Tamil News | Online Tamil News |
- தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நீதிபதி ரகுபதி விசாரணை கமிஷன் சம்மன்:புது தலைமை செயலக முறைகேடு குறித்து விசாரணை சூடுபிடிப்பு
- நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி வெற்றி பெறாது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லோடா பேச்சு
- விபத்தில் குழந்தை இறந்தால் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை
- பார்லி., கூட்டத்தொடரில் சபைக்கு வந்தவர்கள் யார், யார்? தமிழக எம்.பி.,க்களின் வருகை பதிவேடு இதோ
- தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம்
- பத்திரிகையாளருக்கு பரிசு கொடுத்த அமைச்சருக்கு பிரதமர் மோடி 'குட்டு'
- அஜீத் சிங் வீட்டிற்கு மின்சாரம், தண்ணீர் சப்ளை 'கட்': வீட்டை காலி செய்ய மறுத்ததால் அதிகாரிகள் அதிரடி
- ஐ.எஸ்.ஐ.எஸ்., மனித வெடிகுண்டு சென்னையை சேர்ந்த இளைஞரா?
- ரூ.12,000 கோடி சூரிய மின் உற்பத்தி திட்டம் முடக்கம்: முதல்வரிடம் முறையிட முதலீட்டாளர்கள் முடிவு
- மொபைல் போன் பயன்படுத்த கோவா போலீசாருக்கு தடை
- வெள்ளத்தில் கரை ஒதுங்கிய துப்பாக்கிகள்: பீதியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள்
| Posted: தி.மு.க., ஆட்சியில், சென்னையில், புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரிக்க அமைக்கப்பட்ட, ரகுபதி கமிஷன் விசாரணை, திடீரென சூடுபிடித்துள்ளது. கருணாநிதிக்கு, 40 கேள்விகளையும்; துரைமுருகனுக்கு, 20 கேள்விகளையும் தயார் செய்து, இருவரும் வரும், 18ல், கமிஷன் முன் நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்திற்கு, போதிய இட வசதி இல்லை எனக் கூறி, அண்ணா சாலையில் உள்ள, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், சட்டசபை வளாகத்துடன் கூடிய, புதிய தலைமை செயலகம், கடந்த தி.மு.க., ஆட்சியில் ... |
| Posted: புதுடில்லி: ''நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி வெற்றி பெறாது. ஊழல் பின்னணி உடைய நபர்களிடம் இருந்து, நீதித்துறையை சேர்ந்தவர்கள் விலகி இருக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோடா பேசினார்.டில்லியில் நேற்று நடந்த நீதித்துறை தொடர்பான கருத்தரங்கை துவக்கி வைத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோடா பேசியதாவது:நம்பிக்கை: மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை வர வேண்டுமானால், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நிர்வாகத்தில் எங்கு தவறு ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பிரச்னைகளில் ... |
| விபத்தில் குழந்தை இறந்தால் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை Posted: புதுடில்லி:போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, கடுமையான தண்டனை அளிக்கும் வகையில், புதிய மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான புதிய மசோதா, விரைவில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், விபத்தில் குழந்தைகள் இறந்தால், அந்த விபத்துக்கு காரணமான டிரைவர் அல்லது விபத்துக்கு காரணமானவர், போக்குவரத்து ... |
| பார்லி., கூட்டத்தொடரில் சபைக்கு வந்தவர்கள் யார், யார்? தமிழக எம்.பி.,க்களின் வருகை பதிவேடு இதோ Posted: நடந்து முடிந்த பார்லிமென்டின் பட்ஜெட் தொடரில், தமிழக லோக்சபா எம்.பி.,க்களில், 90 சதவீதம் பேர், முழுமையாக சபைக்கு வந்துள்ளனர். இவர்களில், பா.ம.க., எம்.பி.,யான அன்புமணி தான், மிக குறைந்த நாட்கள் சபைக்கு வந்துள்ளார். பிற பெரும்பாலான எம்.பி.,க்கள், அதிகபட்சமாக, 27 நாட்கள் ஆஜராகி, விவாதங்களில் பங்கேற்று உள்ளனர்.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜூலை 7ல் துவங்கி, ஆகஸ்ட் 14 வரை நடந்தது. வார விடுமுறை மற்றும் சில அரசு விடுமுறை நாட்கள் போக, மொத்தம், 27 நாட்களுக்கு, சபையில் அலுவல்கள் நடைபெற்றன. குறைந்தபட்சம்:பதிவேட்டில் உள்ளபடி, தமிழக லோக்சபா ... |
| தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம் Posted: தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ., மற்றும் போலீசார் தேர்வு நடக்காததால், காலியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.கட்டாயம் :தேசிய அளவை விட, தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான போலீசார் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும், குற்றங்கள் எண்ணிக்கை அடிப்படையில், இதை இன்னும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, ஜூலை நிலவரப்படி, டி.ஜி.பி., முதல், கடை நிலை போலீசார் வரை, 1,20,899 போலீசார் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,00,490 போலீசார் ... |
| பத்திரிகையாளருக்கு பரிசு கொடுத்த அமைச்சருக்கு பிரதமர் மோடி 'குட்டு' Posted: புதுடில்லி:பத்திரிகையாளர் ஒருவருக்கு பரிசளித்த மத்திய அமைச்சரை, பிரதமர் மோடி கண்டித்த தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடிக்கு, மிகவும் நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர், சமீபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அங்கு வந்திருந்த பத்திரிகையாளருக்கு, அமைச்சர், ஒரு பரிசுப் பொருளை வழங்கினார்.இதற்கு முந்தைய காங்., ஆட்சி காலத்தில், இதெல்லாம் சாதாரண விஷயம். இந்த விவகாரம், பிரதமர் நரேந்திர மோடியின் காதுகளுக்கு சென்று விட்டது.இதையடுத்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, அந்த அமைச்சரை அழைத்த ... |
| அஜீத் சிங் வீட்டிற்கு மின்சாரம், தண்ணீர் சப்ளை 'கட்': வீட்டை காலி செய்ய மறுத்ததால் அதிகாரிகள் அதிரடி Posted: புதுடில்லி:முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவருமான அஜீத் சிங், டில்லியில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்ய மறுத்ததால், அவரின் வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை, அதிகாரிகள்அதிரடியாக துண்டித்தனர்.உ.பி.,யில், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில், அஜீத் சிங்கும் ஒருவர். ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவரான இவர், முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சி யில், விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.முந்தைய ஆட்சியில், இவருக்கு, டில்லியில் துக்ளக் ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. இதில், அவர் வசித்து ... |
| ஐ.எஸ்.ஐ.எஸ்., மனித வெடிகுண்டு சென்னையை சேர்ந்த இளைஞரா? Posted: புதுடில்லி:ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், சென்னையைச் சேர்ந்த இளைஞர், மனித வெடிகுண்டாகச் செயல்பட்டு, உயிரிழந்துள்ளதாக, உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளை இணைத்து, தனி நாட்டை உருவாக்கும் நோக்குடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களை, இந்த அமைப்பினர், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஈராக்கில், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பில், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த ... |
| ரூ.12,000 கோடி சூரிய மின் உற்பத்தி திட்டம் முடக்கம்: முதல்வரிடம் முறையிட முதலீட்டாளர்கள் முடிவு Posted: மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம் முடங்கிப் போயுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் முறையிட முதலீட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, சாதகமான வாய்ப்புகள் இருந்தும், அதை செயல்படுத்துவதில், மாநில அரசு, மெத்தனமாக உள்ளது.தமிழக அரசு, 2012 அக்டோபரில், 'தமிழ்நாடு சூரிய சக்தி மின் உற்பத்தி கொள்கை- - 2012'ஐ வெளியிட்டது.இலக்கு அதன்படி, சூரிய சக்தி மின்சாரம் மூலம், 2013ல், 1,000; 2014ல், 1,000; 2015ல், 1,000 மெகாவாட் என, மூன்று ஆண்டுகளுக்குள், 3,000 மெகாவாட் மின்சாரம் ... |
| மொபைல் போன் பயன்படுத்த கோவா போலீசாருக்கு தடை Posted: பனாஜி:கோவா போலீசார், பணி நேரத்தில், மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.கோவா மாநிலத்தில், முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய போலீஸ் ஐ.ஜி.,யாக பதவியேற்றுக் கொண்ட, சுனில் கர்க், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பணியில் இருக்கும் போலீசார், மொபைல் போனில் பேசுவதாகவும், விளையாடுவதாகவும், பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இப்பிரச்னை குறித்து, சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் இல்லாவிட்டால், போலீசார் தங்கள் கடமையை இன்னும் சிறப்பாக ... |
| வெள்ளத்தில் கரை ஒதுங்கிய துப்பாக்கிகள்: பீதியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் Posted: ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு இடங்களில் உள்ள ராணுவ நிலைகளில், வெள்ள நீர் புகுந்ததால், ராணுவத்திற்கு சொந்தமான துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் வடிந்து வரும் நிலையில், சில இடங்களில் துப்பாக்கிகள் கரை ஒதுங்கி கிடப்பதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கின. இதில், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |