Tamil Star |
- டி20 தகுதி சுற்று! சதர்ன்-நார்தன், மும்பை-லாகூர் அணிகள் இன்று பலப்பரிட்சை!
- இலங்கையில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி
- அறுவை சிகிச்சை நிதி திரட்டும் விளம்பரத்துக்கு தடை: பேஸ்புக் மன்னிப்பு
- நோயை தாறுமாறாய் பரப்பும் இளைஞர்- தடுக்க கோர்ட் உத்தரவு!
- வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட மர்ம மனிதன்: அமெரிக்காவில் பெரும் பரபரப்பு!
- ஜனாதிபதி பெட்றோ பொறொஷென்கோ: கனடா வருகைதரவுள்ளார்!
- மேயர் பதவி போட்டியில் இருந்து றொப் வோட் விலக டக் வோட் நுழைகின்றார்!
| டி20 தகுதி சுற்று! சதர்ன்-நார்தன், மும்பை-லாகூர் அணிகள் இன்று பலப்பரிட்சை! Posted: 13 Sep 2014 08:57 AM PDT
சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. ராய்பூரில் மாலை 4.00 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியுடன் இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி மோதுகிறது. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் இன்று தொடங்கியது. 16ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை முக்கிய சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளன. முக்கிய சுற்றில் விளையாட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், தகுதிச் சுற்றில் 4 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லாகூர் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், நார்தர் டிஸ்ட்ரிக்ட்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 அணிகள் தகுதிச் சுற்றில் களம் காண்கின்றன. இதில் இருந்து 2 அணிகள் மட்டும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும். ஏ பிரிவில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், டால்பின்ஸ் மற்றும் தகுதிச் சுற்றில் இருந்து முன்னேறும் ஒரு அணி இடம் பெறும். பி பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கேப் கோப்ராஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி இடம் பெறும். லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் அக்டோபர் 2ம் தேதி ஹைதராபாத்திலும், இறுதிப் போட்டி பெங்களூரில் அக்டோபர் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெறுகின்றன. இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் - சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் லாகூர் லயன்ஸ் மோதுகிறது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அணிகளின் விவரம்: மும்பை இந்தியன்ஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு, பிரக்யான் ஓஜா, பிரவீன் குமார், ஆதித்யா தாரே, ஜலஜ் சக்சேனா, ஜஸ்பிரீத் பூம்ரா, ஷ்ரேயாஸ் கோபால், மைக்கேல் ஹஸி, கோரி ஆண்டர்சன், லசித் மலிங்கா, மெர்சன்ட் டிலாங்கே, லெண்டில் சிம்மன்ஸ், சுஷாந்த் மராதே. நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்: ஈஷ் சோதி (கேப்டன்), ஜோனோ போல்ட், பிராட் வில்சன், கேன் வில்லியம்சன், டேனியல் பிளின், வாட்லிங், கிரீம் அல்ட்ரிட்ஜ், ஆன்டன் தேவ்சிச், டிம் சவுத்தீ, ஸ்காட் குக்கெலெஜின், டேரில் மிட்செல், டேனியல் ஹாரிஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், டிரென்ட் போல்ட், டேனியல் வெட்டோரி. லாகூர் லயன்ஸ்: முகமது ஹபீஸ் (கேப்டன்), அகமது ஷஷாத், உமர் சித்திக் கான், உமர் அக்மல், நசீர் ஜம்ஷத், சல்மான் அலி, ஆசிப் ராஸா, முஷ்டாக் இக்பால், வகாப் ரியாஸ், இலியாஸ் சீமா, இம்ரான் அலி, சாத் நசீம், அட்னன் ரசூல், முகமது சயீத், அலி மன்சூர். சதர்ன் எக்ஸ்பிரஸ்: ஜனித் பெரேரா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகே, ஏஞ்சலோ பெரேரா, ஜெகன் முபாரக், நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, பிரசன்னா சீகுகே, இஷான் ஜெயரத்னே, பர்வீஸ் மகரூப், கசுன் மதுஷங்கா, யசோதா லங்கா, சரித் ஜெயம்பாதி, சசித்ரா பதிரனா, சாண்டேகன் லக்ஷன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி Posted: 13 Sep 2014 08:50 AM PDT
இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் மூலம் அதிக அளவில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்தனர். முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்திய பெருங்கடல் எல்லை தட்டுக்களிலேயே அதிக அளவிலான சுனாமி பேரலைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தட்டுக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால், சுமத்ராவில் ஏற்பட்டதை போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலைகளும் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறினர். 2004, டிசம்பர், 26க்கு பின் மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட சொல் சுனாமி தான். இது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப் பேரலை' எனவும் அழைக்கப் படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப் பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தின. சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இதில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது. உயிர்ச் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். தமிழக கடலோர மாவட்டங் களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. கடலை நம்பி வாழ்ந்த மீனவ குடும்பங்கள், கடற்கரை பகுதி யிலுள்ள வழிபாட்டு தலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என குடும்பம் குடும்பமாக பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அறுவை சிகிச்சை நிதி திரட்டும் விளம்பரத்துக்கு தடை: பேஸ்புக் மன்னிப்பு Posted: 13 Sep 2014 08:09 AM PDT
குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த குழந்தையின் விளம்பரத்தை அனுமதித்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் கெவின் பாண்ட். இவருக்கு ஹட்சன் பாண்ட் என்ற 2 மாதக் கைக்குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு இதயத்தில் இயல்புக்கு மாறாக சதை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு 75,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.45 லட்சம்) தேவைப்பட்டது. அந்த அளவுக்குத் தங்களுக்கு வசதியில்லாத காரணத்தால், அந்தக் குழந்தையின் பெற்றோர் பேஸ்புக்கில் குழந்தையின் படத்தையும் அறுவை சிகிச்சை தொடர்பான விளம்பரத்தையும் பதிவு செய்தார்கள். ஆனால் அந்த விளம்பரத்தை பேஸ்புக் ஏற்க மறுத்துவிட்டது. காரணம், குழந்தையின் படம் மிகவும் விகாரமானதாக இருக்கின்றது என்றும், விபத்து, இறப்பு, சிதைந்துபோன உடல்கள், பேய் போன்ற விகாரமான படங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பேஸ்புக் தெரிவித்தது. ஆனால் பின்னர், தனது தவறை உணர்ந்து பேஸ்புக் மன்னிப்புக் கேட்டது. தற்போது அந்தக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக 30,000 டாலர்கள் சேர்ந்திருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோயை தாறுமாறாய் பரப்பும் இளைஞர்- தடுக்க கோர்ட் உத்தரவு! Posted: 13 Sep 2014 08:03 AM PDT
அமெரிக்காவில் பலருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பி வரும் இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வாழ்கின்றனர். இந்த தகவலை நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோய் பரப்பும் ஒரு வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த நபரின் பெயர் "ஏ.ஓ" என இன்ஷியலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடந்த 2008 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் தாக்கியது. இவர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொண்டார். அதனால் இவர் மூலம் கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டுவரை 8 பேருக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது. எனவே, அவர் எய்ட்ஸ் நோய் பரப்புவதை தடுக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவர் பாதுகாப்புடன் கூடிய உடலுறவு வைத்து கொள்ளவும், அதன் மூலம் எய்ட்ஸ் நோயை பரவாமல் தடுக்கவும் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்துக்கு உத்தரவிட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட மர்ம மனிதன்: அமெரிக்காவில் பெரும் பரபரப்பு! Posted: 13 Sep 2014 02:56 AM PDT
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டை கோபுர கட்டிடங்களை தலிபான் தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்தனர். நேற்று முன்தினம் இந்த நினைவு நாள் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இதே நாளில் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த மர்ம வாலிபர் ஒருவரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்ய முயற்சித்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கான நினைவு நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு மர்ம ஆசாமி அவரது வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்த சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் அவர் எப்படி நுழைந்தார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். செப்.11 தாக்குதலுக்கும் அவருக்கும் சம்மந்தம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி பெட்றோ பொறொஷென்கோ: கனடா வருகைதரவுள்ளார்! Posted: 13 Sep 2014 02:54 AM PDT
யுக்றெய்னின் ஜனாதிபதி பெட்றோ பொறொஷென்கோ, எதிர்வரும் 17 ஆந் திகதி கனடா வருவாரென கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார் . ரொறன்றோவில் யுக்றெய்னிய கனேடியர்களின் நிகழ்வொன்றில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். பொறொஷென்கோ, கனேடிய நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்துவார் எனவும் கனடாவுக்கும் யுக்றெய்னுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவுகிறதென குறிப்பிட்ட பிரதம மந்திரி,கனடாவில் அதிக அளவான யுக்றெய்னிய மக்கள் வசிப்பதகவும் குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேயர் பதவி போட்டியில் இருந்து றொப் வோட் விலக டக் வோட் நுழைகின்றார்! Posted: 13 Sep 2014 02:49 AM PDT
ரொறொன்ரோ- உடல்நிலை காரணமாக றொப் வோட் மேயர் பதவிக்கான போட்டியில் இருந்து விலக அவரது சகோதரர் டக் வோட் போட்டியிடுகின்றார். ஆனால் வயிற்றில் ஏற்பட்டுள்ள கட்டி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றொப் வோட் அவரது பழைய தொகுதியான எற்றோபிக்கோ வடக்கு (Ward 2). நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார். றோப் வோட்டின் பிரச்சார செய்தி தொடர்பாளர் ஜெவ் சில்வஸ்ரெயின் மேயரின் சகோதரர் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான ஆவணங்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2மணிக்கு சில நிமிடங்கள் முன்பாக தாக்கல் செய்துள்ளார். மேயர் பதவிக்கு போட்டியிட அல்லது போட்டியில் இருந்து விலகுவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2-மணி என அறிவிக்கப்பட்டிருந்தது. றொப் வோட் மேயர் போட்டியில் இருந்து விலகுவதற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்ததுடன் சில்வஸ்ரெயின் அதே நேரம் Ward2 கவுன்சில் போட்டிக்கு விண்ணப்பித்திருந்த மேயரின் மருமகன் மைக்கேல் வோட் அப்போட்டியிலிருந்து விலகுவதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. காலக்கெடு முடிவடைவதற்கு சிறிது முன்பாக டக் வோட் நகர சபை தேர்தல் பிரிவிற்கு சென்று வேட்பு மனுவிற்கான ஆவணங்களை பூர்த்தி செய்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






