Tamil News | Online Tamil News |
- ஜம்மு - காஷ்மீரில் பேய் மழையால் கடும் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணியில் ராணுவம் உதவி
- அல்- குவைதா மிரட்டலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா தகவல்
- மத்திய அமைச்சர் மகன் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு: கார்த்திக் கவுடாவை தேடி தனிப்படையினர் முகாம்
- பயங்கரவாதிகளுடன் சேர இருந்த ஆந்திர இளைஞர்கள் சிக்கினர்
- எரிபொருள் செலவை குறைக்க அரசு பஸ்களில் எத்தனால்: தமிழகத்தில் செயல்படுத்துவது எப்போது
- அரசியல் பாகுபாடின்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி
- 'சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது தான் ஆசிரியரின் கடமை': முன்னாள் ஜனாதிபதி கலாம்
- வாலிபால் விளையாட இலங்கை சென்ற தமிழக வீரர்கள்: பயிற்சியாளர் உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
- டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய வாய்ப்பு? ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கவர்னர் ஜங்
- பள்ளியில் படிக்கும் போது நீங்கள் செய்த சேட்டை என்ன? மோடியிடம் மாணவர்கள் 'பலே' கேள்விகள்
- ஆசிரியருக்கு மரியாதை அளிக்காத சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாது: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
- ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகளுக்கு விடுதலை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
| ஜம்மு - காஷ்மீரில் பேய் மழையால் கடும் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணியில் ராணுவம் உதவி Posted: காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, நேற்று மூடப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 30 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக ராணுவ உதவி கோரப்பட்டு உள்ளது.தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த, முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான மாவட்டங்களில், தரைவழி போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.அனந்தநாக், காஷ்மீர், பூஞ்ச், கதுவா உள்ளிட்ட ... |
| அல்- குவைதா மிரட்டலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா தகவல் Posted: பெங்களூரு: "பயங்கரவாத அமைப்பான, அல்- - குவைதா மிரட்டலால், கர்நாடக மாநிலத்தில், போதிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என, முதல்வர் சித்தராமையா கூறினார்.மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:மாநிலத்தில் அல்- - குவைதா அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வரவில்லை. மத்திய அரசிடமிருந்து வந்துள்ள உத்தரவு கடைபிடிக்கப்படும். எந்த விதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.ஆய்வு பணிகள்:வட கர்நாடகாவின் ... |
| மத்திய அமைச்சர் மகன் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு: கார்த்திக் கவுடாவை தேடி தனிப்படையினர் முகாம் Posted: பெங்களூரு: நடிகை மைத்ரியாவை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவின், முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு, இன்று ஒத்தி வைக்கப்பட்டது.'மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடா, என்னை மங்களுரில் உள்ள அவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டு, என்னுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். இப்போது வேறு பெண்ணை மணக்க நிச்சயதார்த்தம் செய்துள்ளார். என்னை திருமணம் செய்து மோசம் செய்து விட்டார். இது குறித்து விசாரணை செய்து, எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்' என, ஆர்.டி., நகர் போலீஸ் ... |
| பயங்கரவாதிகளுடன் சேர இருந்த ஆந்திர இளைஞர்கள் சிக்கினர் Posted: ஐதராபாத்: சமூக வலைதளங்களில் வெளியாகும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகளின் அழைப்புகளால் ஈர்க்கப்பட்ட, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஈராக் செல்ல முற்பட்ட போது, அவர்களை ஆந்திர போலீசார் பின்தொடர்ந்து சென்று மீட்டனர்.ஐதராபாத்தை சேர்ந்த, இன்ஜினியரிங் படித்த இரு இளைஞர்கள் உட்பட, நான்கு இளைஞர்களின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.ஐதராபாத்திலிருந்து கோல்கட்டா சென்று அங்கிருந்து நேபாளம் வழியாக, ஈராக் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார், அவர்களை பிடித்து, அறிவுரை கூறி, ... |
| எரிபொருள் செலவை குறைக்க அரசு பஸ்களில் எத்தனால்: தமிழகத்தில் செயல்படுத்துவது எப்போது Posted: சென்னை : எரிபொருள் செலவை குறைக்க, பெட்ரோலுடன் எத்தனால் கலந்த எரிபொருள் கொண்டு, பஸ்களை இயக்கும் திட்டத்தை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மகாராஷ்டிராவில், பெட்ரோலுடன் எத்தனால் கலந்த எரிபொருள் கொண்டு இயக்கப்படும், 200 பஸ்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. தொடர்ந்து, உத்தரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.இதையடுத்து, எத்தனால் கலந்த எரிபொருள் கொண்டு, தமிழகத்தில் பஸ்கள் இயக்கம் விரைவில் துவங்க ... |
| அரசியல் பாகுபாடின்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி Posted: சென்னை: ''மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கேற்ப, அரசியல் பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று, பகல் 2:00 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். அங்கு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, 30 நிமிடங்கள் பேசினார்.மெட்ரோ ரயில் பணிகள்:பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை மெட்ரோ ரயில் பணிகளை, ஆய்வு செய்தேன். திட்டம் குறித்து,அதிகாரிகள் விரிவாக விளக்கினர். அப்போது, சில பிரச்னைகள் தெரிய வந்தது.இவை குறித்து, ... |
| 'சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது தான் ஆசிரியரின் கடமை': முன்னாள் ஜனாதிபதி கலாம் Posted: சென்னை: ''படிப்பில், சாதாரண நிலையில் உள்ள மாணவர்களை, சிறந்தவர்களாக உருவாக்குவது தான், ஆசிரியரின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வலியுறுத்தினார்.அண்ணா பல்கலையில், நேற்று, ஆசிரியர் தின விழா நடந்தது. பல்கலை துணைவேந்தர், ராஜாராம் தலைமை தாங்கினார்.விழாவில், கலாம் பேசியதாவது: நான் பள்ளி படிப்பு படிக்கும்போது, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர், புறாவை படமாக வரைந்து, அதைப்பற்றி விளக்கினார். அதுதான், என்னை, 'ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்க துாண்டியது. அந்தளவிற்கு, எனது பள்ளி ஆசிரியர், புதிய யுக்தியுடன் பாடம் ... |
| வாலிபால் விளையாட இலங்கை சென்ற தமிழக வீரர்கள்: பயிற்சியாளர் உட்பட இருவர் 'சஸ்பெண்ட்' Posted: சென்னை: இலங்கையில் நடக்கும், ஆசிய இளையோர் வாலிபால் போட்டிக்கு, தமிழக வீரர்கள் சென்ற விவகாரத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வீரர்களும் விளையாட்டில் பங்கேற்காமல் சென்னை திரும்பினர்.அலுவலகத்திற்கு சீல்:ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, இலங்கையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க, இந்திய அணி இலங்கை சென்றது. இதில் இடம் பெற்றிருந்ததால், தமிழக வீரர்கள் இருவரும் இலங்கை சென்றனர்.சென்னை, லயோலா கல்லுாரியில் படிக்கும் இருவரும், நேரு விளையாட்டரங்கில் உள்ள, தமிழ்நாடு விளையாட்டு ... |
| டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய வாய்ப்பு? ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கவர்னர் ஜங் Posted: புதுடில்லி: டில்லி அரசியலில் நீண்ட நாட்களாக நிலவும் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'அதிக எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாமா...' என, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, டில்லி துணை நிலை கவர்னர், நஜீப் ஜங் கடிதம் எழுதியுள்ளார். ஒரு வேளை, கவர்னரின் முடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால், டில்லியில், பா.ஜ., ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.டில்லியில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 70 இடங்களை உடைய ... |
| பள்ளியில் படிக்கும் போது நீங்கள் செய்த சேட்டை என்ன? மோடியிடம் மாணவர்கள் 'பலே' கேள்விகள் Posted: நாடு முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பிரதமர் மோடியிடம் கேள்விகளை அடுக்கினர். அவற்றுக்கு உற்சாகமாகவும் சுவையாகவும் மோடி பதிலளித்தார்.நான் இந்திய பிரதமர் ஆவது எப்படி?பிரதமராக வேண்டுமெனில், 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். இது ஜனநாயக நாடு. மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். நீங்கள் பிரதமராக வருவதற்கு வாழ்த்துக்கள். எப்போது நீங்கள் பிரதமர் ஆகிறீர்களோ, அந்த பதவியேற்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுங்கள்.இந்திய பள்ளி, ஜப்பான் பள்ளி என்ன ... |
| ஆசிரியருக்கு மரியாதை அளிக்காத சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாது: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு Posted: சென்னை: ''ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறுகிறோம்; ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது,'' என, மாணவர்கள் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.ஆசிரியர் தின விழாவையொட்டி, டில்லியில், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:என் அன்புக்குரிய குழந்தைகளே!நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்திருக்கும் நண்பர்களே!இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததை, மிகவும் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். மாணவர்கள், எதிர்கால கனவுகளுடன் இங்கே வந்திருப்பதை, ... |
| ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகளுக்கு விடுதலை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு Posted: புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள சிறைகளில், விசாரணை கைதிகளாக அடைபட்டுள்ளவர்களின் குற்றச் செயலுக்காக, எவ்வளவு தண்டனை கிடைக்குமோ, அதில் பாதியளவு காலத்தை நிறைவு செய்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம்' என, அதிரடியாக நேற்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், 'அடுத்த மாதம் 1ம் தேதியிலிருந்து, இந்த பணியை துவக்கி, இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' எனவும், கெடு விதித்துள்ளது.இதன் மூலம், வழக்கறிஞர் வைத்து விசாரணை நடத்த முடியாத, பிணைத் தொகை செலுத்த முடியாத ஏழை கைதிகள், சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.'இந்திய சிறைகளில், வெளிநாடுகளைச் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 06,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |