Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஜவுளி வியாபாரியிடம் ரூ.67 லட்சம் மோசடி

Posted: 27 Sep 2014 12:59 PM PDT

திருச்செங்கோடு அருகே ஜவுளி வியாபாரியிடம் குறைந்த வட்டிக்கு ரூ.150 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.67 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை பிரதமர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்: காதர் மொய்தீன்

Posted: 27 Sep 2014 12:58 PM PDT

இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை பிரதமர் நரேந்திர மோடி நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவரது அண்மைக்கால பேச்சு உணர்த்துவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலரும், மாநிலத் தலைவருமான கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.

வில்லியனூர் அருகே ரௌடி கொலை

Posted: 27 Sep 2014 12:56 PM PDT

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே முன்விரோதம் காரணமாக ரௌடி ஒருவர் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழக ஆட்சிப் பேரவையின் அதிகாரத்தில் குறுக்கீடு கூடாது

Posted: 27 Sep 2014 12:54 PM PDT

பல்கலைக்கழகங்களின் ஆட்சிப் பேரவையின் அதிகாரத்தில் குறுக்கீடு இருக்கக் கூடாது என, திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற மூட்டா 22-ஆவது பொது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ. 53 லட்சம் மோசடி

Posted: 27 Sep 2014 12:50 PM PDT

திருச்சியில் பொறியியல் பட்டதாரியிடம், அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்-லைன் மூலம் ரூ. 53 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு, மறியல்

Posted: 27 Sep 2014 12:46 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு, கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் உருவப்

நாகையில் அக். 8-ல் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

Posted: 27 Sep 2014 12:46 PM PDT

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மன்றம் சார்பில், நாகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியன அக். 8 மற்றும் அக். 10 ஆகிய தேதிகளில்

ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாடு பயிற்சி

Posted: 27 Sep 2014 12:46 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாடு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடியில் ஜேசி வார விழா

Posted: 27 Sep 2014 12:46 PM PDT

மன்னார்குடி கிளை ஜேசி சார்பில் அமைப்பின் வார விழா அண்மையில் நடைபெற்றது.

பொறியியல் கல்லூரியில்மின்னணுவியல் கருத்தரங்கம்

Posted: 27 Sep 2014 12:45 PM PDT

நாகை இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்?

Posted: 27 Sep 2014 12:45 PM PDT

நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்தாலம் ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 27 Sep 2014 12:45 PM PDT

குத்தாலம் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் என். தமிழரசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

85 வயது மூதாட்டியின் கண்கள் தானம்

Posted: 27 Sep 2014 12:45 PM PDT

நீடாமங்கலத்தைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற சார்பதிவாளர் சேவு. நடராஜன் மனைவி மங்களத்தம்மாள் (85) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

வாண்டையார் இருப்பில்நாட்டு நலப் பணி திட்டச் சிறப்பு முகாம்

Posted: 27 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூர் அருகே வாண்டையார் இருப்புக் கிராமத்தில் வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டச் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

"விவசாயக் கடன் ரூ. 879 கோடி அளிப்பு'

Posted: 27 Sep 2014 12:44 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயக் கடன் இலக்கை விஞ்சி ரூ. 879 கோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

மத்திய பல்கலை.யில் ரத்த தான முகாம்

Posted: 27 Sep 2014 12:44 PM PDT

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தையொட்டி நடைபெற்ற ரத்த தான

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் போராட்டம்

Posted: 27 Sep 2014 12:43 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; போக்குவரத்து நிறுத்தம்

Posted: 27 Sep 2014 12:43 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்து. இதையடுத்து, திருச்சி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில்

நிலம் விற்பதாகக் கூறி மோசடி

Posted: 27 Sep 2014 12:43 PM PDT

நிலத்தை விற்பதாகக் கூறி ரூ. 20 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாங்கல் பகுதியில் சூதாடிய 4 பேர் கைது

Posted: 27 Sep 2014 12:43 PM PDT

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின்பேரில் வாங்கல் காவல் துணை

கரூரில் இருசக்கர வாகனம் திருட்டு

Posted: 27 Sep 2014 12:42 PM PDT

கரூரில் 2 இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கரூர் அருகேயுள்ள வடக்கு கோயம்பள்ளி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35).

லாரி ஓட்டுநர், கிளீனரை கட்டிப் போட்டு ரூ. 35 ஆயிரம் பறிப்பு

Posted: 27 Sep 2014 12:42 PM PDT

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ளது பி.கே. அகரம். இதையடுத்து உள்ள காட்டுப் பகுதியில் சனிக்கிழமை காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருவர் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சிறுகனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வேலைநிறுத்தம்

Posted: 27 Sep 2014 12:42 PM PDT

மீத்தேன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் அக். 24-ம் தேதி நடத்தப்படவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

செப். 30-ல்நிழல்வலைக்குடில்குடைமிளகாய் சாகுபடி பயிற்சி

Posted: 27 Sep 2014 12:41 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் "நிழல்வலைக்குடில் குடைமிளகாய் சாகுபடி' என்ற தலைப்பில் ஒரு நாள் கட்டணமில்லா பயிற்சியானது செப். 30-ம் தேதி நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் போராட்டம்

Posted: 27 Sep 2014 12:41 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

புனித பிரான்சிஸ் அசிசியார் கோயில் திருவிழா கொடியேற்றம்

Posted: 27 Sep 2014 12:41 PM PDT

காரைக்கால் நகரின் பெரியப்பேட் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பொரும்பூர் கிராமத்தில்"அம்மா' திட்ட முகாம்: 28 மனுக்கள் ஏற்பு

Posted: 27 Sep 2014 12:40 PM PDT

குத்தாலம் வட்டம், பொரும்பூர் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை வட்டாட்சியர் பிரான்சிஸ், பரிசீலனை செ

வங்கிக் கிளை மூலம் சுயதொழில் தொடங்க கடனுதவி

Posted: 27 Sep 2014 12:40 PM PDT

மயிலாடுதுறை இந்தியன் வங்கிக் கிளை மூலம் கூட்டுப் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 4.50 லடசம் கடனுதவி வழங்கப்பட்டது.

செப். 30-ல்நிழல்வலைக்குடில்குடைமிளகாய் சாகுபடி பயிற்சி

Posted: 27 Sep 2014 12:40 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் "நிழல்வலைக்குடில் குடைமிளகாய் சாகுபடி' என்ற தலைப்பில் ஒரு நாள் கட்டணமில்லா பயிற்சியானது செப். 30-ம் தேதி நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டமதிமுக பொறுப்பாளர் நியமனம்

Posted: 27 Sep 2014 12:39 PM PDT

திருவாரூர் மாவட்டச் செயலராக இருந்த எம்.ஏ. முப்பால் தனது உடல்நிலை காரணமாக, கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து

சிறுபான்மையினமாணவர்கள் கவனத்துக்கு....

Posted: 27 Sep 2014 12:39 PM PDT

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கரூர், குளித்தலையில் அதிமுகவினர் மறியல்: கடைகள் அடைப்பு

Posted: 27 Sep 2014 12:38 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் சனிக்கிழமை கைதானதைக் கண்டித்து கரூரில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

கரூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு

Posted: 27 Sep 2014 12:38 PM PDT

கரூரில் 2 இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கரூர் அருகேயுள்ள வடக்கு கோயம்பள்ளி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவர் கடந்

அரசுக் கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 27 Sep 2014 12:38 PM PDT

கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழக தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் கரூரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த கண்காட்சி என்ற மாநில அளவிலான பயிலரங்கம் கல்லூரி முதல்வர் ஆர். பாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணி ஆய்வு

Posted: 27 Sep 2014 12:37 PM PDT

கரூர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரை வந்தடைந்தது அமராவதி நீர்!

Posted: 27 Sep 2014 12:37 PM PDT

அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 6 நாட்களுக்கு பின் சனிக்கிழமை மாலை கரூரை வந்தடைந்தது.

குளித்தலை பெண்கள் பள்ளி என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

Posted: 27 Sep 2014 12:37 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் தொடக்கவிழா மருதூரில் சனிக்கிழமை தொடங்கியது.

மக்கள் பிரச்னைக்காக போராட வேண்டும்

Posted: 27 Sep 2014 12:37 PM PDT

மக்கள் பிரச்னைக்காகப் போராட வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன். கரூர் மாவட்டம், குளித்தலையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைப்பின் கரூர் மாவட்ட நிர்வாகிகள்

செப்டம்பர் 28 மின் தடை

Posted: 27 Sep 2014 12:37 PM PDT

கரூர் மண்மங்கலம், வெள்ளியணை, தாந்தோணிமலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிலம் விற்பதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி

Posted: 27 Sep 2014 12:36 PM PDT

நிலத்தை விற்பதாகக் கூறி ரூ. 20 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பி.ஏ. வித்யாபவன் பள்ளி சார்பில் என்எஸ்எஸ் முகாம் தொடக்க விழா

Posted: 27 Sep 2014 12:36 PM PDT

கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்எஸ்எஸ் முகாம் வெள்ளக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை தொடங்கியது.

வாங்கல் பகுதியில் சூதாடிய 4 பேர் கைது

Posted: 27 Sep 2014 12:36 PM PDT

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின்பேரில் வாங்கல் காவல் துணை

தஞ்சை

Posted: 27 Sep 2014 12:35 PM PDT

பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 27 Sep 2014 12:34 PM PDT

சர்வதேச மன்றத்தில் (ஐ.நா.) காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் பிரதமர் எழுப்பியது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

ஐ.நா.வில் காஷ்மீர் குறித்து நவாஸ் பேச்சு: இந்தியா நிராகரிப்பு

Posted: 27 Sep 2014 12:32 PM PDT

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஐ.நா. பொதுச் சபையில் தெரிவித்த கருத்துகள் ஏற்கத்தகாத, நியாயப்படுத்த முடியாதவை எனக் கூறி இந்தியா நிராகரித்துள்ளது.

ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான அவதூறு வழக்கு: அக்.15-இல் விசாரணை

Posted: 27 Sep 2014 12:31 PM PDT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது மூத்த வழக்குரைஞர் ஃபுல்கா தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு: ஊரடங்கு அமல்

Posted: 27 Sep 2014 12:31 PM PDT

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மகளிரணி துணைத் தலைவியும், கவுன்சிலருமான யாஸ்மின் ஷிரானி சனிக்கிழமை மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

குஜராத்தில் என்சிசி பயிற்சி மையம் தொடக்கம்

Posted: 27 Sep 2014 12:27 PM PDT

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் தேசிய மாணவர் படைக்கான (என்சிசி) பயிற்சி மையத்தை முதல்வர் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஹிந்துத்துவக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்துகிறது பாஜக: சிவசேனை தாக்கு

Posted: 27 Sep 2014 12:26 PM PDT

தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான பாஜகவை மறைமுகமாகத் தாக்கும் விதமாக, "ஹிந்துத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்தியவர் பால் தாக்கரே மட்டுமே, மற்ற கட்சிகள் அதை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன' என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

உ.பி.யில் 2016-க்குள் மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படும்: அகிலேஷ்

Posted: 27 Sep 2014 12:24 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் திட்டத்தை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

வீடு புகுந்து திருட்டு

Posted: 27 Sep 2014 12:22 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

வெள்ளத்தைச் சமாளிப்பதில் சிறப்பான ஒருங்கிணைப்பு தேவை

Posted: 27 Sep 2014 12:22 PM PDT

வெள்ளத்தைச் சமாளிப்பதில் மத்திய, மாநில அரசுகள் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு தேவை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

அழகப்பா மாதிரி பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 27 Sep 2014 12:21 PM PDT

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் காரைக்குடி அருகே வைரவபுரத்தில் 7 நாள் சிறப்புமுகாம் சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூரில் நூலகத் தந்தை நினைவு தினம்

Posted: 27 Sep 2014 12:21 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா கிளை நூலகத்தில் சனிக்கிழமை நூலகத் தந்தை என்று அழைக்கப்படும் எஸ்ஆர்.ரங்கநாதனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இளையான்குடி அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவர் சாவு

Posted: 27 Sep 2014 12:21 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தான்.

ஓநாய் தாக்கி 6 பேர் காயம்

Posted: 27 Sep 2014 12:21 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் மாவட்டத்தில் வெறிபிடித்த ஓநாய் தாக்கியதில் 6 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.

செப்டம்பர் 29 மின் தடை

Posted: 27 Sep 2014 12:21 PM PDT

காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் திங்கள்கிழமை (செப். 29) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: பாஜகவை ஆதரித்து லோக் ஜனசக்தி பிரசாரம்

Posted: 27 Sep 2014 12:20 PM PDT

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

தனுஷ்கோடி பகுதிக்கு ரூ.18 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

Posted: 27 Sep 2014 12:20 PM PDT

தனுஷ்கோடி பகுதிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிககளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு 50 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலப்பனையூரில் உப்புநீரை நன்னீர் ஆக்கும் திட்டம்

Posted: 27 Sep 2014 12:20 PM PDT

கடலாடி அருகே கீழச்சிறுபோது ஊராட்சி மேலப்பனையூரில் உப்பு நீரை நன்னீர் ஆக்கும் திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தீவிரவாதத்தை இந்தியா திறம்பட சமாளிக்கும்: ராஜ்நாத் சிங்

Posted: 27 Sep 2014 12:20 PM PDT

தீவிரவாதத்தால் ஏற்படும் பிரச்னைகளை மத்திய அரசு திறம்படச் சமாளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மீனவரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் 4 பேர் கைது

Posted: 27 Sep 2014 12:20 PM PDT

 ராமேசுவரத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில், மீனவர் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. போலீஸார் கொலைக் கும்பலை தேடிவந்த நிலையில், சனிக்கிழமை 4 பேரை கைது செய்தனர்.

ராமேசுவரம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

Posted: 27 Sep 2014 12:19 PM PDT

ராமேசுவரம் துறைமுக கடற்கரைப் பகுதியில் 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சின்னமனூரில் எஸ்.பி.யை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Posted: 27 Sep 2014 12:19 PM PDT

சின்னமனூரில் அதிமுவைச் சேர்ந்தவர்கள், திமுக நகர செயலரை கைது செய்யும் படி மாவட்ட எஸ்.பி.யின் வாகனத்தை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டியில் சாலை மறியல், கடை அடைப்பு

Posted: 27 Sep 2014 12:19 PM PDT

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, உசிலம்பட்டியில் அதிமுக கட்சியினர் சாலை மறியல் மற்றும் கடை அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Sep 2014 12:18 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து போடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சிவகங்கையில் கடையடைப்பு

Posted: 27 Sep 2014 12:18 PM PDT

தமிழக முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவகங்கையில் அதிமுகவினர் கண்டன ஊர்வலம் நடத்தியும், கடைகளை அடைக்கச் சொல்லியும்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டணியில் இந்தியா பங்கேற்காது

Posted: 27 Sep 2014 12:18 PM PDT

இராக்கில் கிளர்ச்சி செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட உள்ள சர்வதேச கூட்டணியில் இந்தியா இடம்பெறாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகாசி அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

Posted: 27 Sep 2014 12:18 PM PDT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்; கடையடைப்பு

Posted: 27 Sep 2014 12:17 PM PDT

கொடைக்கானலில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

எரிவாயு சிலிண்டர்களின் எடையில் குளறுபடி:தராசுடன் வர முகவர்களுக்கு உத்தரவு

Posted: 27 Sep 2014 12:17 PM PDT

சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு வரும் முகவர்கள், அவற்றின் எடை அளவை சரி பார்க்க தராசுடன் செல்ல வேண்டும் என தொழிலாளர் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: 2 நக்ஸல்கள் சரண்

Posted: 27 Sep 2014 12:17 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ.10,000 வெகுமதி அறிக்கப்பட்டிருந்த 2 நக்ஸல்கள் சனிக்கிழமை சரணடைந்தனர்.

சேலையில் தீப்பற்றி பெண் சாவு

Posted: 27 Sep 2014 12:17 PM PDT

பழனியருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தார். பழனி அருகே மிடாப்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி சித்ரா(39). இவர்

பழனியில் கடைகள் அடைப்பு: பேருந்து நிறுத்தத்தால் பக்தர்கள் அவதி

Posted: 27 Sep 2014 12:17 PM PDT

பழனியில் தமிழக முதல்வருக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

போடியில் மார்க்ஸிஸ்ட் கம்யூ. நிர்வாகி காலமானார்

Posted: 27 Sep 2014 12:16 PM PDT

போடி மாடசாமி தெருவை சேர்ந்தவர் ராமர் (85). இவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட பொறுப்பு செயலராகவும், விவசாயிகள் சங்க மாநிலக் குழு

தேனியில் அக்.11 முதல் சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை

Posted: 27 Sep 2014 12:16 PM PDT

தேனி அல்லிநகரம் நகராட்சி வாரச் சந்தை அக்.11 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் புகாரில் கைதான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு போலீஸ் காவல்

Posted: 27 Sep 2014 12:16 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜெய்ப்பூர் முன்னாள் நகராட்சி நிர்வாக அலுவலரும், ஐஏஎஸ் அதிகாரியுமான லால்சந்த் அஸ்வால், ஒரு நாள் போலீஸ் காவலில் சனிக்கிழமை அனுப்பப்பட்டார்.

பெரியகுளத்தில் அதிமுகவினர் சாலை மறியல்

Posted: 27 Sep 2014 12:16 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, பெரியகுளத்தில் மூன்றாந்தல் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டியில் அதிமுகவினர் மறியல்

Posted: 27 Sep 2014 12:16 PM PDT

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விவரம் வெளியிடப்பட்டதையடுத்து, ஆண்டிபட்டியில் அதிமுகவினர் சாலை மறியல் மற்றும் உருவபொம்மை எரிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா பதுக்கல் விவகாரம்: ஒருவர் கொலை

Posted: 27 Sep 2014 12:15 PM PDT

கம்பம் அருகே கஞ்சா பதுக்கல் தொடர்பாக ஒருவர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மகன்

ஊடகங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

Posted: 27 Sep 2014 12:15 PM PDT

ஊடகங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைப்பு

Posted: 27 Sep 2014 12:15 PM PDT

வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் அளவும் சிவகங்கை மாவட்ட ஆற்றுப்படுகை திட்டத்துக்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவிலி.யில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: சாலை மறியல்

Posted: 27 Sep 2014 12:15 PM PDT

தமிழக முதல்வருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வத்திராயிருப்பில் அ.தி.மு.க.வினர் சாலை

காஷ்மீரில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்

Posted: 27 Sep 2014 12:14 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.

திருப்பத்தூரில் உருவபொம்மை எரிப்பு

Posted: 27 Sep 2014 12:14 PM PDT

ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை அ.தி.மு.க.வினர் கடையடைப்பு, உருவபொம்மை எரிப்பு என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் ரயில் மறியல்: அதிமுகவினர் கைது

Posted: 27 Sep 2014 12:14 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி உருவபொம்மை எரிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் இயக்கப்படவில்லை.

சாத்தூரில் அதிமுக பிரமுகர்கள் மறியல்

Posted: 27 Sep 2014 12:14 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து சாத்தூர் பகுதியில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஊர்வல

ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: அமிர்தானந்தமயி மடம் ரூ.25 கோடி நிதியுதவி

Posted: 27 Sep 2014 12:14 PM PDT

ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக அமிர்தானந்தமயி மடம் சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

Posted: 27 Sep 2014 12:13 PM PDT

ஜப்பானில் எரிமலைச் சீற்றம்: 7 பேர் மாயம்

Posted: 27 Sep 2014 12:04 PM PDT

ஜப்பானின் மத்தியப் பகுதியிலுள்ள ஆன்டேக் எரிமலையில் சனிக் கிழமை திடீரென சீற்றம் ஏற்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: ஒத்துழைப்பை மேம்படுத்த "இப்ஸா' நாடுகள் முடிவு

Posted: 27 Sep 2014 12:03 PM PDT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வரச் செய்வதில் தங்களிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு (இப்ஸா) முடிவு செய்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: உலக நாடுகளுக்கு "பிரிக்ஸ்' வேண்டுகோள்

Posted: 27 Sep 2014 12:02 PM PDT

சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய "பிரிக்ஸ்' அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்ப்பு எதிரொலி: அதிமுகவினர் சாலை மறியல்; கடைகள் அடைப்பு

Posted: 27 Sep 2014 12:02 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்ததையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பிற்பகல் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் சொந்த ஊருக்குச் செல்ல

தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு

Posted: 27 Sep 2014 12:02 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மோடியிடம் சம்மன் வழங்குபவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகை!

Posted: 27 Sep 2014 12:01 PM PDT

குஜராத் கலவர வழக்கு தொடர்பான நியூயார்க் மாகாண உயர் நீதிமன்றத்தின் சம்மனை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குபவருக்கு 10,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

50% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

Posted: 27 Sep 2014 12:01 PM PDT

50% ஊதிய உயர்வு கோரி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் செய்யாறு

கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

Posted: 27 Sep 2014 12:01 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில், புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. புத்தக வாரத்தையொட்டி, இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி முதல்வர் இரா.

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 27 Sep 2014 12:01 PM PDT

டெங்கு, சிக்குன் குனியா நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு அலுவலர்களுக்கு அலுவலகக் குறிப்பு எழுதும் பயிற்சி முகாம்

Posted: 27 Sep 2014 12:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலர்களுக்கான அலுவலகக் குறிப்பு எழுதுதல் மற்றும் கடித வரைவு எழுதுதல் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Posted: 27 Sep 2014 12:00 PM PDT

போளூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™