Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தொகுதி பங்கீட்டில் பா.ஜ.,வுடன் சிவசேனா மோதல்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இழுபறி நீடிப்பு

Posted:

மும்பை:மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறியும், மோதலும் நீடிக்கிறது. ''பா.ஜ., கேட்கும், 135 தொகுதிகளை தர முடியாது. தனித்துப் போட்டியிடுவது உட்பட, மாற்று வழிகளை யோசிக்கவும் தயாராக உள்ளோம்,'' என, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில், அடுத்த மாதம், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும், சிவசேனா மற்றும் பா.ஜ., ஒரு அணியாகவும் களமிறங்க முடிவு செய்துள்ளன.இருப்பினும், தொகுதிகள் பங்கீடு விஷயத்தில், இரு கூட்டணியிலும் இழுபறி ...

பணவீக்கம் 3.74 சதவீதமாக குறைந்ததால் மக்கள் நிம்மதி: ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

Posted:

புதுடில்லி: மக்களை வாட்டி வதைக்கும் பணவீக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 3.74 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களிடையே நிம்மதி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ரிசர்வ் வங்கி அணுகுமுறையும், பா.ஜ., அரசு, எடுத்து வரும் கொள்கை நடவடிக்கைகளுமே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தின் துவக்கத்தில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை.ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட மெகா ஊழல்களாலும், தவறான கொள்கைகளாலும், அத்தியாவசியப் ...

இந்திய எல்லையில் ஊடுருவிய சீனர்களால் பரபரப்பு: நம் நாட்டு மக்களை மிரட்டி அராஜகம்

Posted:

லே: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ள சீனர்கள், அப்பகுதியில், பாசன வேலைகளில் ஈடுபட்டிருந்த நம் நாட்டினரை வேலை செய்ய விடாமல் தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய எல்லையில் ராணுவ வீரர்களை ஊடுருவச் செய்து, அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடும் சீனா, இம்முறை, அந்நாட்டு பொதுமக்களை ஊடுருவும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், டெம்சோக் பகுதியில், சீன அரசு வாகனங்களில் வந்திறங்கிய அந்நாட்டைச் சேர்ந்த சிலர், அங்கேயே தங்கியுள்ளனர். அது மட்டுமின்றி, அப்பகுதியில் பாசன வேலைகளில் ஈடுபட்டிருந்த, நம் நாட்டினரை, வேலை செய்ய விடாமல் ...

தமிழகம் வளர்ச்சிப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது: கோவையில் ஜெ., பெருமிதம்

Posted:

கோவை: எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல, வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கி விடவில்லை; வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது,'' என்று, கோவையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.கோவை மாநகர மேயர் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:எனது அரசின் சாதனைக்காக,லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, மாபெரும் வெற்றியை தந்தீர்கள். மக்களைப் பற்றி சிந்திக்காத சுயநலவாதிகளுக்கு, அரசியலில் இருந்தே நிரந்தர ...

கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமையும்: ஸ்டாலின் பேச்சு

Posted:

வரும் 2016ம் ஆண்டின் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், ஆட்சி அமையும், திராவிட இயக்க நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னையில், நேற்று நடந்தது. விழாவில், ஈ.வெ.ராமசாமி விருது வி.டி.சண்முகத்துக்கும், அண்ணாதுரை விருது ஜானுக்கும், பாரதிதாசன் விருது புதுக்கோட்டை விஜயாவுக்கும், கருணாநிதி விருது நடிகர் குமரிமுத்துவுக்கும் வழங்கப்பட்டன.விழாவில், துரைமுருகன் பேசுகையில், ''ஒரு தலைவர், தொண்டரிடம் எப்படி பழக வேண்டும்; ஒரு தொண்டர் எப்படி தலைவரிடம் பழக ...

காங்., நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பூட்டு: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க திடீர் கட்டுப்பாடு

Posted:

'அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் மற்றும் பொதுச் செயலர்கள் தவிர, வேறு யாரும், முக்கிய பிரச்னைகள் குறித்து, வெளிப்படையாகவோ, ஊடகங்கள் வாயிலாகவோ, விவாதிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது' என, கட்சி நிர்வாகிகளுக்கு காங்., மேலிடம் வாய்ப்பூட்டு போட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து, இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் காங்., தற்போது உட்கட்சிப் பூசலால், மேலும் திணறி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொதுச் செயலர்கள் ஆகியோர், சோனியாவின் ஆசியுடன், பதவியில் தொடர்கின்றனர். செயலர்கள் மற்றும் இளைய தலைமுறை நிர்வாகிகள், ராகுலின் பின்னால் ...

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் சேது பாலம் இடிக்கப்படாது: மத்திய அமைச்சர் கட்காரி உறுதி

Posted:

புதுடில்லி: ''சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்காக, ராமர் சேது பாலம் இடிக்கப்படாது. ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கப்பல் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து, அந்தத் துறையின் அமைச்சர் நிதின் கட்காரி நேற்று கூறியதாவது:இந்தியா - மியான்மர் இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து அக்டோபரில் துவங்கும். சென்னை மற்றும் மியான்மரின் ...

சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் திடீர் சிக்கல் : வாரிய கோரிக்கையை நிராகரித்த ஆணையம்

Posted:

சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு மின் வாரியம் கோரிய அனுமதியை, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிராகரித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு, சூரிய சக்தி மூலம், 2013ல், 1,000; 2014ல், 1,000; 2015ல், 1,000 என, மூன்று ஆண்டுகளுக்குள், 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்தது.முதல் ஆண்டில், சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 1,000 மெகா வாட், மின்சாரம் கொள்முதல் செய்ய, 2012ல், மின் வாரியம் சார்பில், 'டெண்டர்' வெளியிடப்பட்டது. அதில், 52 முதலீட்டாளர்களிடம் இருந்து, 708 மெகா வாட் ...

பெண்களை வைத்து பலவீனமான அதிகாரிகளுக்கு தூண்டில்: 'பப்'பில் ஆடவைத்து உளவு பார்த்த அருண் செல்வராஜ்

Posted:

'ஹைடெக்' நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல், சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை, 'பப்பு'களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.கோடிகளில் புரண்டு, பெரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத் தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் ...

விதிகளை மீறி செயல்பட்ட சாரதா குழும நிறுவனங்கள் : விசாரணை அறிக்கையில் தகவல்

Posted:

புதுடில்லி,:'சாரதா குழும நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி, கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிவித்து நடத்தி உள்ளன. அதனால், அந்த நிறுவனங்கள், வழக்கு விசாரணைகளை சந்தித்தே ஆக வேண்டும்' என, மெகா மோசடிகள் விசாரணை அலுவலகமான - எஸ்.எப்.ஐ.ஓ., தெரிவித்துள்ளது.மேற்குவங்க தலைநகர் கோல்கட்டா உட்பட, பல நகரங்களில் செயல்பட்டது, சாரதா சிட்பண்ட் நிறுவனம். இந்நிறுவனம், கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் இருந்து ஏராளமான பணத்தை வசூலித்தது. ஆனால், நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, நிறுவனம் ...

இந்தியாவுடனான உறவு அவசியமானது: ஆஸ்திரேலியா அமைச்சர் பேச்சு

Posted:

மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில், சட்ட விரோத ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்தியாவுடனான உறவு அவசியம் என, ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஆஸ்திரேலியா அமைச்சர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:தெற்காசிய நாடுகளிலிருந்து, ஆஸ்திரேலியாவில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், சட்ட விரோதமான முறையில் ஏராளமானோர் இங்கு வருவதால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, கடல் வழியாக ஊடுருவும் நபர்களை தடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகளின் துணையும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™