Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விரைவில் உயரப்போகிறது மின் கட்டணம் கிடு கிடு: உத்தேச பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு

Posted:

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில், மின் கட்டணத்தை, 15 - 17 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து, உத்தேச பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 'மின் கட்டண உயர்வால், ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எனினும், இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள், இந்த கட்டண உயர்வில் இருந்து தப்ப முடியாது என்றே கூறப்படுகிறது.வருவாய் பற்றாக்குறை ரூ.49 கோடியாக குறையும்: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, விவசாயம், வணிகம், ...

மகா.,வில் 130 இடங்கள் கேட்ட பா.ஜ.,வுக்கான ஒதுக்கீடு 126ல் முடிந்தது: கூட்டணி தொடர விரும்பியதால் சிவசேனா முடிவு

Posted:

மும்பை:மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. பா.ஜ.,வுக்கு, 126 இடங்கள் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், 'பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொடரும். தொகுதிப் பங்கீட்டில், இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்க, சுமுகத்தீர்வு விரைவில் காணப்படும்' என, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று அறிவித்தனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில், அடுத்த மாதம், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஓர் அணியாகவும், பா.ஜ., - சிவசேனா மற்றொரு அணியாகவும் சந்திக்க உள்ளன. ...

வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்

Posted:

வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.எத்தனை நாள் விடுமுறை:வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.அக்., ...

மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்

Posted:

சென்னை : 'கத்தார் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் உடலை, தமிழகம் கொண்டு வரவும், அவர்கள் சிறை பிடித்துள்ள, மூன்று மீனவர்களை விடுவிக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், பக்ரைன் நாட்டில், ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனத்தில், மீன் பிடி வேலை செய்து வந்தார்.அவர் கடந்த, 21ம் தேதி, மூன்று மீனவர்களுடன், கடலில் மீன் பிடிக்க சென்றபோது, கவனக்குறைவாக கத்தார் ...

பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? ஆளும்கட்சிக்கு எதிராக கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: அ.தி.மு.க.,வும், மாநில தேர்தல் ஆணையரும், கூட்டணி அமைத்து, போலீஸ் துறையின் துணையுடன் பெற்ற வெற்றிக்கு பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி, எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கை:உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்த இடங்களில், அமைச்சர்கள் முகாமிட்டிருந்தனர். எதிரிகள் கண்களுக்கு தெரியவில்லை என, முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டு, விமானப் பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.எங்கே தோற்று விட்டால், அமைச்சர் பதவி பறிக்கபடுமோ என்ற அச்சத்தால், அமைச்சர்கள், கணிசமாக செலவழிக்க வேண்டிய நிலைக்கு, ...

வளர்ச்சிக்கான டூர்: அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம்: 100 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள்

Posted:

நியூயார்க் : அமெரிக்காவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், நரேந்திர மோடி, அங்கு, 100 மணி நேரம் தங்கியிருக்க உள்ளார். அதில், 50க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரின் அமெரிக்க சுற்றுப் பயணம், இந்தியாவுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இருநாடுகளுக்கும் தடையாக உள்ள விவகாரங்களுக்கு சுமுக தீர்வு ஏற்படவும் உதவும்; இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என, நம்பப்படுகிறது.அமோக வெற்றி:குஜராத்தில் 2002ல், நிகழ்ந்த மத கலவரங்களை ஒடுக்கத் தவறினார் என கூறி, 2005 முதல், மோடிக்கு, 'விசா' வழங்க அமெரிக்கா மறுத்து வந்தது. ...

தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்தடை அறிவிப்பு

Posted:

காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு, மீண்டும், 20 சதவீதம் மின்தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும், அதிகமாக உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, 2008 நவம்பர் முதல், மின்தடை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில், சென்னையில் இரண்டு மணி நேரம்; மற்ற பகுதிகளுக்கு, நான்கு மணி நேரம், மின்தடை செய்யப்பட்டது.ஜூனில் நீங்கிய தடை:தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு, 40 சதவீத மின்தடை; 'பீக் அவர்' எனப்படும், மின் ...

ஆவின் பால் கலப்பட விவகாரம்: சிக்கும் இன்னொரு மாஜி அமைச்சர்

Posted:

சென்னையில் இருக்கும் குழந்தை வைத்திய நிபுணர்கள் அனைவரும், 'குழந்தைகளுக்கு ஆவின் பால் கொடுங்க. அதில்தான், கலப்படம் இல்லாமல் இருக்கிறது; குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களும் ஆவின் பாலில் உள்ளன' என்று தாய்மார்களை வலியுறுத்த வந்தனர்.பொறுப்பிலிருந்து நீக்கம்:ஆனால், அப்படிப்பட்ட பாலிலும் தண்ணீர் கலந்து விற்பனைக்கு வந்த விவரம் வெளியாகி, இப்போது, அந்த முறைகேட்டை தமிழக போலீசின் சி.பி.சி.ஐ.டி., பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த முறைகேட்டில் ஈடுபட்டது, அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இருந்த, சென்னை அசோக் நகரைச் வைத்தியநாதன் என்பதை ...

ஒத்துவராத சட்டங்களை நீக்க முடிவு: பெங்களூருவில் பிரதமர் மோடி உறுதி

Posted:

பெங்களூரு:''நாட்டில் பல சட்டங்கள் உள்ளன. அதெல்லாம், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதல்ல. அதனால், தேவையற்ற சட்டத்தை நீக்க திட்டமிட்டுள்ளோம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி, பெங்களூருவில் கூறினார்.இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட, 'மங்கள்யான்' விண்கலம், செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையை அடைவதை பார்வையிடுவதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பிரதமர் மோடி நேற்று பெங்களூரு வந்தார்.பெங்களூரு வந்த அவரை, மாநில கவர்னர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், ...

எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு: பேச்சு நடத்த சீன ராணுவம் விருப்பம்

Posted:

புதுடில்லி:எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியுள்ளதை அடுத்து, ஏராளமான இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிரச்னைக்கு தீர்வு காண, பேச்சு நடத்த வரும்படி, சீன ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் அருகே, சூமர் என்ற பகுதிக்குள், கடந்த வாரம், சீன ராணுவ வீரர்கள், 1,000 பேர் ஊடுருவினர். இவர்கள், இந்திய எல்லையிலிருந்து வெளியேறவில்லை. இதையடுத்து, 2,000க்கும் அதிகமான இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், 'பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதற்காக, இரு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™