Tamil News | Online Tamil News |
- உள்ளாட்சி தேர்தலில் அதிக ஓட்டுகளை அள்ளியதால் பா.ஜ., உற்சாகம்: எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி
- வருமான வரி வழக்கில் ஆஜராக தடை கிடைக்குமா?எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெ., மனு
- இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீனா குறித்து மக்கள் கவலை: எல்லை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துமா மத்திய அரசு?
- 135 வேண்டாம்; 130 தொகுதிகள் கொடுங்கள் போதும்: சிவசேனா கூட்டணியில் இறங்கி வந்தது பா.ஜ.,
- 300 நாள் பயணம் 5 கோடி கி.மீ., தூரம்: செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யான்
- கருணாநிதி - அர்னால்டு சந்திப்புக்கு தடை: பிரபல இயக்குனர் மீது தி.மு.க., அதிருப்தி
- கங்கையை தூய்மையாக்க 18 ஆண்டு ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை
- ஆவின் பாலை திருடி ஆண்டுக்கு ரூ.72 கோடி சுருட்டிய 'வைத்தி' கும்பல்
- அமைச்சரின் நாயை தேடிய போலீசாருக்கு கடும் கண்டனம்
- தெலுங்கானாவில் 61 லட்சம் பேர் வெளி மாநிலத்தவர்
- நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா? : கொதிக்கிறார் தருண் கோகோய்
| Posted: இரண்டு மேயர் தேர்தலில் டிபாசிட் பெற்றது, பல வார்டுகளில் வெற்றி பெற்றது என, தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகளை கைப்பற்றியதால், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், எதிர்பார்த்தபடி இந்தத்தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில், காலியாக இருந்த, 2,130 ஊரக மற்றும் உள்ளாட்சி பதவிகளுக்கு, கடந்த 28ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத்தேர்தலை, தி.மு.க., - -தே.மு.தி.க., - -பா.ம.க., - -ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அதிர்ச்சி:'அரசியல் களத்தில், எங்களுக்கு ... |
| வருமான வரி வழக்கில் ஆஜராக தடை கிடைக்குமா?எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெ., மனு Posted: சென்னை: 'வருமான வரி வழக்கில், ஆஜராக வேண்டும்' என, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதா, மனுத் தாக்கல் செய்துள்ளார்.ஜெயலலிதா, சசிகலா பங்குதாரராக இருந்த, சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, எழும்பூர், பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அக்., 1ம் தேதி, ஜெயலலிதா, ... |
| Posted: ஆந்திர மாநில அரசால் விற்கப்பட உள்ள செம்மரக் கட்டைகளை வாங்குவதற்கு, சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நோக்கத்துக்காக, குஜராத் மாநிலத்தைசேர்ந்த இளைஞர்களும், சீனமொழியை கற்க துவங்கியுள்ளனர். வர்த்தக விஷயங்களில், சீனர்களுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை தடுக்கவும், அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லையே என்ற கவலை எழுந்துள்ளது.ஆந்திர மாநிலத்தின், ஒரு சில மாவட்டங்களில் பரவலாக காணப்படும் செம்மரக் கட்டைகளுக்கு, சர்வதேச நாடுகளில் கடும் கிராக்கி ... |
| 135 வேண்டாம்; 130 தொகுதிகள் கொடுங்கள் போதும்: சிவசேனா கூட்டணியில் இறங்கி வந்தது பா.ஜ., Posted: புதுடில்லி:மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரத்தில், உத்தவ் தாக்கரே பிடிவாதமாக உள்ளார். அதே நேரத்தில், பா.ஜ., சற்று இறங்கி வந்துள்ளது. முதலில் கேட்ட, 135 தொகுதிகளுக்கு பதிலாக, 130 தொகுதிகளை தந்தால் போதும் என, கூறி உள்ளது.இதேபோல், காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணியிலும் இழுபறி நீடிக்கிறது. எனவே, கடைசி கட்ட முயற்சியாக, இன்று, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.அக்டோபர் 15ல் தேர்தல்: மகாராஷ்டிராவில், அடுத்த மாதம் 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை, காங்கிரஸ் மற்றும் சரத் ... |
| 300 நாள் பயணம் 5 கோடி கி.மீ., தூரம்: செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யான் Posted: செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா முதன்முதலாக ஏவிய மங்கள்யான் செயற்கைக்கோள், 300 நாட்களாக 5 கோடி கி.மீ., தூரம் பயணம் செய்து, நாளை (செப்.24) செவ்வாயின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைகிறது. பூமியிலிருந்து செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என உண்டு. சூரியனை இரண்டு கிரகங்களும் வெவ்வேறு பாதையில் சுற்றுவதால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது. செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம் 5 கோடி கி.மீ., அதிகபட்ச தூரம் 40 கோடி கி.மீ., குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் வருவதை கணித்து, செயற்கைக்கோள் ஏவப்பட்டது. தற்போது தவறவிட்டால் 2016ம் ஆண்டுதான் மீண்டும் இந்த ... |
| கருணாநிதி - அர்னால்டு சந்திப்புக்கு தடை: பிரபல இயக்குனர் மீது தி.மு.க., அதிருப்தி Posted: திரைப்பட பாடல் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, முதல்வர் ஜெயலலிதாவை, சந்தித்து பேசினார். அப்போது, சினிமாத் துறையில், மூத்த கதை, வசன கர்த்தாவாக விளங்கி வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியையும் சந்திக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவர், இருவரையும் சந்திக்க விடாமல் தடுத்த தகவல், இப்போது வெளியாகி இருக்கிறது.இதனால், அந்த இயக்குனர் மீது தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள, ... |
| கங்கையை தூய்மையாக்க 18 ஆண்டு ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை Posted: புதுடில்லி:கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைய, 18 ஆண்டுகள் ஆகும்' என, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை, பல கட்டங்களாக மேற்கொள்ள வேண்டியுள்ளது; இது ஒரு நீண்ட கால நடவடிக்கை. முதல் கட்டமாக, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள, 118 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தூய்மைப்படுத்தும் பணி, இங்கு முதலில் முடிக்கப்படும். ஒட்டு மொத்தமாக, இந்த பணியை முடிக்க, 18 ஆண்டுகள் ஆகும். மேலும், ஏராளமான முதலீடும் ... |
| ஆவின் பாலை திருடி ஆண்டுக்கு ரூ.72 கோடி சுருட்டிய 'வைத்தி' கும்பல் Posted: ஆவின் பால் திருட்டின் மூலம் வைத்தியநாதன் கும்பல், ஆண்டுக்கு, 72 கோடி ரூபாய் சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 50 சதவீதத் தொகை, அரசியல் வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சமாக கைமாறியதும் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், ஆவின் நிறுவனம் மூலம், சென்னையில், 11.5 லட்சம் லிட்டர் உட்பட, தமிழகம் முழுவதும், 23.5 லட்சம் லிட்டர் பால் தினமும் விற்பனை நடக்கிறது.சென்னைக்கு தேவையான பால், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஒப்பந்த லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு தினமும், 104 லாரிகளில் பால் கொண்டு வரப்படுகிறது. இந்த லாரிகள், வரும் ... |
| அமைச்சரின் நாயை தேடிய போலீசாருக்கு கடும் கண்டனம் Posted: ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், முக்கியமான வழக்குகளை விசாரிக்காமல், அமைச்சரின் செல்ல நாய்க் குட்டியை போலீசார் தேடினர்.ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராஜேந்திர ரத்தோர், சுகாதார அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர், ஜெய்ப்பூர் அருகேஉள்ள சோடாலா பகுதியில் வசிக்கிறார். இவர், பிறந்து 5 மாதமே ஆன, நாய்க் குட்டியை வளர்த்து வருகிறார்.இந்த நாய்க் குட்டி, சமீபத்தில் காணாமல் போய் விட்டது. இதனால், துடித்துப் போன ராஜேந்திர ரத்தோர், அந்த பகுதி முழுவதும் தேடினார். ஆனால், நாய்க் குட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, நாய்க் குட்டியை ... |
| தெலுங்கானாவில் 61 லட்சம் பேர் வெளி மாநிலத்தவர் Posted: ஐதராபாத் :தெலுங்கானா மாநிலத்தில், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த, 61 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், தங்கள் மாநிலத்தில் அதிகமாக வசிப்பதாகவும், அவர்கள், தெலுங்கானா மக்களுக்கு கிடைக்க வேண்டிய இயற்கை வளங்களை சுரண்டுவதாகவும், முதல்வரும், டி.ஆர்.எஸ்., கட்சி தலைவருமான, சந்திரசேகர ராவ் கூறி வந்தார்.இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் முழுவதும், சமீபத்தில் ஒரே நாளில், மெகா சர்வேயும் நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதி ... |
| நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா? : கொதிக்கிறார் தருண் கோகோய் Posted: புதுடில்லி: 'சீன அதிபர் ஜி ஜின்பிங்கின், சமீபத்திய ஆமதாபாத் விஜயத்தின் போது, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரை பணிக்கு வரவேண்டாம்' என, ஓட்டல் நிர்வாகம் ஒன்று கட்டளையிட்டதாக செய்தி அறிந்த, அசாம் காங்., முதல்வர் தருண் கோகோய், 'நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?' எனக் கேட்டு கொதிப்படைந்தார். இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த வாரம், குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அன்றைய தினம், ஆமதாபாத் நகர வணிக வளாகங்களில் வேலை பார்த்த, வடகிழக்கு மாநிலங்களைச் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |