Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆதித்யா-ப்ரணீதி மீது அதிருப்தியில் இருக்கும் சாரதா கபூர்!

Posted:

நடிகர் ஆதித்யா ராய் கபூரும், நடிகை சாரதா கபூரும் காதலிக்கிறார்கள் என்பது பாலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும், ஆனால் இதனை இருவரும் மறுத்து வருகிறன்றனர். இதனிடையே ஆதித்யாவும், ப்ரணீதியும் தாவத்-இ-இஷ்க் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆதித்யா-ப்ரணீதி இருவரும் ...

அமிதாப்பிற்கு வைர மோதிரம் அளித்த பாடகர்!

Posted:

பிரபல பின்னணி பாடகர் மிக்கா சிங். இவர் இப்போது பல்வீந்தர் சிங் பைமஸ் ேஹா கயா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்றார். விழாவில், மிக்கா சிங் பற்றி அமிதாப் பேசும்போது, மிக்காவின் பாடல்களை தான் எவ்வாறு ...

நவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் - சிம்பு அறிவிப்பு!

Posted:

சிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்னா சொல்லுது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக, வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, சற்றென்று மாறுது வானிலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்தப்படமும் முடிந்ததாக தெரியவில்லை. எல்லா படமும் ...

தீபாவளிக்கு மும்முனைப்போட்டி!

Posted:

கடந்த மாதம் வரை விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ஐ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு உதவ நிதி திரட்டும் ஹிருத்திக் ரோஷன்!

Posted:

அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இது தொடர்பாக ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், பல படங்களின் படப்பிடிப்பிற்காக நான் பல முறை காஷ்மீர் சென்றுள்ளேன். அதனால் அங்கு இருக்கும் மக்களின் கஷ்டங்களும், போராட்டங்களும் எனக்கு ...

பாபநாசம் படத்தில் வேஷ்டி-சட்டை அணிந்து நடிக்கும் கமல்!

Posted:

உத்தமவில்லன் கமல், தற்போது பாபநாசம் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் இப்படத்தில் வேஷ்டி சட்டை அணிந்து படம் முழுக்க நடிக்கும் கமல், அதே கெட்டப்பில் தான் செல்லும் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகவாதிகள், சமூக சேவகர்கள் என பல ...

வைரம், பிளாட்டினத்தால் ஆன விலையுர்ந்த போனை பயன்படுத்தும் தருண் கோபி!

Posted:

திமிரு, காளை போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது கரண் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் விலையுர்ந்த போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். லண்டனில் தயாரிக்கப்பட்ட இந்த போனின் விலை சுமார் ரூ.8 லட்சமாம். அப்படி என்ன இந்த ...

தி மேஸ் ரன்னரின் இரண்டாம் பாக வேலைகள் துவங்கிவிட்டன

Posted:

வெஸ் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள தி மேஸ் ரன்னர் படம். இதுஒரு இளைஞனை பற்றிய கதை, அந்த இளைஞனும், அவர்களது நண்பர்களும் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கின்றனர். அதற்கான காரணம் என்ன? அதில் இருந்து அவர்கள் எப்படி வெளிவந்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. எழுத்தாளர் ஜேம்ஸ் டேஸ்னரின் நாவலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ...

விநாயகரின் ஆசி பெற்ற டிரிப் டூ பங்காரா படக்குழு!

Posted:

பொதுவாக ஹரார் படங்களை எடுப்பவர்கள் கடவுளை பெரிதும் நம்புவார்கள், வழிபடுவார்கள். அந்தவகையில் ஹரார் படமாக உருவாகி வரும் டிரிப் டூ பங்காரா படக்குழுவினர் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பாக வழிபாடு நடத்தியுள்ளனர். இயக்குநர் ஜிந்தேர் பவார், மனீஷ் சவுத்ரி, அனிதா நந்தவானி, யாதின் நந்தவானி, மற்றும் ராகினி நந்தவானி ...

ஹீரோக்கள், நாடகத்திலும் நடிக்க வேண்டும்: ஒய்.ஜி.மகேந்திரன் சொல்கிறார்

Posted:

வியட்நாயம் வீடு சுந்தரம், தங்க பதக்கம், தில்லானா மோகனாம்பாள், ரத்த கண்ணீர் போன்றவை நாடகங்களாக நடத்தப்பட்டு சினிமாவானது. சினிமாவான பிறகும் மீண்டும் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு ஒய்.ஜி.மகேந்திரன், வியட்நாம் வீடு சுந்தரத்தை மீண்டும் நாடகமாக நடத்தி வந்தார். இப்போது அவரும் சிவாஜியும் நடித்து வெற்றி பெற்ற பரீட்சைக்கு ...

மகளை எங்களிடம் ஒப்படையுங்கள்: ஸ்வேதா பாசுவின் பெற்றோர் கோர்ட்டில் மனு

Posted:

தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்த ஸ்வேதா பாசு ஐதராபாத்தில், விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட் 2 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்குமாறு உத்தரவிட்டது. அவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள மகளிர் காப்பகம் ஒன்றில் தங்கியுள்ளார்.
புகழ் வெளிச்சத்தில் இருந்த தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற ...

நடிகையை பார்த்து மிரண்டு ஓடிய குரங்கு கூட்டம்

Posted:

பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்கி இருக்கும் படம் மூச். இது ஒரு திகில் படம். நிதின், மிஷா கோஷல், சுஹாசினி நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய இயக்குனர் வினுபாரதி சொன்ன சுவாரஸ்யமான தகவல் இது...

இரண்டு குழந்தைகளுக்காக போராடும் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை இது. இதன் ஷூட்டிங் ...

தேனிலவுக்கு கிரீஸ் செல்கிறார் நஸ்ரியா

Posted:

நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு இருவரும் அமெரிக்காவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் பகத் நடித்து வரும் மணிரத்னம் படம் இன்னும் முடியாததால் அவர்கள் தேனிலவு பயணம் தள்ளிக் கொண்டே போனது. தற்போது படத்தில் நடிக்காத நஸ்ரியா திருவனந்தபுரத்தில் உள்ள ...

தொண்டு நிறுவனம் நடத்துகிறார் சமந்தா

Posted:

நடிகை ஹன்சிகா 25 அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் அதேபோல சமந்தா குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ) ஒன்றை நடத்துகிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மனதிருப்திக்காக இதனை நடத்துகிறேன். உடனடி மருத்து உதவிகள் தேவைப்படும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவும் அமைப்பு இது. இதற்காக அரசு ...

ராணாவுடன் த்ரிஷா ஒரே விமானத்தில் பயணம்

Posted:

த்ரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்கிறார்கள். பொது விழாக்கள், சினிமா விழாக்களுக்கு சேர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு கணவன் மனைவி போலவே இணைந்து வந்தார்கள். தற்போது மலேசியாவில் நடக்கும் ஒரு விருது வழங்கும் ...

தமிழில் டப் ஆகிறது சிம்ரனின் தெலுங்கு சீரியல்

Posted:

2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சிம்ரன் தெலுங்கில் நடித்து ஒளிபரப்பான சீரியல் சுந்தரகாண்டம். இதில் சிம்ரனுடன் சுஜிதா, ரிஷி, சத்யசாய், நடித்திருந்தனர். இது முற்றிலும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பிரமாண்ட சீரியல். அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி, புரூக்ளின் நகரங்களில் கதை நடக்கிறது. இந்தியாவிலிருந்து திருமணமாகி செல்லும் ...

ஆசைப்பட்டது நோபல்; கிடைத்ததோ ஆஸ்கர்! - ரசூல் பூக்குட்டி!

Posted:

இயற்பியலில் சாதித்து, நோபல் பரிசு பெற வேண்டும் என, ஆசைப்பட்ட எனக்கு, ஆஸ்கர் விருது கிடைத்தது, என, கேரளாவை சேர்ந்த திரைப்பட சவுண்ட் மிக்ஸிங் இன்ஜினியர், ரசூல் பூக்குட்டி பேசினார்.

மதுரை, காமராஜ் பல்கலை, திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறையில், ஷூட்டிங் தளம் மற்றும், ரெக்கார்டிங் தியேட்டர் துவக்க விழா, துணைவேந்தர் ...

ஐ படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்!

Posted:

ஐ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். அந்த போஸ்டரில் விக்ரமின் இயல்பான முகம் கோரமாவது போல் உருவாக்கப்பட்டிருப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஷங்கரின் அந்நியன் படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்த விக்ரம், இந்த படத்தில் ...

பாரதிராஜா தம்பியை பயமுறுத்திய நெஞ்சுவலி!

Posted:

வினுபாரதி இயக்கியுள்ள படம் மூச். புதுமுகங்கள் நிதின், நிஷா, சுகாசினி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் டைரக்டர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்நத டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.

இறந்து போன ஒரு ஆத்மாவுக்கும், இரண்டு குழந்தைகளுக்குமிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ...

விஜய், முருகதாசுக்காகத்தான் கத்தியை எதிர்க்கிறார்கள்! - தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா!

Posted:

விஜய் நடித்து வரும் கத்தி படத்தை ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இன்னமும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், லைகா மொபைல் நிறுவனத்தின் சுபாஸ்கரன் அல்லிராஜா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™