Tamil News | Online Tamil News |
- சகாயம் விசாரணையை விரைவில் துவக்க எதிர்பார்ப்பு: முழு ஒத்துழைப்புக்கு விவசாயிகள் தயார்
- இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்திய சீனிவாஸ் மறைவு
- பாக்., அதிகாரிகளுடன் புனே நகரில் ரகசிய சந்திப்பு: பாக்., உளவாளி அருண் தகவல்
- 'நோட்டா'வுக்கு 'டாடா' ஆளுங்கட்சிக்கு 'பூஸ்டா?'
- உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் 24 மணி நேரம் கடந்தும் கமிஷன் மவுனம்
- தமிழகத்திற்கு 2,430 மெகாவாட் மின்சாரம் சாத்தியமா? முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மின் வாரியம்
- விஸ்வரூபமெடுக்கிறது பங்களா விவகாரம்: மத்திய அரசு மீது அஜித் சிங் பாய்ச்சல்
- இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
- எல்லை பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு : இந்தியா - சீனா கூட்டறிக்கையில் தகவல்
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
| சகாயம் விசாரணையை விரைவில் துவக்க எதிர்பார்ப்பு: முழு ஒத்துழைப்புக்கு விவசாயிகள் தயார் Posted: மதுரை: தமிழகத்தில், கிரானைட் உள்ளிட்ட கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி காட்டியதால், அவர், விசாரணையை உடன் துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'இந்த விசாரணைக்கு, அரசு, முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவருக்கு பக்கபலமாக விவசாயிகள் இருப்பர்' என, மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் முன், விவசாயிகள் ஒருமித்த குரல் எழுப்பினர்.மதுரையில் நடந்த கிரானைட் முறைகேட்டால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, அப்போதைய மதுரை கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். ... |
| இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்திய சீனிவாஸ் மறைவு Posted: சென்னை:பிரபல கர்நாடக இசைக்கலைஞர், மாண்டலின் சீனிவாஸ், உடல்நலக் குறைவால் காலமானார்.; அவருக்கு வயது, 45. அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, தமிழக கவர்னர் மற்றும் முதல்வர் ஜெ., ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சென்னை, வடபழனியில் உள்ள வீட்டிலிருந்த மாண்டலின் சீனிவாசுக்கு, சில தினங்களுக்கு முன், கல்லீரல் பாதிப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 9:30 மணிக்கு இறந்தார்.இவரது உடல், வடபழனியில் உள்ள அவரது ... |
| பாக்., அதிகாரிகளுடன் புனே நகரில் ரகசிய சந்திப்பு: பாக்., உளவாளி அருண் தகவல் Posted: தமிழகத்தில் சேகரித்த உளவு தகவல்களை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், பாக்., அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்தேன்,'' என, உளவாளி அருண் செல்வராஜ், தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்து உள்ளான்.கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜிடம், தேசிய புலனாய்வு அமைப்பினர், இரண்டாவது நாளாக நேற்று விசாரித்தனர்.அப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு எப்படியெல்லாம் உளவு தகவல்களை சேகரித்தது என்பதை, பாகிஸ்தானுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் கேட்டறிந்ததுடன், தான் உட்பட 10 பேர் கொண்ட குழுவினருக்கு, ... |
| 'நோட்டா'வுக்கு 'டாடா' ஆளுங்கட்சிக்கு 'பூஸ்டா?' Posted: லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களைப் போல ஓட்டுகளைப் பெற்ற நோட்டா, முறையை பழையபடியே, '49 ஓ' படிவத்திற்கு மாற்றியதால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.கடந்த லோக்சபா தேர்தலில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதை பதிவு செய்ய 'நோட்டா' பட்டன் அமைக்கப்பட்டு, அதன்படி ஓட்டுகளும் பதிவாகின.ஆனால், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'நோட்டா' பட்டன் அகற்றப்பட்டது.அதற்கு ... |
| உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் 24 மணி நேரம் கடந்தும் கமிஷன் மவுனம் Posted: உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்து, 24 மணி நேரத்தை கடந்த நிலையிலும், ஓட்டுப்பதிவு சதவீத முழு விவரத்தை வெளியிடாமல், மாநில தேர்தல் கமிஷன் அமைதி காத்து வருகிறது.கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி மேயர் பதவிகள் உட்பட, தமிழகத்தில் காலியாக இருந்த 2,130 ஊரக மற்றும் நகர்புறஉள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், கடந்த மாதம், 28ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதற்கான மனு தாக்கல் கடந்த 4ம் தேதி வரை நடந்தது.போட்டியின்றி...:நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 4,914 பேர் மனு தாக்கல் செய்தனர். இத்தேர்தலில், மனுக்கள் தள்ளுபடி, வாபஸ் பெறுதல் ... |
| தமிழகத்திற்கு 2,430 மெகாவாட் மின்சாரம் சாத்தியமா? முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மின் வாரியம் Posted: நடப்பு நிதியாண்டு முடிவு அடைய, இன்னும், ஆறு மாதங்களே உள்ளதால், முதல்வர் ஜெயலலிதா அறிவித்த படி, தமிழகத்திற்கு, 2,430 மெகாவாட் மின்சாரம், கூடுதலாக கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில், மின் பற்றாக்குறை ஏற்படும் போது, கோவை, திருப்பூர் உள்ளிட்ட, தொழில் நகரங்களில், மின் தடை செய்யப்படுகின்றன. உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, கோவையில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, 15ம் தேதி பிரசாரம் செய்தார்.அப்போது, ''2014 - 15ம் நிதிஆண்டிற்குள், தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது,'' ... |
| விஸ்வரூபமெடுக்கிறது பங்களா விவகாரம்: மத்திய அரசு மீது அஜித் சிங் பாய்ச்சல் Posted: புதுடில்லி:''டில்லியில் நான் வசித்த அரசு பங்களாவை, என் தந்தை யும், முன்னாள் பிரதமருமான, சரண் சிங்கின் நினைவு இல்லமாக மாற்றும் படி, மத்திய அரசிடம் கூறினேன். ஆனால், அரசு தரப்பு இதை ஏற்க மறுத்து விட்டது,'' என, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவருமான, அஜித் சிங் கூறியுள்ளார்.தோல்வி:கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அஜித் சிங், கடந்த லோக்சபா தேர்தலில், தோல்வி அடைந்தார். இதையடுத்து, டில்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, நோட்டீஸ் ... |
| இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் Posted: புதுடில்லி:''இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரான, நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக, அமெரிக்காவைச் சேர்ந்த, சி.என்.என்., சேனலுக்கு அளித்துள்ள பேட்டி:இந்தியாவில், 17 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களை, தங்கள் வலையில் வீழ்த்துவதற்கு, சில பயங்கரவாத அமைப்புகள் முயற்சிப்பதாக கேட்கிறீர்கள். இந்திய முஸ்லிம்கள், அவர்களின் தாளத்துக்கு ஏற்ப, ஆட மாட்டார்கள். இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். இந்தியாவுக்காக, வாழவும், சாகவும் துணிந்தவர்கள்.உலகில், ... |
| எல்லை பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு : இந்தியா - சீனா கூட்டறிக்கையில் தகவல் Posted: புதுடில்லி:'இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, இருநாடுகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று நாள் பயணமாக, கடந்த 17ல், இந்தியா வந்த சீன அதிபர், ஜி ஜின்பிங், தன் சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக, பிரதமர், நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சென்றார். நேற்று முன்தினம், டில்லியில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர், மோடியுடனான அவரின் சந்திப்பில், 12 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இந்திய சுற்றுப்பயணத்தை நேற்று நிறைவு செய்த ... |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி:'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை தொடர்பாக, எந்தவித இறுதி முடிவும் எடுக்கக் கூடாது' என, சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரை, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா, தன் வீட்டில் அடிக்கடி சந்தித்தாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோடா தலைமையிலான,'பெஞ்ச்' முன், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |