Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


100 அமைச்சர்களை சந்திக்கிறார் சுஷ்மா

Posted:

புதுடில்லி:பத்து நாள் அரசு முறைப் பயண மாக, வரும், 24ம் தேதி அமெரிக்க செல்ல உள்ள, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு, 100 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார்.அரசு முறை பயணம்:ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும், 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைகிறார்.மறுநாள், 27ம் தேதி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசுகிறார். இது, பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் இடையே நடைபெறும், முதல் இருதரப்பு பேச்சுவார்த்தையாக இருக்கும்.பிரதமருக்கு முன்னதாக, 10 நாள் அரசு முறைப் பயணமாக, வரும், ...

லடாக் பகுதியில் சீன வீரர்கள் மேலும் ஊடுருவல்: சீன அதிபர் வாக்குறுதியையும் மீறி தொடர்ந்து அடம்

Posted:

புதுடில்லி:இந்திய எல்லைக்குள் ஊடுருவிய, சீன ராணுவ வீரர்கள், தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். சீன அதிபர், ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதியையும் மீறி, அவர்கள் வெளியேற மறுப்பதை அடுத்து, நம் ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.சீன ராணுவ வீரர்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள், அடிக்கடி அத்துமீறி நுழைவது வழக்கமாக உள்ளது. இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சு நடத்திய பின், சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லையிலிருந்து வெளியேறுவர்.

1,000 பேர்:கடந்த வாரம், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக் ...

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு தேவை:உலக நாடுகளிடம் ஒபாமா கோரிக்கை

Posted:

வாஷிங்டன்:''உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா., மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்களிடம் இது குறித்து கோரிக்கை வைப்பேன்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறியதாவது:ஈராக் மற்றும் சிரியாவில் தலை விரித்தாடும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் அல்லர்; உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடியவர்கள். அவர்களை வேரறுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.அவர்களுக்கு எதிராக, ஈராக், சிரியாவில், அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் ...

'மாண்டலின்' சீனிவாஸ் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி

Posted:

சென்னை:சென்னையில், நேற்று முன்தினம் மரணமடைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர், 'மாண்டலின்' சீனிவாசின் உடல், நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.சென்னை, வடபழனியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த, 'மாண்டலின்' சீனிவாஸ், 45, கல்லீரல் பாதிப்பால், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.அவரது உடல், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை, 9:45 மணிக்கு, ...

பழைய பயிர் காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted:

சென்னை:'தமிழகத்தில், புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக, பழைய பயிர் காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இயற்கை சீற்றங்களால், பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை போக்க, தமிழகத்தில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.திடீர் ரத்து:இத்திட்டத்தில், காப்பீட்டு கட்டணம், பயிர் மற்றும் பருவத்திற்கேற்ப, 2 சதவீதம் முதல், 3.5 சதவீதம் வரை இருந்தது. இதில் 50 சதவீதத்தை தமிழக அரசு செலுத்தியது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தினர். ...

வழக்கில் விடுதலை வேண்டி கோவில்களில் பிரார்த்தனை

Posted:

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில், அ.தி.மு.க.,வினர், கோவில், தேவாலயம், மசூதி ஆகிய வழிபாட்டு தலங்களில், சிறப்பு பிரார்த்தனை நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடுவர்.இந்து சமய அறநிலையத் துறையினரும், முக்கிய நிகழ்வுகளின்போது, முதல்வருக்காக, கோவில்களில் பிரார்த்தித்து, அவருக்கு பிரசாதம் வழங்குவதும் வழக்கம்.இந்நிலையில், கடந்த 1991--96ம் ஆண்டு, அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, வழக்கின் தீர்ப்பு வரும் 27ம் ...

பாக்., முன்னாள் பிரதமர் பெனசிர் மகன் பிலாவலுக்கும் வேணுமாம் காஷ்மீர்: பாகிஸ்தானுடன் இணைப்பதே லட்சியம் என பேச்சு

Posted:

இஸ்லாமாபாத்:''இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் அனைத்து பகுதிகளையும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும். நாட்டின் மற்ற பகுதிகளைப் போல், காஷ்மீரும், பாகிஸ்தானுக்கு சொந்தமானதே. அதை மீட்டு, பாகிஸ்தானுடன் இணைப்பதே என் லட்சியம்,'' என, பாக், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் கூறியுள்ளார். இதுவரை, பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மட்டுமே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் திமிராக பேசி வந்த நிலையில், இளம் தலைமுறையும் இவ்வாறு பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில், முகமது அலி ஜின்னா முதல், பர்வேஷ் முஷாரப் வரை, பாக்., அரசியலில் முக்கிய ...

இந்திய பகுதிக்குள் ஊடுருவ காத்திருக்கும் 200 பயங்கரவாதிகள்: எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு

Posted:

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பகுதியில் இருந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக, இந்திய பகுதிக்குள் ஊடுருவ, 200 பயங்கரவாதிகள், பயங்கர ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர்,'' என, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அதிகாரி சுப்ரதா சகா தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, 280க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் ஸ்ரீநகரின் பல பகுதிகளில், இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. அதனால், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு ...

தி.மு.க.,வில் இணையதள பிரசாரத்தில் மாற்றமில்லை: முப்பெரும் விழா அறிவிப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

Posted:

தி.மு.க.,வில் எழுந்த சர்ச்சைக்கு, முப்பெரும் விழாவில், பொருளாளர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். '2016 சட்டசபை தேர்தலை, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சி சந்திக்கும்' என்று, ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, கட்சியில் அமைதியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எந்த மாற்றமும்: அதேநேரத்தில், ஸ்டாலின் தலைமைக்கு ஆதரவாக, இணையதளத்தில் நடத்தப்பட்டு வரும் பிரசாரத்தில், இதவரை எந்த மாற்றமும் செய்யப்படாதது, கட்சி வட்டாரத்தில், மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற வலைத்தளங்களில், ஸ்டாலினுக்கு ஆதரவாக ...

உள்ளாட்சி இடைத்தேர்தல் அடாவடிகள்: ஆதாரங்களை அனுப்ப அமித் ஷா உத்தரவு

Posted:

தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடந்த அத்துமீறல்கள், முறைகேடுகள் அனைத்தையும் திரட்டி, ஆதாரங்களுடன் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைமைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து, தமிழக உள்ளாட்சி தேர்தலில், தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியினர், பா.ஜ.,வுக்கு எதிராக களத்தில் நிறைவேற்றிய அத்தனை விவரங்களையும் வேகமாக திரட்டி வருகின்றனர், தமிழக பா.ஜ.,வினர்.எதிர்க்கட்சிகள்: எந்தந்த நிகழ்வுகளுக்கு ஆதாரம் இருக்கிறதோ, அதையெல்லாம் உடனடியாக, தமிழக பா.ஜ., தலைமையிடம் சமர்ப்பிக்குமாறும், கட்சி ...

மத்திய மின் நிலையங்களில் தமிழக ஒதுக்கீடு குறைப்பு: நிரந்தர தீர்வுக்கு முயற்சிக்காத மின் வாரிய அதிகாரிகள்

Posted:

மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை, மின் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசுக்கு, தமிழகத்தில் - என்.எல்.சி., கல்பாக்கம், வல்லுார்; ஆந்திராவில் - ராமகுண்டம், சிம்ஹாத்ரி; ஒடிசாவில் - தால்சர்; கர்நாடகாவில் - கைகா ஆகிய இடங்களில், அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன.தமிழகத்திற்கு, என்.எல்.சி., 1,120; வல்லுார், 715; கல்பாக்கம், 330; ராமகுண்டம், 640; சிம்ஹாத்ரி, 270; கைகா, 230; தால்சர், 500 என, மொத்தம், 3,805 மெகா வாட், ...

மகாராஷ்டிரா தேர்தல்: இரு கூட்டணியிலும் இழுபறி :வேட்புமனு தாக்கல் துவங்கியது

Posted:

மும்பை:மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்குள், தொகுதிப் பங்கீடு பேச்சு இன்னும் முடிவடையாத நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இது தொடர்பான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.மகாராஷ்டிராவில், தற்போதுள்ள சட்டசபையின் பதவிக் காலம், நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம், 15ம் தேதி நடக்கிறது.அத்துடன், மத்திய அமைச்சராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மறைவால் காலியான பீட் லோக்சபா தொகுதிக்கும், அன்று ...

அசாம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ அல்-கொய்தா திட்டம்: தருண் கோகெய் திடுக் தகவல்

Posted:

கவுகாத்தி: அல்கொய்தா அமைப்பினர் அசாம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.அசாமில் முதல்வர் தருண்கோகெய் தலைமையில், காங். ஆட்சிநடக்கிறது. இம்மாநிலத்தில் அல்பா என்ற தடை செய்யப்பட்டபிரிவினைவாத அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்ஜவாகிரி, இந்தியதுணை கண்டத்தில் தங்கள் அமைப்பின் கிளையை துவங்க உள்ளதாக வீடியோ வாயிலாக மிரட்டல் விடுத்தார்.அசாம் வழியாக ஊடுரு திட்டம்இந்நிலையில் நேற்று நடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™