Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.1.46 கோடி தாமிரத் தகடுகளுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு: 6 பேர் கைது

Posted: 05 Sep 2014 01:27 PM PDT

தருமபுரி அருகே ரூ.1.46 கோடி தாமிர தகடுகளுடன் கடத்தப்பட்ட லாரி மீட்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடியில் செப்.14-இல் கவியரசர் கண்ணதாசன் விழா

Posted: 05 Sep 2014 01:26 PM PDT

கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில், 24-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழா, காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் செப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது.

"உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிக்கக் கூடாது'

Posted: 05 Sep 2014 01:25 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றங்கள் செய்வதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை பறிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

காணாமல்போன மீனவர்களை தேடும் பணி: விரைவுபடுத்த வைகோ வலியுறுத்தல்

Posted: 05 Sep 2014 01:24 PM PDT

கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன பாம்பன் பகுதி மீனவர்கள் மூன்று பேரை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நாகபுரி மேயராக பாஜக வேட்பாளர் தேர்வு

Posted: 05 Sep 2014 01:09 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி நகர மேயராக பாஜக வேட்பாளரான பிரவீண் தட்கே வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு: சிபிஐ இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க சரத் யாதவ் வலியுறுத்தல்

Posted: 05 Sep 2014 01:08 PM PDT

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ் வலியுறுத்தினார்.

ஐஎஸ் அமைப்பில் சேரவிருந்த 4 இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்

Posted: 05 Sep 2014 01:07 PM PDT

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரவிருந்த ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 இளைஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

நடைபாதை ஆக்கிரமிப்பில் நடவடிக்கை என்ன? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 05 Sep 2014 01:07 PM PDT

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 10 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

போர்நிறுத்தம்: கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் ஒப்பந்தம்

Posted: 05 Sep 2014 12:54 PM PDT

உக்ரைனில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக, அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பள்ளிக்குச் சென்ற மாணவர் மாயம்

Posted: 05 Sep 2014 12:45 PM PDT

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லைநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மகன் சந்துரு (13). இவர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றவர்,

செந்துறையில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 05 Sep 2014 12:45 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறையில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே 6 கோயில்களில் குடமுழுக்கு

Posted: 05 Sep 2014 12:44 PM PDT

செந்துறை அருகே சேடகுடிக்காடு கிராமத்தில் 6 கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

செப். 8-ல் அரியலூர் காளியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் விழா

Posted: 05 Sep 2014 12:44 PM PDT

அரியலூர் காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (செப். 8) ஊரணி பொங்கல் விழா நடைபெறுகிறது. அரியலூர் விளாங்காரத் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கு ஊரணி பொங்கல் விழாவும், பால்குட

புதுகையில்நடந்து சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு

Posted: 05 Sep 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

விராலிமலை கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த விழா

Posted: 05 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த விழா அண்மையில் நடைபெற்றது.

புதுகையில் செப். 8-ல் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினரின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்தும் மறு தேர்தல் அறிவிப்பு வெளியிடக்கோரியும் இடதுசாரிக் கட்சிகள் செப். 8-ம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

நகர்மன்றத் தலைவர் பதவிக்கான மனு தாக்கலில் தேர்தல் விதிகள் மீறப்படவில்லை

Posted: 05 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் விதிகள் மீறப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஆலங்குடியில் பொதுமக்களுக்கு சாலை விதிகள் விழிப்புணர்வு புத்தகம்

Posted: 05 Sep 2014 12:43 PM PDT

ஆலங்குடியில் பொதுமக்களுக்கு சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஆசிரியர் தினம்: கோ - ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை

Posted: 05 Sep 2014 12:42 PM PDT

புதுக்கோட்டையில் ஆசிரியர் தினத்தையொட்டி கோ-ஆப்டெக்ஸில் வெள்ளிக்கிழமை சிறப்புத்தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி முகாம்

Posted: 05 Sep 2014 12:42 PM PDT

குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு சம்பா நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நார்த்தாமலையில் அண்மையில் நடைபெற்றது.

அறந்தாங்கியில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 05 Sep 2014 12:42 PM PDT

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"சுவடிகளைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

Posted: 05 Sep 2014 12:42 PM PDT

ஓலைச் சுவடிகள், காகிதச் சுவடிகளைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

பெண்ணிடம் 13 பவுன் தங்க காசுகள் பறித்த இளைஞர் கைது

Posted: 05 Sep 2014 12:41 PM PDT

தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 13 பவுன் தங்கக் காசுகள் கொண்ட கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பெரிய கோயில் அருகே கூடுதல் பாலம் கட்ட மீண்டும் முயற்சி

Posted: 05 Sep 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக பாலம் கட்டுவதற்கான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மீண்டும்

"மாணவர்களுக்கு புதிய சிந்தனைகளை வளர்ப்பவராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்'

Posted: 05 Sep 2014 12:41 PM PDT

மாணவர்களுக்கு புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றார் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தின் புலத் தலைவர் கே.ஜி. ரகுநாதன்.

குடந்தையில் கல்வி மாவட்ட அளவிலான கபடி போட்டி

Posted: 05 Sep 2014 12:41 PM PDT

கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான கபடிப் போட்டியில் 9 பள்ளி அணிகள் பங்கேற்றன.

நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை

Posted: 05 Sep 2014 12:40 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வங்கிகள் வழியாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படவுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Posted: 05 Sep 2014 12:40 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட 4-ஆவது வார்டு ஊராட்சிக் குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் 6 மனுக்கள் தள்ளுபடியான நிலையில், அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது

சத்திரம் நிர்வாகத்தில் குத்தகை, வாடகை மறு நிர்ணயம்

Posted: 05 Sep 2014 12:40 PM PDT

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சத்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டடங்களுக்கான குத்தகை, வாடகை மறு நிர்ணயம்

திருமலையில் முடி காணிக்கைக்கு புதிய நடைமுறை

Posted: 05 Sep 2014 12:40 PM PDT

பக்தர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே, மொட்டை அடித்து அந்த முடியை காணிக்கையாக திருமலையில் உள்ள உண்டியலில் சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் தெரிவித்தார்.

ஆட்சியர் விழாவில்போதையில் ரகளை; அதிமுக பிரமுகர் கைது

Posted: 05 Sep 2014 12:39 PM PDT

தஞ்சாவூர் ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாநகராட்சியில் அதிமுக போட்டியின்றி தேர்வு

Posted: 05 Sep 2014 12:39 PM PDT

தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடியானதால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

Posted: 05 Sep 2014 12:39 PM PDT

தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வாய்பேச இயலாத மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

Posted: 05 Sep 2014 12:39 PM PDT

திருச்சியில் வாய்பேச இயலாத மாணவிகள் மூவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரை மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆலய பராமரிப்பில் உள்ள 21 குளங்களை குத்தகைக்கு விட தடை

Posted: 05 Sep 2014 12:38 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வட சங்கேந்தி ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள 21 குளங்களின் மீன்பாசி குத்தகையை ஏலத்தில் விட ஊராட்சி நிர்வாகத்துக்கு தடை விதித்து திருத்துறைப்பூண்டி மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். மகாலெட்சுமி

பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

Posted: 05 Sep 2014 12:38 PM PDT

பணியிட மாறுதலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுவிலக்கு குற்றங்களுக்காகபறிமுதல் செய்யப்பட்டவாகனங்கள் செப். 11-ல் ஏலம்

Posted: 05 Sep 2014 12:38 PM PDT

நாகை மாவட்டத்தில் மதுவிலக்குக் குற்றங்களின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப். 11-ம் தேதி பொது ஏலம் விடப்படும்.

நீடுர் பள்ளியில் ஆசிரியர் தின விழா

Posted: 05 Sep 2014 12:37 PM PDT

மயிலாடுதுறை வட்டம், நீடூர் நஸ்ரூல் முஸ்லீமின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு 11 பேர் மனுதாக்கல்

Posted: 05 Sep 2014 12:37 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் திமுக ஒன்றியச் செயலர் பதவிக்கு வெள்ளிக்கிழமை 11 பேர் மனுதாக்கல் செய்தனர்.

தஞ்சையில் நாளை இளந்திரு விருதுக்கான கலைப் போட்டிகள்

Posted: 05 Sep 2014 12:37 PM PDT

தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இளந்திரு விருதுக்கான கலைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை

Posted: 05 Sep 2014 12:36 PM PDT

இந்த நாளில் அன்று (6.9.1968); ஆசிரியர் தின சிந்தனைகள்

Posted: 05 Sep 2014 12:30 PM PDT

ஆசிரியர் தின சிந்தனைகள்

இதிலொன்றும் தவறில்லை!

Posted: 05 Sep 2014 12:24 PM PDT

கேரள ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். இது வாத பிரதிவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.

நம்பிக்கை தகர்கிறது!

Posted: 05 Sep 2014 12:20 PM PDT

சில நாள்களுக்கு முன்பு மத்தியப் புலனாய்வுத் துறையை "ஆட்சியாளர்களின் கூண்டுக் கிளி' என்று உச்சநீதிமன்றம் வர்ணித்தபோது நாடு தழுவிய அதிர்ச்சி அலை வீசியது.

20 ஆண்டுகளுக்கு பின் செய்யாறுக்கு சார் ஆட்சியர் நியமனம்

Posted: 05 Sep 2014 12:19 PM PDT

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யாறு வருவாய் கோட்டத்துக்கு சார் ஆட்சியராக எம்.கே.ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்ரீ விருதுக்கான மாணவர்கள் தேர்வு முகாம்

Posted: 05 Sep 2014 12:18 PM PDT

கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியரைத் தேர்வு செய்து பாலஸ்ரீ விருது வழங்கும் முகாம், காஞ்சிபுரத்தில் இம் மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

அம்மா திட்ட முகாமில் 77 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 05 Sep 2014 12:18 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் எம்எல்ஏ ஜெயசுதா கலந்து கொண்டு 76 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செப்டம்பர் 6 மின் தடை

Posted: 05 Sep 2014 12:18 PM PDT

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (செப்டம்பர் 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அ.நாகராஜன்

மாதாந்திர விளையாட்டுப் போட்டி: 400 மாணவ-மாணவியர் பங்கேற்பு

Posted: 05 Sep 2014 12:18 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

Posted: 05 Sep 2014 12:17 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயியை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.

"மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு 5 பவுன் சங்கிலி'

Posted: 05 Sep 2014 12:17 PM PDT

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு 5 பவுன் சங்கிலியை தனது சொந்த செலவில் தருவதாக ஆரணி எம்எல்ஏ பாபுமுருகவே

நல்லாசிரியர் விருது

Posted: 05 Sep 2014 12:17 PM PDT

செய்யாறு கல்வி மாவட்டம் குண்ணத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் வரலாறு ஆசிரியர் கை.செல்வகுமார்

பேராசிரியைகளுக்கு நுண்ணறிவுப் பயிற்சி முகாம்

Posted: 05 Sep 2014 12:16 PM PDT

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி பேராசிரியைகளுக்கு நுண்ணறிவு பயிற்சி முகாம் ஏலகிரியில் உள்ள அரிமா சங்க பன்னாட்டுப் பயிற்சி மன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 தினங்கள் நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 05 Sep 2014 12:16 PM PDT

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் முத்துக்குமாரசாமி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

வெம்பாக்கத்தில் கலவை சாதம் தயாரிக்கப் பயிற்சி

Posted: 05 Sep 2014 12:16 PM PDT

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு கலவை சாதம் தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Posted: 05 Sep 2014 12:16 PM PDT

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மோடியுடன் பேச முடியாமல் திருவண்ணாமலை மாணவர்கள் ஏமாற்றம்

Posted: 05 Sep 2014 12:15 PM PDT

ஆசிரியர் தினத்தையொட்டி, புதுதில்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ் விழாவின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் கண்கள் தானம்

Posted: 05 Sep 2014 12:15 PM PDT

 செய்யாறு ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் தி.பூ.பச்சையப்பன் (88)

செப்டம்பர் 12 மின் தடை

Posted: 05 Sep 2014 12:15 PM PDT

செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட்டில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும்

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Sep 2014 12:15 PM PDT

போளூரில் உள்ள எல்ஐசி அலுவலகம் எதிரே இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் எல்ஐசி பொதுத் துறையைப் பாதுகாக்க மெழுகுவர்த்தி ஏற்றி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

Posted: 05 Sep 2014 12:14 PM PDT

வந்தவாசி அருகே குளத்தில் தவறி விழுந்தவர் இறந்தார். வந்தவாசியை அடுத்த தெள்ளாறைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) வெங்கட்டான்(57). இவர் கூடை

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு மேலும் நெருக்கடி

Posted: 05 Sep 2014 12:10 PM PDT

2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகியவற்றின் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அந்த அமைப்பின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் சந்தித்தது தொடர்பான சர்ச்சை நீங்குவதற்குள், மேலும் சிலரை அவர் தனது வீட்டில் பல முறை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஞ்சித் சின்ஹாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சிறார் இல்லங்கள், மாணவிகள் விடுதியில் கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும்

Posted: 05 Sep 2014 12:10 PM PDT

சிறார் இல்லங்கள், மாணவிகள் விடுதிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என சமூக நலத் துறை ஆணையர் வி.எம். சேவியர் கிறிசோ நாயகம் தெரிவித்தார்.

"அலங்கார மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்'

Posted: 05 Sep 2014 12:10 PM PDT

அலங்கார மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

100 மது பாட்டில்கள் பதுக்கல்:இளைஞர் கைது

Posted: 05 Sep 2014 12:09 PM PDT

கன்னியாகுமரி பேருந்து நிலையம் அருகே 100 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

"உள்நாட்டு மீனவர்கள் உபகரணங்கள் வாங்க அரசு மானியம்

Posted: 05 Sep 2014 12:09 PM PDT

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் உள்நாட்டில் மீன்பிடித் தொழில் செய்வோருக்கு உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு

Posted: 05 Sep 2014 12:09 PM PDT

குலசேகரம் அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளம்பெண் இறந்தார்.

இதுவரை 4,914 பேர் மனு தாக்கல்

Posted: 05 Sep 2014 12:09 PM PDT

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 4 ஆயிரத்து 914 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநர் சாவு

Posted: 05 Sep 2014 12:09 PM PDT

ஆரல்வாய்மொழி அருகே விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

நல்லூர் அரசுப் பள்ளியில் சுகாதார மன்றக் கூட்டம்

Posted: 05 Sep 2014 12:08 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார மன்றக் கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு: துணைநிலை ஆளுநர் பரிந்துரைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிர்ப்பு

Posted: 05 Sep 2014 12:08 PM PDT

தில்லியில் ஆட்சி அமைக்க, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தக்கலையில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 05 Sep 2014 12:08 PM PDT

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் தக்கலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: குமரி கடலில் விசர்ஜனம்

Posted: 05 Sep 2014 12:08 PM PDT

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டுச் சென்று கன்னியாகுமரி கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

ஓணம் விழா கொண்டாட்டம்

Posted: 05 Sep 2014 12:08 PM PDT

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளியில் ஓணம் விழா மற்றும் ஆசிரியர் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

8இல் கூட்டுறவு குறைதீர் கூட்டம்

Posted: 05 Sep 2014 12:07 PM PDT

நாகர்கோவிலில் கூட்டுறவு குறைதீர்க்கும் குழுக் கூட்டம் திங்கள்கிழமை (செப். 8) நடைபெறுகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்புமனு நிராகரிப்புக்கு கண்டனம்

Posted: 05 Sep 2014 12:06 PM PDT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் ஆசிரியர் தின விழா

Posted: 05 Sep 2014 12:06 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை

முல்லைப் பெரியாறு அணை: வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரளத்துக்கு இடைக்காலத் தடை

Posted: 05 Sep 2014 12:05 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் அமைப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேரள அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

Posted: 05 Sep 2014 12:04 PM PDT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டினம் கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 05 Sep 2014 12:04 PM PDT

தூத்துக்குடியில் இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted: 05 Sep 2014 12:04 PM PDT

சுதந்திரப் போராட்டத் தியாகி வஉசியின் 143ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட, துறைமுக நிர்வாகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெருமாள்குளம் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

Posted: 05 Sep 2014 12:04 PM PDT

பெருமாள்குளம் அருள்மிகு ஸ்ரீசிவனணைந்த பெருமாள் சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுகாதார விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி

Posted: 05 Sep 2014 12:04 PM PDT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திட்டங்குளம் ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம் தொடக்கம்

Posted: 05 Sep 2014 12:03 PM PDT

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் இன்று கல்விக் கடன் வழங்கும் முகாம்

Posted: 05 Sep 2014 12:03 PM PDT

தூத்துக்குடி வட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை (செப். 6) நடைபெறுகிறது.

விளாத்திகுளத்தில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

Posted: 05 Sep 2014 12:02 PM PDT

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1967ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த 41 பழைய மாணவ, மாணவியர் 47 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் முதன்முறையாக குடும்பத்துடன் சந்தித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் வ.உ.சி. பிறந்த நாள் விழா

Posted: 05 Sep 2014 12:02 PM PDT

திருச்செந்தூரில் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு சன்னதித் தெருவில் உள்ள அவரது வெண்கலச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடியில் அனைத்துக் கட்சி கூட்டம்

Posted: 05 Sep 2014 12:02 PM PDT

தூத்துக்குடியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Posted: 05 Sep 2014 12:02 PM PDT

கோவில்பட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்பட 4 பேர் போட்டியின்றித் தேர்வு?

Posted: 05 Sep 2014 12:01 PM PDT

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் 3 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சாயர்புரம் பேரூராட்சி உறுப்பினர் தேர்தல்: 4 பேர் மனு தள்ளுபடி

Posted: 05 Sep 2014 12:01 PM PDT

சாயர்புரம் பேரூராட்சியில் 14ஆவது வார்டு உறுப்பினர் பதவி இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த 4 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பெயிண்ட் கடையில் தீவிபத்து

Posted: 05 Sep 2014 12:01 PM PDT

கோவில்பட்டியில் உள்ள பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

காயல்பட்டினம் 1 ஆவது வார்டு தேர்தல்: 5 பேரின் மனுக்களும் ஏற்பு

Posted: 05 Sep 2014 12:01 PM PDT

காயல்பட்டினம் நகராட்சியின் 1 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 5 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Sep 2014 12:01 PM PDT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருபவுத்ர உற்சவ விழா

Posted: 05 Sep 2014 12:00 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெüமியநாராயண பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை திருபவுத்ர உற்சவ விழா நடைபெற்றது.

மானாமதுரை அருகேமனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

Posted: 05 Sep 2014 12:00 PM PDT

மானாமதுரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நகர்ப்புறங்களில் வீட்டு வசதி, புதிய குடிநீர்த் திட்டங்கள்

Posted: 05 Sep 2014 11:59 AM PDT

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு வீட்டு வசதி, புதிய குடிநீர்த் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்த 50 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்வதே ஆசிரியப் பணி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Posted: 05 Sep 2014 11:59 AM PDT

விருதுகள் வாங்குவது மட்டுமே ஆசிரியர் பணியல்ல. விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்வதே ஆசிரியப்பணி என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா

Posted: 05 Sep 2014 11:59 AM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழுத் தலைவர் சோம.கலியமூர்த்தி

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

Posted: 05 Sep 2014 11:59 AM PDT

திருவாடானை தாலுகா அலுவலகம் பின்புறம் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™