Tamil News | Online Tamil News |
- மவுலிவாக்கம் விவகாரம்: அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
- சமத்துவம் மலர அதிகமாக பாடுபட வேண்டும்: அய்யன்காளி விழாவில் பிரதமர் மோடி பேச்சு
- எக்குத்தப்பாக கேட்கும் எதிர்க்கட்சிகள்:அமைதி காக்கும் ஆளும்கட்சி!
- சுப்ரமணிய சாமி, தினமலர் மீது முதல்வர் புது வழக்கு
- அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நிர்வாகிகள் மகிழ்ச்சி; தொண்டர்கள் ஏமாற்றம்
- உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: கருணாநிதி
- காஷ்மீரில் முழுவீச்சில் ராணுவ மீட்பு பணி: முதல் முறையாக களத்தில் கடற்படையும் இறங்கியது
- சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு: குற்றச்சாட்டுகளுக்கு எழுத்து மூலம் பதில் தர வலியுறுத்தல்
- மேயர் வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க மிரட்டலா? பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை பரபரப்பு புகார்
- சுரண்டப்படும் தமிழக கடல்வளம்: நடவடிக்கை எடுக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு
- சுரங்க முறைகேடுகளை கண்டுபிடித்த அரசு அதிகாரிகளுக்கு 'டம்மி' பதவி
- 'நேர்மையான அதிகாரியை உடனடியாக நியமியுங்கள்'
| மவுலிவாக்கம் விவகாரம்: அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் Posted: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்துக்கு திட்ட அனுமதி வழங்கிய போது, அடுக்குமாடி திட்ட பிரிவில் இருந்த அதிகாரிகள் அனைவரும், வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், ஜூன் 28ம் தேதி, 11 மாடி தனியார் கட்டடம் இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிஷனின் அறிக்கை, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போல் மாநகர போலீஸ் தலைமையில், தொழில்நுட்ப ... |
| சமத்துவம் மலர அதிகமாக பாடுபட வேண்டும்: அய்யன்காளி விழாவில் பிரதமர் மோடி பேச்சு Posted: புதுடில்லி: ''சமுதாயத்தில் அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க, இன்னும் அதிகமாக பாடுபட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.கேரளாவில் புலையர் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்த தலைவர், அய்யன்காளியின், 152வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது:கேரளாவில், அய்யன்காளி மற்றும் நாராயணகுரு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், சமூக வேற்றுமைக்கு எதிராக, 19ம் நூற்றாண்டிலேயே பணிகள் மேற்கொண்டனர். வேற்றுமை மறைந்தது சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் சம அதிகாரம், உரிமை வழங்க பாடுபட்ட, ... |
| எக்குத்தப்பாக கேட்கும் எதிர்க்கட்சிகள்:அமைதி காக்கும் ஆளும்கட்சி! Posted: கோவை மேயர் இடைத்தேர்தலையொட்டி, பல்வேறு கட்சியினரும் எழுப்பும் கேள்விகள், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பதாகவுள்ளன.சமீபத்தில், முதல்வரை மத்திய நகர்ப்புறத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்த போது, சென்னை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார். அதில், சென்னைக்கு இரண்டாவது மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டுமென்பது முக்கியமானதாகும். ஆனால், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு எந்த நிதியையும் கேட்டுப் பெறவில்லை.கோவையை விட, சிறிய நகரமான விஜயவாடாவை தலைநகரமாக அறிவித்துள்ள ஆந்திர அரசு, அந்த நகரம் உட்பட 3 ... |
| சுப்ரமணிய சாமி, தினமலர் மீது முதல்வர் புது வழக்கு Posted: சென்னை: பா.ஜ., கட்சியின் முன்னணி தலைவர் சுப்ரமணிய சாமி மற்றும் 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த, 4ம் தேதி, வெளியான, 'தினமலர்' நாளிதழில், 'மீனவர் பிரச்னை பின்னணியில் பிரபலங்கள்' என்ற தலைப்பில், செய்தி வெளியானது. சுப்ரமணிய சாமி அளித்த பேட்டி மற்றும் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்கள், இந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தது.இந்தச் செய்திக்காக, சுப்ரமணிய சாமி, 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக, முதல்வர் ... |
| அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நிர்வாகிகள் மகிழ்ச்சி; தொண்டர்கள் ஏமாற்றம் Posted: உள்ளாட்சி இடைத்தேர்தலில், திருநெல்வேலி மேயர் உட்பட, பெரும்பாலான இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது, பதவியில் உள்ள அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை யும்; தொண்டர்களிடம் ஏமாற்றத்தையும், ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், கடந்த மாதம் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே, வேட்பு மனு தாக்கல் துவங்கியது.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள், தேர்தலை புறக்கணித்தன. கம்யூனிஸ்ட்டுகளும், பா.ஜ.,வும் மட்டுமே களம் இறங்கின. பா.ஜ.,விற்கு தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ... |
| உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: கருணாநிதி Posted: சென்னை: ''ஒரே நாளில், 2,500 பேருக்கு விடுதலை அளித்த, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர்கருணாநிதி, கூறியுள்ளார்.அவரது அறிக்கை:உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், நான்கு மாத காலத்தில், வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என, தீர்ப்பளித்த பின், அந்த வழக்கை, அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, மேலும், மூன்று மாதங்களுக்கு, உச்ச நீதிமன்றத்திடம் கோரி கால நீட்டிப்பு பெறுவதும், அந்த மூன்று மாதங்களிலும், விசாரணையை முடிக்காமல், மேலும், இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்பதும் ... |
| காஷ்மீரில் முழுவீச்சில் ராணுவ மீட்பு பணி: முதல் முறையாக களத்தில் கடற்படையும் இறங்கியது Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கர மழை மற்றும் வெள்ளப்பெருக்கை சந்தித்துள்ளது. திடீரென நிகழ்ந்த இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 200 ஆக உயர்ந்து உள்ளது. மீட்பு பணியில் முப்படையினர்: ராணுவத்தின் முப்படையினரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருடன் ஈடுபட்டுள்ளதால், வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர்; அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த செவ்வாய் கிழமை, அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத் துவங்கிய மழை, நேற்று வரை ... |
| Posted: புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சிக்கியவர்கள், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா வீட்டிற்கு, அடிக்கடி சென்று வந்தது மோசமான விஷயம். அதனால், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, எழுத்து மூலமாக, சின்கா பதில் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பதவி வகித்த போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில், பெருமளவு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில், பொதுநல அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 122 ... |
| மேயர் வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க மிரட்டலா? பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை பரபரப்பு புகார் Posted: தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளான நேற்று, பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. நெல்லை மேயராக, அ.தி.மு.க., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ஆளும் அ.தி.மு.க.,வினர், எதிர்த்து போட்டியிட களமிறங்கிய பா.ஜ.,வினரையும், மற்ற கட்சியினரையும் மிரட்டி வாபஸ் பெற வைக்கப்பட்டதாக, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை, பரபரப்பான புகார் அளித்துள்ளார்.தமிழகத்தில், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள, 2,130 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான, மனு தாக்கல், ஆக., 28ல் துவங்கி, இம்மாதம், ... |
| சுரண்டப்படும் தமிழக கடல்வளம்: நடவடிக்கை எடுக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு Posted: நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து, கடல் வளம் சுரண்டப்படுவதை தடுக்க, அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் 1076 கி.மீ., நீளமுடைய கடலோரத்தில் 13 கடலோர மாவட்டங்களில், 591 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.தமிழக கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிப்பதால், மீன் வளத்தை காக்க ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் ... |
| சுரங்க முறைகேடுகளை கண்டுபிடித்த அரசு அதிகாரிகளுக்கு 'டம்மி' பதவி Posted: பெங்களூரு : சுரங்க முறைகேடுகளை கண்டுபிடித்து, தைரியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளை, சித்தராமையா தலைமையிலான காங்., அரசு, அவசியமில்லாத துறைகளில் நியமித்து, அவர்களின் திறமையை பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோடி ரூபாய் நஷ்டம் : பா.ஜ., அரசின் ஆட்சிக் காலத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களே சட்ட விரோதமாக சுரங்க தொழிலில் ஈடுபட்டனர். கருவூலத்துக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தினர். இதை ஓய்வு பெற்ற, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டேயின் அறிக்கை பகிரங்கப்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, அப்போதைய முதல்வர் ... |
| 'நேர்மையான அதிகாரியை உடனடியாக நியமியுங்கள்' Posted: புதுடில்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடியில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ராஜேஷ்வர் சிங்கை, அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் நிரந்தர துணை இயக்குனராக, மூன்று நாட்களுக்குள் நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக, ராஜேஷ்வர் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் டாட்டூ மற்றும் பாப்தே அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:ராஜேஷ்வர் சிங்கை, அமலாக்கத் துறை இயக்குனரகத்தில், நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என, மத்திய நிர்வாக தீர்ப்பாயம், 2013 டிச., 24ம் தேதி உத்தரவிட்டது.இதற்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 09,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |