ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலகச் செய்திகள்!
- அங்கோலா - திடீர் பணக்காரத்தனம்: சில குறிப்புகள்
- அமர காவியம்: திரை விமர்சனம்
- பொறியாளன்: திரை விமர்சனம்
- ஆண்ட்ராய்ட் போனை உங்கள் வசப்படுத்த
- ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி
- “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை
- காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்'
- மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு!
- தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்!
- ஓவியனின் வாய்த்திறன்!
- சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!
- பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம்- 8-9-1933
- பெண்கள் கொலுசு அணிவது ஏன்?
- நான்தான் அடுத்த கணவன் !
- புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன?
- DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது
- புத்தர் பெரிய அரச வம்சம்
- சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!
- சைவ சம்பு சர்மா!
- படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்
- இன்று தேசிய கண் தான தினம்
- டிஜிட்டல் இந்தியா சாத்தியமா?
- அமெரிக்க விசாவும் ஐடி தொழிலாளரும் - அவதிமிகு மறுபக்கம் !
- 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
- செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம் !
- வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
- ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு
- தேடுகிறேன்
- குழந்தை சிரிப்பினிலே...!!
- ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன் நாவல் .
- சுய அறிமுகம் -சரண்யா
| Posted: 08 Sep 2014 02:40 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| அங்கோலா - திடீர் பணக்காரத்தனம்: சில குறிப்புகள் Posted: 08 Sep 2014 02:26 PM PDT மரணம் ஒன்றைத் தவிர மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாத ஏரியாவே கிடையாது போலிருக்கிறது. அழகிப் போட்டிகளானாலும் சரி, கிரிக்கெட் போட்டிகளானாலும் சரி, என்னவாவது அவார்டு சங்கதியானாலும் சரி. ஒரு திட்டம், ஒரு மேத்தமேடிக்ஸ், ஒரு நோக்கம் யாருக்காவது இருந்துவிடுகிறது. அரசியலை எல்லாம் கொஞ்சம் தள்ளி வையுங்கள். இந்தச் சேதியைக் கேளுங்கள். உலகின் மிக காஸ்ட்லியான நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூ யார்க்? மாஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான ... |
| Posted: 08 Sep 2014 02:20 PM PDT நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், 'படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்' என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா? பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ... |
| Posted: 08 Sep 2014 02:18 PM PDT உதயம் என்.எச்.4 என்ற காதல் த்ரில்லர் படம் தந்த மணிமாறன் இதில் ரியல் எஸ்டேட் மோசடி - கந்துவட்டிக் கொடுமை இரண்டையும் இணைத்துக் கதைக்களமாக்கியிருக்கிறார். சரவணன் (ஹரீஷ் கல்யாண்) ஒரு சிவில் இன்ஜினீயர். கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அவன் நேர்மையாக இருப்பதற்காகவே சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் தானே கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறான். அதற்குப் பணம் தேவை. பணத்தில் ஒரு பகுதியை (2 கோடி ரூபாய்) அவனது நண்பன் பிரபு புரட்டிக் கொடுக்கிறான். அது பிரபுவின் பணமல்ல. ... |
| ஆண்ட்ராய்ட் போனை உங்கள் வசப்படுத்த Posted: 08 Sep 2014 02:10 PM PDT இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது ... |
| ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி Posted: 08 Sep 2014 11:46 AM PDT 'வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.' - ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம். ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது. உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், ... |
| “குடிகாரங்களை தியாகிகள்னு அறிவிக்கணும்!” - சரக்கு அடிப்போர் சங்கம் கோரிக்கை Posted: 08 Sep 2014 11:30 AM PDT வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்' சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன. அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம். ''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?'' ''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். ... |
| காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய 'வாட்ஸ் ஆப்' Posted: 08 Sep 2014 11:22 AM PDT புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர் வெள்ள மீட்பு பணியில் இந்திய ராணுவம் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், மற்றும் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தியது. இது வெள்ளம் புகுந்த பல பகுதிகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்க உதவியது. இந்திய ராணுவ தலைமையகத்தின் இணையதள பக்கத்தில் பெறப்படும் மெசேஜ்கள், அவற்றின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ள ராணுவக் குழுக்களின் சீனியர் கமாண்டர்களுக்கு பார்வேர்டு செய்யப்பட்டது. ... |
| மன அழுத்தத்தில் தள்ளும் ஃபேஸ்புக்... எச்சரிக்கும் ஆய்வு! Posted: 08 Sep 2014 11:19 AM PDT அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். " பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க ... |
| தொற்று நோயாகப் பரவும் காலில் விழும் காலாசாரம்! Posted: 08 Sep 2014 11:19 AM PDT அ.தி.மு.க மேடைகளில் நடக்கும் காலில் விழும் 'காலா'சாரம் இப்போது தி.மு.க-விலும் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சால்வையைக் கொடுத்துவிட்டு அவரது காலைத்தொட்டு வணங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனை கடந்த வாரத்தில் திருச்சியில் அதிகமாகப் பார்க்க முடிந்தது. கடந்த 2-ம் தேதி திருச்சி சங்கம் ஹோட்டலில் மாவட்ட தி.மு.க ஆய்வுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார் ஸ்டாலின். அவரது வருகைக்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை ... |
| Posted: 08 Sep 2014 10:57 AM PDT ஓவியனின் வாய்த்திறன்! ஒரு ஓவியன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஒரு தாளில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாகச் சொன்னான். சுருட்டி வைத்திருந்த தாளைப் பிரித்து பார்த்தால், அதில் பசுவும் இல்லை, புல்லும் இல்லை. உடனே அங்கிருந்த ஒருவன், "இந்தப் படத்தில் புல் எங்கே?" என்று கேட்டான். அதற்கு அந்த ஓவியன், "புல்லைப் பசு தின்று விட்டது" என்றான். "அப்படியானால்... பசு எங்கே?" என்று கேட்டான் இன்னொருவன். உடனே அந்த ஓவியன், "பசு புல்லைத் தின்று விட்டதால் அதை விரட்டி விட்டுட்டேன்" என்றான். ஓவியனின் ... |
| சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Posted: 08 Sep 2014 10:55 AM PDT இத்தொடர் கட்டுரை பல மொழியியல் ஆராய்ச்சி அறிஞர்களின் தொகுப்பு. அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையின் முடிவில் அவர்களது பெயர்களை வெளியிடுகிறேன். நன்றி! சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! உலகில் இரண்டே மொழிகள்தாம்.... என்ன வியப்பாய் உள்ளதா? ஆம் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ்! மற்றொன்று திரிந்த தமிழ்! இந்த திரிந்த தமிழில் ஒன்றான சமஸ்கிருதத்தைப்பற்றி சிந்திப்போம். முதலில் சமஸ்கிருதம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் பொருள் என்ன என்று தெரியுமா? நன்றாகச் ... |
| பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம்- 8-9-1933 Posted: 08 Sep 2014 10:43 AM PDT பாலிவுட்டில் பின்னணி பாடகியாக மிகவும் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு இதே தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லி மாவட்டதிலுள்ள கோர் எனப்படும் குக்கிராமத்தில் பிறந்தார். மராட்டிய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீதா வித்வானாவார். 1943 ஆம் ஆண்டு பாடகியாக அறிமுகமான இவர் கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கிறார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவரது ... |
| Posted: 08 Sep 2014 10:38 AM PDT நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் ... |
| Posted: 08 Sep 2014 10:29 AM PDT பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்... அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது ... |
| புற்று நோய்க்கு பொதுவான அறிகுறிகள் என்ன? Posted: 08 Sep 2014 10:29 AM PDT பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு. உணவுக்குழாய் புற்றுநோய்: 1. நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்; 2. தீராத முதுகு வலி; 3. பசியின்மை; 4. ரத்த சோகை. இரைப்பை புற்று: 1. வயிற்றுப் பொருமல்; 2. வயிற்றின் மேல் பாகத்தில் வலி; 3. ரத்த வாந்தி; 4. சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல். சிறுகுடல் புற்றுநோய்: 1.வயிற்று வலி; 2. ... |
| DEVICE SLOW 90% MEMORY FULL என்ற தகவல் அடிக்கடி வந்துகொண்டே உள்ளது . இதை எப்படி சரி செய்வது Posted: 08 Sep 2014 10:27 AM PDT Task killer அப்ளிகேஷன்களான Clean Master, Task Manager, Android Booster இவைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது! இந்த அப்ளிகேஷன்கள் அதிகமான Ram எடுத்துக் கொள்ளும். போனையும் மெதுமெதுவாகக் கொல்லும்! ஆண்டிவைரஸ் நிறுவ வேண்டாம்! இருந்தால் நீக்கிவிடுங்கள்! முடிந்தால் போனை Root செய்யுங்கள்! பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை நீக்கிவிடுங்கள்! போனில் உள்ள default launcher ஆன touchwiz பயன்படுத்துவதைவிட Nova launcher அல்லது Apex launcher பயன்படுத்தலாம்! போனில் Go Launcher இருந்ந்தால் உடனடியாக ... |
| Posted: 08 Sep 2014 10:25 AM PDT புத்தர் பெரிய அரச வம்சம் ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாகிறார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள். 'அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக்காரனைப்போல திரிகிறாயே' என்றெல்லாம் கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து, "சன்னியாசியே! நாங்க இவ்வளவு அவமானப்படுத்தியும் ... |
| சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்! Posted: 08 Sep 2014 10:24 AM PDT புதுடில்லி: டில்லியில், இரு பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்கியதின் மூலம், ஒருவருக்கொருவர் மற்ற கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். மத்திய அரசின், 'செயில்' நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, டில்லியைச் சேர்ந்த எஸ்.பி.ராம், 61, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் சிறுநீரகம் செயல் இழந்ததால், கடந்த ஓராண்டாக அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மற்றொரு மத்திய அரசு அதிகாரியான, சந்த் ராம், 57, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, ... |
| Posted: 08 Sep 2014 10:03 AM PDT கணபதி துணை சைவ சம்பு சர்மா பகுதி 1. ஓங்கி வளர்ந்த ஒருபெருங் காடு மூங்கில் வேங்கை முதலிய மரங்கள் செழுமை யான செடிகொடி யினங்கள் மழுவைக் காண மாட்டா இயல்பின சிங்கம் கரடி சிறுத்தைப் புலியிவை எங்குந் திரியும் எழில்மிகும் அடவி கதிரொளி காணாக் காட்டின் தரையை மதியொளி மட்டுங் காண வல்லதோ? உதிர்ந்த சருகுகள் ஓரடி உயரம் அதிர்ந்து நடக்க யார்க்குமொண் ணாது அடவி நடுவிலோர் ஆல மரந்தான் புடவியை விழுதுகள் தடவிய படியே ஆயிரக் கணக்காம் ஆண்டுக ளாக மாய்ந்திட லின்றி வளர்ந்து வந்தது ஆல மரத்தின் அருகொரு ... |
| படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள் Posted: 08 Sep 2014 09:45 AM PDT யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலின் ஒவ்வொரு பாகத்தின் அசைவையும் உணர முடியும். கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி பயிற்சி முறை: * நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும். * மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும். பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும். * 15 முதல் 20 முறை மெதுவாகச் செய்ய வேண்டும். கைகளை நீட்டிச் ... |
| Posted: 08 Sep 2014 09:24 AM PDT ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி தவிக்கின்றனர். அவர்களும் பார்வை பெறலாம்; மற்றவர்கள் கண் தானம் செய்தால். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். மற்றவர்களும் தானம் செய்ய வழிகாட்டியாக மாறலாம். கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் ... |
| Posted: 08 Sep 2014 09:18 AM PDT அண்மையில் நம் பிரதமர் மோடி, தன் முதல் சுதந்திர நாள் உரையில், இந்தியாவை ஒரு டிஜிட்டல் இந்தியாவாக, அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் அனைவரின் கம்ப்யூட்டர் மானிட்டர்கள் வழியே தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் அமைந்த இந்தியாவாக மாற வேண்டும் என்ற தன் லட்சியத்தை வெளியிட்டார். இன்றைய இந்தியா இந்த வகையில் இன்று என்ன நிலையில் உள்ளது? வறண்ட பெரிய பாலை வனங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரிலிருந்து வட கிழக்கே 170 கி.மீ. தூரத்தில், ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது சந்தாலி ... |
| அமெரிக்க விசாவும் ஐடி தொழிலாளரும் - அவதிமிகு மறுபக்கம் ! Posted: 08 Sep 2014 09:17 AM PDT அமெரிக்க விசா முறையை ஐடி துறை கடுமையாக நிலைகுலையச் செய்துவிட்டது. இதனால் ஐடி துறைப் பணியாளர்கள் அவதிப்படுவதுடன் அமெரிக்க குடியேற்றத் துறையும் மிகச் சிரமப்பட நேர்கிறது. இதன் அரசியலைச் சற்று ஆராய்வோம். அமெரிக்காவுக்குப் பணிக்கு வருபவர்கள், எச்1பி (H1B), எல்1 (L1) போன்ற விசாவில் வருவார்கள். இவை, பணிபுரியக் கொடுக்கப்படும் அனுமதி விசாக்கள். எச்1பி விசா, 3 வருட காலத்துக்குக் கொடுக்கபடும். எச்1பி விசா வைத்திருப்பவருக்குத் திருமணம் ஆகியிருந்தால் அவரது வாழ்க்கைத் துணைக்கு எச்4 (h4 dependent visa) ... |
| 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014 Posted: 08 Sep 2014 09:11 AM PDT நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ... |
| செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம் ! Posted: 08 Sep 2014 09:06 AM PDT சர்வதேச எழுத்தறிவு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. 1965ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியைச் சர்வதேச எழுத்தறிவு தினமாகக் கொண்டாட, யுனெஸ்கோ முடிவு எடுத்தது. உலகில் எழுத்தறிவு இல்லாத 77 கோடியே 50 லட்சம் பேர் இருப்பதாகவும் உலகில் 5 பேரில் ஒருவர் இப்போதும் எழுத்தறிவு இல்லாதவராக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே இந்த ஆண்டின் கருப் பொருளாகும். இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் ... |
| வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '! Posted: 08 Sep 2014 08:22 AM PDT குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் மேரி கோம். இதில் பிரியங்கா சோப்ரா மேரிகோமோடு 3மாதங்கள் வாழ்ந்து, அவரது வாழ்க்கை முறையை கற்று, பின்னர் குத்துச் சண்டையின் அடிப்படை விதிமுறைகளை கற்று அதன் பிறகு நடித்தார். கனவு கன்னியாக இருந்த பிரியங்கா சோப்ராவின் குத்துசண்டை விராங்கனை அவதாரம் பாலிவுட்டையே அதிர வைத்தது. ஊர் ஊராக சென்று பிரியங்கா சோப்பரா படத்தை புரமோட் பண்ணினார் அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. கடந்த 5ந் தேதி படம் வெளியானது. அன்று மட்டும் ... |
| ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு Posted: 08 Sep 2014 05:45 AM PDT குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ... |
| Posted: 08 Sep 2014 05:41 AM PDT பல கணங்களாக பல இடங்களிலே தேடுகிறேன் கணங்கள் யுகங்களாக இடங்கள் உலகங்களாக தீண்டிய தென்றலை தோன்றிய காட்சியினை தேடுகிறேன் தென்றலே நினைவாக காட்சியே வரமாக கண்டு மறந்த கண்களை கலங்கி தெரிந்த நிலவினை தேடுகிறேன் கண்களே புதிராக நிலவே கவிதையாக அந்தக்கணத்தில் பிறந்தேனா தொலைந்தேனா தொலைத்தேனா அந்த இடத்தில் இறந்தேனா தேடினேனே தேடினாரே தென்றலும் நானும் நகர தீண்டியதா தீண்டினேனா காட்சியின் அரங்கேற்றம் அண்டத்திலா பிண்டத்திலா புதிரின்றும் புதிர்தானா என்றுமே ... |
| Posted: 08 Sep 2014 03:19 AM PDT அணில் பிள்ளைகள்…!! காலையிலே செடிகளின் மேல் மாடியின் மேல் கேட்டின் மேல் உற்சாகமாக சந்தோஷமாகத் தாவித் தாவித் திரிகின்ற அந்த அழகான அணில்பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக் கைத்தட்டிச் சிரித்து மகிழ்கின்றன குழந்தைகள், * |
| ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன் நாவல் . Posted: 08 Sep 2014 02:01 AM PDT |
| Posted: 08 Sep 2014 12:43 AM PDT பெயர்: M .SARANYA சொந்த ஊர்: Narayanapuram ஆண்/பெண்: Female ஈகரையை அறிந்த விதம்: கல்கி நோவேல்ஸ் பொழுதுபோக்கு: ரீடிங், போட்ரி மகிங், தொழில்: Physiotherapist மேலும் என்னைப் பற்றி: தமிழ் ஆர்வலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |