Tamil News | Online Tamil News |
- விரைவில் முடிவுக்கு வரும் காற்றாலை சீசன்: மின் தேவையை சமாளிக்குமா மின் வாரியம்?
- இருபது அமைச்சர்கள் இருந்தும் உற்சாகம் 'மிஸ்சிங்'
- தேர்தல் விதிமீறல் வழக்கு விவரங்கள் இல்லை: காவல் துறையை கைகாட்டுகிறது ஆணையம்
- பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்திற்கு கடைசி இடம்
- 'ஜம்மு - காஷ்மீர் மக்கள் பீதி அடைய வேண்டாம்!'மத்திய அரசு வேண்டுகோள்
- மூத்த தலைவர்களுக்கு எதிராக திரளும் இளைஞர்கள்: காங்கிரசுக்குள் சூழும் உட்கட்சி போர் மேகம்
- பொது இடங்களில் இனி புகை பிடித்தால் ரூ.20,000 அபராதம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு
- பா.ஜ., வேட்பாளர்களை பொது வேட்பாளர் ஆக்க தீவிரம்: விஜயகாந்த் யோசனையை ஏற்பாரா கருணாநிதி?
- 3 முக்கிய நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு
- சென்னையில் மேலும் ஒரு பாக்., உளவாளி கைது : தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை
| விரைவில் முடிவுக்கு வரும் காற்றாலை சீசன்: மின் தேவையை சமாளிக்குமா மின் வாரியம்? Posted: தமிழகத்தில், விரைவில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், அக்டோபர் முதல், மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, குடியிருப்புகளுக்கு, சுழற்சி முறையில், சென்னையில், இரண்டு மணி நேரம்; மற்ற பகுதிகளுக்கு, நான்கு மணி நேரம், மின் தடை அமல்படுத்தப்பட்டது.மின்தடை:தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில், மின்சாரம் பயன்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.வல்லுார் இரண்டாவது அலகு, 500; வட சென்னை விரிவாக்கம், 1,200; மேட்டூர் விரிவாக்கம், 600 மெகாவாட் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்கள் மூலம், ... |
| இருபது அமைச்சர்கள் இருந்தும் உற்சாகம் 'மிஸ்சிங்' Posted: கோவை:இடைத்தேர்தல் வெற்றிக்காக, கோவையில் 20 அமைச்சர்கள் முகாமிட்டு, தேர்தல் பணி செய்தாலும், ஒருங்கிணைப்பு இல்லாததால், ஆளும்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்வதற்காக, மூத்த அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், 15 தமிழக அமைச்சர்கள் கோவையில் முகாமிட்டு, தேர்தல் பணியைச் செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், 5லிருந்து 6 வார்டுகள் வரை பிரித்துத் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே, 16 அமைச்சர்கள் இங்குள்ள நிலையில், திருநெல்வேலி மேயர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு ... |
| தேர்தல் விதிமீறல் வழக்கு விவரங்கள் இல்லை: காவல் துறையை கைகாட்டுகிறது ஆணையம் Posted: தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த விவரங்கள் எதுவும், தேர்தல் ஆணையத்தில் இல்லை என, தெரியவந்துள்ளது.தமிழகத்தில், கடந்த லோக்சபா தேர்தலின் போது, பல இடங்களில், அரசியல் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தது உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டதாக, புகார்கள் எழுந்தன.கேட்கப்பட்ட விவரங்கள்:போலீசார், வாகன சோதனை நடத்தி, கணக்கில் வராத ஏராளமான பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பாதிக்கப்பட்ட கட்சியினரும், பொதுமக்களும் கொடுத்த தகவல்கள், புகார்களை தொடர்ந்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இத்தகைய வழக்குகள், ... |
| பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்திற்கு கடைசி இடம் Posted: சென்னை: மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட பட்டியல் மூலம், தமிழகம், பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வந்து ள்ளது. பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகார், இரட்டை இலக்க வளர்ச்சியுடன், முதலிடத்தை பிடித்துள்ளது.ஒரு மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்து, அதன் பொருளாதார வளர்ச்சி இருக்கும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றால், தொழில் நிறுவனங்களுக்குள் போட்டி இருக்க வேண்டும். போட்டிக்கான சூழல், கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறைவான முதலீடுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மத்திய புள்ளியியல் அலுவலகம் ... |
| 'ஜம்மு - காஷ்மீர் மக்கள் பீதி அடைய வேண்டாம்!'மத்திய அரசு வேண்டுகோள் Posted: ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், வெள்ளப் பெருக்கில் கடுமையாக பாதிக்கப்பட்டஸ்ரீநகரில், வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை. நான்கு லட்சம் பேர், உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர். 'வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் மீட்கப்படுவர். மக்கள், பீதியடைய தேவையில்லை' என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.முழு வீச்சில்...:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவு, பேய் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும், வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால், மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் ... |
| மூத்த தலைவர்களுக்கு எதிராக திரளும் இளைஞர்கள்: காங்கிரசுக்குள் சூழும் உட்கட்சி போர் மேகம் Posted: 'ராகுலை சீண்டும் வகையில், அவரை தாக்கி, அநாவசியமாக பேசக்கூடாது' எனக் கூறி, மூத்த தலைவர்களுக்கு எதிராக, இளைய தலைமுறை நிர்வாகிகள், பகிரங்கமாக களம் இறங்கியுள்ளனர். காங்., கட்சிக்குள் சூழ்ந்துள்ள, இந்த உட்கட்சி போர் மேகம் காரணமாக, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தோல்வியின் பாதிப்பில் இருந்து, காங்., மீள முடியாமல், தவித்து வருகிறது. இந்நிலையில், அந்த கட்சிக்குள், மிகப் பெரிய அளவில் உட்கட்சி பூசல்கள் உருவாகியுள்ளன. ராகுலின் தலைமையில், தேர்தலை சந்தித்து, தோற்றுப் போனதை அடுத்து, அவருக்கு எதிராக, குரல்கள் கிளம்பின. கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் ... |
| பொது இடங்களில் இனி புகை பிடித்தால் ரூ.20,000 அபராதம்: வல்லுனர் குழு பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு Posted: புதுடில்லி: புகை பிடிப்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளை கட்டுப்படுத்தவும், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவை குறைக்கவும், ஆலோசனை வழங்க, மத்திய சுகாதாரத் துறை அமைத்த வல்லுனர் குழு, 'பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்' என்பது உட்பட பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது; அரசு, பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளது. பார்லி.,யில் மசோதா தாக்கல் செய்து, இதை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.உயிரை கொல்லும் புற்றுநோய்க்கு, பல காரணங்கள் கூறப்படுகின்றன. வாழ்க்கை முறை மாறுபாடு, உணவு பழக்க வழக்கங்களில் உள்ள சிக்கல்கள் போன்ற ... |
| பா.ஜ., வேட்பாளர்களை பொது வேட்பாளர் ஆக்க தீவிரம்: விஜயகாந்த் யோசனையை ஏற்பாரா கருணாநிதி? Posted: துாத்துக்குடி, கோவை மேயர் தேர்தல் உட்பட, உள்ளாட்சி இடைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை, பொது வேட்பாளர்கள் ஆக்கும் முயற்சியில், விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இந்த திட்டத்தை, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில், புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வரும், 18ம் தேதி, உள்ளாட்சி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் பட்ட காயத்திற்கும், அ.தி.மு.க., மூலம் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கும், உள்ளாட்சி இடைத்தேர்தல் மூலம் ஆறுதல் தேட, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது.இதற்காக, உள்ளாட்சித் தேர்தலில், எவ்வாறு ... |
| 3 முக்கிய நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு Posted: புதுடில்லி: பிரதமர், நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி., எனப்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு கழகம், என்.எச்.பி.சி., எனப்படும் தேசிய புனல் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் சி.ஐ.எல்., எனப்படும் மத்திய நிலக்கரி நிறுவனத்தின், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்று, 43 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, ஓ.என்.ஜி.சி.,யின் பங்குகளில், 5 சதவீதம், இந்திய நிலக்கரி நிறுவனத்தின், 10 சதவீதம் மற்றும் என்.எச்.பி.சி.,யின், 11.36 சதவீத பங்குகளை விற்க முடிவானது.அதுபோல், நலிவடைந்த, 11 ... |
| சென்னையில் மேலும் ஒரு பாக்., உளவாளி கைது : தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை Posted: சென்னை: சென்னையில் மேலும் ஒரு பாகிஸ்தான் உளவாளியை,தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.சென்னை மண்ணடியில், மருந்து வியாபாரி போல் நடித்து, அமெரிக்க துணை துாதரம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துாதரகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டிய, இலங்கையை சேர்ந்த, ஜாகீர் உசேன் சமீபத்தில், போலீசில் பிடிபட்டான்.அவனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமாபுரத்தை சேர்ந்த சிவபாலன் உள்ளிட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இலங்கை துாதரக அதிகாரிகள், சுபேந்தர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |