Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்

Posted: 13 Sep 2014 03:09 PM PDT

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு. செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, ...

முதல் உதவி செய்வது எப்படி?

Posted: 13 Sep 2014 12:57 PM PDT

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற ...

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!

Posted: 13 Sep 2014 12:36 PM PDT

விபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ...

சூலக நீர் கட்டி - Polycystic Ovarian Syndrome (PCOS)

Posted: 13 Sep 2014 12:24 PM PDT

ஒரு காலத்தில் ஏதோ ஒரு சில பெண்களுக்கு இருந்த சூலக நீர் கட்டி பிரச்னை தற்போது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்னையாகிவிட்டது. சூலக நீர் கட்டி என்பதை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம் என்று கூறுகிறார். ஓவரி என்பது பெண்களின் சூலகமாகும். இதில் உருவாகும் முட்டைகள்தான் கருவாகி கருப்பையில் குழந்தையாக வளருகிறது. இந்த சூலகத்தில் நீர் நிரம்பிய ஒன்று அல்லது அதிகமான கட்டிகள் இருப்பதைத்தான் சூலக நீர் கட்டி என்கிறோம். இந்த பிரச்னை பொதுவாக நிறைய பெண்களுக்கு இருந்தாலும், இவற்றில் சில பெரிதாக ...

ஆமையும் அழகிய பெண்ணும்

Posted: 13 Sep 2014 12:18 PM PDT

ஓரு காலத்தில் நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான். அந்நாட்டில் ...

திருப்தி இல்லாத எலி!

Posted: 13 Sep 2014 12:15 PM PDT

ஒரு நகரத்தில் மந்திர, தந்திரம் அறிந்த ஒரு சாமியார் வசித்து வந்தார். அவரிடம் ஒரு எலி வந்தது. அவரைப் பார்த்து, ""மகாத்மாவே, எனக்கு பூனைகளைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது. அதனால் என் வலையை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. தயவுசெய்து என் மீது கருணை வைத்து என்னைப் பூனையாக மாற்றிவிடுங்கள். அப்போதுதான் நான் நிம்மதியாக வெளியே சுற்ற முடியும்'' என்றது. எலி கூறியதைக் கேட்டவுடன், சாமியாருக்கு எலி மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய மந்திர சக்தியினால் அந்த எலியைப் பூனையாக மாற்றிவிட்டார். ...

சிந்தனைத் துளிகள்

Posted: 13 Sep 2014 12:13 PM PDT

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Posted: 13 Sep 2014 12:08 PM PDT

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ...

ஒரு நிமிடக் கதைகள்

Posted: 13 Sep 2014 12:07 PM PDT

ஜனனம்! "பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்" என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். 'சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!' என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், "என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?" என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி ...

ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் - Andreas Vesalius

Posted: 13 Sep 2014 12:00 PM PDT

31 டிசம்பர் 1514 – 15 அக்டோபர் 1564 இன்றைக்கு மருத்துவமும், விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறி உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அக்காலத்தில் மருத்துவம் செய்த மருத்துவர்களின் பணி மகத்தானதாகும். அன்றைய மருத்துவர்கள் செய்த ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் இன்று பயிற்சி செய்யும் மருத்துவர்களுக்குப் பேருதவியாக விளங்குகின்றன. நாம் அதிகம் அறிந்திராத ஒரு சிறந்த மருத்துவ விஞ்ஞானியே "ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்' ஆவார். ஆண்ட்ரியாஸ் 1514-ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டின் ப்ரசெல்ஸ் நகரில் ஒரு மருந்தாளுநரின் மகனாகப் ...

உலக நாடுகளின் முயற்சிகளால் ஓசோன் பாதிப்பு குறைந்துள்ளது – ஐ.நா!

Posted: 13 Sep 2014 11:55 AM PDT

உலக நாடுகளின் முயற்சிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுகள் காரணமாக ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. மனித நாகரீகம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக மனிதன் வெளியிடும் நச்சுக் கழிவுகள் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. உயிர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் காத்து வந்த அதன் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டது. இது ...

சோதனை முன்னோட்டத்தில் பேஸ்புக்கின் Snapchat வசதி!

Posted: 13 Sep 2014 11:54 AM PDT

பேஸ்புக் நிறுவனம் தனது புதிய வசதியான 'ஸ்னாப்சேட்'(Snapchat)-ன் சோதனை முன்னோட்டத்தை தொடங்கியுள்ளது. முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், பயனர்களுக்கான பேஸ்புக் பக்கங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அந்நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ஸ்னாப்சேட் வசதி, பயனர்களுக்கான பதிவுகள் மற்றும் இடுகைகளில் (Postings) புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. இந்த ஸ்னாப்சேட் வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் பேஸ்புக் ...

சுய அறிமுகம் -சரண்யா

Posted: 13 Sep 2014 11:29 AM PDT

பெயர்: M .SARANYA
சொந்த ஊர்: Narayanapuram
ஆண்/பெண்: Female
ஈகரையை அறிந்த விதம்: கல்கி நோவேல்ஸ்
பொழுதுபோக்கு: ரீடிங், போட்ரி மகிங்,
தொழில்: Physiotherapist
மேலும் என்னைப் பற்றி: தமிழ் ஆர்வலர்

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 13 Sep 2014 11:22 AM PDT

சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Posted: 13 Sep 2014 11:16 AM PDT

மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போதுதான் அவரது சிறுமூளைக்குப் பதிலாக அந்த இடத்தில் மூளைப்பகுதியைப் பாதுகாக்கும் வெறும் திரவம் மட்டுமே நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே ...

டென்னிஸ் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து கார்த்திக் சிதம்பரம் அதிரடி நீக்கம்

Posted: 13 Sep 2014 11:11 AM PDT

இந்திய டென்னிஸ் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து கார்த்திக் சிதம்பரம் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இருபதவிகளில் தொடர்வதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் டென்பின் பவுலிங் கூட்டமைப்பின் தலைவராகவும், டென்னிஸ் சங்க துணைத்தலைவரகவும் உள்ளார். இந்நிலையில் இரண்டு பதவிகளில் நீடிப்பதால், டென்னிங் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவதாக, இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ...

அண்ணா பிறந்தநாள் கூட்டம்: பங்கேற்போர் பட்டியல்

Posted: 13 Sep 2014 11:05 AM PDT

சென்னை, செப். 14 – அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி வரும் 23–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பொதுக்கூட்டங்களில் பேசுவோர் யார், யார் என்ற பட்டியலையும் முதல்வர்ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். பொதுக்கூட்டங்களில் அண்ணா தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், நடிகர்–நடிகைகள் பேசுகிறார்கள். பொதுக்கூட்டங்களில் யார்–யார் பேசுகிறார்கள் என்ற விவரங்களை முதலமைச்சர் ...

புதிய புத்தகங்கள்..புதிய தளம் -ஓர் அறிமுகம்

Posted: 13 Sep 2014 11:02 AM PDT

ஈகரை உறவுகளே மின்நூல்களுக்காக புதிய தளம் ஒன்றை துவங்கி உள்ளேன். நான் ஏற்கனவே தமிழ்த்தேனீ என்ற தளத்தில் மின்நூல் வழங்கி கொண்டிருந்தேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள்.. சிலகாரணங்களால் அத்தளத்தை தொடர இயலவில்லை..என்றாலும் இப்போது புதுப்போலிவோடு ஒரு தளம் துவங்கப்பட்டது..மின்நூல்களுக்காக. இங்கு நான் உருவாக்கும் மின்நூல்கள் பதிவிடப்படும்..மேலும் பின்னூட்டதில் பரிந்துரைக்கப்படும் மின்நூல்களையும் வழங்க முயற்சிகள் நடைபெறும் என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். தளமுகவரி http://tamilebooks.net வழக்கம் ...

செவ்வாய்கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்: 95 சதவீத பயணம் நிறைவானதாக அறிவிப்பு!

Posted: 13 Sep 2014 10:52 AM PDT

(13/09/2014) சென்னை: இன்னும் 10 தினங்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது. ரூ.450 கோடியில் 'மங்கள்யான்' விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் மங்கள்யான் பயணிக்கிறது. ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 13 Sep 2014 10:44 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு!

Posted: 13 Sep 2014 10:35 AM PDT

'' வாழ்கை இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கின்றது. அற்புதமான மூன்று குழந்தைகளின் தந்தை. எதிர்காலத்தை நினைத்து ஆச்சரியமாக உள்ளது. கடந்தகால சம்பவங்களை மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நல்ல விதமாக அமைக்க முடியும் '' என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் பக்குவம் காட்டுகிறார் ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் கீய்த் வார்னே. இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் வார்னே. பல வருடங்களுக்கு முன்பு வார்னே ஓய்வு பெற்று விட்டாலும், கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே ஒரு சகாப்தமாக வலம் ...

திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted: 13 Sep 2014 10:33 AM PDT

மதுரை: திருமணத்திற்கு முன் ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. போடியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவரிடம் உள்ள ஆண்மை குறைபாடு காரணமாக அந்த பெண் விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ...

என்னை பற்றிய சுய விவரம்

Posted: 13 Sep 2014 10:03 AM PDT

பெயர்: மணிவேந்தன்.து
சொந்த ஊர்: மதிலுக்கு புகழ் பெற்ற மன்னார்குடி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளத்தில் தேடியது
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது,இணையதளம்,
தொழில்: ஆராய்ச்சி மாணவர்
மேலும் என்னைப் பற்றி: அதிகமான முறையில் படிக்க வேண்டும்

ம் - ஷோபா சக்தி நாவல் .

Posted: 13 Sep 2014 08:47 AM PDT

ஷோபாசக்தி புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவர். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், பதிப்பு ஆகியன இவரது முதன்மையான செயற்பாட்டு வெளிகளாக உள்ளன. ம் - ஷோபா சக்தி நாவல் வரலாற்றுப் பின்னணி , உண்மைச் சம்பவங்கள், உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் ...

திருவழுந்தூர் சிவக்கொழுந்து - கல்கி சிறுகதை.

Posted: 13 Sep 2014 08:46 AM PDT

ஏப்ரல்2014-வேதியல் டுடே மாத இதழ் இலவசமாக டவுன்லோட் செய்ய .

Posted: 13 Sep 2014 08:45 AM PDT

1-4-2014-Chemistry Today Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Chemistry Today is one of the educational magazine targetting iit jee and other pre-engineering entMathematics Today is one of the educational magazine targetting iit jee and other pre-engineering entrance exams.rance exams. Chemistry Today – April 2014 English | 88 pages | PDF | 55.3 MB டவுன்லோட் லிங்க் http://www39.zippyshare.com/v/32539242/file.html

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?

Posted: 13 Sep 2014 08:41 AM PDT

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் ...

பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!

Posted: 13 Sep 2014 08:29 AM PDT

சென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்பட தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படாத பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " காந்திய மக்கள் இயக்கம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடந்தேறிய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் ...

மம்மூட்டியின் சவாலை ஏற்ற விஜய்!

Posted: 13 Sep 2014 08:06 AM PDT

ஐஸ் பக்கெட் சேலஞ்சை தொடர்ந்து இணையத்தில் தற்போது 'மை ட்ரீ சேலஞ்ச்' அதிகம் பிரபலமாகி வருகிறது. மலையாளத் திரை உலகைச் சார்ந்த பலரும் இந்த சேலஞ்சை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். இந்நிலையில் மம்மூட்டி 'மை ட்ரீ சேலஞ்ச்' செய்தார். தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் இந்தி நடிகர் ஷாரூக் கான் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை முன்வைத்தார். மம்மூட்டியின் ரசிகர்கள் வீடுகள், மற்றும் பொது இடங்களில் மரங்கள் நடத் துவங்கியுள்ளனர். மம்மூட்டி சொன்னதற்கு இணங்க, விஜய் 'மை ட்ரீ சேலஞ்ச்' செய்திருக்கிறார். அதனால், விஜய் ...

வரலாற்றில் இன்று - செப்டம்பர்

Posted: 13 Sep 2014 07:57 AM PDT

வரலாற்றில் இன்று - செப்டம்பர்' 1 1715 - பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன். 1752 - விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது. 1798 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர். 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர். 1894 - அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் ...

வாலு, இது நம்ம ஆளு எப்போ ரிலீஸ்? - சிம்பு பதில்

Posted: 13 Sep 2014 07:37 AM PDT

2012ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. 'வாலு' படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய படங்கள் குறித்து சிம்பு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். '' 'வாலு' மற்றும் 'வேட்டை மன்னன்' ஆகிய இரண்டும் படங்களுக்கும் ஒரே தயாரிப்பாளர்தான். தற்போது 'வாலு' படம் ரிலீஸ் ஆக உள்ளது. நவம்பரில் 'வாலு' ரிலீஸ் ஆகும்.'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்புகள் ...

ஐ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

Posted: 13 Sep 2014 07:36 AM PDT

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 'ஐ'. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 'ஐ'. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான இரண்டு நாட்களில் 5 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் ரசித்துள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் ...

குடிப்பழக்கம்

Posted: 13 Sep 2014 07:01 AM PDT

குடி - மகனே (ளே) !!!!
மதுவால் மதியிழந்து
மனித்தத்தை இழந்து
வாழ்விழந்து
கடைசியில் உயிரையே இழக்கிறாய்!!!
ஆனால் உங்களால்
தினம் தினம் கண்ணீர்விடும் ...
உன் மீது பாசமுள்ளவர்கள் படும்
பாட்டை அறிவாயா ?

உன் இந்த கேடான குடியினால்
ஏன் சமுதாயத்தை கேடாக்குகிறாய் ?
ஒன்று குடியினை மற
அன்றேல் நல் குடி காக்கும்
மனிதனாய் மாறப் பார் !!!

சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted: 13 Sep 2014 04:59 AM PDT

'சுத்தமான இந்தியா' என்னும் இயக்கத்தை வருகிற 2–ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது பற்றி பொதுமக்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். மகாத்மாவின் கனவு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் முக்கிய பொதுநலத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னோட்டமாக பொதுமக்களின் கருத்துகளை இணைய தளம் மூலம் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது தற்போதுள்ள திட்டக் கமிஷனை அகற்றிவிட்டு வேறு புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான ...

விடியல் விடியட்டும்

Posted: 13 Sep 2014 04:54 AM PDT

விடியல் விடியட்டும். ஏதோ ஒன்று எண்ணுகிறேன். ஏதோ ஒன்று பண்ணுகிறேன். தோதாய் வரும் சொற்களுடன். சாதகம் பழகி பேசுகிறேன். பொழுதைப் போக்க எழுதுகிறேன். பொழுதைத் தேடி உலவுகிறேன். பொழுது முடிந்து போகுமுன் பொழுது விடிந்திடப் பாடுகிறேன். அவசரம் கருதி ஓடுகிறேன்/ அவசியம் உறுதி நாடுகிறேன். அபசுரம் திருந்த வேண்டுகிறேன். இகசுகம் பொருந்த தூண்டுகிறேன். உயிர்களை நான் நேசிக்கிறேன். உணர்வுகளைத் தான் வாசிக்கிறேன். மனங்களை நான் யாசிக்கிறேன். மனிதரைத் தான் யோசிக்கிறேன். ஆதி மூலம் ஆய்கிறேன். ஆய்ந்து ...

அன்பின் படித்திறன்

Posted: 13 Sep 2014 04:35 AM PDT

பல நாட்கள் பழகியிருப்போம்
இருந்தாலும்
மனம் எல்லாவற்றையும்
அவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை
சில நாட்களே பழகியிருப்போம்
இருந்தாலும்
அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை
என்ற நிலைதான் நம் உள்ளங்களில்

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

Posted: 13 Sep 2014 04:14 AM PDT

உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் ...

அன்பின் வலி

Posted: 13 Sep 2014 03:32 AM PDT

நெறுங்கும் போது விலகுவதும்
விலகும் போது நெறுங்குவதும் சகஜமே
ஆனால் இந்த விளையாட்டில்
அன்பை மட்டும் சேர்க்காதீர்கள்
பின்பு கண்ணீர்தான் விடை

நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது.

Posted: 13 Sep 2014 03:06 AM PDT

- நடிகை பூனம் பாண்டே. தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப் படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவரது பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனது பேஸ்புக் பக்கம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளேன். என்னை 20 லட்சம் பேர் பேஸ்புக்கில் லைக் செய்திருந்தனர். என் கணக்கை மீண்டும் எப்படி பெறுவது என்று கூறுங்கள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். - ================== குறிப்பு: # 20 லட்சம் பேரில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™