மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய தெலுங்கானா ராணுவ அதிகாரியிடம் போலீஸ் காவலில் விசாரணை
- காஷ்மீர் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடங்கியது
- இடைத்தேர்தலில் 3–வது தடவையாக சறுக்கல்: மோடி அலை ஓய்ந்து விட்டதா?
- ஜாத்திரை விழாவில் மோதல்: நடிகை ரோஜா உருவபொம்மை எரிப்பு
- திருப்பதியில் 25–ந்தேதி பிரம்மோற்சவம் தொடக்கம்: 10 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து
- இன்று 64-வது பிறந்த நாள்: ஆசி பெற வந்த மோடியிடம் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய தாயார்
- பிரதமரான பிறகு முதன்முதலாக குஜராத் சென்ற மோடி, தாயின் காலை வணங்கி ஆசி பெற்றார்
- மேதகு என்ற அடைமொழியை யாரும் பயன்படுத்த வேண்டாம்: கேரள கவர்னர் சதாசிவம்
- வெள்ள நீரில் மிதக்கும் விலங்குகளால் காலரா பரவும் அபாயம்: காஷ்மீர் மருத்துவர்கள் அச்சம்
- விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து: மத்திய அரசு அதிரடி
- நிலபேர ஊழல்: ராபர்ட் வதேராவுக்கு எதிரான மனு தள்ளுபடி
- ரெயில்களில் பயணத்தின் போது உணவு: இனி எஸ்.எம்.எஸ். மூலம் ஆர்டர் செய்யலாம்
- காஷ்மீர் வெள்ள நிவாரண பணிக்கு அமெரிக்கா ரூ.1½ கோடி நிதி உதவி
- இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து
- பாசன கால்வாய் திட்டத்தை தடுக்க இந்திய எல்லைக்குள் சீன பொது மக்கள் ஊடுருவல்
- 3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை
- 5 வயதில் 5 அடி உயரம்: கின்னஸ் உலக சாதனையில் இந்திய சிறுவன்
- மோடி அரசு இந்தியாவில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
- மதவாத சக்திகளை மக்கள் வீழ்த்தியுள்ளனர்: அகிலேஷ் யாதவ்
- குருவாயூர் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
| ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய தெலுங்கானா ராணுவ அதிகாரியிடம் போலீஸ் காவலில் விசாரணை Posted: 16 Sep 2014 11:06 PM PDT தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த ராணுவ சுபேதார் பதன்குமார். இவர் பாகிஸ்தான் பெண் ஏஜெண்டான அனுஷ்கா அகர்வாலுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டபோது இதில் மற்றொரு ராணுவ அதிகாரியான ஆசிப்அலி என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிப் அலியையும் |
| காஷ்மீர் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடங்கியது Posted: 16 Sep 2014 11:02 PM PDT காஷ்மீர் மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளத்தால் சின்னாபின்னாமானது. இதில் 200–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கணக்கிட முடியாத வகையில் பொருட்சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய காஷ்மீர் மக்களை ராணுவம் உள்பட பல்வேறு அமைப்பினர் போர்க்கால அடிப்படையில் மீட்டனர். 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். |
| இடைத்தேர்தலில் 3–வது தடவையாக சறுக்கல்: மோடி அலை ஓய்ந்து விட்டதா? Posted: 16 Sep 2014 10:58 PM PDT மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா இடைத்தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா வரலாறு காணாத மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது நாடுமுழுவதும் மோடி அலை வீசியது. |
| ஜாத்திரை விழாவில் மோதல்: நடிகை ரோஜா உருவபொம்மை எரிப்பு Posted: 16 Sep 2014 10:22 PM PDT ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தனக்குத்தான் முதல் ஆரத்தி கொடுக்கும் உரிமை தர வேண்டும் என்று கூறினார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் |
| திருப்பதியில் 25–ந்தேதி பிரம்மோற்சவம் தொடக்கம்: 10 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து Posted: 16 Sep 2014 10:18 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி திருப்பதி கோவில் மற்றும் 4 மாட வீதிகளில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. |
| இன்று 64-வது பிறந்த நாள்: ஆசி பெற வந்த மோடியிடம் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய தாயார் Posted: 16 Sep 2014 10:13 PM PDT குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முதன்முதலாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். இன்று காலை காந்தி நகரில் உள்ள தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர், தனது 64-வது பிறந்த நாளையொட்டி, தாயார் ஹீரா பென்(95) காலில் விழுந்து, வணங்கி ஆசி பெற்றார். |
| பிரதமரான பிறகு முதன்முதலாக குஜராத் சென்ற மோடி, தாயின் காலை வணங்கி ஆசி பெற்றார் Posted: 16 Sep 2014 09:41 PM PDT குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், முதன்முதலாக நேற்று (16-ம் தேதி) தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார். டெல்லியில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு தனிவிமானம் மூலம் வந்து சேர்ந்த மோடியை மாநில மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்று, பரிசளித்து கவுரவித்தனர். இன்று காலை காந்தி நகரில் உள்ள தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர், தனது 64-வது பிறந்த நாளையொட்டி, தாயார் ஹீரா பென்(95) காலில் விழுந்து, வணங்கி ஆசி பெற்றார். |
| மேதகு என்ற அடைமொழியை யாரும் பயன்படுத்த வேண்டாம்: கேரள கவர்னர் சதாசிவம் Posted: 16 Sep 2014 09:08 PM PDT தமிழகத்தை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான சதாசிவம் கேரளா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் சமீபத்தில் கவர்னர் பதவியை ஏற்றார். இந்த நிலையில் திருவனந்தபுரம் கவர்னர் மாளிகை சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– தன்னுடனான கடித போக்குவரத்து உள்பட அனைத்து தொடர்புகளின் போதும் |
| வெள்ள நீரில் மிதக்கும் விலங்குகளால் காலரா பரவும் அபாயம்: காஷ்மீர் மருத்துவர்கள் அச்சம் Posted: 16 Sep 2014 04:51 PM PDT வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் திண்டாடி வரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்னமும் வீடுகளை சுற்றியுள்ள வெள்ளம் வடிந்த பாடில்லை. 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,50,000 லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்துள்ள ஸ்ரீ நகரில் சுகாதார குறைபாடுகளால் காலரா பரவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆயிரக்கணக்கான விலங்குகள் அழுகிய நிலையில் நீரில் மிதப்பதால் எந்நேரமும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து: மத்திய அரசு அதிரடி Posted: 16 Sep 2014 04:26 PM PDT நாட்டு மக்களின் செல்லங்களான மக்கள் பிரதிநிதிகளுக்கு விமான நிலையங்களில் வழங்கப்பட்ட வி.வி.ஐ.பி சலுகையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வி.வி.ஐ.பி.க்களுக்கு வரவேற்பு கொடுக்கிறேன் என்ற போர்வையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள அரசு, இனி மக்கள் பிரதிநிதிகளையும் சாதாரண பிரஜை போல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ளது. தனது உத்தரவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரியான அசோக் கஜபதி ராஜுவே அதற்கு முன் மாதிரியாக விளங்குகிறார். |
| நிலபேர ஊழல்: ராபர்ட் வதேராவுக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 16 Sep 2014 03:58 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். வதேராவுக்கு சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய நிலங்கள் குறித்து கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு அதில் அவர் கோரி இருந்தார். |
| ரெயில்களில் பயணத்தின் போது உணவு: இனி எஸ்.எம்.எஸ். மூலம் ஆர்டர் செய்யலாம் Posted: 16 Sep 2014 03:08 PM PDT ரெயில் பயணிகள் இனி பசியோடு பயணம் செய்ய தேவையில்லை. பசி எடுக்கிறது என தோன்றிய மாத்திரத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் உணவுக்கு ஆர்டர் செய்தால் அடுத்த ரெயில் நிலையத்தில் உங்கள் இருக்கைக்கே உணவு வந்து சேரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. |
| காஷ்மீர் வெள்ள நிவாரண பணிக்கு அமெரிக்கா ரூ.1½ கோடி நிதி உதவி Posted: 16 Sep 2014 02:20 PM PDT காஷ்மீர் வெள்ள நிவாரண பணிகளுக்கு அமெரிக்கா 2½ லட்சம் டாலர் (ரூ.1½ கோடி) நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தற்காலிக தூதர் கேத்லீன் ஸ்டீபன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க நிறுவனம் மூலமாக சில குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களிடம் இப்பணம் வழங்கப்படும் என்று அவர் கூறினார். பலியானோரின் |
| இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து Posted: 16 Sep 2014 02:06 PM PDT 10 மாநிலங்களில் உள்ள 33 சட்டசபை தொகுதிகள், 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற 4 மாதங்களில் இந்த தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. |
| பாசன கால்வாய் திட்டத்தை தடுக்க இந்திய எல்லைக்குள் சீன பொது மக்கள் ஊடுருவல் Posted: 16 Sep 2014 01:46 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக ஊடுருவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்றும் லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் கிராமத்தில் இந்திய எல்லைக்குள் சீன நாட்டின் பொதுமக்கள் சுமார் 100 பேர் ஊடுருவினார்கள். |
| 3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை Posted: 16 Sep 2014 12:23 PM PDT சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர். |
| 5 வயதில் 5 அடி உயரம்: கின்னஸ் உலக சாதனையில் இந்திய சிறுவன் Posted: 16 Sep 2014 11:56 AM PDT உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் கரண் சிங். இவனுக்கு வயது 5. பள்ளியில் கே.ஜி. வகுப்பில் சேர உள்ள கரண் 5 அடி உயரத்தில் பெரிய மனிதனின் தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்து கரண் சிங்கின் தந்தை சஞ்சய் சிங் கூறும்போது, அவன் பள்ளிக்கூடத்தில் படிக்க செல்லும்போது கரணை விட வயதில் குறைந்த |
| மோடி அரசு இந்தியாவில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Posted: 16 Sep 2014 10:34 AM PDT நரேந்திர மோடி அரசை வெகுவாக பாராட்டி பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் நாட்டில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அங்கு இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். வழக்கமான எழுதி |
| மதவாத சக்திகளை மக்கள் வீழ்த்தியுள்ளனர்: அகிலேஷ் யாதவ் Posted: 16 Sep 2014 09:09 AM PDT இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் வீழ்த்திவிட்டதாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் காலியாக இருந்த 33 சட்டசபை தொகுதி மற்றும் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்று பின்னர் ராஜினாமா செய்த வதோதரா உள்ளிட்ட 3 எம்.பி. தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் |
| குருவாயூர் கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு Posted: 16 Sep 2014 06:46 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்), ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போதைய மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய மேல்சாந்தியாக பவன் நம்பூதிரி (42) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |