Tamil News | Online Tamil News |
- ரூ.100 கோடி அபராதத்துடன் ஜெ.,க்கு நான்கு ஆண்டு சிறை: தோழி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தண்டனை
- பயங்கரவாதத்தை கைவிட்டால் பாக்.,உடன் பேச்சு: மோடி
- ஊழல் வழக்கில் பதவி இழந்த முதல் முதல்வர் இவர்தான்
- தமிழகத்தின் அடுத்த முதல்வர் இன்று தேர்வு
- பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி
- அரசு பஸ் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு: தமிழகத்தில் போக்குவரத்து கடும் பாதிப்பு
- ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு
- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம்
- சட்டமும் நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன: சுப்ரமணியன் சாமி
- தமிழக மந்திரிகள் பெங்களூருவில் என்ன செய்கின்றனர்
| ரூ.100 கோடி அபராதத்துடன் ஜெ.,க்கு நான்கு ஆண்டு சிறை: தோழி சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தண்டனை Posted: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு, பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை, நேற்று மாலை, 3:00 மணிக்கு நீதிபதி குன்ஹா ... |
| பயங்கரவாதத்தை கைவிட்டால் பாக்.,உடன் பேச்சு: மோடி Posted: நியூயார்க்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த, இந்தியா தயாராக உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தின் பின்னணியில், அந்த நாட்டுடன் பேச்சு நடத்த முடியாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.,வில் பேசினார்.அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.அவர் பேசியதாவது:இந்தியாவின் பிரதமராக, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் உரை நிகழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். உலக நாடுகளில் நீதியும், அமைதியும், வளமும் நிலவ, இந்தியா விரும்புகிறது. உலகம் முழுவதும் ஒரு குடும்பம் தான். அதிலுள்ள பன்முகத் தன்மையை இந்தியா நன்கு ... |
| ஊழல் வழக்கில் பதவி இழந்த முதல் முதல்வர் இவர்தான் Posted: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, ஊழல் வழக்கில் பதவி இழந்து, சிறை சென்றுள்ள முதல் முதல்வராகி உள்ளார். அதே நேரத்தில், வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக, அவர் பதவி இழந்துள்ளது, இது, இரண்டாவது முறையாகும்.எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த, அ.தி.மு.க.,வை இணைத்து, முதல்வரானார் ஜெயலலிதா. அதன் பின், ராணுவ கட்டுக்கோப்போடு, அ.தி.மு.க.,வை வழி நடத்தினார்.கடந்த 2001, சட்டசபை தேர்தலின் போது, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை என, நான்கு தொகுதிகளில் போட்டியிட, ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.தண்டனை:ஒருவர் இரண்டு ... |
| தமிழகத்தின் அடுத்த முதல்வர் இன்று தேர்வு Posted: ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்துள்ளதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இன்று, புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளனர்.பரிசீலனை:புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுவார் என, கூறப்படுகிறது. எனினும், முதல்வர் பதவிக்கான போட்டியில், அ.தி.மு.க., அமைப்பு செயலர் விசாலாட்சி நெடுஞ்செழியன், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் எம்.பி., ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., நட்ராஜ் உட்பட பலரின் பெயர்களும், பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் தவிர, பல்வேறு அமைச்சர்களும், தங்களுக்கு முதல்வர் வாய்ப்பு வராதா என, ... |
| பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி Posted: பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு ... |
| அரசு பஸ் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு: தமிழகத்தில் போக்குவரத்து கடும் பாதிப்பு Posted: நேற்று வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர், பஸ்களை குறி வைத்ததால், தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம் முடங்கியது.முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியாகுவதற்கு முன், பஸ் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து அரசு பஸ்களும், நேற்று காலை முதல், எல்லை பகுதிகள் வரை மட்டுமே இயக்கப்பட்டன.அரசு விரைவு, கோவை, விழுப்புரம் ஆகிய போக்குவரத்து கழகத்தின், 150க்கும் மேற்பட்ட பஸ்கள், ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன.கர்நாடகாவில் இருந்து சென்னை உட்பட தமிழகத்திற்கு செல்லும் ... |
| ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு Posted: புதுடில்லி: 'ஊழல் உட்பட, குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, 2013 ஜூலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பு குறித்து, பல அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்த விவகாரத்தில், எம்.பி.,க்களை காப்பாற்ற, சட்டத் திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தின. அதனால், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், 'குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை, உடனே ... |
| சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம் Posted: சென்னை : தமிழகத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்களுக்கு பாதுகாப்பு வழங்க, நடவடிக்கை எடுங்கள்' என, ஜனாதிபதிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பெங்களூருவில் நடந்த, சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று, தாக்குதல் ... |
| சட்டமும் நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன: சுப்ரமணியன் சாமி Posted: ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை, முதலில் தாக்கல் செய்தவர், பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சுப்ரமணியன் சாமி அளித்த பேட்டி:செய்த தவறுக்கு: யார் மீதும், ஆதாரம் இல்லாமல், நான் குற்றம் சுமத்துவதில்லை; வழக்கு போடுவதில்லை என்பது, ஜெயலலிதா மீது நான் தாக்கல் செய்த, சொத்துக் குவிப்பு வழக்கிலும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த தீர்ப்பை கண்டு யாரும் வருத்தப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை. செய்த தவறுக்குத் தான், கோர்ட் தண்டனை விதித்து இருக்கிறது.இந்த வழக்கின் போக்கை நீங்கள் கவனித்தீர்கள் ... |
| தமிழக மந்திரிகள் பெங்களூருவில் என்ன செய்கின்றனர் Posted: பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டதை முன்னிட்டு பெங்களூரு சென்றிருந்த தமிழக அமைச்சர்கள், சிறை வளாகத்தில் உள்ளனர். அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜெ., சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு, வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அனைவருக்கும் 4 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டதுடன், ஜெ.,க்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ., சிறையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 28,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |