ஈகரை தமிழ் களஞ்சியம் |
- MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க
- உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
- துளிப்பா..
- கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
- நதியின் வேகத்தோடு - சிவசங்கரி மின்னூல்
- கலகலப் பக்கம்! - சக்திமித்ரா
- கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
- நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
- பெண்மையின் உண்மையான இலக்கணம்
- ஈகரையின் புதிய வாசகன்
- இலவச மென்பொருள் AVG Antivirus 2015
- கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+
- சிரிக்க, சிரிங்க
- புதிய சாலைப்பாதுகாப்பு மசோதா: கடும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை
- காதலும் கண்களும்
- மொட்டுக்கள் மலரும் பொழுது!
- குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
- ஈகரை வருகை பதிவேடு ---பதிவிடலாமா
- தரணி என்றும் வாழும்.
- திருப்பதி கோயிலுக்கு வாகனம்: சென்னை தொழிலதிபர் நன்கொடை
- இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
- மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு...!
| MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க Posted: 14 Sep 2014 10:13 AM PDT அன்பு உறவுகளே , நமது சிறப்பு பதிவாளர் அன்பிற்குரிய MM செந்தில் அவர்களுக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. வாழ்க்கையின் பல சோதனைகளை கடந்து இன்று தன்னுடைய சொந்த முயற்சியால் வெற்றிபெற்று உயர்ந்து நிற்கும் நமது அன்பு செந்தில் அவர்களையும் , அவரின் மனைவி , குழந்தைகளையும் மனதார வாழ்த்துகிறோம். |
| உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி! Posted: 14 Sep 2014 10:04 AM PDT பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது. இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப நினைத்தால், நம் பணத்தை இழக்க ... |
| Posted: 14 Sep 2014 09:17 AM PDT சாதி இருண்டொழிய விடுவதேயில்லை சிரிக்கும் வன்மம்.!! .. நாகினி |
| கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார் Posted: 14 Sep 2014 08:59 AM PDT அகந்தை அழிந்தது எப்படி? - தென்கச்சி சுவாமிநாதன் அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது. ஒரு நாள் - அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள். ''நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்'' என்றார்கள் அந்த வீரர்கள். ''வாருங்கள்'' என்றனர் அர்ச்சகர்கள். ''மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!'' ... |
| நதியின் வேகத்தோடு - சிவசங்கரி மின்னூல் Posted: 14 Sep 2014 08:35 AM PDT நதியின் வேகத்தோடு - சிவசங்கரி மின்னூல் Dropbox தரவிறக்கம் செய்ய Mediafire தரவிறக்கம் செய்ய |
| Posted: 14 Sep 2014 08:32 AM PDT எங்கே வித்தியாசம்? மனசுங்கறது காந்தம் மாதிரி. நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... எதை ஈர்க்கணும்னு அதை நாம பழக்கப்படுத்தறமோ அதைக் கத்துக்கும்! இதை எதுக்கு சொல்றேன்னா... ஏதோ காலட்சேபங்கள்ல மட்டும்தான் நல்லத சொல்லுவாங்கன்னு இருந்துட்டா... அப்புறம் நல்லத காதுல வாங்கறதுக்கு வாரத்துல ரெண்டு மணிநேரம்கூட நமக்கு கிடைக்காது! கடைவீதி, எலெக்ட்ரிக் டிரெயின், டவுன் பஸ், ஆபீஸ்னு நாம எங்க இருந்தாலும் சரி... பேசறது சின்னவங்களோ பெரியவங்களோ... படிப்பு, பதவி, அந்தஸ்துன்னு குறைச்சலா இருந்தாலும் சரி... அவங்ககிட்டேயிருந்து ... |
| கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி Posted: 14 Sep 2014 08:26 AM PDT புகழ் மயக்கம் புகழுக்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? சமூக சேவகர் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் கருப்பசாமி. அவருடைய அப்பா பெயர் எல்லப்பன். ஆகவே, எ.கருப்பசாமி! படாடோபம் இல்லாத எளிமையானவர்; காலுக்குச் செருப்புகூட போடமாட்டார். என்ன வெயில் அடித்தாலும், காலைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு போனாலும் போவாரே தவிர, செருப்பு போடமாட்டார்! எ.கருப்பசாமியின் சமூக சேவைகளை அக்கம்பக்கத்தவர் புகழத் தொடங்கினர். 'எ.கருப்பசாமி என்றால் எளிமை கருப்பசாமி' என்று ஒரு கூட்டத்தில் யாரோ பேசி வைக்க, அவரது பெயர் எளிமை ... |
| நினைத்தால் நிம்மதி-தென்கச்சி கோ.சுவாமிநாதன் Posted: 14 Sep 2014 08:22 AM PDT "ஆன்மிகம் என்றால் என்ன?" என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். "ஆன்மிகம் என்றால்…" "கொஞ்சம் இருங்க சாமி… கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். நீங்கள் எதையும் எளிதாகச் சொல்லி புரியவைப்பவர் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்!" "பெரிய ஆளப்பா நீ. சரி, சொல்கிறேன்… இதென்ன?" "வெண்ணெய்!" "சரி… இதோ இந்தப் பாலில் அது எங்கே இருக்கிறது?" "……." "அதான்! இப்படித்தான் இறைவனும் பாலில் வெண்ணெயைப் ... |
| நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை Posted: 14 Sep 2014 08:19 AM PDT நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன். மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா. என்றாவது ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும். கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே. |
| Posted: 14 Sep 2014 08:11 AM PDT சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் ! பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த ... |
| Posted: 14 Sep 2014 08:09 AM PDT பெயர்: இஹ்ஷான் சொந்த ஊர்: குறிப்பிட விரும்பவில்லை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: முகப்புத்தகத்தின் ஊடாக பொழுதுபோக்கு: கிரிக்கெட் ஆடுவது தொழில்: மாணவன் மேலும் என்னைப் பற்றி: படிப்பின் கதவை மூடி தொழிலின் கதவை திறப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் ஓர் மாணவன். கிரிக்கெட் என்றால் உயிர். குமார் சங்ககார, மஹேந்ர சிங் தோணி யின் கடின சாவு விசிறி என்றுதான் சொல்ல வேண்டும். காதலுக்கு மரியாதை என்றால் அது இளைய தளபதி, காதலிக்கு மரியாதை என்றால் அது நான். சினிமா என்றால் அது தளபதி தான். அவ்வளவுதான் குறிப்பு:- ... |
| இலவச மென்பொருள் AVG Antivirus 2015 Posted: 14 Sep 2014 07:52 AM PDT வைரஸ் கோப்புக்களில் இருந்து எமது கணனியை பாதுகாக்க உதவும் சிறந்த இலவச மென்பொருள்களுள் AVG வழங்கும் Antivirus FREE எனும் மென்பொருளும் ஒன்றாகும். இது எமது கணனிக்குள் ஊடுருவும் வைரஸ் கோப்புக்களில் இருந்து எமக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் Facebook, Twitter தளங்கள் உட்பட இன்னும் ஏனைய இணையதளங்கள் ஊடாக பரவும் தீங்கு விளைவிக்கும் இணைய இணைப்புக்களை சோதித்தறிந்து அதிலிருந்தும் எம்மை பாதுகாக்கின்றது. அத்துடன் எமக்கு தேவையற்ற கோப்புக்களை அல்லது எமது தனிப்பட்ட தகவல்களை மீண்டும் பெற முடியாதவாறு பாதுகாப்பாக ... |
| கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Posted: 14 Sep 2014 07:46 AM PDT வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது. ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334x750 (~326 pixels per inch) மற்றும் 1920x1080 (401 pixels per inch) திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோ ... |
| Posted: 14 Sep 2014 07:35 AM PDT ஒவ்வொரு இளைஜனின் மன உளைச்சலுக்கும் காரணம் மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும் கிராமத்து கணவன்மார் குடித்துவிட்டு அடிப்பாங்க நகரத்து கணவர்மார் அடி வாங்கிட்டு தெரியாம போய் குடிப்பாங்க. அழகு நிலையங்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது? ஏண்ணா ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். ரயில் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியாதான் வரும் நித்திக்கு மீண்டும் ஆண்மை சோதனை செய்ய கோர்ட்டை நாடுவோம் -கர்நாடக போலீஸ் அதவிட ரஞ்சிதாவ கேட்டுப்பாருங்க ஆபீசர்ஸ்! காதலனும் காதலியும் தற்கொலை ... |
| புதிய சாலைப்பாதுகாப்பு மசோதா: கடும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை Posted: 14 Sep 2014 07:17 AM PDT சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா 2014, என்ற புதிய மசோதா பற்றி மக்கள் கருத்தைக் கேட்டுப் பரிசீலிக்க இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது. மேலும் குழந்தைகள் சாலை விபத்தில் பலியானாலோ அல்லது ஓட்டுனரின் அலட்சியத்தினால் பலியானாலோ காரணமான நபர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை வரை கொடுக்க இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டும் ஓட்டுனர்களுக்கு முதல் முறைக் குற்றம் இழைத்தால் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.50,000 வரையிலும் அபராதம் ... |
| Posted: 14 Sep 2014 06:58 AM PDT காதல் என்பது ஒரு விதமான தொடர்பு இல்லை . ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம் .காதல் என்றால் என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல. பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல். அண்ணன் தம்பி மீது வைப்பது காதல் தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல் ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல் காற்று மலர் மீது வைப்பது காதல் கடல் பூமி மீது வைப்பது காதல் மீன் தண்ணீர் மீது வைப்பது காதல் எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு ... |
| Posted: 14 Sep 2014 06:22 AM PDT பாக்கியம் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். 'அட... முதுகுவலி இல்லையே... பேரன் வாங்கிக் கொடுத்தானே டைகர் பாமோ, லயன் பாமோ, இந்த அளவுக்கு பிரமாதமாக வேலை செய்கிறதே!' ''அம்மா... இப்ப எப்பிடி இருக்கு உன் முதுகு வலி,'' என்று கேட்டபடியே வந்தான் கேசவன். ''ம்... அப்படியே தான் இருக்கு,'' என்று, முகத்தை மாற்றிக் கொண்டு சொன்னாள். உடனே, குரலையும் மாற்றி, ''கல்யாணம் ஆன நாள்ல இருந்து கொஞ்சமா, நஞ்சமா நான் உங்களுக்காக கஷ்டப்பட்டது... முதுகொடிய கிச்சன்ல வேலை, ஸ்கூல் விட்டதும் உங்கள கூட்டிகிட்டு வர்றது, ... |
| குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம் Posted: 14 Sep 2014 05:06 AM PDT - மூச் பட இயக்குனர் வினு பாரதி சொன்னது: - மூச் படம் இரண்டு குழந்தைகளுக்காக போராடும் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை படத்தின் ஷூட்டிங் கிருஷ்ணகிரி அருகில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒரு தென்னமரத் தோப்பில் படப்பிடிப்பு நடத்தினோம். கதைப்படி இறந்து பேயாக அலையும் கேரக்டரில் சுஹாசினி நடித்தார். இதற்காக அவரது முகத்தில் பேய் மேக் அப் போட்டு அது காய்வதற்காக தோட்டத்தின் ஒரு பகுயில் வெயில் அடித்த இடத்தில் உட்கார வைத்தோம். அப்போது தோட்டத்தில் சுற்றித் திரிந்து சுமார் 50 குரங்குகள் ... |
| ஈகரை வருகை பதிவேடு ---பதிவிடலாமா Posted: 14 Sep 2014 04:38 AM PDT ஈகரை வருகை பதிவேடு -பதிவிடலாமா அதிகம் பார்வை இடும் திரியில் " ஈகரை வருகை பதிவேடு " முதலில் இருந்தாலும் , அதில் பதிவிட அன்பர்கள் , மிகவும் தயங்குவது போல் தெரிகிறது . வரும் நேரத்திற்கேற்றார் போல் வணக்கம் கூறி சேருவது நல்லதோர் வழிமுறை ஆகாதா ? பெருமைக்காக சொல்லவில்லை , காலையில் நான் நடை பயிற்சி செய்யும் போது, ( US இல் ) நான் அறியா பல முகங்கள் , good morning என்றோ , "hai ' என்றோ புன்னகையுடன் வாழ்த்தும் போது , மனதில் ஒரு புத்துணர்ச்சி பெருகிகிறது . நம் ஈகரையில் , பதிவிடும் உறவுகள் ... |
| Posted: 14 Sep 2014 04:03 AM PDT தரணி என்றும் வாழும். தலைமை ஒன்றே ஆளும் தரணி என்றும் வாழும். உரிமை சமமே காணும் கடமை கொண்டே நாளும். தலைமை ஒன்றே ஆளும் தரணி என்றும் வாழும். பேருக்கு ஒன்று தலைமை ஊருக்கு ஒன்று நிலைமை ஆளுக்கு ஒன்று அதிகாரம் யாருக்கு நின்று செயலாகும்? உரிமை சமமே காணும் கடமை கொண்டே நாளும். தலைமை ஒன்றே ஆளும் தரணி என்றும் வாழும். . சொந்தம் கூடி கொண்டாடும் பந்தம் தேடி தந்தாளும் மந்தை ஒன்று அரசாண்டால் சந்தை போன்று நாடாகும். உரிமை சமமே காணும் கடமை கொண்டே நாளும். தலைமை ஒன்றே ஆளும் தரணி என்றும் ... |
| திருப்பதி கோயிலுக்கு வாகனம்: சென்னை தொழிலதிபர் நன்கொடை Posted: 14 Sep 2014 01:59 AM PDT - திருமலை ஏழுமலையானுக்கு சுவராஜ் மஸ்தா வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். ========================================= திருமலை ஏழுமலையானுக்கு, ரூ.13 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை (சுவராஜ் மஸ்தா) சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அமித் கோத்தாரி நன்கொடையாக சனிக்கிழமை வழங்கினார். ஏழுமலையான் கோயில் முன்வாசல் அருகில், இந்த வாகனத்தை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ பெற்றுக் கொண்டார். - ---------------- |
| இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு' Posted: 14 Sep 2014 12:14 AM PDT இன்றைய சிந்தனைத் துளிகள் பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும். இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல். நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும். கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள். |
| Posted: 13 Sep 2014 11:08 PM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு Posted: 13 Sep 2014 11:04 PM PDT -- தில்லியில் அரசு ஒதுக்கிய வீடுகளைக் காலி செய்ய மறுக்கும் 30 முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகளில் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முன்னாள் எம்.பி.க்கள் அசாருதீன், நீரஜ் சேகர், விஜய் இந்தர் சிங்லா, அவதார் சிங் பதானா, தனஞ்சய் சிங், கே.எஸ்.ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங், ஜிதேந்தர் சிங் ஆகியோரின் வீடுகளும் இதில் அடங்கும். - இந்த நடவடிக்கைக்குப் பின் சுமார் 15 வீடுகள் காலி செய்யப் பட்டுவிட்டன. மீதமுள்ள வீடுகளில் சிலர் இன்னும், இருந்து வருகின்றனராம் |
| மிகைப்படுத்தப்பட்ட பாராட்டு...! Posted: 13 Sep 2014 07:51 PM PDT - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |