில் உயிரிழந்தார். முதியோர் நலன்: ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 100 வயதைத் தாண்டியவர்களுக்கு அரசு பரிசு அளித்து பாராட்டுகிறது. பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. முதியோர் நலனுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் வாழ்வதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களே முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய உணவுகளில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்கள் உள்ளன. மேலும் தூய்மையான பழக்கங்கள் ஆயுளை உயர்த்துகிறது. மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியும் முக்கிய காரணங்களாகும். இந்தியாவில் ஆந்திரா முதலிடம் இந்தியாவில் சென்டினேரியன் கணக்கில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கணக்கின்படி தென் மாநிலங்களில்தான் அதிக அளவு 100 வயதைக் கடந்தவர்கள் உள்ளனர். அதில் ஆந்திராவில் 27,985 பேரும், கர்நாடகாவில் 22,757 பேரும், தமிழ்நாட்டில் 12,654 பேரும், கேரளத்தில் 5,431 பேரும் உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், மேற்கு வங்கம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாக உள்ளன. இருப்பினும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை இங்கு குறைவு. 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையிலும் தென் மாநிலங்களே முதலிடத்தில் உள்ளன. ஆந்திராவில் மட்டும் 82.7 லட்சம் பேர் 60 வயதை கடந்தவர்கள். வயது முதியவர்கள் அதிக அளவில் இருந்தும், அவர்களுக்கான தனியாக திட்டங்களோ, மருத்துவ வசதிகளோ அதிக அளவில் இல்லை என்பது ஒரு குறையாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்கள் தொகை அடிப்படையில் நூறு வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விலைகள் குறைக்கப்பட்டாலும் மக்களின் வாழ்க்கைச் செலவை அரசாங்கத்தினால் குறைக்க முடியாது!– ரணில் Posted: 16 Sep 2014 08:28 PM PDT
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசாங்கம் சொற்பளவில் எரிபொருளுக்கான விலைகளை குறைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளார். இந்த உடன்படிக்கைகளின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. மாகாணசபைத் தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கும் நிலையில் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்தமையன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளா ஹரின் பெர்னாண்டோ முன்னிலையில் அரசாங்கம் மண்டியிட்டுள்ளமை வெளிச்சமாகியுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்களின் விலை குறைப்பு ! Posted: 16 Sep 2014 08:22 PM PDT
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊவா மாகாணசபையில் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் திடீரென விலை குறைப்பு அறிவிக்கப்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எம்.சி கெயின் ஆனியன் ரீங்ஸ் திருப்பி அழைக்கப்பட்டுள்ளது! Posted: 16 Sep 2014 08:16 PM PDT
எம்.சி கெயின் ஆனியன் அதன் உறைந்த வெங்காய பஜ்ஜிகள் சிலவற்றை திரும்ப எடுத்துள்ளது. அவற்றிற்குள் கண்ணாடி அடங்கியிருக்கலாம் என்ற கவலை காரணம் என கூறப்பட்டுள்ளது. நியு பிறவுன்ஸ்விக்கை சார்ந்த இந்த நிறுவனம் தானாக முன்வந்து இதனை செய்துள்ளதாக கனடிய உணவு பரிசோதனை ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 397-கிராம் எடையுள்ள McCain frozen onion rings ஒக்டோபர் 28 2015-ல் காலாவதியாகும் பொதிகளே மீள அழைக்கப் பட்டவைகளாகும். பாதிக்கப்பட்ட இந்த தயாரிப்புக்கள் ஏ40728. ஆரம்ப குறியீட்டை கொண்டவை. இவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை வெளியே எறிய வேண்டும் அல்லது வாங்கிய கடைகளில் திரும்ப கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்!!! Posted: 16 Sep 2014 09:39 AM PDT
அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பல்கிப் பெருகியுள்ள மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது தான் மிளகுகளாகும். பார்த்தாலே காரம் தூக்கும் இந்த வண்ணமயமான தாவரத்திலிருந்து பலரும் விலகியிருந்தாலும், அதன் மிளகுத் தூளை - அதுவும் சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை! நார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும். கோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும். ஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும். மிளகு ஒரு மென்மையான மற்றும் பருவ கால சைவ உணவாகும். மிளகுச் செடியை வளர்ப்பதற்கு அதிகமான வெப்பநிலை தேவைப்படும் மற்றும் அது மெதுவாகவே வளரும். இவற்றை உணவுக்காகவும், வாசனைப் பொருளாகவும் மற்றும் அலங்காரத்திற்காகவும் கூட வளர்க்கிறார்கள். இப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய கருவியாக இருப்பது மூலப்பொருள் P என்பதாகும். இதுதான் உடலில் எரிச்சலையும் மற்றும் வலியையும் ட்ரைஜெமினல் நரம்பிற்கு கொடுத்து, உடலை உணரச் செய்து வருகிறது. ட்ரைஜெமினல் நரம்பை (Trigeminal Nerve) அடிப்படையாக கொண்டு தான் நமது உடல், உடற்கூடு மற்றும் சுவாச துவாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இயக்கமும் உள்ளது. ஒருமுறை நரம்பின் நார்களுக்குள் இந்த மூலப்பொருள் P புகுந்து கொண்டால், தலைவலி மற்றும் சைனஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற மூலப்பொருள் கூட்டுத் தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணமாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மூட்டுவலியால் அவதிப்படுபவர்களின் இரத்தம் மற்றும் மூட்டுகளை இணைக்கும் சினோவியல் திரவம் ஆகியவற்றில் மூலப்பொருள் P-யின் அளவு அதிகரித்து விடுகிறது. கேப்சைசின் கலந்துள்ள கிரீமை சாப்பிடுவதன் மூலமான இந்த மூலப்பொருள் P உற்பத்தியாவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது. இது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும். கேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும். மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது. மேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பைத் நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும். பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள். சிலி மிளகை வைத்து தயாரிக்கப்படக் கூடிய பிளாஸ்டர்கள் மற்றும் மாவு கட்டுகள் உள்ளன. உங்களுக்கு சாதாரண ஜலதோஷமோ, மூச்சுக்குழாய் அழற்சியோ வந்திருந்தால், சிறிதளவு மிளகை எடுத்து சிக்கன் சூப்பில் போட்டு சாப்பிடுங்கள். எரிச்சலுடன் தொடர்புடைய குடல் நோய்க்கு கேப்சைசின் நிவாரணமளிப்பதை டியூக் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. ஹெச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களையும் கேப்சைசின் அழித்து விடுவதால், வயிற்று புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகிறது. காரமான உணவினால் வாய்வு தொல்லை ஏற்படும் என்ற எண்ணத்திற்கு தடை போடுங்கள்; சில வகையான வாய்வு பிரச்சனைகளுக்கு தகுந்த நிவாரணமாக காரமான மிளகுகள் உள்ளன. கேப்சைசின் அஜீரணத்தை ஏற்படுத்தும் ஹெ.பைலோரியை அழித்து விடுகிறது. இது போன்ற நேரங்களில், பாதிக்கப்பட்ட வயிற்றை பாதுகாக்கும் வகையில் சாறுகளை உற்பத்தி செய்யவும் கார மிளகு தூண்டும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| டி20 அணிக்கு மீண்டும் கேப்டனானார் சாகித் அப்ரிடி: பாக். கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!! Posted: 16 Sep 2014 09:32 AM PDT
டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சாகித் அப்ரிடி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வங்க தேசத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி கண்டது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் முகமது ஹபீஸ் விலகினார். இந்த நிலையில் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சாகித் அப்ரிடி மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் 2016ம் ஆண்டில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிவரை அப்ரிடி கேப்டனாக தொடருவார் என்று தெரிவித்துள்ளது. அதே நேரம் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக மிஸ்பா-உல்-ஹக் தொடருவார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இவரது தலைமையிலேயே பாகிஸ்தான் சந்திக்க உள்ளது. 2009 முதல் 2011வரை பாகிஸ்தான் டி20 கிரிக்கெ் அணிக்கு அப்ரிடி கேப்டனாக பதவி வகித்தார். பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான மோதலுக்கு பிறகு 2011ல் அப்ரிடி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இவரது தலைமையில் 19 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடி அதில் 8 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாய்னாவுக்கு ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் காத்திருக்கிறது சவால்! Posted: 16 Sep 2014 09:28 AM PDT
ஆட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் தனது பயிற்சியாளரை மாற்றியுள்ள நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி அவருக்கு பெரும் சவாலாக இருக்கும். வரும் 19ம்தேதி தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சாய்னா ஆயத்தமாகி வருகிறார். இதையொட்டி பெங்களூரிலுள்ள பிரகாஷ் படுகோனே பேட்மின்டன் அகாடமியில் சாய்னா பயிற்சி பெற்றுவருகிறார். அவர் கடந்த பத்தாண்டுகளாக புல்லேலா கோபிச்சந்திடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், பெங்களூரில் விமல்குமாரிடம் பயிற்சி பெறப்போவதாக சாய்னா அறிவித்திருந்தார். ஆசிய விளையாட்டு போட்டித்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு விமல்குமாரின் பயிற்சி மிகவும் உதவும் என்று நம்புகிறேன் என்று சாய்னா தெரிவித்தார். இனிடையே, சாய்னாவின் இந்த முடிவு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோபிச்சந்த் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் நான் இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது சாய்னாவின் குறிக்கோள் முழுக்க ஆசிய கோப்பை மீதே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். போட்டித் தொடர் முடிந்த பிறகு நான் இதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன்" 24 வயதான சாய்னாவுக்கு கடந்த 10 வருட காலமாக கோபிச்சந்த் பயிற்சியளித்து வருகிறார். இருப்பினும் கடந்த இரு ஆண்டுகளாக சாய்னா பெரிதாக எதையும் சோபிக்கவில்லை என்பதுடன், அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்கிறார். எனவே தனது பயிற்சியாளரை சாய்னா மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமான நேரத்தில் எடுத்துள்ள இந்த முடிவில் சாய்னா வெற்றிபெற்றால் அது அவருக்கு புது வாழ்க்கையை தரும். ஒருவேளை ஆசிய போட்டித் தொடரில் சோபிக்க தவறினால் அவரது இந்த முடிவு பெரும் விமர்சனங்களை சந்திக்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வைரஸை கட்டுப்படுத்த 3,000 ராணுவத்தினரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் அமெரிக்கா! Posted: 16 Sep 2014 08:42 AM PDT
எபோலாவை எதிர்த்து போராட மேற்கு ஆப்பிரிக்காவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரத்து 784 பேருக்கும் மேற்பட்டோர் அவதிப்படுகின்றனர். அதில் 2 ஆயிரத்து 400 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் அதிகமானோர் லைபீரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எபோலா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவி செய்யுமாறு லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் கேட்டார். எபோலாவை எதிர்த்து போராடும் சர்வதேச குழுக்களுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவம் 3 ஆயிரம் பேரை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது. இதற்கு ஆபரேஷன் யுனைடெட் அசிஸ்டன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ ஜெனரல் இந்த வார இறுதியில் லைபீரிய தலைநகர் மான்ரோவியாவுக்கு சென்று ஆபரேஷன் யுனைடெட் அசிஸ்டன்ஸ் துவங்துவதற்கான வேலையில் ஈடுபட உள்ளார். மான்ரோவியாவில் தலைமை அலுவலகம் அமைத்து அமெரிக்க ராணுவம் செயல்படும். அவர்கள் மருத்துவ மையங்களை கட்ட, சுகாதாரத்றை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உதவி செய்வார்கள். எபோலா நோயாளிகளை கவனிக்கும் பயிற்சி அளிக்கும் மையம் துவங்கப்பட உள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 500 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பணக்காரர்களில் பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேற திட்டம்! Posted: 16 Sep 2014 08:33 AM PDT
சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. பார்க்ளேஸ் வெல்த் நிறுவனம் சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் 2 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் கலந்து கொண்டனர். அந்த கணக்கெடுப்பின் முடிவுகளின் விவரம் வருமாறு, கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 47 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள பெரும் பணக்காரர்களில் 30 சதவீதம் பேர் ஹாங்காங்கில் செட்டிலாக விரும்புகிறார்கள். இதையடுத்து 23 சதவீதம் பேர் கனடாவில் செட்டிலாக விரும்புகிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவே வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவதாக சீன பெரும் பணக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கில் வசிக்கும் பணக்காரர்களில் 16 சதவீதம் பேர் வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதில் 44 சதவீதம் பேர் சிங்கப்பூரிலும், 31 சதவீதம் பேர் சீனாவிலும் செட்டிலாக திட்டமிட்டுள்ளனர்This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழர்கள் சிங்களம் பேச வேண்டும்! யாழ். இந்திய துணைத் தூதரின் கருத்துக்கு வெளியுறவுத்துறை விளக்கம்! Posted: 16 Sep 2014 08:21 AM PDT
இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் ஈழத் தமிழர்களை சிங்கள மொழி பேச வேண்டும் என்று இந்திய துணைத் தூதர் மூர்த்தி வலியுறுத்தியது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள், இந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக் கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகள் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ச அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் அமுலாக்கம் செய்வது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார். இது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும். இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றார் சையது அக்பருதீன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி நிவாரணங்களை எடுத்து வரவில்லை! சஜித் பிரேமதாச கருத்து Posted: 16 Sep 2014 06:29 AM PDT
இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன ஜனாதிபதி நிவாரணங்களை எடுத்து வரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி இலங்கைக்கு பாரியளவில் உதவிகளையும் நிவாரணங்களையும் எடுத்து வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது. எனினும், உண்மையான நிலைமை அதுவல்ல. பாரியளவிலான வட்டிக்கு சீன ஜனாதிபதி, இலங்கைக்கு கடன் வழங்க உள்ளார். இந்தக் கடன் கல்வி, வறுமை ஒழிப்பு, கிராமிய வைத்தியசாலை அபிவிருத்தி உள்ளிட்ட நலன் திட்டங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், கடலை நிரப்பி தீவுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கே கடனுதவி வழங்கப்படுகின்றது. இவ்வாறான கடன் தொகைகளையே அரசாங்கமும் விரும்புகின்றது. இந்தக் கடன் தொகையானது இலகுக் கடன் அடிப்படையிலானதல்ல, அதிகளவு வட்டிக்கே இந்தக் கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. நாட்டில் நிலவி வரும் வரட்சி காரணமாக மூன்று லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியில்லை. அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதனைத் தவிர வேறு எந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவதில்லை. சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் நாட்டம் காட்டுவதில்லை. கடந்த காலங்களில் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் உதவிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கங்கள் பேணிய வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாடுகளுடனான நட்புறவின் அடிப்படையில் உதவிகள் கிடைக்கப்பெற்றன. விக்டோரியா, ரந்தெனிகல உள்ளிட்ட நீர் மின் திட்டங்கள் உதவிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்த அரசாங்கம் அதிகளவு வட்டிக்கு கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நீர் விநியோக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேயர் ராப் போர்டு அவர்களின் டிரைவர் வழக்கு ஒன்றுக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார் Posted: 16 Sep 2014 05:49 AM PDT
டொரண்டோ மேயர் ராப் போர்டு அவர்களின் டிரைவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக அவர் நேற்று டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி டொரண்டொ மேயர் ராப் ஃபோர்டு அவர்களின் டிரைவர் சாண்ட்ரோ லிசி என்பவர் தனது காரில் போதை மருந்து வைத்திருந்ததாகவும், அவரது காரை பரிசோதனை செய்ய முயன்ற காவல்துறை அதிகாரியை அவர் மிரட்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று ஆஜராவதற்காக நேற்று சாட்ரோ லிசி டொரண்டோ நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த வழக்கில் மேயர் ராப் ஃபோர்டு அவர்களும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.ஆனால் மேயர் ஆஜராகவில்லை. அவருடைய டிரைவர் மட்டுமே ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சாண்ட்ரோ லிசி சென்றுவிட்டதாகவும், இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தங்கமீன் ஒன்றிற்கு உயிர்காக்கும் சத்திரசிகிச்சை! நம்ப முடியவில்லையா? ஆனால் உண்மை! Posted: 16 Sep 2014 05:18 AM PDT
ஜோர்ஜ் என்ற பெயருடைய 10-வயது தங்கமீனுக்கு அதன் தலையில் இருந்த கட்டியை அகற்றி அதன் உயிரை காக்க சத்திரசிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய கால்நடை மருத்துவரான ரிஸ்ரன் ரிச் வாளியொன்றிற்குள் "பராமரிப்பு அளவிலான" மயக்கமருந்து மற்றும் பிராணவாயு கலந்த தண்ணீரை எடுத்து அதற்குள் குழாய் ஒன்றை வைத்து அதன் மூலம் மீனின் வாயூடாக உள்ளே செலத்தினார். எனவே சத்திர சிகிச்சையின் போது தண்ணீர் ஜோர்ஜின் செதில்களை கழுவிச் சென்று விடும். தலையில் இருந்த கட்டி காரணமாக ஜோர்ஜால் நீந்தவோ அல்லது சரியாக சாப்பிடவோ முடியாமல் இருந்தது. சத்திர சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டு புண்ணை மூடுவதற்கு 4-தையல்கள் போடப்பட்டதுடன் பசையும் உபயோகிக்கப் பட்டது. சத்திரசிகிச்சை முடிவடைந்த உடன் மீன் தன்பாட்டில் சில மூச்சுக்களை விட்டதுடன் நீந்தவும் தொடங்கியது. சிகிச்சை சுமுகமாகவும் திருப்திகரமாகவும் முடிந்ததால் ஜோர்ஜ் தனது அன்பான சொந்தகாரரின் வீட்டிற்கு திரும்பி சென்றது. சத்திரசிகிச்சைக்கு 200டொலர்கள் செலவாகியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














