Tamil Star |
- ஒரிசாவில் பயங்கரம்: நாக்கை துண்டித்து சிறுவன் நரபலி!
- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்: ஒபாமா பரபரப்பு பேட்டி!
- பார்படாசை வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!
- கலப்பு இரட்டையர் டென்னிஸ் பைனலில் சானியா ஜோடி!
- 4.4.2 கிட்கேட் கொண்ட சன்ஸ்ட்ரைக் ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போன் ரூ. 2,999 விலையில் அறிமுகம்!
- மீட்டருக்கு ரூ.7 செலவில் மார்ஸுக்கு சென்றுவிட்டோம்: அமெரிக்காவில் மோடி பேச்சு!
| ஒரிசாவில் பயங்கரம்: நாக்கை துண்டித்து சிறுவன் நரபலி! Posted: 29 Sep 2014 03:19 AM PDT
ஒரிசாவில் சிறுவனின் நாக்கை துண்டித்து நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவில் உள்ள பாலாங்கிர் மாவட்டத்தில் கந்தரபாத் என்ற இடத்தில் குளத்தில் நேற்று ஒரு சிறுவன் சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர், அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த சிறுவன் தசரத் என்பதும், ஜாலிபதர் கிராமத்தைச் சேர்ந்த ஜலேஸ்திரி பரபாய் என்பவரின் மகன் என்பதும் தெரிந்தது.போலீசாரின் விசாரணையில் அந்த சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. ரிஷிகேஷ் தாஸ் என்ற சாமியார் சொன்னதன் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த பங்கானே பெகரா என்பவர், மேலும் இரண்டுபேருடன் சேர்ந்து சிறுவனை கடத்தி சென்றிருக்கிறார். பின்னர், சிறுவனின் நாக்கை துண்டித்து நரபலி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் பங்கானே பெகரா அளித்த வாக்குமூலத்தில், தெய்வசக்தி பெறுவதற்காக ரிஷிகேஷ் தாஸ் சொன்னபடி சிறுவனின் நாக்கை துண்டித்து நரபலி கொடுத்துவிட்டு உடலை குளத்தில் வீசியெறிந்தோம் என்று ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டோம்: ஒபாமா பரபரப்பு பேட்டி! Posted: 29 Sep 2014 03:16 AM PDT
சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்கா தவறு செய்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகிறது. ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த கருத்து பொருந்தும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும். அதேபோல வெளியில் இருந்து கிடைக்கும் ஆயுத சப்ளை, வெளிநாடுகளில் இருந்து வந்து ஐஎஸ்ஐஎஸ்சில் சேரும் நபர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். உலக வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவம் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டால், அந்த நாடுகள் முதலில் அணுகுவது அமெரிக்காவை தான். ரஷ்யாவையோ, சீனாவையோ அந்த நாடுகள் அணுகுவதில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பார்படாசை வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்! Posted: 29 Sep 2014 02:58 AM PDT
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் 16வது லீக் ஆட்டத்தில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்துவீசியது. பார்படாஸ் 19.4 ஓவரில் 113 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜொனாதன் கார்ட்டர் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். முனவீரா 18, பிராங்க்ளின், அகீல் உசேன் தலா 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஹோபர்ட் பந்துவீச்சில் சேவியர் தோஹர்டி 4, ஹில்பென்ஹாஸ், போலிஞ்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஹோபர்ட் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து வென்றது. டங்க் 0, கேப்டன் டிம் பெய்ன் 18, பிளிஸார்டு 21, டிராவிஸ் பர்ட் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சோயிப் மாலிக் 39, ஜொனாதன் வெல்ஸ் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கலப்பு இரட்டையர் டென்னிஸ் பைனலில் சானியா ஜோடி! Posted: 29 Sep 2014 02:50 AM PDT
ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சாகேத் மைனேனி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அரை இறுதியில் சீனாவின் ஜி ஸெங் - ஜி ஸாங் ஜோடியுடன் நேற்று மோதிய சானியா - மைனேனி ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - திவிஜ் ஷரண் ஜோடி 7-6 (10-8), 6-7 (6-8), 9-11 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் லிம் யாங்க்யு - சங் ஹயனாஸ் ஜோடியிடம் போராடி தோற்று வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்திய வீரர்கள் 4 மேட்ச் பாயின்ட்களை வீணடித்தது குறிப்பிடத்தக்கது. மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - பிரார்த்தனா குலாப்ராவ் ஜோடி 6-7 (1-7), 6-2, 4-10 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சின் வெய் சான் - சூ வெய் சைன் ஜோடியிடம் போராடி தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி - சனம் சிங் ஜோடி 4-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சன்சாய் ரதிவதனா - சொன்சாட் ரதிவதனா ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடனும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடனும் இணைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால் இரண்டு தங்கம் வெல்லும் வாய்ப்பை மைனேனி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 4.4.2 கிட்கேட் கொண்ட சன்ஸ்ட்ரைக் ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போன் ரூ. 2,999 விலையில் அறிமுகம்! Posted: 29 Sep 2014 02:37 AM PDT
ஹாங்காங் அடிப்படை ஸ்மார்ட்போன் நிறுவனமான சன்ஸ்ட்ரைக் டெலிகாம், தற்போது தனது சமீபத்திய கிட்கேட் அடிப்படை கொண்ட ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு Celkon நிறுவனம் கேம்பஸ் A35K ஸ்மார்ட்போனை ரூ. 2,999 விலையில் அறிவித்ததைபோல ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனும் அதே விலையில் அறிவித்துள்ளது. சமீபத்திய நுழைவு நிலை ஸ்மார்ட்போனான ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது மற்றும் 3 ஜி ஆதரவு வருகிறது. மற்ற விவரங்கள் 315ppi பிக்சல் அடர்த்தி மற்றும் QVGA 320x480 பிச்கல் தீர்மானம் கொண்ட 3.50 இன்ச் qHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த தொலைபேசியில் 119 x 62.4 x 11mm டைமன்ஷன், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு மைக்ரோ-USB போர்ட் காணப்படுகிறது. ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் ரேம் 256MB உடன் இணைந்து 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 7715 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் உள்ளக சேமிப்பு 512MB கொண்டுள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வருகிறது. மேலும் தொலைபேசியில் 3 ஜி, Wi-Fi, மைக்ரோ-USB போர்ட் மற்றும் ப்ளூடூத் 3.0 ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.3 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போனில் 1600mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. நிறுவனம் கைபேசி உடன் இலவசமாக கிரிஸ்டல் கவர் தொகுப்பினை வழங்குகிறது. சன்ஸ்ட்ரைக் ரேஜ் ஸ்விஃப்ட் ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 320x480 பிச்கல் தீர்மானம் கொண்ட 3.50 இன்ச் qHD டிஸ்ப்ளே, 315ppi பிக்சல் அடர்த்தி, ரேம் 256MB, 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்டிரம் SC 7715 ப்ராசசர், 512MB உள்ளக சேமிப்பு, இரட்டை சிம், மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு 1.3 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3 ஜி, Wi-Fi, மைக்ரோ-USB போர்ட், ப்ளூடூத் 3.0, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1600mAh பேட்டரி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீட்டருக்கு ரூ.7 செலவில் மார்ஸுக்கு சென்றுவிட்டோம்: அமெரிக்காவில் மோடி பேச்சு! Posted: 29 Sep 2014 02:31 AM PDT
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல கிலோ மீட்டருக்கு ரூ.7 தான் நமக்கு செலவானது என்று நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்க ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய-அமெரிக்கர்கள் வந்திருந்தனர். அனைத்து மக்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பாட்டிகளின் நாடு என்று நினைக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று உங்களாலும், ஐ.டி. ஊழியர்களாலும் நம் நாட்டை பற்றிய நினைப்பு மாறியுள்ளது. நம் முன்னோர்கள் போன்று இல்லாமல் நாம் மவுஸுடன்(கம்ப்யூட்டர் மவுஸ்) விளையாடுகிறோம். தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்தியா வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பல மைல் தூரத்தில் வாழலாம். ஆனால் உங்களின் பிரச்சனைகள் எனக்கு நன்கு புரிகிறது. செவ்வாய் கிரகத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.7 தான் நமக்கு செலவானது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்காகவே ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம். மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை தேசிய புரட்சியாக்கினார். அனைவரும் காந்தி வழியை பின்பற்றி முன்னேற்றம் என்பது ஒவ்வொரு நபரின் கடமை என்றாக்க வேண்டும். இந்திய வம்சாவளியினருக்கு ஆயுள்காலத்திற்கும் பொருந்தும் விசா அளிக்கப்படும். இந்தியாவில் அதிக காலம் தங்கினால் அடிக்கடி காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை. இந்தியாவுக்கு வந்தவுடன் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும், தூதரக சேவைகள் விரிவுபடுத்தப்படும். கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்கள் கங்கை நதியை புனிதமாகக் கருதி போற்றுகிறார்கள். மோடி பேசப் பேச அரங்கில் இருந்தவர்கள் மோடி, மோடி என்று கரகோஷம் எழுப்பினர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பலர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்திருந்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






