Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் வெள்ளத்தை பயன்படுத்தி படகுகளில் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 13 Sep 2014 11:28 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 300–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சுமார் 10 லட்சம் பேர் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து மீட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1½ லட்சம்

கோவில் விழாவில் கத்திவெட்டு: என்னை கொல்ல சதி- நடிகை ரோஜா

Posted: 13 Sep 2014 10:40 PM PDT

ஆந்திர மாநிலம் நகரியில் நடந்த ஜாத்திரை திருவிழாவில் பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அம்மனுக்கு முதல் ஆரத்தி எடுக்க முயன்ற ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம் கட்சியினர் அவரது பூஜை தட்டை தட்டிவிட்டனர். மேலும், யாரோ ரோஜாவின் கையில் கத்தியால் வெட்டினார். இதில் ரோஜாவின் வலது கையில் 3.செ.மீ நீளத்துக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

காஷ்மீர் வெள்ளத்தில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்கள்,ரூ.6 ஆயிரம் கோடி உள்கட்டமைப்பு வசதிகள் நாசம்

Posted: 13 Sep 2014 10:23 PM PDT

ஜம்மு-காஷ்மீரை துவம்சம் செய்த மழை வெள்ளத்தால் அம்மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்களும் ,ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளும் நாசமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித்தரக்கூடிய ஆப்பிள் விவசாயம் மற்றும் குங்குமப்பூ விளைச்சலும் இந்த வெள்ளத்தினால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது. ஜீலம் நதியில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறி அம்மாநிலத்தை துவம்சம் செய்த

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியின் காதலியிடம் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை

Posted: 13 Sep 2014 09:16 PM PDT

பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் காதலியிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் உளவு பார்த்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவாளியாக மாறி மிகவும் துணிச்சலுடன் சென்னை சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ''ஐஸ் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்'' என்ற கம்பெனியையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அருண் செல்வராசன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். யாரும் எளிதில் நுழைந்து விடமுடியாத துறைமுகம் உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளிலும் அருண் செல்வராசன் ஊடுருவி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார்.

பீட் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கோபிநாத் முண்டே மகள் பங்கஜா

Posted: 13 Sep 2014 04:28 PM PDT

மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற பீட் பாராளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், மராட்டிய சட்டசபை தேர்தல் நடைபெறும் அக்டோபர் 15-ந் தேதி பீட் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

சட்டவிரோத அமைப்பை நிறுவியதாக புகார்: ஜார்கண்ட் மந்திரி ராஜினாமா

Posted: 13 Sep 2014 04:03 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் 'ஜார்கண்ட் புலி' என்ற பெயரில் ஒரு சட்டவிரோத அமைப்பு இயங்கி வந்தது. இந்த அமைப்பு, மிரட்டி பணம் பறிக்கிற கும்பலைக் கொண்டதாகும். இந்த அமைப்பின் தலைவர் ராஜ்குமார் குப்தா உள்ளிட்ட 5 பேர் ஹசாரிபாக்கில் 10 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட்டிடம் ராஜ்குமார் குப்தா வாக்குமூலம் அளித்தபோது,

சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை நிறுத்தாதவர்களுக்கு ரூ.5000 - செல்போன் பேசுபவர்களுக்கு ரூ.4000 அபராதம்

Posted: 13 Sep 2014 03:55 PM PDT

மத்திய அரசு சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவில் புதிய சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இனி சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு வழிவகை செய்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சிக்னலில் சிகப்பு விளக்கு விழுந்தும் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றால், அவர்களுக்கு ரூ. 5000 அபராதமாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதை ஒரு போதும் ஆதரிக்கவில்லை: ஷீலா திடீர் பல்டி

Posted: 13 Sep 2014 03:32 PM PDT

டெல்லி மாநில சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சியமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் யாருமே எதிர்பாராத வகையில் அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்திருந்தார். ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் போது அது நல்லரசாக அமையும்.

பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்

Posted: 13 Sep 2014 03:15 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களை மது அருந்த வைத்த சம்பவத்தை மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த ஐவர் குழு வெளியுலகிற்கு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டதாக மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த சுரேஷ் மன்ஹாஸ் குற்றம் சாட்டினார்.

சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் முன்னாள் வழக்கறிஞரை சந்தித்த சி.பி.ஐ. இயக்குனர்

Posted: 13 Sep 2014 02:23 PM PDT

தனது பதவியின் கௌரவத்தை உணராமல் அதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிலையன்ஸ் அதிகாரிகளை சின்ஹா சந்தித்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சி.பி.ஐ நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கு ஆதாரமாக சின்ஹாவை சந்தித்தவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வமான வருகைப் பதிவேட்டையும் நீதிமன்றத்தில் பூஷன் தாக்கல் செய்தார்.

அஜீத்சிங், அசாருதீன் உள்பட முன்னாள் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு

Posted: 13 Sep 2014 02:05 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி.க்கள் டெல்லியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த வீடுகளை புதிய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஒதுக்க முடியும். தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கடந்த ஜூன் 26-ந் தேதியில் இருந்து முன்னாள் மந்திரிகள் மற்றும்

காஷ்மீரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் இருவரும் பலி: ராணுவம் தகவல்

Posted: 13 Sep 2014 01:54 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஹெலிகாப்டர்களும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, கடந்த 6-ந்தேதி புல்வாமா மாவட்டத்தில் பாம்போர் என்னும் இடத்தில் ஜீலம் நதியில் படகில் சென்று 20 ராணுவ வீரர்கள் மீட்பு

பீகாரில் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted: 13 Sep 2014 12:49 PM PDT

பீகாரில் உள்ள சோன் நதியில் அதிகரித்து வரும் நீரின் அளவால் அம்மாநிலத்தில் உள்ள அர்வால், ரோடாஸ், அவுரங்காபாத், ஜெனானானபாத் மற்றும் பாட்னா ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திரபுரி அணையிலிருந்து திறக்கப்படும் 3 லட்சம் கன அடி தண்ணீரால் சோன் நதியின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் மீட்பு பணிக்கு வந்த ஹெலிகாப்டர்கள் கற்களால் தாக்குதல்

Posted: 13 Sep 2014 10:33 AM PDT

காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள் மீது பிரிவினைவாதிகள் கற்களை எறிந்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று இந்திய ராணுவத்திற்கு சொந்தமான 80 ஐ.ஏ.எப் ரக ஹெலிகாப்டர் நிவாரண பொருட்களை வழங்கும் பணியில்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஆக விரும்பும் உத்தவ் தாக்கரே

Posted: 13 Sep 2014 09:17 AM PDT

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்கு வரும் தனது விருப்பத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 15-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னரே, அதிக இடங்களுக்கு ஆசைப்பட்டால் கூட்டணியில் முறிவு ஏற்படும்

இடைத்தேர்தலில் மிதமான வாக்குப்பதிவு: திரிபுராவில் 88 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை

Posted: 13 Sep 2014 08:22 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, முலாயம் சிங் யாதவ், சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதில், மோடி வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் முலாயம்சிங் யாதவ் மெயின்பூரி தொகுதி எம்.பி. பதவியையும்,

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பா.ஜனதாவில் இணைகிறார்

Posted: 13 Sep 2014 06:53 AM PDT

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாடன்ரிக்) கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சி.எச்.ராம் மூர்த்தி இன்று கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரான ராம் மூர்த்தி, தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டிக்கு

சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Posted: 13 Sep 2014 06:36 AM PDT

மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்

கோவில் விழாவில் முதல் மரியாதை தகராறு: நடிகை ரோஜாவுக்கு கத்திவெட்டு

Posted: 13 Sep 2014 05:17 AM PDT

ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் 'ஜாத்திரை திருவிழா' ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இலவசமாக பேசலாம்

Posted: 13 Sep 2014 04:49 AM PDT

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பி.எஸ்.என்.எல். இலவச தொலைதொடர்பு சேவையை வழங்குகிறது. மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், தனது 100 நாள் பணி நிறைவையொட்டி டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™