Tamil Star |
- 4.4.2 கிட்கேட் கொண்ட ZTE வி5 ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் அறிமுகம்!
- யுஎஸ் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் செரீனா!
- இங்கிலந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா!
- சுவாச நோய்களைத் தடுக்க சில வழிகள்!!!
- 2 வாரத்தில் உக்ரைன் தலைநகர் எங்கள் வசமாகிவிடும்: புதின் மிரட்டல்!!
- அமெரிக்க பத்திரிக்கையாளரின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!
- ஐ.நா விசாரணைகள் பற்றிய தகவல்கள் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கசிவு!
- கனடா பூராவும் சைக்கிள் ஓட்டிச்சென்றவர் விபத்தில் கொல்லப்பட்ட கொடூரம்
- மலேசியாவில் இலங்கையரை வெளியேறுமாறு உத்தரவு!
- ஹரீனுடன் சந்தித்தது பற்றி நாமல் விளக்கம்!
- ரொறன்ரோவில் பெண் பலாத்காரம்! இருவர் கைது
- இரண்டாக வெட்டியும் இறக்க மறுக்கும் மீனின் பரிதாப காட்சி!
- சூப்பர்ஸ்டாரின் வசனத்தை அழகாக தமிழில் கூறும் ஜப்பான் குடிமகன்!
- தண்ணீரில் மொபைல் விழுந்தால் என்ன செய்யனும்னு தெரியுமா?
- சூர்ய கதிர்களுக்கு எவ்வளவு சக்தி இருக்குதுனு தெரியுமா?
- பயமுறுத்தும் உருவத்தினுள் ஒளிந்திருக்கும் 1000 குட்டீஸ்களின் குறும்புத்தனம்!
- வாட்ஸ்ஆப்பில் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் வசதி!
- ஷரபோவாவை வீழ்த்தினார் வோஸ்னியாக்கி: கால் இறுதியில் 17 வயது பென்சிக்!
- ஒருநாள் ரேங்கிங்: இந்தியா நம்பர் 1
- மனிதர்களை தாக்கும் ஈ.வி.டி எனப்படும் நோயிலிருந்து தப்பிக்க 8 வழிகள்!!
| 4.4.2 கிட்கேட் கொண்ட ZTE வி5 ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் அறிமுகம்! Posted: 02 Sep 2014 10:45 PM PDT
ZTE நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போன் தொகுப்பு விரிவடைந்து, வி5 ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ZTE ஸ்மார்ட்போன் ஆன்லைனில் செவ்வாய்க்கிழமை தொடங்கி Snapdeal-ல் பிரத்தியேகமாக கிடைக்கும். இந்த கைபேசி ஃபிசிக்கல் சில்லறை விற்பனையாளர் கடைகளில் கிடைக்கும் என்பதை பற்றி எந்த வார்த்தையும் இல்லை. மேலும் இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீபெய்ட் ஏர்செல் சந்தாதாரர்கள் ZTE வி5 ஸ்மார்ட்போன் வாங்கினால் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 1GB 2G / 3G டேடா இலவசமாக வழங்கி வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட ZTE வி5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. ZTE வி5 ஸ்மார்ட்போன், 720x1280 பிக்சல்கள் தீர்மானங்கள் உடன் ஒஜிஎஸ் மற்றும் டிராகன்டிரெயில் கிளாஸ் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் LED ஃபிளாஷ் உடன் சோனி Exmor CMOS சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் BSI சென்சார் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. பின்புற கேமராவில், லைட்மீட்டர், ஆட்டோஃபோகஸ், ஸ்டெப்ளைசர், ஸ்பெஷல் எபக்ட்ஸ், பனோரமா, மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் அம்சங்கள் வருகிறது. ZTE வி5 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3 ஜி, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, Glonass, ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும். இதில் 2400mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ZTE வி5 ஸ்மார்ட்போன் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ZTE வி5 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 720x1280 பிக்சல்கள் தீர்மானங்கள் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர், மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3 ஜி, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, Glonass, ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2400mAh பேட்டரி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| யுஎஸ் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் செரீனா! Posted: 02 Sep 2014 10:40 PM PDT
யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார்.நான்காவது சுற்றில் எஸ்டோனியாவின் கயா கானெபியுடன் நேற்று மோதிய செரீனா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரா குருனிக்கை (செர்பியா) வீழ்த்தினார். இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸி டெல்லாகுவாவை (ஆஸி.) வீழ்த்தினார். ரஷ்யாவின் எகடரினா மகரோவா 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் (கனடா) யூஜெனி பவுச்சார்டை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் கோல்ஸ்கிரைபரை (ஜெர்மனி) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். கனடாவின் மிலோஸ் ரயோனிக்குடன் மோதிய கெய் நிஷிகோரி (ஜப்பான்) 4-6, 7-6 (6-4), 6-7 (6-8), 7-5, 6-4 என 5 செட்களில் நான்கு மணி, 19 நிமிட நேரம் கடுமையாகப் போராடி வென்றார். இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் ஜோ வில்பிரைடு சோங்காவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.பயஸ் ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரேடக் ஸ்டெபானக் (செக்.) ஜோடி 2-6, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிரானோலர்ஸ் - லோபஸ் ஜோடியிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. சானியா முன்னேற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஜெலினா ஜன்கோவிச் (செர்பியா) - கிளாரா குகலோவா (செக்.) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சானியா மிர்சா - புரூனோ சோரஸ் (பிரேசில்) ஜோடி 7-5, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கடாரினா ஸ்ரெபோட்னிக் (ஸ்லோவேனியா) ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா! Posted: 02 Sep 2014 10:37 PM PDT
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொரை இந்தியா கைப்பற்றியது. ரஹானே அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹனே மற்றும் தவான் ஜோடி சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. இந்த ஜோடி சிறப்பாக விளையாடி183 ரன்களை குவித்தது. ரஹானே 106 ரன்களும், சிகர் தவான் 97 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுவாச நோய்களைத் தடுக்க சில வழிகள்!!! Posted: 02 Sep 2014 10:29 PM PDT
வெயில் கால புழுக்கத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும், தண்ணீர் பற்றாக்குறை எப்போது நீங்கும், விவசாயத்திற்கு எப்போது நல்ல மழை கிடைக்கும் என்று பலரும் ஒவ்வொரு காரணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலம் மழைக்காலம். மழை பெய்தால் மண் செழிக்கும். இருப்பினும் மழைக்காலம் துவங்கும் போது குழந்தைகளும், பெரியவர்களும் சில பொதுவான நோய்களால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பலத்த மழை வரும் போது, அதனுடன் சேர்ந்து அடிக்கடி சில நோய்களும் வந்துவிடுகின்றன. ஜலதோஷம், இருமல், காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஆகியவை மழைகாலத்தில் ஏற்படும் பொதுவான நோய்களாகும். ஆனால் மலேரியா, டெங்கு, தண்ணீர் மற்றும் உணவுத் தொற்றுவியாதிகள் போன்ற மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். இந்த பொதுவான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம். பொதுவான சுவாச நோய்களைத் தவிர்ப்பதற்கு, வெளியில் செல்லும் போது எபோதும் மழைக் காப்புப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். காலையில் சில வேளைகளில் மழைவராதது போல் வெயில் இருக்கலாம். ஆனாலும் குடை அல்லது மழைக்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் அந்த நாளில் எந்த நேரத்தில் மழை வந்தாலும் உங்களுக்கு இவை உதவியாக இருக்கும். நீங்கள் மழையில் நனைந்தால், அதற்குப் பின்னர் குளிக்க வேண்டும். இதனால் நோய்த்தொற்று பரவாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அடைமழையில் சிக்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன், சூப் அல்லது சூடான பால் போன்ற ஏதாவது சூடான பானம் அருந்துங்கள். உங்கள் உடல் வெப்பநிலை மாற்றத்தால், ஜலதோஷம் அல்லது நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்கு இது உதவும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2 வாரத்தில் உக்ரைன் தலைநகர் எங்கள் வசமாகிவிடும்: புதின் மிரட்டல்!! Posted: 02 Sep 2014 10:21 PM PDT
தாம் உத்தரவிட்டால் 2 வாரத்துக்குள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றிவிடுவோம் என்று ரஷ்யா அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனின் கிரீமியா பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தது முதலே அப்பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அத்துடன் கிழக்கு உக்ரைனிலும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா கோரி வருகிறது. ஆனால் உக்ரைனோ தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல் பர்ரோசாவுடன் கடந்த வெள்ளியன்று தொலைபேசியில் ரஷ்யா அதிபர் புதின் பேசியிருக்கிறார். அப்போது, நான் இப்பொழுது உத்தரவிட்டாலும் 2 வார காலத்துக்குள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றிவிட முடியும் தெரியுமா? என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இதை ஜோஸ் மேனுவல் ஊடகங்களில் தெரிவிக்க இப்போது பரபரப்பாகிவிட்டது. அதே நேரத்தில் ரஷ்யா அதிபர் புதின் அப்படி சொல்லவே இல்லை என்றெல்லாம் அந்நாட்டு அரசு மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க பத்திரிக்கையாளரின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்! Posted: 02 Sep 2014 10:15 PM PDT
கடந்த ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சாட்லாஃபை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் ஃபோலியை தலையை துண்டித்து கொலை செய்து அந்த வீடியோவை கடந்த 19ம் தேதி வெளியிட்டனர். அந்த வீடியோவில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் ஸ்டீவனின் தலையை துண்டித்து கொன்று அந்த வீடியோவை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் விவரம் வருமாறு, வீடியோவில் ஸ்டீவன் ஆரஞ்சு நிற உடை அணிந்து மண்டியிட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உள்ளார். ஸ்டீவன் வீடியோவில் கூறுகையில், ஒபாமா, உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில் தலையிடுவது அமெரிக்க மக்களின் உயிரை காக்க வேண்டும். ஆனால் உங்கள் தலையீட்டுக்கு நான் ஏன் என் உயிரை பறிகொடுக்க வேண்டும்? நான் அமெரிக்க குடிமகன் இல்லையா? என்று கேட்டுள்ளார். ஸ்டீவன் அருகில் நின்ற தீவிரவாதி இங்கிலாந்து நாட்டவர் போன்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், நான் வந்துவிட்டேன் ஒபாமா. உங்களின் கொடூரமான வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, எச்சரிக்கையையும் தாண்டி தாக்குவது ஆகியவற்றால் தான் நான் திரும்பி வந்தேன் என்று கூறிவிட்டு ஸ்டீவனின் தலையை துண்டித்துவிட்டார். 31 வயதான ஸ்டீவன் கடந்த 2013ம் ஆண்டு சிரியாவில் காணாமல் போனார். தீவிரவாதிகள் எச்சரித்தும் அமெரிக்கா ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்க 350 ராணுவ வீரர்களை பாக்தாதுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா விசாரணைகள் பற்றிய தகவல்கள் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கசிவு! Posted: 02 Sep 2014 07:58 PM PDT
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகள் பற்றிய இரகசிய தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள் தொடர்பிலான 30 விடயங்கள் இவ்வாறு புலி ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த 30 விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூட கிடைக்கவில்லை. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடமையாற்றி வரும் புலி ஆதரவாளர்கள் இந்த இரகசியங்களை கசியவிட்டுள்ளனர். மன்னார் மடு தேவாலயம் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தினர் உள்ளிட்ட தகவல்கள் இந்த இரகசிய தகவல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சனல்4 ஊடகத்தின் நோபயர் ஸோன் காணொளிää வெள்ளைக் கொடி சம்பவம்ää ஊடகவியலாளர் சிவராம் படுகொலை, ஐ.நா காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பிலான சாட்சியங்களை அளிக்குமாறு புலி ஆதரவாளர்கள் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா பூராவும் சைக்கிள் ஓட்டிச்சென்றவர் விபத்தில் கொல்லப்பட்ட கொடூரம் Posted: 02 Sep 2014 07:55 PM PDT
ரொறொன்ரோவைச் சேர்ந்த Graeme Loader என்பவர் உலக வனவிலங்கு நிதியத்திற்கு நிதி சேர்க்கும் பொருட்டு கனடா பூராகவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 23-வயதுடைய இவர் மனிரோபா பகுதியில் Trans-Canada நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கையில் திங்கள்கிழமை இரவு 8-மணியளவில் அதே பாதையில் சென்று கொண்டிருந்து SUV வாகனம் ஒன்றினால் அடிக்கப்பட்டு இறந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. வாகனத்தை செலுத்தி சென்ற 28-பெண் மற்றும் அவருடன் வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இவர்கள் மனிரோபாவைச் சேர்ந்தவர்கள். Loader ன் பெயரை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால் தனது பயணக்குறிப்பை பதிவு செய்து கொண்டிருந்த அவரது முகப்புத்தக பக்கத்தில் நண்பர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து இருந்ததாக கூறப்பட்டுள்ளது. Loader ஒரு புகைப்பிடிப்பாளராவார்.கொல்லப்படுவதற்கு கிட்டத்தட்ட 5-மணித்தியாலங்களிற்கு முன்னர் தனது கடைசி படத்தை முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விபத்து நடந்தபோது தனியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் என ஆர்சிஎம்பியினர் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசியாவில் இலங்கையரை வெளியேறுமாறு உத்தரவு! Posted: 02 Sep 2014 03:52 AM PDT
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரைக்குமே மலேசிய அரசு, காலக்கெடு விதித்திருக்கிறது. அதன்பிறகு இவர்கள் வெளியேறாவிடின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹரீனுடன் சந்தித்தது பற்றி நாமல் விளக்கம்! Posted: 02 Sep 2014 03:49 AM PDT
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா முதலமைச்சர் வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் ரகசிய சந்திப்பு, திட்டமிட்டதல்ல என ஹரீன் தெரிவித்துள்ளார். இந்த நிலைடில் இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவுக்கு என் தந்தையோடு அமர்ந்து தேநீர் குடிக்க முடியுமென்றால், ஹரீனுக்கு மட்டும் ஏன் முடியாது? ஹரீன் அண்ணா என்னோடு உட்கார்ந்தால் மட்டும் எல்லோரும் சேறு பூசுகிறார்கள் என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொறன்ரோவில் பெண் பலாத்காரம்! இருவர் கைது Posted: 02 Sep 2014 03:29 AM PDT
கனடாவின் ரொறன்ரோ பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹொலன்ட் லான்டிங் பிராந்தியத்தில் யங் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதனை யோர்க் பிராந்திய போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிப்புக்குள்ளான பெண் தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ள போதிலும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இரண்டு ஆண்களை தாம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் மீது இதுவரை குற்றச்சாட்டுக்கள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரண்டாக வெட்டியும் இறக்க மறுக்கும் மீனின் பரிதாப காட்சி! Posted: 02 Sep 2014 03:25 AM PDT |
| சூப்பர்ஸ்டாரின் வசனத்தை அழகாக தமிழில் கூறும் ஜப்பான் குடிமகன்! Posted: 02 Sep 2014 03:21 AM PDT |
| தண்ணீரில் மொபைல் விழுந்தால் என்ன செய்யனும்னு தெரியுமா? Posted: 02 Sep 2014 03:18 AM PDT |
| சூர்ய கதிர்களுக்கு எவ்வளவு சக்தி இருக்குதுனு தெரியுமா? Posted: 02 Sep 2014 01:34 AM PDT |
| பயமுறுத்தும் உருவத்தினுள் ஒளிந்திருக்கும் 1000 குட்டீஸ்களின் குறும்புத்தனம்! Posted: 02 Sep 2014 01:31 AM PDT |
| வாட்ஸ்ஆப்பில் விரைவில் இலவச வாய்ஸ் காலிங் வசதி! Posted: 02 Sep 2014 01:15 AM PDT
மொபைல் மெசேஜிங் சர்வீசான வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் 600 மில்லியன் ஆக்டிவ் யூசர்களுக்காக இலவச வாய்ஸ் காலிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாய்ஸ் காலிங் சேவையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது. தற்போது உள்ள வாட்ஸ்ஆப்பில், மெசேஜ், புகைப்படங்கள், சிறிய வீடியோ ரெக்கார்டிங், குரல் பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மொபைல் வேர்ல்டு காங்கிரசில், வாட்ஸ்ஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான Jan Koum, இரண்டாவது காலாண்டில் அதன் அப்ளிக்கேஷனில் வாய்ஸ் காலிங் சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டங்களை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, வாட்ஸ்ஆப் விரைவில், அநேகமாக அடுத்த அப்ளிக்கேஷனில் வாய்ஸ் காலிங் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று பல்வேறு செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளது. அடுத்து வரப்போகும் வாட்ஸ்ஆப் பதிப்பின் மாதிரி பக்கத்தில், வாட்ஸ் ஆப் வழியாக பேசுவதற்கான அழைப்பு வரும்போது, அந்த அழைப்புக்கான எழுத்துகள், மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் என்று thefusejoplin.com என்ற இணையதளம் அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்திய பதிப்பில் இந்த மொழிமாற்ற அம்சம் வாய்ஸ் காலிங் சேவையுடன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வாய்ஸ் காலிங் சேவையை வாட்ஸ் ஆப் வெளியிடப்படுவதை போன்று, ஃபேஸ்புக்கிலும் இலவச வாய்ஸ் காலிங் சேவை வருமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. வாட்ஸ் ஆப்-பை ஃபேஸ்புக் வாங்கியதில் இருந்து அதன் பயன்பாடு 15% அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் வாட்ஸ்ஆப் ஆக்டிவ் யூசர்கள் 50 மில்லியன் மேல் தாண்டிவிட்டது. மேலும் சமீபத்தில், நிறுவனம் உலகளவில் 600 மில்லியன் யூசர்களை கொண்டுள்ளது என்று அறிவித்தது. தினமும் 700 மில்லியன்+ புகைப்படங்கள், 100 மில்லியன்+ வீடியோக்கள் மற்றும் 64 பில்லியன் மெசேஜ்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷரபோவாவை வீழ்த்தினார் வோஸ்னியாக்கி: கால் இறுதியில் 17 வயது பென்சிக்! Posted: 02 Sep 2014 01:01 AM PDT
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (10வது ரேங்க்) தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவுடன் (ரஷ்யா, 5வது ரேங்க்)நேற்று மோதிய வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை (ஜெர்மனி) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை பெலிண்டா பென்சிக், செர்பியாவின் ஜெலினா ஜன்கோவிச்சை (9வது ரேங்க்) எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த முதல் செட்டில் 7-6 (8-6) என்ற கணக்கில் டை பிரேக்கரில் வென்ற பென்சிக் முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னதாக, பென்சிக் தனது 3வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை (7வது ரேங்க்) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மார்டினா ஹிங்கிசிடம் பயிற்சி பெற்று வரும் பென்சிக், தொடர்ச்சியாக இரண்டு டாப் 10 வீராங்கனைகளை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஷுவாய் பெங், சாரா எர்ரானி (இத்தாலி) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருநாள் ரேங்கிங்: இந்தியா நம்பர் 1 Posted: 02 Sep 2014 12:58 AM PDT
முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில், ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி ஒரு இடம் பின்தங்கியதால், இந்திய அணி தனித்தே நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா 114 புள்ளிகளுடன் கூட்டாக முதலிடத்தில் இருந்தன. இந்த நிலையில், ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா எதிர்பாராத வகையில் தோற்றதால், அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸி. 111 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென் ஆப்ரிக்கா 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. எனினும், இந்தியா - இங்கிலாந்து தொடரில் எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களின் முடிவு மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் செயல்பாட்டை பொறுத்து தரவரிசையில் மாற்றம் இருக்கும். டாப் 10 அணிகள் அணி புள்ளி 1 இந்தியா 114 2 தென் ஆப்ரிக்கா 113 3 இலங்கை 111 4 ஆஸ்திரேலியா 111 5 இங்கிலாந்து 106 6 பாகிஸ்தான் 100 7 நியூசிலாந்து 98 8 வெஸ்ட் இண்டீஸ்96 9 வங்கதேசம் 69 10 ஜிம்பாப்வே 58This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிதர்களை தாக்கும் ஈ.வி.டி எனப்படும் நோயிலிருந்து தப்பிக்க 8 வழிகள்!! Posted: 02 Sep 2014 12:43 AM PDT
மேற்கு ஆப்ரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்த எபோலோ இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது என்று சொல்கிறது அண்மையில் கிடைத்த ஒரு தகவல். எபோலோ போன்ற மரணத்தை ஏற்படுத்தும் வைரஸ்களை, கவனிக்காமல் விட்டால் அது ஆரோக்கியமான மனிதர்களை தாக்கி ஈ.வி.டி (Ebola Virus Disease) எனப்படும் நோயை உண்டாக்கி விடும். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல்! இந்த நோய் வந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட உடனேயே அதைத் தவிர்க்கவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் செய்வது தான் தொற்று பரவாமல் தடுக்கும் வழியாகும். இந்த கட்டுரையின் மூலம் எபோலாவைத் தடுக்கும் சில பாதுகாப்பு டிப்ஸ்களை உங்களுக்கு வழங்குகிறோம். எபோலாவின் அறிகுறிகள், பரவும் வழிமுறைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கையாகும். குறிப்பாக, மேற்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து வருபவர்களும் தான் இந்த தகவல்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எபோலாவைத் தவிர்ப்பதற்கு அடிப்படை சுகாதாரத்தைப் பேண வேண்டியது அவசியமாகும். இந்த வைரஸ் உடலுக்குள் எப்படி நுழைகிறது என்பது இன்னமும் கண்டறியப்படாவிட்டாலும், தோலும், கண்களும் வழிகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், உணவும், நீராதாரமும் கூட வழிகளாக இருக்கலாம். எனவே, சாப்பிடும் முன்னர் கைகளை கழுவுதல், தரைகளை கிருமிநீக்கம் செய்து வைத்தல் மற்றும் வாயை மூடிக் கொள்ளுதல் போன்ற எளிய செயல்கள் போதும் எபோலாவை வர விடாமல் தவிர்க்க. அதுவும் உங்களுடைய சுற்றுப்புறத்தில் எபோலாவின் தாக்கம் இருக்கும் போது மேற்கண்ட சுகாதார செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். எபோலா வைரஸானது, பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உயிரணு, எச்சில், வியர்வை, சிறுநீர் மலம் என அனைத்து விதமான உடல் திரவங்களின் மூலமாகவும் பரவக்கூடும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஆகியவர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள், ஊசிகள் தொடவும் மற்றும் முதலுதவி செய்யவும் கூடும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் உள்ள ரோக்லாண்டு குழும மருத்துவமனையில், மருத்துவத் துறையின் தலைவராக உள்ள டாக்டர். இரத்தன் குமார் வைஸ் என்பவரின் கருத்துப்படி, அவசியமில்லா வெளியூர் பயணங்களை தவிர்த்திடுவது எபோலாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அதுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















