மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நித்யானந்தாவின் மனு தள்ளுபடி: ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ. மீது மர்ம மனிதன் துப்பாக்கி சூடு
- கேரளாவில் கனமழை நீடிப்பு: மின்தடையால் மக்கள் அவதி
- தங்க நிறம் பூசி புதுப்பிக்கப்படும் திருப்பதி கோவில் கோபுரங்கள்
- டெல்லியில் செயின் பறிப்பை தடுக்க சைக்கிளில் போலீசார் ரோந்து
- ஜம்மு வைஷ்ணவ தேவி குகைக் கோயிலில் ஜனாதிபதி வழிபாடு
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. இயக்குனர் புதிய சர்ச்சையில் சிக்கினார்
- 2ஜி வழக்கு: இடைக்கால தடை கோரிய கனிமொழி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- இந்தியாவில் புற்றுநோயால் நான்கு வருடங்களில் 40 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்: சுகாதாரத்துறை தகவல்
- சுப்ரமணியசாமி மீது கட்சித்தலைமையிடம் புகார்: தமிழக பா.ஜ.க. முடிவு
- அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை நிர்வாகம்
- நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்
- 30 ஆண்டுகளில் 6 வீடுகள்-2 சொகுசு கார் வாங்கிய பியூன்: லோக்ஆயுக்தா போலீஸ் ரெய்டு
- மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் வாகன்வதி காலமானார்
- புதுவை பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள்: ஜனாதிபதி ஒப்புதல்
- தூய்மையான இந்தியா இலக்கை 2019-க்குள் எட்டுவோம்: மோடி அழைப்பு
- ஒரே மாதத்தில் 220000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சவுதி அரசு
- ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் சூரிய ஒளி விளக்குகள்: கிழக்கு மத்திய ரெயில்வே முடிவு
- ஜம்மு எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கம் கண்டுபிடிப்பு: தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு
| நித்யானந்தாவின் மனு தள்ளுபடி: ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 02 Sep 2014 10:57 PM PDT கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், நித்யானந்தாவின் பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்பவர், அங்கிருந்து வெளியேறி, பிடதி போலீசில் நித்யானந்தாவுக்கு எதிராக, பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் கைதான நித்யானந்தா ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு ராம் நகர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு, ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா அப்பீல் மனு தாக்கல் செய்தார். |
| டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ. மீது மர்ம மனிதன் துப்பாக்கி சூடு Posted: 02 Sep 2014 10:46 PM PDT டெல்லி மாநில சட்ட சபைக்கு சக்தாரா தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிதேந்திரசிங் சன்டி. இவரது வீடு கிழக்கு டெல்லியில் உள்ள விவேக் விகார் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்திரசிங் எம்.எல்.ஏ. வீட்டுக்கு மர்ம மனிதன் ஒருவன் வந்து அழைப்பு மணியை அழுத்தினான். சத்தம் கேட்டு எம்.எல்.ஏ. வந்து கதவை திறந்தார். அப்போது வெளியில் ஹெல்மெட் |
| கேரளாவில் கனமழை நீடிப்பு: மின்தடையால் மக்கள் அவதி Posted: 02 Sep 2014 10:36 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் வழக்கமான அளவை விட அதிகளவில் மழை பெய்து வருகிறது. ஆகஸ்டு மாதத்தின் கடைசியில் கனமழை பெய்ய தொடங்கியது. செப்டம்பர் மாதம் பிறந்த பிறகும் கனமழை நீடிக்கிறது. கடந்த ஒரு வாரமாக |
| தங்க நிறம் பூசி புதுப்பிக்கப்படும் திருப்பதி கோவில் கோபுரங்கள் Posted: 02 Sep 2014 10:25 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரங்கள் 7 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. கோவில் ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள் கைகள் உடைந்தும், மூக்கு பகுதிகள் உடைந்தும் காணப்படுகிறது. பறவைகள் பழங்களை தின்று போடும் எச்சத்தில் உள்ள விதைகள் மூலம் கோவில் கோபுரத்தில் அரசமரம் மற்றும் செடிகள் முளைத்து காணப்படுகிறது. அவ்வப்போது இதை பிடுங்கினாலும் மீண்டும் முளைத்து விடுகிறது. இதனால் |
| டெல்லியில் செயின் பறிப்பை தடுக்க சைக்கிளில் போலீசார் ரோந்து Posted: 02 Sep 2014 10:12 PM PDT டெல்லியில் செயின் பறிப்பை தடுக்க சைக்கிளில் போலீசார் ரோந்து |
| ஜம்மு வைஷ்ணவ தேவி குகைக் கோயிலில் ஜனாதிபதி வழிபாடு Posted: 02 Sep 2014 09:38 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வைஷ்ணவ தேவி குகைக் கோயிலுக்கு 127 படிகளில் ஏறிச் செல்வதற்கு மாற்றாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மின்தூக்கி சேவையை நேற்று துவக்கி வைத்தார். பின்னர், பேட்டரி காரில் அமர்ந்தபடி ஆலய வளாகத்தை சுற்றிப்பார்த்தார். ஆலயத்துக்குள் சென்று வைஷ்ணவ தேவியை வழிபாடு செய்த ஜனாதிபதி, தரிசனத்துக்கு வந்திருந்த இதர பக்தர்களுடன் கலந்துரையாடினார். |
| வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து Posted: 02 Sep 2014 09:19 PM PDT திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4–ந் தேதி வரை (9 நாட்கள்) நடக்க இருக்கிறது. விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் வாகன ஊர்வலம் நடக்கும். |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: சி.பி.ஐ. இயக்குனர் புதிய சர்ச்சையில் சிக்கினார் Posted: 02 Sep 2014 08:59 PM PDT ஆ.ராசா, தொலை தொடர்புத்துறை மந்திரி பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன்களுக்கான வழக்கு அமைப்பு வழக்கு தொடுத்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து 122 உரிமங்களை ரத்து செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் |
| 2ஜி வழக்கு: இடைக்கால தடை கோரிய கனிமொழி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 02 Sep 2014 08:53 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி |
| இந்தியாவில் புற்றுநோயால் நான்கு வருடங்களில் 40 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்: சுகாதாரத்துறை தகவல் Posted: 02 Sep 2014 05:15 PM PDT இந்தியாவில் உயிர்கொல்லி நோயான புற்றுநோயால் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நாற்பது லட்சம் பேர் பலியாகியுள்ளதாக சுகாதார துறை அறிக்கை தகவல் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள தவறினால் இந்நோய் உயிரையே பறித்து விடும். இந்நோய்க்கெதிராக இந்தியா கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் |
| சுப்ரமணியசாமி மீது கட்சித்தலைமையிடம் புகார்: தமிழக பா.ஜ.க. முடிவு Posted: 02 Sep 2014 01:45 PM PDT தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான தந்தி டி.வி.க்கு பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினரான சுப்ரமணியசாமி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்தார். அப்போது தமிழக மீனவர்களின் படகுகளை பிடித்துக்கொள்ளுங்கள். அப்படகுகளை நீங்கள் விடுவிக்காதீர்கள் என்று நான் தான் இலங்கை அரசிடம் சொன்னேன் என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு நகரங்களில் சுப்ரமணியசாமியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழக பா.ஜ.க.வும் சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கூறிவிட்டது. |
| அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை நிர்வாகம் Posted: 02 Sep 2014 10:55 AM PDT பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஆசியன் இதயவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் இருதயத்தில் உள்ள வால்வுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. |
| நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் Posted: 02 Sep 2014 08:27 AM PDT நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார். இவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதிக்குழுவில் உள்ளார். நிலைக்குழுவில் இடம்பெறும் முதல் முன்னாள் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 24 நிலைக்குழுக்களில் 5 குழுக்களுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப் பதவி வழங்கப்படுகிறது. |
| 30 ஆண்டுகளில் 6 வீடுகள்-2 சொகுசு கார் வாங்கிய பியூன்: லோக்ஆயுக்தா போலீஸ் ரெய்டு Posted: 02 Sep 2014 07:10 AM PDT வங்கியில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அதிகாரி ஒருவர், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமித்தால் கூட தனது 30 ஆண்டு சர்வீசில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்க்க முடியாது. ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வங்கியில் உதவியாளராக (பியூன்) வேலை பார்த்து வரும் குல்தீப் யாதவ் என்பவர் 6 பெரிய வீடுகள் |
| மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் வாகன்வதி காலமானார் Posted: 02 Sep 2014 06:17 AM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் 2004-ம் ஆண்டு முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் செய்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியவர் வாகன்வதி. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகி தனது வாதத்திறமையை வெளிப்படுத்தியவர். |
| புதுவை பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள்: ஜனாதிபதி ஒப்புதல் Posted: 02 Sep 2014 05:02 AM PDT யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டமேலவை கிடையாது. ஆனால், 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துக்கொள்ளலாம். அதன்படி தற்போதைய சட்டப்பேரவையில், பாலன், ஜெயபால் மற்றும் விஸ்வேஸ்வரன் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரையானது கவர்னர் மூலம் |
| தூய்மையான இந்தியா இலக்கை 2019-க்குள் எட்டுவோம்: மோடி அழைப்பு Posted: 02 Sep 2014 04:46 AM PDT ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோவில் இன்று இந்திய சமுதாயத்தினரியே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நமது பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டும். நாட்டை விட்டு எங்கு சென்றாலும் |
| ஒரே மாதத்தில் 220000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சவுதி அரசு Posted: 02 Sep 2014 04:22 AM PDT இந்திய வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கும், சவுதி முதலாளிகளுக்கும் இடையே தொடர வேண்டிய ஒப்பந்த உறவுகளை சீரமைக்கும் விதமாக ஒரு உடன்பாடு இரு நாடுகளாலும் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்டது. இதில் டிரைவர்கள், கிளீனர்கள், காவலர்கள், பணியாளர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் தனியாரிடத்தில் பணிபுரியும் வீட்டுவேலை நிர்வாகிகள் போன்ற 12 பிரிவுகளுக்கான விதிமுறைகளை இந்த உடன்பாடு மேற்கொண்டிருந்தது. |
| ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் சூரிய ஒளி விளக்குகள்: கிழக்கு மத்திய ரெயில்வே முடிவு Posted: 02 Sep 2014 03:49 AM PDT ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள 2,113 லெவல் கிராசிங்குகளில் 1,127 கண்காணிப்புடனும் மற்றவை ஆளில்லா கிராசிங்குகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் மக்களிடையே பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. |
| ஜம்மு எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கம் கண்டுபிடிப்பு: தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு Posted: 02 Sep 2014 03:37 AM PDT ஜம்மு பிராந்தியத்தின் முக்கியமான பல்லன்வாலா செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவதற்காக 150 மீட்டர் நீளத்தில் தோண்டப்பட்டிருந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |