Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...

Posted: 23 Sep 2014 01:55 PM PDT



நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...



முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன்
நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள்.

கேள்வி - பதில்...!!

Posted: 23 Sep 2014 01:47 PM PDT

* சிந்தனைக்கு விருந்தாகும் இக்கேள்வி – பதில் – களைப் படித்துப் பாருங்கள். நமக்குள் என்ன நிகழ்கிறது என்று நினைத்துப் யோசியுங்கள். * தேனை விட இனிமையானது எது? வாளை விட கூர்மையானது எது? விஷத்தை விட உடலில் வேகமாகப் பரவுவது எது? ஒரு நிமிடச் சுகம் எது? முடியாத கடன் எது? சுடுகாட்டுக்குப் போகும்போது பின்தொடர்கிற வேதனை எது? குடும்பஸ்தனின் தீராத துக்கம் எது? வாழ்க்கையில் கொடியது எது? தீராத நோய் எது? மறைக்க முடியாத அவமானம் எது? தயா பதில் சொன்னாள் வரிசையாக:- * குழந்தைகளின் தூய அன்பு தேனை விட இனியது. ...

ஐக்.யூ கேள்விகள்

Posted: 23 Sep 2014 12:07 PM PDT

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்? உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை ...

2000 மதிப்பீடுகள் கடந்த T.N.Balasubramanian ...

Posted: 23 Sep 2014 11:56 AM PDT

மதிப்பு வாய்ந்த பதிவுகளால் 2000 மதிப்பீடுகள் பெற்ற நம்ம ஈகரை நிர்வாகக் குழுவினர் T.N.பாலசுப்ரமணியன் ஐயாவை அன்போடு வாழ்த்தலாம் வாங்க ... மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா

புதியவர் அறிமுகம் - ரமேஷ்

Posted: 23 Sep 2014 11:52 AM PDT

பெயர்:ரமேஷ் (இளநிலை அறிவியல்)
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர் வழியாக
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது, இணையம் பார்ப்பது
தொழில்: ஆடை மற்றும் நூல் வண்ணம் இடுவது
மனைவி : மான்விழி ( இளநிலை அறிவியல், ஆசிரியர் பயிற்சி படிப்பு இளநிலை )
குழந்தை : இரண்டு பெண்கள் 5 மற்றும் 2 வயது

வணக்கம், ஈகரைக்கு நான் புதியவன்..!!!

Posted: 23 Sep 2014 11:46 AM PDT

பெயர்: அசத்தல் அகிலன்
சொந்த ஊர்: ஆயக்காரன்புலம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கே.பாலா
பொழுதுபோக்கு: மியூசிக் , பட்டிமன்றம் , மேஜிக் ஷோ
தொழில்: முதல்வர் , V .I .A  ஷிப் கேட்டரிங் காலேஜ், திருத்துறைபூண்டி .

உலக மெகா பெண் இயக்குநர்கள்!

Posted: 23 Sep 2014 11:43 AM PDT

உலக மெகா பெண் இயக்குநர்கள்! சினிமா ஆர்.சரண் உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே! சமீரா மக்மல்பஃப் 'உலக சினிமா' என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்'ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்' என்ற ...

வரலாற்றில் இன்று - செப்டம்பர்

Posted: 23 Sep 2014 11:38 AM PDT

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 1 1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன். 1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது. 1798 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர். 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர். 1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் ...

அறிமுகம்... நாகினி !

Posted: 23 Sep 2014 11:32 AM PDT

பெயர்:நாகினி சொந்த ஊர்: திருநெல்வேலி.. இருப்பினும் சிறுவயதுமுதல் வளர்ந்தது மதுரை ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: முகநூல் மூலம் பொழுதுபோக்கு: எழுதுவது தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: முதுகலை ஆய்வியல் அறிஞர் பட்டத்துடன் இளநிலை கல்வியியல் பட்டம். ஹிந்தி, தெலுங்கு தெரியும்.மகன் மற்றும்  கணவருடன் தற்போது துபாய்(UAE ..ல் வசிக்கிறேன். முகநூல் ஆரம்பித்த இந்த மூன்றாண்டு காலமாகத்தான் எழுத்து இணையத்திலும் எழுதுகிறேன். எனது படைப்புகள் முத்துக்கமலம், வலைத்தமிழ், வல்லமை, நிலாச்சாரல் போன்ற ...

சிக்கல் சிக்னல்..?

Posted: 23 Sep 2014 10:23 AM PDT

சிக்கல் சிக்னல்..?

ஆழ்கடல் வேதனையை
எதிர்த்து நம்பிக்கை
நீச்சல் பயணத்தில் நீந்தி
விண்ணிற்கும் மண்ணிற்கும்
அறிவுப் பாலம் கட்டி கரைசேர்ந்த
அறிவியல் வெற்றி தொடர்
அறிவு வாழ்க்கை பயணம்....
அவநம்பிக்கை மூடநம்பிக்கை எனும்
இரு துருவ சிக்கல் சிக்னலில்
சிக்கி தடம்(தடும்) மாறுதல்
பகுத்தறிவு பிறவியின்
ஆரோக்கிய மேன்மையோ..!

--- நாகினி

தமிழ் நாடு வாழ்த்து.

Posted: 23 Sep 2014 10:11 AM PDT

தமிழ் நாடு வாழ்த்து. தருவேயருளே திருவே வாழ்க! தமிழே!எமையாள் தாயே வாழ்க! பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில் வல்லவ சேது ஈழம் சோழம் எல்லாம் உனதே இலக்கிய முதலே வெல்லுந் தமிழே வாழ்க! காவேரி பொன்னி பாலாறு பெண்ணை தாமிரபரணி வைகை நதிகள் பூமூன்று விளைய பொங்கிடக்கருணை நீ தந்தருளும் வளமே வாழ்க! வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள் பங்கமாகா கீழ்தென் அரண்கள். மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள் தங்காத்தேடும் எம்போல் வாழ்க! மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம் ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம். பார்ககும் ...

காதலிக்கையில் சொர்க்கமாயிருக்கிறது...! - (வலைப்பேச்சு)

Posted: 23 Sep 2014 10:01 AM PDT

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு'

Posted: 23 Sep 2014 09:26 AM PDT

- ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை பயங்கரமா நடுங்குதே...ஏன்? - அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது எவனோ ஒருத்தன், 'கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான்சாவு' ன்னு சத்தம் போட்டு சொன்னானாம்..! - >கே.லட்சுமணன் - -------------------------------------- - குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு தலைவர் என்ன சொன்னார்? - நிறைய தப்பு இருக்கலாம், நல்ல புரூப் ரீடர் வேணும்ங்கிறார்..! - >அம்பை தேவா - --------------------------------------- - சரக்கு சரியில்லைன்னு எல்லாம் பார் கவுன்சில்ல ...

வி. வைரமுத்து மேற்கோள்கள்

Posted: 23 Sep 2014 09:26 AM PDT

1.புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை; புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல் 2.காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது 3.இலட்சியமில்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது 4.நமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை 5.பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள் 6.நம்முடைய அகராதியில் அரசாங்க ஊழியன் என்பவன் ...

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மக்கள் பாதிக்காதவாறு மானியம் வழங்கப்படும்: ஜெ. உறுதி!

Posted: 23 Sep 2014 09:17 AM PDT

Posted Date : 17:46 (23/09/2014)Last updated : 17:53 (23/09/2014) சென்னை: மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தினாலும், மக்கள் பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, ...

பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களிலும் பெறலாம்.

Posted: 23 Sep 2014 09:13 AM PDT

சிவகங்கை: பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களிலும் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து சிவகங்கை மாவட்டம்,இது குறித்து இஞ்சல் கண்காணிப்பாளர் இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மின்கட்டண வசூல், சோலார் லைட், மினி பிரிட்ஜ் விற்பனை, மீடியா போஸ்ட் மூலம் விளம்பரம் செய்தல், ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங், உடனடி மணியார்டர், மொபைல் போன் மூலம் பண பறிமாற்றம் மற்றும் இ-போஸ்ட் ...

இறைவன்..

Posted: 23 Sep 2014 08:34 AM PDT

இறைவன்... அன்பு எனும் மனம் கொண்ட கண்களே இறைவன்! ஆக்கம் எனும் மனவலி(மை) கொண்ட  கண்களே இறைவன்! இரக்கம் எனும் இதயம் கொண்ட கண்களே இறைவன்! ஈரம் எனும் உள்ஈர்ப்பு கொண்ட கண்களே இறைவன்! உண்மை எனும் ஊக்கபண்பு கொண்ட  கண்களே இறைவன்! எளிமை எனும் ஏற்றம் கொண்ட கண்களே இறைவன்! ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு கொண்ட  கண்களே இறைவன்! ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை கொண்ட  கண்களே இறைவன்!!                                 --- நாகினி

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - கார அப்பம்

Posted: 23 Sep 2014 08:21 AM PDT

இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு நான் செய்ய மாட்டேன்   என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் ...

அனுக்கிராக - நா .பார்த்தசாரதி நாவல் .

Posted: 23 Sep 2014 08:13 AM PDT

நா .பார்த்தசாரதி -அனுக்கிராக நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/4rw2o3ireh2emao/ANUGRAHA-N-P.pdf

சேற்றில் மலர்ந்த செந்தாமரை - 10 கதைகள் அடங்கிய நாவல் .

Posted: 23 Sep 2014 08:12 AM PDT

ரகுநாதன் -சேற்றில் மலர்ந்த செந்தாமரை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dk61f6et82j7zm4/SerilMalarntha-Senthamarai-Ragunathan.pdf

ப்ளேயர் உதவி

Posted: 23 Sep 2014 07:32 AM PDT

படம் பார்க்கும் போது எம் மொழியில் பேசுகிறார்களோ அந்த மொழி ப்ளேயரில் கீழே வரக் கூடிய ப்ளேயர் கொடுங்கள்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Posted: 23 Sep 2014 07:16 AM PDT

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

தெரிந்து கொள்வோம்...

Posted: 23 Sep 2014 07:10 AM PDT

தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ...

26000 பதிவுகள் கடந்த, எல்லோருக்கும் இனியவரான 'இனியவனை' வாழ்த்தலாம் வாருங்கள் :)

Posted: 23 Sep 2014 06:57 AM PDT

வாவ் ! மனமார்ந்த வாழ்த்துகள் இனியவன்..............இதுபோல பல்லாயிரம் பதிய வாழ்த்துகள் !

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Posted: 23 Sep 2014 06:55 AM PDT

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50 !

Posted: 23 Sep 2014 06:13 AM PDT

பயணிகளின் செல்லப்பிள்ளை பிருந்தாவனுக்கு வயது 50: அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 'பயர்மேன்'கள்! வயிறு முட்ட கரியை நிரப்பி, புகையை கக்கியபடி, தனக்கே உரிய சிறப்பு சப்தத்துடன், நீராவி இன்ஜின் மூலம், 1964 அக்டோபரில், தன் முதல் ஓட்டத்தை துவங்கியது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்.சென்னை பெங்களூரு இடையிலான, 360 கி.மீ., தூரத்தை, ஐந்து மணி நேரத்திற்குள் கடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தான், தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல், 'இன்டர்சிட்டி ரயில்!' நீராவி இன்ஜினில் இயங்கியபோதே, ...

குமரி மாவட்டத் தமிழ்...

Posted: 23 Sep 2014 06:12 AM PDT

குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது. 1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ் 2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் ...

செவ்வாய் கிரகத்தில் வெள்ள நீர்

Posted: 23 Sep 2014 06:10 AM PDT

[b]செவ்வாய் கிரகத்தில் வெள்ள நீர் [/b]
என்ற தலைப்பில்
வந்துள்ள வீடியோ.



ரமணியன்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுவாபுரிக்கு வாருங்கள்.

Posted: 23 Sep 2014 05:25 AM PDT

சிறுவாபுரிக்கு வாருங்கள். சிறுவாபுரிக்கு வாருங்கள். செவ்வேலழகனைக் காணுங்கள். மரகத மயிலினைப் பாருங்கள்.-வினை அருகிட அவனருள் சேருங்கள். மரகத அழகின் திருமேனி அரனவன் மகனின் உருமேனி எழில் சூழ் தண்பதி சிறுவையே பொழில் வாழ் புவியின் திருப்பதியே! சிறுவர் இருவர் லவ குசலன் அறியார் அவர் தந்தை இராமருடன் போரிட்ட இடமே சிறுவாபுரி-அந்த திருத்தலம்தானே சிறுவம்பேடு. அருணகிரியார் அருள் பெருகி உருகிப்பாடிய திருப்புகழில் சிறுவையம் பதிப் பெருமானை சிறப்பித்துத் தேடித் துதி செய்தார். முருகன் ...

கௌதம புத்தர்

Posted: 23 Sep 2014 05:25 AM PDT

1. ஆசையே துன்பத்தின் அடிப்படை. 2. இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பரம்பொருள் என்ற ஒன்றில்லை. 3. ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை. இவை இரண்டும் இணைந்து செல்கின்றன. நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது. 4. நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும். 5. பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும். தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும். 6. எங்கு ஒற்றுமை இருக்கிறதோ அங்கு வேற்றுமையுண்டு. ...

நொந்துகொள்..

Posted: 23 Sep 2014 05:19 AM PDT



நொந்துகொள்..

கடவுளாகிய அன்பு
மெய் குத்துப் பட்டு
இதயம் கிழிந்து
வன்ம இரத்தம்
அருவியாய்க் கொட்டுவதைச்....
சட்டச்
சிக்கல் வந்திடுமோ எனும்
அச்சத்தால்
வெள்ளை மனம் கொண்டோர்
வேடிக்கைப் பார்ப்பதைத்
தலைவிதி என்றே
நொந்துகொள் உலகே!!!

--- நாகினி

நம்மின் வேலை

Posted: 23 Sep 2014 04:47 AM PDT

நம்மின் வேலை பாவலர் கருமலைத்தமிழாழன்                           தன்தலையில்   கொம்பிருக்கும்   சிந்தை   யின்றித்                                     தலைகுனிந்தே   அடிமையாகும்   மாட்டைப்  போல                         தன்னுள்ளே     உரமிருந்தும்    தமிழ   னின்று                                     தானடிமை   எனும்நினைப்பில்    வாழு   கின்றான்                         தன்கால்கள்   நன்கிருந்தும்   மரக்கால்   கொண்டு                                     தன்னுடலைச்   சுமப்பதற்கே   பழகு   கின்றான்                         ...

டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி

Posted: 23 Sep 2014 04:32 AM PDT

டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து ...

அறிமுகம்

Posted: 23 Sep 2014 04:32 AM PDT

பெயர்: குமரன் ந.பா தோலாண்டி
சொந்த ஊர்: விருதுநகர், வசிப்பு: திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைதேடுதலில்
பொழுதுபோக்கு: பிளாக்
தொழில்: வணிகம்
மேலும் என்னைப் பற்றி: தமிழன்

தொடத் தொடத் தொல்காப்பியம் (316)

Posted: 23 Sep 2014 03:08 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஈழத்துப்பரணி!

Posted: 23 Sep 2014 01:43 AM PDT

ஈழத்துப்பரணி! ஈழம் கொண்டோம் ஈழம் கொண்டோம் என்றே பாடுவோம்! வாழ ஆளக் கண்டோமென வாகை சூடுவோம்! சத்தியங்கள் மீறியென்றும் எத்தவறும் செய்யமாட்டோம்! கத்தி எம்மை நோக்கும் போதும் பத்தியமும் காக்க மாட்டோம்! புத்தனாக வேடம் போடும் பொய்யன் நீ கேளடா! இத்தரையில் எமக்குந்தான் இருக்கும் உரிமைதானடா! அணிவகுத்து முழங்கிவரும் அலைகளென்ன ஆடுதோ! பணிமுடித்து ஈழங்கொண்டு பாசறைக்குத் திரும்புதோ! விடுதலை விடுதலையென வெற்றிக்களி கொள்ளுதோ!. படுபாதகன் இராசபச்சேயை பிடித்திழுத்து வருகுதோ! ஈழத்துப்பரணி ...

"அ"வில் தொடங்கும் அழகு தமிழ் பழமொழி

Posted: 23 Sep 2014 01:28 AM PDT

• அகத்தின் அழகு முகத்தில் தெரியும் • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. • அகல இருந்தால் பகையும் உறவாம். • அகல உழுகிறதை விட ஆழ உழு. • அகல் வட்டம் பகல் மழை. • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம். • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் ...

ஆத்திசூடி

Posted: 23 Sep 2014 01:23 AM PDT

ஆத்திசூடி நூல் • ஆசிரியர்: ஔவையார் • பாடல்கள்: 109 • இலக்கணம்: காப்புச் செய்யுள் -1 கடவுள் வாழ்த்து[தொகு] ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே. உயிர் வருக்கம்[தொகு] 1.அறம் செய விரும்பு • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள். 2. ஆறுவது சினம் • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். 3. இயல்வது கரவேல் • உன்னால் கொடுக்கக்கூடிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™