Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடத்த அ.தி.மு.க., திட்டம்: பல்வேறு சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும், இன்று அறிவிக்கப்படாத, 'பந்த்' நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பல்வேறு சங்கங்களும், கடைஅடைப்பு, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், பஸ், ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா கைது, சிறை வைப்பு சம்பவத்தால், அ.தி.மு.க.,வினர் கடும் ...

இந்தியாவில் தொழில் செய்யும்படி அமெரிக்க தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு

Posted:

நியூயார்க்: நியூயார்க் நகரில், முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களை இந்தியாவில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 'அமெரிக்காவில், ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று நியூயார்க்கில், முன்னணி தொழில் அதிபர்களுடனான விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்தில், பெப்சிகோ, கூகுள், சிடி குரூப் உள்ளிட்ட, 11 முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.அவர்களிடையே, பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. புதிய முதலீட்டாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து ...

அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவுக்கு மருந்து, மாத்திரை சப்ளை

Posted:

பெங்களூரு:சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு பன்னர் கட்டாரோட்டிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மருந்து, மாத்திரை கொண்டு செல்லப்பட்டது.பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு, உடல் நிலை சரியில்லை என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து அவரது தனி மருத்துவர் டாக்டர் சாந்தாராம் நேற்று சிறைக்கு வந்தார். பெங்களூரு பன்னர்கட்டா ரோட்டிலுள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மருந்து, மாத்திரை கொண்டு வரப்பட்டது.இந்த வேன், பரப்பன அக்ரஹாரா ...

எல்லையில் சீன ஊடுருவலை இந்தியா அனுமதிக்காது: மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜு உறுதி

Posted:

புதுடில்லி:''எல்லைப் பகுதியில், சீன ராணுவத்தினரின் எத்தகைய ஊடுருவலையும், இந்தியா ஏற்றுக் கொள்ளாது. நம் நாட்டிற்கு உட்பட்ட பகுதிகள் நிச்சயம் பாதுகாக்கப்படும்,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஆனாலும், சீனாவின் எத்தகைய ஊடுருவலையும், இந்தியா ஏற்றுக் கொள்ளாது. அந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவாக உள்ளது. சீன ராணுவத்தினரின் ஊடுருவலை, இனி ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும், அவர்களிடம் ...

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகபட்சமா?

Posted:

ஊழல் வழக்கில், அதிகபட்ச அபராதம் எவ்வளவு விதிப்பது என்பது குறித்து, சட்டத்தில் கூறப்படவில்லை. ஜெ., வழக்கில், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது, அதிக பட்சமானது என ஒரு தரப்பும், அதிகபட்சம் இல்லை என மற்றொரு தரப்பிலும் கூறப்படுகிறது.ரூ.100 கோடி அபராதம்: சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா, 10 கோடி ரூபாய் என, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, அதிகபட்சமானது என, ஒருபுறம் கருத்து தெரிவிக்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் ...

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு: 30 அமைச்சர்களும் புதிதாக பதவியேற்பு

Posted:

சென்னை: தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம், நேற்று பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அனைவரும் துக்கம் தாங்காமல் அழுதபடி பதவியேற்றதால், குதுகலமாக நடக்க வேண்டிய பதவியேற்பு விழா சோகமயமாக இருந்தது.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.அதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். புதிய முதல்வரை தேர்வு செய்ய நேற்று முன்தினம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,கட்சி ...

தண்டனையை நிறுத்திவைக்க கோருகிறார் ஜெ.,: பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: ஜாமின் ஒரு வாரம் தள்ளிப்போக வாய்ப்பு

Posted:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்க கோரியும், குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இந்த இடைக்கால மனுக்கள், இன்று விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பிலும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி, மும்பையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், பெங்களூருவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ...

ஜெ., மீதான வழக்கில் உளவுத்துறை சொதப்பல்: தயார் நிலையில் கர்நாடக போலீஸ் இருந்தது எப்படி?

Posted:

ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க காரணமான, சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பில் ஆஜரானவர் வக்கீல் பவானி சிங். இவர், தீர்ப்பு வெளியான அன்று அளித்த பேட்டியில், ''தீர்ப்பு வெளியான நாளன்று காலையில், ஜெயலலிதா உற்சாகமாகவே காணப்பட்டார். மாலையில் தீர்ப்பு வெளியானதும், மிகவும் சோகமாக இருந்தார்,'' என்று குறிப்பிட்டார்.'வாழ்க' கோஷம்:அதற்கு முன், அன்றைய தினம் காலையில், பெங்களூருக்கு விமானத்தில் வந்திறங்கிய ஜெயலலிதா, காரில், நீதிமன்றத்திற்கு வந்தார். வரும் வழியில், இருபுறமும் நின்றிருந்த அ.தி.மு.க.,வினர், 'வாழ்க' கோஷம் ...

கருணாநிதி வீட்டில் தொண்டர்கள் பாதுகாப்பு

Posted:

சென்னை:சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டிற்கும், அறிவாலயத்திற்கும், திடீர் திடீரென ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்த ஓடி வருவதும், கருணாநிதிக்கு எதிரான கோஷங்கள் எழுப்புவதும் தொடருவதால், வரும் 3ம் தேதி வரை இரவு நேரம் மட்டும் கட்சித் தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை ஒட்டி, பெங்களூரு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ...

சீன பட்டாசுகள் விற்பனை செய்தால் தண்டனை: மத்திய அரசு எச்சரிக்கை

Posted:

புதுடில்லி:'சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து வைத்திருப்பதும், அவற்றை விற்பனை செய்வதும், சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய குற்றம்' என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதால், அவற்றை இறக்குமதி செய்யவோ, இந்தியாவுக்குள் விற்கவோ, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருந்தும், அதை மீறி சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக பட்டாசுகளை இறக்குமதி செய்து, தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் தீபாவளியின் போது, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் ...

மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே பதவி விலகுகிறார் பா.ஜ., கூட்டணி உடைந்ததால் உத்தவ் அதிரடி

Posted:

மும்பை: ''மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை கேபினட் அமைச்சர், ஆனந்த் கீதே பதவி விலகுவார்,'' என, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.உத்தரவு:மகாராஷ்டிராவில், அடுத்த மாதம், 15ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், சிவசேனாவும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானித்து, தொகுதிப் பங்கீடு பேச்சில் ஈடுபட்டன. அதில், உடன்பாடு எட்டப்படாததால், இருகட்சிகளுக்கும் இடையே, 25 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி உடைந்தது.அதனால், பா.ஜ.,வும், சிவசேனாவும், சட்டசபைத் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றன. பா.ஜ., - சிவசேனா ...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு எப்போது?

Posted:

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு ஊழல் வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது, குற்றச்சாட்டு பதிவு செய்வது எப்போது என்பது குறித்து, அடுத்த மாதம், 20ம் தேதி, டில்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட உள்ளது.'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தவரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான, ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட பலரை ...

சுற்றுலா இணைக்கிறது; பயங்கரவாதம் பிரிக்கிறது: அமெரிக்காவில் மோடி ஆவேசம்

Posted:

நியூயார்க்: ""உலக மக்களை சுற்றுலா இணைக்கிறது; பயங்கரவாதம் பிரிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும்'' என நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் பிரதமர் மோடி பேசினார்.அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மோடி நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலில் பேசினார். அவர் கூறியதாவது: மூன்று நாட்களாக நியூயார்க்கில் இருக்கிறேன். இந்நகர மக்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகின்றனர். அதற்கு நன்றி. இந்த கவுன்சிலில் இதுவரை ஐந்து இந்திய பிரதமர்கள் பேசி உள்ளனர். நானும் இங்கு பேசுவதில் பெருமை அடைகிறேன். வெளிநாட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™