Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மக்களை கொள்வதை இஸ்லாம் அனுமதிக்காது- ஐஎஸ்ஐஎஸ்க்கு மொயீன் அலி கண்டனம்!

Posted: 15 Sep 2014 06:27 AM PDT

moeen-ali-condemns-isis-urges-british-muslims

moeen-ali-condemns-isis-urges-british-muslimsமக்களைக் கொன்று குவிக்கும் ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து வீரர் மொயீன்அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்ட்வன் சாட்லாப் ஆகிய இருவர் தலையை துண்டித்து கொன்றனர். தலையைத் துண்டித்து கொலை: இதன் தொடர்ச்சியாக சிரியாவில் பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயஸ் என்பவரையும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தலையை துண்டித்து படு கொலை செய்தனர். கிரிக்கெட் வீரர் கண்டனம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன்அலி கண்டனம் தெரிவித்து உள்ளார். இஸ்லாம் அனுமதிக்காது: "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் இந்த செயலை இஸ்லாம் அனுமதிக்காது. அந்த அமைப்பின் நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. மக்களை கொல்வது தவறு: மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துக்கு உரியதாகும். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். காசாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த மொயீன் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது காசாவுக்கு ஆதரவாக பேண்ட் அணிந்த வாசகத்துடன் ஆடி இருந்தார். நடுவர் எச்சரிப்பு: இதற்காக அவர் ஐசிசியால் எச்சரிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அலுவலகத்தை குடிசைக்கு மாற்றினார் ஆஸி. பிரதமர் – வாக்குறுதி நிறைவேற்றம்

Posted: 15 Sep 2014 06:05 AM PDT

tony-abbott

tony-abbottகடந்தாண்டு பழங்குடி மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதியின் படி தனது அலுவலகத்தை குடிசைக்கு மாற்றியுள்ளார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்.

கடந்தாண்டு ஆஸ்திரேலியப் பிரதமராகப் பதவியேற்ற டோனி அபோட், ஆண்டுதோறும் ஒரு வார காலம் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் தனது பிரதமர் அலுவலகத்தை மாற்றி செயல்படப் போவதாக அறிவித்தார்.

அதன்படி, இன்று முதல் இன்னும் ஒரு வார காலத்திற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து ஆயிரம் கி.மீ., தொலைவிலுள்ள நுலுன்பை என்ற இடத்தில் டென்ட்டில் தங்கி தனது பணிகளை செய்யவுள்ளார் டோனி அபோட்.

இந்த தற்காலிக அலுவலகத்தில் இருந்தாலும், தலைநகர் கான்பெராவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவதாகவும், ஏதேனும் அவசியம் ஏற்பட்டால் அங்கிருந்து தலைநகர் திரும்பப்போவதாகவும் அபோட் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சின்னத்தில் போட்டியிடுமாறு ரணிலுக்கு, ஆளும் தரப்பு அமைச்சர்கள் அழுத்தம்!

Posted: 15 Sep 2014 05:58 AM PDT

Ranil

Ranilஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள ராஜபக்ஷவினருக்கு எதிரான அமைச்சர்களுடன் எதிரணி அரசியல்கட்சிகள், வெகுஜன அமைப்புகள் சிலவும் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனை முன்வைக்கப்படும் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி யோசனையையும் நிறைவேற்றி கொள்ளுமாறும் அவர்கள் கோரியுள்ளனர். விரிவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சஜித் பிரேமதாச விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணங்கிய அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ளவர்கள் குழப்பமடைந்துள்ளனர். அத்துடன் பொதுக் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஊவா தேர்தல் முடிந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இணக்கம் வெளியிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி காரணமாக அவரும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மகிந்த எதிர்வரும் 22ம் தேதி அமெரிக்கா பயணம்!

Posted: 15 Sep 2014 05:47 AM PDT

Mahinda_Rajapaksa

Mahinda_Rajapaksaநியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ள 69வது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். மேலும் 24ம் தேதி நடைபெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றுவார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அமைச்சர் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு முன்னரே செப்டம்பர் 19ம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழப் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்!

Posted: 15 Sep 2014 05:35 AM PDT

Man

Manரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பாா்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவாா் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடம் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவாா் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உறவு கொண்ட பின் பல தடவைகள் அப் பெண்ணை அழைத்து பரிகாரம் என்ற பெயரில் உடலுறவு கொள்ளவே சந்தேகப்பட்ட பெண் போலிசாரிடம் முறையிட்டுள்ளாா். இவரைக் கைது செய்த போலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். எதிா்வரும் 22ம் திகதி இவரை நீதிமன்றில் ஆயா்படுத்த நடவடிக்கை எடுத்ததாக போலிசாா் தெரிவித்துள்ளனா். குறித்த ஜோதிடா் மேலும் பல பெண்களை இவ்வாறு தெரிவித்து பாலியல் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் கமரூன் மற்றும் ஹாப்பர் ஆகியோரை நியூயோர்க்கில் நேருக்கு நேர் சந்திக்கும் மகிந்த!

Posted: 15 Sep 2014 04:33 AM PDT

camaroon

camaroonஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரை நேருக்கு நேர் சந்திக்க உள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சந்திக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கனேடிய பிரதமர் ஹாப்பர் மற்றும் பிரித்தானிய பிரதமர் கமரூன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமை பிரச்சினைகளை காரணம் காட்டி கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்தார். மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய ஆதரவு வழங்கும் என அறிவித்திருந்தார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இரண்டு கூட்டங்கள் அந்த அமைப்பின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™