Tamil News | Online Tamil News |
- பா.ஜ., கட்சியால் ஒரு நன்மையும் இல்லை: முதல்வர் ஜெ., காட்டம்
- சோனியா, அமித் ஷாவுக்கு தகவல் ஆணையம் 'நோட்டீஸ்'
- மத்திய அமைச்சர்கள் 15 பேர் மீது பிரதமர் மோடிகோபம்: 'ரிப்போர்ட் கார்டு' சமர்ப்பிக்காததால் கடும் கண்டிப்பு
- பிறந்த நாள் கொண்டாட்டம்: மோடி முடிவு
- ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ரூ.6,000 கோடிசேதம் : மீண்டும் மழை பெய்வதால் மீட்பு பணியில் தொய்வு
- பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதி யார்? கருணாநிதி கேள்வி
- கோவை மேயர் தேர்தலில் வீடு, வீடாக ஓட்டுக்கு 'நோட்டு' : அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் பல இடங்களில் பரபரப்பு!
- தமிழக முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
- பயங்கரவாதிகளின் அராஜகம் தொடர்கிறது: பிரிட்டனை சேர்ந்தவரின் தலை துண்டிப்பு
- கந்துவட்டி கொடுமை கதறும் ஊழியர்கள்: கோர்ட்களையும் விட்டு வைக்காத கொடூரம்
- ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் இந்தியில் பேச பிரதமர் திட்டம்
- வயதானவர்களை ஓரம்கட்டுவதா: காங்., மேலிடத்துக்கு ஷீலா எதிர்ப்பு
| பா.ஜ., கட்சியால் ஒரு நன்மையும் இல்லை: முதல்வர் ஜெ., காட்டம் Posted: தூத்துக்குடி: ''பா.ஜ.,விற்கு ஓட்டுப் போடுவதால், ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. அக்கட்சிக்கு டில்லியில் ஒரு தலைமை, தமிழகத்தில் ஒரு தலைமை, டில்லியில் ஒரு நிலை, தமிழகத்தில் ஒரு நிலை உள்ளது,'' என, தூத்துக்குடியில் பிரசாரம் செய்த, முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடினார்.தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக, நேற்று மதியம், 2:05 மணிக்கு ஹெலிகாப்டரில், முதல்வர் ஜெயலலிதா வந்தார். அண்ணா நகரில் மதியம், 2:30 மணிக்கு, வேனில் பிரசாரம் துவக்கினார்.அவர் பேசியதாவது:என், மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனையை எடை போட்டு, லோக்சபா தேர்தலில் வெற்றி நடை போட ... |
| சோனியா, அமித் ஷாவுக்கு தகவல் ஆணையம் 'நோட்டீஸ்' Posted: புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன்படி, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், தகவல் தரும் அதிகாரியை நியமிக்க வேண்டும். தகவல் கோரி வரும் மனுக்கள், கடிதங்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.டில்லியைச் சேர்ந்த அகர்வால், மத்திய தகவல் ஆணையரிடம் அளித்த புகாரில், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதாகவும், இந்த விதிகளுக்கு உடன்பட ... |
| Posted: மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று, 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் சிலர், தங்களின், 100 நாள் செயல்பாடு குறித்து, 'ரிப்போர்ட் கார்டு' சமர்ப்பிக்காததால், அவர்கள் மீது மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மே, 26ம் தேதி பதவியேற்றது. அப்போது, தன் தலைமையிலான அரசின், 100 நாள் ஆட்சி நிறைவடையும் நேரத்தில், அமைச்சர்கள் அனைவரும், தங்களது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.பாராட்டுஅதன்படி, ... |
| பிறந்த நாள் கொண்டாட்டம்: மோடி முடிவு Posted: புதுடில்லி: ''என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்; அதற்கு பதிலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு உதவுங்கள்,'' என, பா.ஜ., தொண்டர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இம் மாதம், 17ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 64வது பிறந்த நாள். இதை, விமரிசையாகக் கொண்டாடுவதற்கு, பா.ஜ., தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:பா.ஜ., தொண்டர்களும், நலம் விரும்பிகளும், என் பிறந்த நாளை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தயவு ... |
| Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இரண்டு நாட்களாக ஓய்ந்திருந்த மழை, மீண்டும் பெய்யத் துவங்கியுள்ளதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சில நாட்களாக பெய்த, பலத்த மழையால், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; 270க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர்.நகரங்களை இணைக்கும் ... |
| பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதி யார்? கருணாநிதி கேள்வி Posted: சென்னை:'பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும், அரசியல் வாதி யார் என்பதை வெளியிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை:பயங்கரவாதிகளின் சதித் திட்டம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜுவிடம், விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையை அடுத்து, சென்னை யில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, எச்சரிக்கை தகவல்கள் வெளியாகிஉள்ளன.பாதுகாப்பு வளையம்:இதையொட்டி, தமிழக கடலோரப் பகுதிகள், பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் ... |
| Posted: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அ.தி.மு.க.,வினரை சுற்றிவளைத்த பா.ஜ., கட்சியினர், அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை கைப்பற்றினர். இதனால், பல்வேறு இடங்களில் பரபரப்பு நிலவியது.கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் பிரசாரம்விறு,விறுப்பாக நடக்கிறது. துடியலூர் வட்டாரத்தில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரவலாக புகார் கிளம்பியது. நேற்று மதியம், துடியலூர், சேரன் காலனியில், கோவை மாநகராட்சி 1வது வார்டு, பா.ஜ., கவுன்சிலர் வத்சலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ... |
| தமிழக முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு Posted: சென்னை:தமிழக முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியை, ஆந்திர மாநில அரசு துவக்கிவிட்டது. தமிழகத்தில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மின்வெட்டு பிரச்னை, தொழில் துவங்க அனுமதி பெறுவதில் உள்ள, பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக முதலீட்டாளர்கள், அண்டை மாநிலங்களை நாடிச் செல்கின்றனர். இதனால், பொருளாதார வளர்ச்சியில்,தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பல்வேறு மாநிலங்களும், தமிழகத்தில் முதலீடு செய்துள்ளோரை, தங்கள் மாநிலத்தின் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.கர்நாடக முதல்வர், மத்திய பிரதேச முதல்வர் ... |
| பயங்கரவாதிகளின் அராஜகம் தொடர்கிறது: பிரிட்டனை சேர்ந்தவரின் தலை துண்டிப்பு Posted: லண்டன்: அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் தலையை துண்டித்து கொல்லும் வீடியோ காட்சியை பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போர்:ஈராக்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், உலகம் முழுவதும் தங்கள் கிளையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீது போர் தொடுக்கப் போவதாகவும் ... |
| கந்துவட்டி கொடுமை கதறும் ஊழியர்கள்: கோர்ட்களையும் விட்டு வைக்காத கொடூரம் Posted: கோவை:சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், கந்து வட்டிக்காரர்களின் 'அடாவடி' வட்டி வசூலில் இருந்து தப்பிக்க முடியாமல், கோர்ட் ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் கதறுகின்றனர்.கந்துவட்டிக் கொடுமையால் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில், கந்து வட்டி சாவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. ஆனாலும், மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதில் ... |
| ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் இந்தியில் பேச பிரதமர் திட்டம் Posted: புதுடில்லி:''அடுத்த வாரம், ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்தியில் உரையாற்றுவார்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் நேற்று கூறினார்.இந்தி தினத்தை முன்னிட்டு, டில்லியில் நேற்று நடந்த விழாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் இந்தியில் பேசிய முதல் பிரதமர் வாஜ்பாய் தான். முன்பு ஒருமுறை அமைச்சராக இருந்தபோது, நானும், ஐ.நா.,வில் இந்தியில் பேசியுள்ளேன்.அடுத்த மாதம், நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா., பொதுக்குழு ... |
| வயதானவர்களை ஓரம்கட்டுவதா: காங்., மேலிடத்துக்கு ஷீலா எதிர்ப்பு Posted: புதுடில்லி:'வயதை காரணம் காட்டி, மூத்த தலைவர்களை கட்சி பதவியில் இருந்து ஓரம் கட்டுவது சரியல்ல; இதை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்' என, காங்., மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் போர்க்கொடி துாக்கியுள்ளார்.காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய அளவில், உட்கட்சி பூசல்கள் உருவாகியுள்ளன. ராகுலின் தலைமையில், தேர்தலை சந்தித்து தோற்றுப்போனதை அடுத்து, அவருக்கு எதிராக குரல்கள் கிளம்பின.கடந்த சில வாரங்களாக, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், வெளிப்படையாகவே, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தனர். குறிப்பாக திக்விஜய் சிங், மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவி ராஜ் சவான் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |