Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி பெண்கள் காயம்

Posted: 29 Sep 2014 11:04 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 26–ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாள் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. நேற்று கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தது. கால்நடையாக வந்த பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கால்நடையாக வந்தனர். ஆனால், 30 ஆயிரம்

திருவனந்தபுரம்: மாணவனை நாய் கூண்டில் அடைத்த பள்ளியின் பெண் முதல்வர் கைது

Posted: 29 Sep 2014 10:53 PM PDT

திருவனந்தபுரம் அருகே குடப்பனகுன்னு பகுதியில் பதிராப்பள்ளி என்ற இடத்தில் ஜவகர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 7–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் இந்த பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த சுமார் 123 மாணவ– மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியை சசிகலா என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இவரே இந்த பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். இவர்களின் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றி உள்ளனர்.

அதிமுக தொண்டர்கள் வருகை: பெங்களூர் ஜெயில் வளாகத்தில் 144 தடை உத்தரவு நீடிப்பு

Posted: 29 Sep 2014 10:49 PM PDT

அ.தி.மு.க. தொண்டர்கள் வருகையால் பொங்களூர் ஜெயில் வளாகத்தில் 144 தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 27–ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் பெங்களூரில் குவிந்தனர். இதனால் தீர்ப்பு கூறப்பட்ட பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்கு முன்பே தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், வக்கீல்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தீர்ப்பு வழங்கப்பட்டு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் கூடியுள்ளனர்.

இணையதளம் மூலம் நடைபெறும் மருத்துவ கருக்கலைப்புக்கு உதவும் நாக்பூர் வர்த்தகர்

Posted: 29 Sep 2014 10:43 PM PDT

இந்தியாவில் கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்போது இதனை முற்றிலுமாகத் தடை செய்துள்ள நாடுகள் பல உண்டு. மேலும் பல நாடுகளில் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சமயத்தில் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகின்றது. 26 சதவிகித மக்கள் இதுபோன்ற கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் 72 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதாரக் கழகத்தின் கணக்கீடு தெரிவிக்கின்றது. இத்தகைய நாடுகளில் வாழும் பெண்களுக்கு

உடல்நலக்குறைவு: ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிகிச்சை

Posted: 29 Sep 2014 10:36 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23–ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் உள்ள ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார். நீரழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஜெயலலிதாவை அவரது தனி மருத்துவர் டாக்டர் சாந்தாராம் சந்திக்க நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதாவை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

வதோதராவில் கலவரம்: 200 பேர் கைது

Posted: 29 Sep 2014 10:33 PM PDT

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதக்கலவரம் ஏற்பட்டது. ஒரு மதத்தை இழிவுப்படுத்தி மற்றொரு மதத்தினர் போஸ்டர் அடித்தது தொடர்பாக இந்த மோதல் ஏற்பட் டது. வதோதராவில் யாக்புக்ரா, பஞ்சரா போல், பதேபுரா, கும்பர் வாடா ஆகிய பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வதோதரா மாநகர போலீஸ் இணை கமிஷனர் டி.ஜே.பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதம் விதித்தது ஏன்?: அரசு வக்கீல் பவானிசிங் விளக்கம்

Posted: 29 Sep 2014 10:29 PM PDT

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக வாதாடிய பவானிசிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:– சொத்துக்குவிப்பு வழக்கில் நான் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு தரப்பில் வாதாடினேன். ஆரம்பத்தில் நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. என் மீது நம்பிக்கை இல்லாமல் வழக்கில் இருந்து கர்நாடக அரசு என்னை நீக்கியது. இதனால் வேதனை அடைந்தேன். கர்நாடக அரசு என்னை நீக்கியதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றேன். மீண்டும் அரசு

பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Posted: 29 Sep 2014 10:27 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலும் தனித்தனியே ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்கள் சார்பில் வக்கீல்கள் வேணுகோபால், அம்ஜத் பாஷா, செந்தில்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Posted: 29 Sep 2014 09:59 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 26–ந் தேதியில் இருந்து வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்கிழமை) இரவு கருட சேவை உற்சவம் நடப்பதாலும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஒரு சில அரசு பஸ்கள் ஓட தொடங்கியதாலும் கருட சேவை உற்சவத்தில் பங்கேற்பதற்காக

பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்

Posted: 29 Sep 2014 09:39 PM PDT

பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் 'சூடி கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மூலவர் மற்றும் உற்சவருக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

திமுக கூறிய குற்றச்சாட்டு என் மனதை பாதித்தது: வக்கீல் பவானிசிங் பேட்டி

Posted: 29 Sep 2014 08:27 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட

சட்ட ஆணைய சிபாரிசின்படி புழக்கத்தில் இல்லாத 287 சட்டங்கள் ரத்து: ரவிசங்கர் பிரசாத்

Posted: 29 Sep 2014 05:13 PM PDT

நாட்டில் பழமையான, புழக்கத்தில் இல்லாத சட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த சட்டங்களை ரத்து செய்வது குறித்து சிபாரிசு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு செய்த சட்ட ஆணையம், கடந்த 12-ந் தேதி மத்திய சட்ட அமைச்சகத்திடம் இடைக் கால அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பல

தேசிய மகளிர் ஆணைய தலைவராக லலிதா குமாரமங்கலம் பொறுப்பு ஏற்றார்

Posted: 29 Sep 2014 05:04 PM PDT

தமிழ்நாட்டைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம் அண்மையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தியை அவர் சந்தித்து பேசினார்.

பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க தேவேகவுடா விருப்பம்

Posted: 29 Sep 2014 04:37 PM PDT

பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் பெங்களூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்தித்து பேச, முன்னாள் பிரதமர்

கம்பெனிகள் சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்படும்: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி

Posted: 29 Sep 2014 04:36 PM PDT

இந்துஸ்தான் வர்த்தக சபையின் 68-வது ஆண்டுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பீகாரில் முதல்-மந்திரி வந்து சென்ற பின் கோவிலை கழுவி சுத்தம் செய்ததற்கு பஸ்வான் கண்டனம்

Posted: 29 Sep 2014 03:40 PM PDT

பீகார் மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜித்தன் ராம் மஞ்சி. தலித் பிரிவை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, மதுபானி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றதாகவும், அவர் கோவிலில்

சுதந்திர போராட்ட மாவீரர் பகத் சிங்கின் தங்கை கனடாவில் மரணம்

Posted: 29 Sep 2014 03:39 PM PDT

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற மாவீரன் பக்த் சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கில் போட்டு கொன்றது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரத்திருமகனான அவரை தூக்கில் போடும்போது அவரது தங்கையான பிரகாஷ் கவுருக்கு 12 வயது தான் நடந்து கொண்டு இருந்தது. 1923 ஆம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி பகத் சிங் தூக்கிலிடப்பட்டார்.

வாஷிங்டன் சென்ற மோடிக்கு ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு: ஒபாமாவை சந்திக்கிறார்

Posted: 29 Sep 2014 03:15 PM PDT

அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக நியூயார்க்கில் தங்கியிருந்து ஐ.நா மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதுடன் பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அமெரிக்காவில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கு கொண்ட மிகப்பெரிய கூட்டத்திலும் கலந்து கொண்டு மோடி பேசினார்.

காஷ்மீரில் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனியா நேரில் ஆறுதல்

Posted: 29 Sep 2014 02:52 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் சில நாட்கள் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. மழை, வெள்ளத்தால் அந்த மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது, ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மழை, வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் அதிகமானோர் பலியானார்கள். மீட்புப்பணியில் மாநில மீட்புக்குழுவினருடன் ராணுவமும்

எங்கள் நாட்டிற்கு தீவிரவாதம் ஏற்றுமதி செய்யப்பட்டது-அது உள்நாட்டில் உருவானதல்ல: நியூயார்க்கில் மோடி பேச்சு

Posted: 29 Sep 2014 02:34 PM PDT

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தீவிரவாதம் குறித்து அவர் பேசியதாவது; "இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மத தலைவர்களும் மக்களுக்கு கூறிய தத்துவம் என்ன? ஒரு போதும் வன்முறை கூடாது என்பது தான் அது. இதை தான் பௌத்தமும், காந்தியமும் நமக்கு போதித்தன. இந்தியாவில் தற்போது நிலவி வரும் தீவிரவாதம் உள்நாட்டில் உருவானதல்ல.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™