மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் அருகே குளத்தில் மூழ்கிய 2 பெண்களை காப்பாற்றிய 12 வயது மாணவன்
- வதோதரா எம்.பி. இடைத்தேர்தல்: 1.82 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. முன்னிலை
- 3 எம்.பி. தொகுதி தேர்தல்: மேடக் தொகுதியில் டி.ஆர்.எஸ் - மெயின்பூரி தொகுதியில் சமாஜ்வாடி முன்னணி
- குஜராத் சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜ.க. 5 - காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை
- மராட்டிய தேர்தல் கூட்டணியில் சிக்கல்: பா.ஜனதா உயர்மட்டக்குழு அவசர ஆலோசனை
- இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 2 வீரர்கள் படுகாயம்
- ரூ.30 லட்சத்துக்கு கடத்தப்பட்ட சிறுவனை சாதுர்யமாக மீட்ட போலீசார்: இருவர் கைது
- குரு கோவிந்தசிங்கின் பிறப்பிடத்தை சீரமைக்க 600 கோடி நிதி
- நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு
- அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்
- இடைத்தேர்தல்: 3 மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி
- மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது: இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி
- ஜம்மு-காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: உதவிய மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா நன்றி
- இந்திய பொறியியல் துறையை உலக தரத்துக்கு உயர்த்துங்கள்: பிரதமர் மோடி பேச்சு
- மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்: இந்தியா கண்டனம்
- மாவோயிஸ்டு தீவிரவாதி கணபதியின் தலைக்கு 2.67 கோடி ரூபாய் பரிசுத்தொகை: அரசு அறிவிப்பு
- காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்
- காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல்
- செய்தி தொடர்பாளர்கள் தவிர வேறு யாரும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் மேலிடம் தடை
| திருவனந்தபுரம் அருகே குளத்தில் மூழ்கிய 2 பெண்களை காப்பாற்றிய 12 வயது மாணவன் Posted: 15 Sep 2014 11:19 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை அடுத்துள்ள ஆமோட்டு கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆர்யா (வயது22). இவரது உறவினர் சுபா (22). அந்த பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைத்து குளிப்பதற்காக இந்த 2 இளம்பெண்களும் சென்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த குளத்தில் தண்ணீர் அதிகளவில் காணப்பட்டது. இதனால் அந்த 2 பெண்களும் குளத்தின் கரையில் இருந்து |
| வதோதரா எம்.பி. இடைத்தேர்தல்: 1.82 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. முன்னிலை Posted: 15 Sep 2014 10:58 PM PDT பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு, வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த குஜராத் மாநிலத்தின் வதோதரா பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 45.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பா.ஜ.க. வேட்பாளராக ரஞ்சனாபென் பட் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக நரேந்திரா ரவட் போட்டியிட்ட இந்த தொகுதியில் |
| 3 எம்.பி. தொகுதி தேர்தல்: மேடக் தொகுதியில் டி.ஆர்.எஸ் - மெயின்பூரி தொகுதியில் சமாஜ்வாடி முன்னணி Posted: 15 Sep 2014 10:51 PM PDT பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, முலாயம் சிங் யாதவ், சந்திரசேகர் ராவ் ஆகிய மூவரும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதில் மோடி வதோதரா (குஜராத்), சந்திரசேகர்ராவ் மேடக் (தெலுங்கானா), முலாயம்சிங் யாதவ் மெய்ன் பூரி (உத்தர பிரதேசம்) தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். |
| குஜராத் சட்டசபை இடைத்தேர்தல்: பா.ஜ.க. 5 - காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை Posted: 15 Sep 2014 10:39 PM PDT குஜராத் சட்டசபை இடைத்தேர்தல் பா.ஜ.க. 5 - காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை |
| மராட்டிய தேர்தல் கூட்டணியில் சிக்கல்: பா.ஜனதா உயர்மட்டக்குழு அவசர ஆலோசனை Posted: 15 Sep 2014 10:11 PM PDT மராட்டியத்தில் தேர்தல் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றி பா.ஜனதா உயர் மட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மராட்டிய மாநில சட்டசபைக்கு வருகிற அக்டோபர் மாதம் 15–ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு 15 ஆண்டுகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன் மராட்டியத்தில் சிவசேனா–பா.ஜனதா கூட்டணி 1995–ம் ஆண்டு ஒரு முறை ஆட்சியைப் பிடித்தது. அப்போது சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்–மந்திரியாக |
| இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 2 வீரர்கள் படுகாயம் Posted: 15 Sep 2014 10:11 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி அருகே குண்டு வெடித்ததில் ஒரு கூலி தொழிலாளி (போர்ட்டர்) பலியானார். அங்குள்ள மெந்தர் பகுதியில் இருக்கும் ராணுவ கண்காணிப்புச் சாவடியருகே நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கான் மொஹம்மது என்ற போர்ட்டர் பலியானதாகவும், இரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்ததாகவும் |
| ரூ.30 லட்சத்துக்கு கடத்தப்பட்ட சிறுவனை சாதுர்யமாக மீட்ட போலீசார்: இருவர் கைது Posted: 15 Sep 2014 08:49 PM PDT ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிந்தாலா அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர், ஸ்ரீனிவாச ராவ். பிரபல பைனான்சியரான இவரது மகன் கோருபில்லி தாமோதர்(9) அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்து வந்தான். கடந்த 8-ம் தேதி பள்ளிக்கு சென்ற தாமோதரை சில மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டனர். அவனது தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், '30 லட்சம் ரூபாயை எங்களுக்கு தராவிட்டால், உன் அனபு மகனை உயிருடன் பார்க்க முடியாது.' என்று மிரட்டல் விடுத்தனர். கடத்தல்காரர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்த அதேவேளையில், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீனிவாச ராவ் போலீசில் புகார் அளித்தார். |
| குரு கோவிந்தசிங்கின் பிறப்பிடத்தை சீரமைக்க 600 கோடி நிதி Posted: 15 Sep 2014 08:44 PM PDT சீக்கியர்களின் பத்தாவது குருவாக அழைக்கப்படும் குரு கோவிந்தசிங்கின் 350ஆவது பிறந்த நாள் நினைவு விழா வரும் 2017ஆம் ஆண்டு அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் நடைபெற உள்ளது. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஐந்து மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையொட்டி அங்கு அமைந்துள்ள அவரின் பிறப்பிடம் சீரமைக்கப்பட்டு வருகின்றது.இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுவாழ் சீக்கிய மக்களும், மும்பை, டெ |
| நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு Posted: 15 Sep 2014 08:34 PM PDT கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடம், டாக்டர் துர்கன்னா நேற்று இரவு வழங்கினார். ஆனால் |
| அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல் Posted: 15 Sep 2014 08:17 PM PDT அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து வந்த இளம்பெண், அவரை பார்ப்பதற்காக ராங்கியாவுக்கு வந்தார். அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இளம்பெண்ணிடம் தனது பெயர் ராகுல் தாஸ் என வாலிபர் |
| இடைத்தேர்தல்: 3 மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Posted: 15 Sep 2014 08:03 PM PDT வதோதரா (குஜராத்), மைன்புரி (உத்தரபிரதேசம்), மேடக் (தெலுங்கானா) ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 11, குஜராத்தில் 9, ராஜஸ்தானில் 4, மேற்கு வங்காளத்தில் 2, வடகிழக்கு மாநிலங்களில் 5, ஆந்திரா மற்றும் சத்தீஷ்காரில் தலா ஒன்று என 33 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் ஓட்டுப்பதிவு மிகவு |
| சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி Posted: 15 Sep 2014 05:39 PM PDT இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. |
| மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது: இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி Posted: 15 Sep 2014 05:16 PM PDT பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். |
| ஜம்மு-காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: உதவிய மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா நன்றி Posted: 15 Sep 2014 05:03 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடியது. கடந்த சில தினங்களாக வெள்ளம் வடிந்த நிலையில் அங்கு மீட்பு பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. |
| இந்திய பொறியியல் துறையை உலக தரத்துக்கு உயர்த்துங்கள்: பிரதமர் மோடி பேச்சு Posted: 15 Sep 2014 05:00 PM PDT இந்திய என்ஜினீயர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், 'கடின உழைப்பு, புதிய தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வல்ல செயல்கள் மூலம், தேசிய கட்டமைப்பு பணிகளில் இந்திய என்ஜினீயர்கள் |
| மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்: இந்தியா கண்டனம் Posted: 15 Sep 2014 04:37 PM PDT 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றிய தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தாவாவின் தலைவனான ஹபீஸ் சையது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுவதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹபீஸ் சையத் லாகூரில் சர்வ சுதந்திரத்துடன் சுற்றித்திரிவதாக அந்நாட்டு தூதரான அப்துல் பாசித் கூறியுள்ளார். |
| மாவோயிஸ்டு தீவிரவாதி கணபதியின் தலைக்கு 2.67 கோடி ரூபாய் பரிசுத்தொகை: அரசு அறிவிப்பு Posted: 15 Sep 2014 04:06 PM PDT இந்தியாவில் தேடப்படும் பயங்கர குற்றவாளி என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சி.பி.ஐ(மாவோயிஸ்ட்) தீவிரவாத இயக்க தலைவனான முப்பல்லா லக்ஷ்மண ராவ் என்ற கணபதியின் தலைக்கு ரூபாய் 2.67 கோடி பரிசுத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தீவிரவாத இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரின் தலைக்கும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 21 கோடி ரூபாயை பரிசுக்தொகையாக வழங்குவதாக பல்வேறு அரசுகள் அறிவித்துள்ளன. |
| காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல் Posted: 15 Sep 2014 03:47 PM PDT இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியது. சீன அதிபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இந்த அத்துமீறல் நடவடிக்கையில் சீனா இறங்கி உள்ளது. இந்திய எல்லை பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. அருணாசலபிரதேச மாநில எல்லையோர பகுதியிலும் காஷ்மீரின் லடாக் பகுதியிலும் அடிக்கடி இப்படி அத்துமீறல் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. |
| காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல் Posted: 15 Sep 2014 12:45 PM PDT காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான். அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அ |
| செய்தி தொடர்பாளர்கள் தவிர வேறு யாரும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் மேலிடம் தடை Posted: 15 Sep 2014 11:40 AM PDT காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் சந்தித்த தோல்வி குறித்து கட்சிக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. மூத்தவர்கள், இளைஞர்கள் என்று இருதரப்பினர் தங்களது கருத்துகளை பலவிதமாக கூறிவந்தனர். குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராக மூத்த தலைவர்களும், ஆதரவாக இளைய தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |