Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நீதிநெறி விளக்கம்: நன்னெறி இதுவே
- ஹிமாசலப் பிரதேச பேரவைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை
- மகாராஷ்டிர முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
- பாஜக கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை: தமிழருவி மணியன்
- பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த்
- உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
- சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்கத்தில் செப். 22-ல் பேரணி நடத்த இடதுசாரிகள் முடிவு
- காஷ்மீர் வெள்ள நிவாரணம்: திமுக ரூ.25 லட்சம், மதிமுக ரூ.10 லட்சம் உதவி
- புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடுப் புகார்: தனிநபர் விசாரணைக் குழு முன் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்
- 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
- 2ஜி: பார்வையாளர் குறிப்பேடுகளை அளித்தது யார்? பிரசாந்த் பூஷண் வெளியிட சிபிஐ இயக்குநர் வலியுறுத்தல்
- உ.பி.: இரு விவசாயிகள் சுட்டுக் கொலை
- நடிகை ரோஜா மீது தாக்குதல்: ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்
- மழை வேண்டி 108 பால் குட அபிஷேகம்
- முதல் கிரேடில் தேர்ச்சி: பள்ளி மாணவிக்குப் பாராட்டு
- வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணி
- இளைஞர் கொலை: மேலும் ஒருவர் கைது
- வட்ட அளவிலான மகளிர் தட களப் போட்டி: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
- மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் லாலு
- பேனர் வைப்பதில் தகராறு: 4 பேருக்கு கத்திக்குத்து, இருவர் கைது
- கருத்தரங்கில் முதலிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு
- நாளை உரியடித் திருவிழா
- மின் கசிவால் கரும்புத் தோட்டம் சேதம்
- வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
- குஜராத்தில் மோடி, அமித் ஷாவை கெளரவிக்க பாஜக ஏற்பாடு
- செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருந்த நைஜீரியர்கள் 3 பேரை தாய்நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு
- ஆண் சடலம் கண்டெடுப்பு
- நல்ல நாள்கள் வருவதாகக் கூறிய பாஜக பாதை மாறி விட்டது: அகிலேஷ் யாதவ்
- பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளுக்கான கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம்
- கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகம்
- விபத்து குறைப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசுரம்
- கல்வி வேலைவாய்ப்புத் தேர்வு வாரிய மோசடி: ம.பி.யில் மகளிரணி நிர்வாகியை இடைநீக்கம் செய்தது பாஜக
- அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிஸ்
- சத்தீஸ்கரில் நக்ஸலைட் கைது
- வன உயிரின வார விழா: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
- ஆரணியில் அதிகபட்ச மழை
- அல்-காய்தாவின் அழைப்பை நிராகரிக்க முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள்
- அம்மா திட்ட முகாமில் 26 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
- உத்தரகண்டில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் சாவு
- வந்தவாசி
- தந்தையின் தொகுதியில் போட்டியிட மாட்டேன்: பங்கஜா முண்டே
- தீ வரைவு ஆவணப்படம் திரையிடல்
- வீட்டின் உரிமையாளரை தாக்கிய பெண் கைது
- அனைத்து மாவட்டத்திலும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்கள் தேவை
- பாரதிதாசன் பல்கலை.யில் பட்டம் பெற செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
- பொதுப்பணித்துறை இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
- பாஸ்போர்ட் சிறப்பு முகாமில் 80 மனுக்கள் குவிந்தன விரைந்து வழங்க நடவடிக்கை : அலுவலர் உறுதி
- திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து
- விஷஜந்து கடித்து விவசாயி சாவு
- இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
- தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் "ஏபிவிபி' அமோக வெற்றி!
- தில்லி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு
- சாதிய முறையால் தேச வளர்ச்சி தடைபட்டுள்ளது
- விசாரணையைத் தொடங்கியது தில்லி காவல் துறை
- குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி
- இந்தியர்களை ஈர்க்க அமெரிக்க சுற்றுலா நிறுவனங்கள் ஆர்வம்
- அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- தில்லியை "நவீன நகரம்' ஆக்க நடவடிக்கை
- தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தத் தயாரா?
- குடும்பத்தினரிடம் பணம் பறிக்க நாடகமாடிய இளைஞர் கைது
- ஆப்கனிலிருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயின் பறிமுதல்: மூவர் கைது
- திகார் சிறைக் கைதியிடம் 13 சிம் கார்டுகள்
- எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- "அம்மா' திட்ட முகாமில் 24 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
- கட்டடச் சுவர் இடிந்து பள்ளி மாணவர் சாவு
- குமரியில் ஆவின் பால் அட்டை புதுப்பிப்பு இறந்தவர்களின் பெயரில் போலி அட்டைகள் கண்டுபிடிப்பு
- மேல்புறம் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
- மார்த்தாண்டத்தில் கல்விக் கடன் மேளா கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவி
- மயிலாடி அருகே டாஸ்மாக் கடையில் பணம்,மதுபாட்டில்கள் திருட்டு
- குலசேகரம் அருகே தொழிற்சாலையில் தரைஓடு சரிந்து விபத்து: பெண் சாவு
- புதுக்கடை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- 171 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் அளிப்பு
- கால்பந்து: ஏ.வி.கே.நகர் கல்லூரி சிறப்பிடம்
- துவாரக ஆசிரமத்தில் நாளை அஷ்டமி ரோகிணி விழா
- பூதப்பாண்டி அருகே கோயில் நிலம் மீட்பு
- அழகியபாண்டியபுரம் அருகே வனத்துறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
- குமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
- நாளை அண்ணா பிறந்த நாள் விழா: அதிமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு
- மடாதிபதி அவைத்யநாத் மறைவுக்கு அமித் ஷா இரங்கல்
- தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்: ஏபிவிபி அமோக வெற்றி
- கயத்தாறு அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
- கயத்தாறில் 10 உயர்கோபுர மின்விளக்குகள்
- சுருக்குமடி வலை பயன்படுத்திய 5 மீனவர்கள் மீது வழக்கு
- தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார வழக்கு
- உடன்குடியில் சங்க அமைப்பு தினம்
- லாரியில் இருந்து குப்பைத் தொட்டி தவறி விழுந்து இளைஞர் காயம்: பொதுமக்கள் மறியல்
- ஒடிஸா சீட்டு நிதி மோசடி: சிபிஐ விசாரணை வரம்புக்குள் முதல்வரும் வர வேண்டும்
- பேய்க்குளத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
- கோவில்பட்டியில் பேராசிரியர் வீட்டின் பூட்டு, பீரோ உடைப்பு
- புதியம்புத்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
- கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா
- கயத்தாறில் பாரம்பரிய உணவுத் திருவிழா
- பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு
- எம்.பி. நிதியில் இருந்து காஷ்மீருக்கு நிதி: சீதாராம் யெச்சூரி கோரிக்கை
- மைல் கல்லில் பைக் மோதி கட்டட ஒப்பந்ததாரர் சாவு
- ஜம்மு-காஷ்மீர் அமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு
- கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 548 பேர் பங்கேற்பு
| நீதிநெறி விளக்கம்: நன்னெறி இதுவே Posted: 13 Sep 2014 01:17 PM PDT பொய்குறளை வன்சொல் பயனிலவென்று இந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் புலமைந்தும் காத்து மனமாசு அகற்று நலமன்றே நல்லா றெனல். (பாடல்-59) |
| ஹிமாசலப் பிரதேச பேரவைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை Posted: 13 Sep 2014 12:51 PM PDT ஹிமாசலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு ஸ்திரமாக இருப்பதாகக் கூறியுள்ள முதல்வர் வீரபத்ர சிங், மாநில சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். |
| மகாராஷ்டிர முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: உத்தவ் தாக்கரே வேண்டுகோள் Posted: 13 Sep 2014 12:50 PM PDT முதல்வராகும் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் விதமாக, "மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். |
| பாஜக கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை: தமிழருவி மணியன் Posted: 13 Sep 2014 12:48 PM PDT பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். |
| பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த் Posted: 13 Sep 2014 12:47 PM PDT புதிய காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். |
| உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: 13 Sep 2014 12:46 PM PDT உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான பிரசாரம், 48 மணி நேரத்துக்கு முன்பாக நிறைவு பெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி: மேற்கு வங்கத்தில் செப். 22-ல் பேரணி நடத்த இடதுசாரிகள் முடிவு Posted: 13 Sep 2014 12:45 PM PDT மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடிக்கு எதிராக இம்மாதம் 22ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. |
| காஷ்மீர் வெள்ள நிவாரணம்: திமுக ரூ.25 லட்சம், மதிமுக ரூ.10 லட்சம் உதவி Posted: 13 Sep 2014 12:43 PM PDT ஜம்மு- காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சமும், மதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 13 Sep 2014 12:41 PM PDT புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடுப் புகார் தொடர்பாக நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணைக் குழு முன் செப்டம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. |
| 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு Posted: 13 Sep 2014 12:40 PM PDT தில்லியில் அரசு ஒதுக்கிய வீடுகளைக் காலி செய்ய மறுக்கும் 30 முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகளில் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. |
| 2ஜி: பார்வையாளர் குறிப்பேடுகளை அளித்தது யார்? பிரசாந்த் பூஷண் வெளியிட சிபிஐ இயக்குநர் வலியுறுத்தல் Posted: 13 Sep 2014 12:39 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததற்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது இல்லத்தின் பார்வையாளர் குறிப்பேடுகளை அளித்தது யார்? என்பதை, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட வேண்டும் என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். |
| உ.பி.: இரு விவசாயிகள் சுட்டுக் கொலை Posted: 13 Sep 2014 12:31 PM PDT உத்தரப்பிரதேசத்தில் மர்ம நபர்களால் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: |
| நடிகை ரோஜா மீது தாக்குதல்: ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் Posted: 13 Sep 2014 12:31 PM PDT தெலுங்குதேசம் கட்சியினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகையும், தனது கட்சி எம்எல்ஏவுமான ரோஜாவிடம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மேகன் ரெட்டி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். |
| மழை வேண்டி 108 பால் குட அபிஷேகம் Posted: 13 Sep 2014 12:27 PM PDT கடலாடியில் உள்ள அருள்மிகு காளியம்மனுக்கு பொது மக்கள் சார்பில் மழை வேண்டி 108 பால் குட அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முதல் கிரேடில் தேர்ச்சி: பள்ளி மாணவிக்குப் பாராட்டு Posted: 13 Sep 2014 12:27 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்ற, திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளி மாணவிக்கு சி.பி.எஸ்.இ. அலுவலகம் பாராட்டுச் சான்று வழங்கியுள்ளது. |
| வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணி Posted: 13 Sep 2014 12:27 PM PDT வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| இளைஞர் கொலை: மேலும் ஒருவர் கைது Posted: 13 Sep 2014 12:27 PM PDT திருவண்ணாமலையில் இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| வட்ட அளவிலான மகளிர் தட களப் போட்டி: ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 13 Sep 2014 12:26 PM PDT திருவண்ணாமலை வட்ட அளவிலான மகளிர் தடகளப் போட்டியில், ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 156 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. |
| மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் லாலு Posted: 13 Sep 2014 12:26 PM PDT இருதய அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சனிக்கிழமை வீடு திரும்பினார். |
| பேனர் வைப்பதில் தகராறு: 4 பேருக்கு கத்திக்குத்து, இருவர் கைது Posted: 13 Sep 2014 12:26 PM PDT திருவண்ணாமலை அருகே சனிக்கிழமை காலை, பிறந்த நாள் பேனர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். |
| கருத்தரங்கில் முதலிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 13 Sep 2014 12:26 PM PDT மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை, கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர். |
| Posted: 13 Sep 2014 12:26 PM PDT செங்கம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் செங்கம் வட்ட யாதவர் சமூகம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவையொட்டி, உரியடித் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது. |
| மின் கசிவால் கரும்புத் தோட்டம் சேதம் Posted: 13 Sep 2014 12:25 PM PDT தண்டராம்பட்டை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுருளிராஜன் (48). விவசாயியான இவர் |
| வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு Posted: 13 Sep 2014 12:25 PM PDT திருவண்ணாமலை அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| குஜராத்தில் மோடி, அமித் ஷாவை கெளரவிக்க பாஜக ஏற்பாடு Posted: 13 Sep 2014 12:25 PM PDT பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடியும், பாஜக தலைவராகப் பதவியேற்ற பிறகு அமித் ஷாவும் தங்களது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரவுள்ள நிலையில், அவர்களைக் கெளரவிக்கும் விதமாக மாநில பாஜக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. |
| செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருந்த நைஜீரியர்கள் 3 பேரை தாய்நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு Posted: 13 Sep 2014 12:25 PM PDT செய்யாறில் உள்ள தனி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு இருந்த நைஜீரியர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்களது தாய்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 13 Sep 2014 12:24 PM PDT வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. |
| நல்ல நாள்கள் வருவதாகக் கூறிய பாஜக பாதை மாறி விட்டது: அகிலேஷ் யாதவ் Posted: 13 Sep 2014 12:24 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது "நல்ல நாள்கள்' வருவதாகக் கூறிய பாஜக, தற்போது தனது பாதையை இழந்து "காதல் ஜிகாதுக்கு' மாறி விட்டது என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். |
| பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளுக்கான கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 13 Sep 2014 12:24 PM PDT திருவண்ணாமலையில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதப் பாட ஆசிரியர்களுக்கான கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் Posted: 13 Sep 2014 12:24 PM PDT ஆரணி ஒன்றியத்தில் நடைபெறும் 2 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று மாவட்ட எஸ்.பி. முத்தரசி தெரிவித்தார். |
| கலவை சாதம் வழங்கும் திட்டம் அறிமுகம் Posted: 13 Sep 2014 12:24 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த பூண்டி ஊராட்சியில் கலவை சாதம் வழங்கும் திட்ட அறிமுகம் அண்மையில் நடைபெற்றது. |
| விபத்து குறைப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசுரம் Posted: 13 Sep 2014 12:23 PM PDT தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வந்தவாசி பணிமனை-1 மற்றும் பணிமனை-2 சார்பில், விபத்துக்களை குறைப்பதற்காக விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| கல்வி வேலைவாய்ப்புத் தேர்வு வாரிய மோசடி: ம.பி.யில் மகளிரணி நிர்வாகியை இடைநீக்கம் செய்தது பாஜக Posted: 13 Sep 2014 12:23 PM PDT மத்தியப்பிரதேச கல்வி வேலைவாய்ப்புத் தேர்வு வாரிய மோசடிப் புகார் தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகக் குழு உறுப்பினர் வந்தனா துவிவேதி கைது செய்யப்பட்டதால், கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். |
| அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிஸ் Posted: 13 Sep 2014 12:23 PM PDT போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிக் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. |
| Posted: 13 Sep 2014 12:23 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் டிஃபன் பாக்ஸ் வெடிகுண்டுடன் நக்ஸலைட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை கூறினர். |
| வன உயிரின வார விழா: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு Posted: 13 Sep 2014 12:23 PM PDT திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற வன உயிரின வார விழா பேச்சு, ஓவியப் போட்டிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். |
| Posted: 13 Sep 2014 12:23 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 55 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. |
| அல்-காய்தாவின் அழைப்பை நிராகரிக்க முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள் Posted: 13 Sep 2014 12:23 PM PDT இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தொடங்கப்பட்டுள்ள புதிய அமைப்பில் சேருமாறு அல்-காய்தா விடுத்துள்ள அழைப்பை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்று அகில இந்திய சன்னி ஜாமியாதுல் உலமா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| அம்மா திட்ட முகாமில் 26 பேருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 13 Sep 2014 12:22 PM PDT போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தில் 26 பேருக்கு நலத் திட்ட உதவிகளை சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் மூர்த்தி வழங்கினார். |
| உத்தரகண்டில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் சாவு Posted: 13 Sep 2014 12:22 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 13 Sep 2014 12:22 PM PDT |
| தந்தையின் தொகுதியில் போட்டியிட மாட்டேன்: பங்கஜா முண்டே Posted: 13 Sep 2014 12:21 PM PDT மகாராஷ்டிர மாநிலம், பீட் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மறைந்த பாஜக எம்.பி.யான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Sep 2014 12:06 PM PDT கருந்திணை பண்பாடு என்ற அமைப்பும், பூர்ணோதயா சிறப்புப் பள்ளியும் இணைந்து தீ வரைவு என்ற ஆவணபடம் திரையிடலை திருச்சியில் சனிக்கிழமை நடத்தின. |
| வீட்டின் உரிமையாளரை தாக்கிய பெண் கைது Posted: 13 Sep 2014 12:05 PM PDT திருச்சி துவாக்குடி அருகே வீட்டின் உரிமையாளரை தாக்கிய அவரது வீட்டில் வசித்து வந்த பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அனைத்து மாவட்டத்திலும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்கள் தேவை Posted: 13 Sep 2014 12:05 PM PDT தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்களைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. |
| பாரதிதாசன் பல்கலை.யில் பட்டம் பெற செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் Posted: 13 Sep 2014 12:05 PM PDT திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற இம்மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது Posted: 13 Sep 2014 12:04 PM PDT திருச்சியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்ற 2 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர். |
| பொதுப்பணித்துறை இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் Posted: 13 Sep 2014 12:04 PM PDT திருச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிóய வாகனங்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பாஸ்போர்ட் சிறப்பு முகாமில் 80 மனுக்கள் குவிந்தன விரைந்து வழங்க நடவடிக்கை : அலுவலர் உறுதி Posted: 13 Sep 2014 12:04 PM PDT திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பாஸ்போர்ட் முகாமில் நிலுவை பாஸ்போர்ட்டுகளை வழங்கக்கோரி 80 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. |
| திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து Posted: 13 Sep 2014 12:03 PM PDT திருச்சி சிறீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு, நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (செப். 15) காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. |
| Posted: 13 Sep 2014 12:03 PM PDT திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அருகே சனிக்கிழமை விஷஜந்து கடித்து விவசாயி உயிரிழந்தார். |
| இடைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 13 Sep 2014 12:02 PM PDT மக்களவையில் காலியாகவுள்ள 3 தொகுதிகளுக்கும், 9 மாநில சட்டப் பேரவைகளில் காலியாக இருக்கும் 33 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு Posted: 13 Sep 2014 12:02 PM PDT தில்லியில் அரசு ஒதுக்கிய வீடுகளைக் காலி செய்ய மறுக்கும் 30 முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகளில் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முன்னாள் எம்.பி.க்கள் அசாருதீன், நீரஜ் சேகர், |
| தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் "ஏபிவிபி' அமோக வெற்றி! Posted: 13 Sep 2014 12:02 PM PDT தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்துப் பதவிகளையும் பாஜக சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியது. |
| தில்லி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு Posted: 13 Sep 2014 12:02 PM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது. |
| சாதிய முறையால் தேச வளர்ச்சி தடைபட்டுள்ளது Posted: 13 Sep 2014 12:01 PM PDT சாதிய முறையால் தேச வளர்ச்சி தடைபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். தில்லிகை இலக்கிய வட்டம் சார்பில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை தில்லி தமிழ் சங்கத்தில் இலக்கியக் கூட்டம் நடைபெற்று வருகிறது. |
| விசாரணையைத் தொடங்கியது தில்லி காவல் துறை Posted: 13 Sep 2014 12:01 PM PDT தில்லியில் ஆட்சி அமைப்பதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் "குதிரை பேர' அரசியலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி அளித்த விடியோ ஆதாரப் புகாரின் அடிப்படையில் தில்லி காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். |
| குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி Posted: 13 Sep 2014 12:01 PM PDT தில்லியில் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: இப்போது தில்லியில் புதிதாக தேர்தல் நடைபெற்றால், தில்லிவாசிகளின் நம்பிக்கையைப் பெற |
| இந்தியர்களை ஈர்க்க அமெரிக்க சுற்றுலா நிறுவனங்கள் ஆர்வம் Posted: 13 Sep 2014 12:01 PM PDT அமெரிக்காவுக்கு வணிகம், கல்வி, சுற்றுலா போன்ற நோக்குடன் வருமó இந்தியர்களின் வருகையை அதிகரிக்க அந்நாட்டு சுற்றுலா நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. |
| அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 13 Sep 2014 12:00 PM PDT தில்லி சாந்தினி செüக்கில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| தில்லியை "நவீன நகரம்' ஆக்க நடவடிக்கை Posted: 13 Sep 2014 12:00 PM PDT தில்லியை நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றும் நோக்குடன் புதிய வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தில்லி வளர்ச்சி ஆணைய (டிடிஏ) துணைத் தலைவர் பல்வீந்தர் குமார் தெரிவித்தார். |
| தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தத் தயாரா? Posted: 13 Sep 2014 12:00 PM PDT தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தில்லி சட்டப்பேரவையைக் |
| குடும்பத்தினரிடம் பணம் பறிக்க நாடகமாடிய இளைஞர் கைது Posted: 13 Sep 2014 12:00 PM PDT குடும்பத்தினரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞரை தில்லி போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் விக்ரம்ஜித் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை |
| ஆப்கனிலிருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயின் பறிமுதல்: மூவர் கைது Posted: 13 Sep 2014 11:59 AM PDT ஆப்கானிஸ்தானிலிருந்து திராட்சைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள உயர்ரக ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட மூவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| திகார் சிறைக் கைதியிடம் 13 சிம் கார்டுகள் Posted: 13 Sep 2014 11:59 AM PDT குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷராஃபத் ஷேக், ஒரே செல்போனில் வெவ்வேறு தருணங்களில் 13 சிம் கார்டுகளை பயன்படுத்தினார் என்றும், அவருக்கு இரண்டு சிறை வார்டன்கள் உடந்தையாக இருந்தனர் என்றும் திகார் சிறை நிர்வாகத்திடம் தில்லி போலீஸின் |
| எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 13 Sep 2014 11:58 AM PDT எல்லையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருத்தணி நகராட்சி, 20-ஆவது வார்டில் அமைந்துள்ளது அண்ணாநகர் (குண்டலுôர்). இந்தப் பகுதியி |
| "அம்மா' திட்ட முகாமில் 24 பேருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 13 Sep 2014 11:58 AM PDT ஊராட்சியில் நடந்த "அம்மா' திட்ட முகாமில், 24 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. |
| கட்டடச் சுவர் இடிந்து பள்ளி மாணவர் சாவு Posted: 13 Sep 2014 11:58 AM PDT சோழவரம் அருகே தனியார் வீட்டுச் சுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார். |
| குமரியில் ஆவின் பால் அட்டை புதுப்பிப்பு இறந்தவர்களின் பெயரில் போலி அட்டைகள் கண்டுபிடிப்பு Posted: 13 Sep 2014 11:57 AM PDT குமரி மாவட்டத்தில் கடந்த 13 நாகள்ளாக நடைபெற்று வந்த ஆவின் பால் அட்டை புதுப்பிக்கும் பணியில் இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்களின் பெயரில் சுமார் 500 போலி அட்டைகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. |
| மேல்புறம் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு Posted: 13 Sep 2014 11:57 AM PDT கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அலுவலர் கந்தசாமி மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மார்த்தாண்டத்தில் கல்விக் கடன் மேளா கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவி Posted: 13 Sep 2014 11:57 AM PDT மார்த்தாண்டத்தில் நடைபெற்ற வங்கி கல்விக் கடன் மேளாவில் 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் கடனாக வழங்கப்பட்டது. |
| மயிலாடி அருகே டாஸ்மாக் கடையில் பணம்,மதுபாட்டில்கள் திருட்டு Posted: 13 Sep 2014 11:56 AM PDT மயிலாடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| குலசேகரம் அருகே தொழிற்சாலையில் தரைஓடு சரிந்து விபத்து: பெண் சாவு Posted: 13 Sep 2014 11:56 AM PDT குலசேகரம் அருகே தரைஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தரைஓடுகள் சரிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த பெண் தொழிலாளி சனிக்கிழமை இறந்தார். இரு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| புதுக்கடை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 13 Sep 2014 11:56 AM PDT புதுக்கடை அருகே கேரளத்துக்கு காரில் கடத்தவிருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| 171 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் அளிப்பு Posted: 13 Sep 2014 11:56 AM PDT மணலிக்கரை நிர்மலா தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள 171 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| கால்பந்து: ஏ.வி.கே.நகர் கல்லூரி சிறப்பிடம் Posted: 13 Sep 2014 11:55 AM PDT அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் ஏ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. |
| துவாரக ஆசிரமத்தில் நாளை அஷ்டமி ரோகிணி விழா Posted: 13 Sep 2014 11:55 AM PDT களியக்காவிளை அருகேயுள்ள கருமானூர், வாழப்பள்ளி சுபானந்த தர்ம துவாரக ஆசிரமத்தில் அஷ்டமி ரோகிணி விழா திங்கள்கிழமை (செப்.15) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் உஷபூஜை, சிறப்பு பூஜைகள், காலை 9 மணிக்கு அனுக்கிரக ஆராத |
| பூதப்பாண்டி அருகே கோயில் நிலம் மீட்பு Posted: 13 Sep 2014 11:55 AM PDT பூதப்பாண்டி அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. |
| அழகியபாண்டியபுரம் அருகே வனத்துறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் Posted: 13 Sep 2014 11:55 AM PDT குமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் அருகே வனத்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி கிராம மக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன |
| குமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள் Posted: 13 Sep 2014 11:54 AM PDT குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். உயிர் இழப்பும் ஏற்படுகிறது. |
| நாளை அண்ணா பிறந்த நாள் விழா: அதிமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு Posted: 13 Sep 2014 11:54 AM PDT அண்ணாவின் பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை (செப்.15) நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. |
| மடாதிபதி அவைத்யநாத் மறைவுக்கு அமித் ஷா இரங்கல் Posted: 13 Sep 2014 11:54 AM PDT பாஜக முன்னாள் எம்.பி.யும், கோரக் பீடத்தின் மடாதிபதியுமான மஹந்த் அவைத்யநாத் (95) மறைவுக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல்: ஏபிவிபி அமோக வெற்றி Posted: 13 Sep 2014 11:53 AM PDT தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்துப் பதவிகளையும் பாஜக சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியது. |
| கயத்தாறு அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் Posted: 13 Sep 2014 11:53 AM PDT கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட பெரியசாமிபுரத்தில் அருள்தரும் ஸ்ரீ வடகாசி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. |
| கயத்தாறில் 10 உயர்கோபுர மின்விளக்குகள் Posted: 13 Sep 2014 11:53 AM PDT கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட 10 இடங்களில் புதிதாக நிறுவப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கப்பட்டன. |
| சுருக்குமடி வலை பயன்படுத்திய 5 மீனவர்கள் மீது வழக்கு Posted: 13 Sep 2014 11:53 AM PDT தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்திய 5 மீனவர்கள் மீது அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார வழக்கு Posted: 13 Sep 2014 11:53 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமண்ராவ் தோபலேவுக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| உடன்குடியில் சங்க அமைப்பு தினம் Posted: 13 Sep 2014 11:53 AM PDT உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சங்க அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. |
| லாரியில் இருந்து குப்பைத் தொட்டி தவறி விழுந்து இளைஞர் காயம்: பொதுமக்கள் மறியல் Posted: 13 Sep 2014 11:52 AM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை லாரியில் கொண்டு செல்லப்பட்ட குப்பைத் தொட்டி திடீரென தவறி கீழே விழுந்ததில், அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் காயமடைந்தார். |
| ஒடிஸா சீட்டு நிதி மோசடி: சிபிஐ விசாரணை வரம்புக்குள் முதல்வரும் வர வேண்டும் Posted: 13 Sep 2014 11:52 AM PDT ஒடிஸாவில் கோடிக்கணக்கில் நடந்திருக்கும் சீட்டு நிதி மோசடி தொடர்பாக சிபிஐ-யின் விசாரணை வரம்புக்குள் முதல்வர் நவீன் பட்நாயக்கையும் கொண்டுவர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் விஜய் மொஹாபாத்ரா வலியுறுத்தியுள்ளார். |
| பேய்க்குளத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு Posted: 13 Sep 2014 11:52 AM PDT பேய்க்குளத்தில் விவசாயியை அரிவாளால் வெட்டிய தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கோவில்பட்டியில் பேராசிரியர் வீட்டின் பூட்டு, பீரோ உடைப்பு Posted: 13 Sep 2014 11:52 AM PDT கோவில்பட்டியில் பேராசிரியை வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| புதியம்புத்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு Posted: 13 Sep 2014 11:52 AM PDT தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி 10ஆவது வார்டுக்கான இடைத்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி. மோகனை ஆதரித்து, அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட் |
| கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா Posted: 13 Sep 2014 11:52 AM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிக் குழு ஆகியவை சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| கயத்தாறில் பாரம்பரிய உணவுத் திருவிழா Posted: 13 Sep 2014 11:51 AM PDT கயத்தாறில் திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தின்கீழ் செயல்படும் ஓட்டப்பிடாரம், கயத்தாறு மகளிர் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. |
| பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு Posted: 13 Sep 2014 11:51 AM PDT கோவில்பட்டி ஸ்ரீ கண்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவுநாள் விழாவை, நல்லிணக்க நாளாக கடைபிடித்தனர். |
| எம்.பி. நிதியில் இருந்து காஷ்மீருக்கு நிதி: சீதாராம் யெச்சூரி கோரிக்கை Posted: 13 Sep 2014 11:51 AM PDT "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிவாரணம் வழங்க அனுமதியளிக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்துள்ளார். |
| மைல் கல்லில் பைக் மோதி கட்டட ஒப்பந்ததாரர் சாவு Posted: 13 Sep 2014 11:51 AM PDT விளாத்திகுளம் அருகே விருசம்பட்டியில் சாலையோர வளைவில் உள்ள நெடுஞ்சாலைத் துறை எல்லைக்கல்லில் பைக் மோதிய விபத்தில், கட்டட ஒப்பந்ததாரர் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| ஜம்மு-காஷ்மீர் அமைச்சர்கள் பிரதமருடன் சந்திப்பு Posted: 13 Sep 2014 11:50 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். |
| கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 548 பேர் பங்கேற்பு Posted: 13 Sep 2014 11:50 AM PDT விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் காலியாக உள்ள கிராம கல்விக்குழு கணக்காளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 548 பேர் பங்கேற்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |