மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானாவில் வெளி மாநில மக்கள் 61 லட்சம் பேர்: அரசு கணக்கெடுப்பில் தகவல்
- மாவோயிஸ்டுகள் தினம்: பீகார்–சத்தீஷ்கரில் போலீஸ் படை உஷார்
- காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய சீன வீரர்கள்: 7 கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ளனர்
- கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது
- ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்
- 26–ந்தேதி பிரமோற்சவம்: சந்திரபாபு நாயுடு வருகையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- தரிசனத்துக்கு பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்பிய ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு
- சட்டத்தை நிலைநாட்ட நேர்மையாக செயல்பட வேண்டும்: சதாசிவம் பேச்சு
- மாவோயிஸ்டுகள் வேட்டையில் போலீசாருக்கு உதவ கமாண்டாக்ஸ் மோப்ப நாய்கள் படை
- ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் முகாம் அழிப்பு: ஆயுதங்கள் பறிமுதல்
- வருமான வரித்துறை சார்பில் இணையதள வசதி: அருண் ஜெட்லி தொடங்கி வைக்கிறார்
- காஷ்மீரைப் பற்றி சர்ச்சை கருத்து: பிலாவல் பூட்டோவின் கொடும்பாவி எரிப்பு
- பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள் நீக்கம்: உத்தரபிரதேச அரசு
- அமெரிக்கா செல்லும் நரேந்திரமோடி பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கும் திட்டம் இல்லை
- கோவாவில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடமாட்டம்: பா.ஜ.க. கடத்தலா? டெல்லியில் பரபரப்பு
- ஸ்ரீநகரில் தேசிய மாநாடு கட்சி தொண்டர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
- டெல்லி முகாமில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை
- சிவசேனாவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி: மோடி தலைமையில் பா.ஜனதா அவசர ஆலோசனை
- பெண்களின் கண்ணியத்தை பொருத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் திட்டவட்டம்
- லக்னோ பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
| தெலுங்கானாவில் வெளி மாநில மக்கள் 61 லட்சம் பேர்: அரசு கணக்கெடுப்பில் தகவல் Posted: 21 Sep 2014 10:51 PM PDT அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய திட்ட கமிஷன் நிதி ஒதுக்கி வருகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு 2001–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு 2011–ம் ஆண்டு வந்த கணக்கெடுப்புபடி மக்கள் தொகையை அறிவித்து உள்ளது. இதன்படி தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டத்தில் வெளிமாநில மக்கள் 61 லட்சத்து 88 ஆயிரத்து 735 பேர் வசிப்பது தெரிவித்துள்ளது. இதில் |
| மாவோயிஸ்டுகள் தினம்: பீகார்–சத்தீஷ்கரில் போலீஸ் படை உஷார் Posted: 21 Sep 2014 10:51 PM PDT இந்தியாவில் மாவோயிஸ்டுகள் இயக்கம் உருவான தினத்தை செப்டம்பர் 21 முதல் 30–ந் தேதி வரை மாவோயிஸ்டுகள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாவோயிஸ்டு தினத்தையொட்டி நேற்று முதல் 30–ந் தேதி வரை பீகார், சத்திஷ்கர், ஜார்க்கண்ட் முழு பந்த்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் |
| காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய சீன வீரர்கள்: 7 கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ளனர் Posted: 21 Sep 2014 10:42 PM PDT காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் இமாச்சல பிரதேச எல்லை அருகில் உள்ள சுமர் என்ற பகுதியை சீனா நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்குள்ள பாயிண்ட் 30 ஆர் பகுதியை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சீனா தீவிரவமாக உள்ளது. இதற்காக சீன ராணுவம் அந்த எல்லை வரை உயர்தர சாலை அமைத்துள்ளது. 2012–ம் ஆண்டு சுமார் பகுதி முழுவதையும் கைப்பற்ற சீனா |
| கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது Posted: 21 Sep 2014 10:27 PM PDT ஐதராபாத்தில் 7 வயது சிறுமியை கட்டிலில் கை, கால்களை கட்டி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கைதான அந்த வாலிபரின் பெயர் முகமது அஜான் (23) ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா பிதலகுண்டா பகுதியைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று இந்த பகுதியில் 7 வயது சிறுமி 3 சிறுவர்களுடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து முகமது ஆஜான் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். |
| ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம் Posted: 21 Sep 2014 10:19 PM PDT ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மத்திய ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெயில் நிலைய வளாகங்களில், வெளி இடங்களில் துப்பினாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ கடும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களில், சுற்றுப் பகுதிகளில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு தற்போது ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இனி ரெயில் நிலைய பகுதிகளில் சிறுநீர் கழித்து பிடிபடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. |
| 26–ந்தேதி பிரமோற்சவம்: சந்திரபாபு நாயுடு வருகையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் Posted: 21 Sep 2014 10:19 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாள் நடக்கும் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4–ந்தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. முக்கிய நிகழ்வான கருடசேவை 30–ந்தேதி நடைபெறுகிறது. இதை காண 5 லட்சம் பக்தர்கள் திருமலையடில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தரிசனத்துக்கு பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்பிய ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு Posted: 21 Sep 2014 09:34 PM PDT டெல்லியை சேர்ந்த 5 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைக்கு வந்தனர். அவர்கள் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் டிக்கெட் வாங்கி, தரிசன வரிசையில் செல்வதற்காக வந்தனர். அவர்களிடம், தேவஸ்தான ஊழியர்கள் பத்மநாபரெட்டி, மோகன் ஆகியோர் தரகர்கள் மூலமாக பேச்சு கொடுத்து, அவர்களை சாமி தரிசனத்துக்கு குறுக்கு |
| சட்டத்தை நிலைநாட்ட நேர்மையாக செயல்பட வேண்டும்: சதாசிவம் பேச்சு Posted: 21 Sep 2014 09:04 PM PDT திருவனந்தபுரம் அருகே ஆலப்புழாவில் வக்கீல் சங்கம் சார்பில் தேசிய சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். கேரள மாநில கவர்னரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:– அனைவரும் கஷ்டம் இல்லாமல் இந்த பூமியில் வாழ்வதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒரு சட்டமாணவர் படிப்பிற்கு பிறகு அனைவருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் சந்தோஷமாக வாழ உதவ வேண்டும். சட்டம் படித்தவர் படிப்பிற்கு பிறகு பார் கவுன்சிலில் சேர்ந்து சட்டத்தை நிலை நிறுத்த நேர்மையாக செயல்ப |
| மாவோயிஸ்டுகள் வேட்டையில் போலீசாருக்கு உதவ கமாண்டாக்ஸ் மோப்ப நாய்கள் படை Posted: 21 Sep 2014 05:36 PM PDT இந்தியாவில் 9 மாநிலங்கள் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள மாநிலங்களாக உள்ளன. அங்கு துணை ராணுவப்படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், எல்லை பாதுகாப்பு படை போன்ற பல கமாண்டோ படைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. |
| ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் முகாம் அழிப்பு: ஆயுதங்கள் பறிமுதல் Posted: 21 Sep 2014 04:54 PM PDT ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் பாலந்தபடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து சிறப்பு ஆபரேஷன் குழுவினரும், ஆயுதம் தாங்கிய போலீசாரும் இணைந்து பாலந்தபடா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் முகாம் ஒன்றில் 22-க்கும் |
| வருமான வரித்துறை சார்பில் இணையதள வசதி: அருண் ஜெட்லி தொடங்கி வைக்கிறார் Posted: 21 Sep 2014 04:31 PM PDT வருமான வரித்துறையின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வருமான வரித்துறையின் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம், பொதுமக்களுக்கு ஏற்ற விதத்தில் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். ஆன்லைன் வழியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். இந்த இணையதளம் வாயிலாக பான் கார்டு பெற |
| காஷ்மீரைப் பற்றி சர்ச்சை கருத்து: பிலாவல் பூட்டோவின் கொடும்பாவி எரிப்பு Posted: 21 Sep 2014 04:03 PM PDT பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பஞ்சாப் மாகாணத்தின் உள்ள முல்தான் நகரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் இடையே கடந்த வெள்ளிக்கிழமை பேசினார். "மற்ற மாகாணங்களை போல் காஷ்மீர் மாகாணமும் பாகிஸ்தானுக்கு சொந்தமானதுதான். ஆகையால், அதில் ஒரு அங்குலத்தை கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது. காஷ்மீரை முழுமையாக நான் மீட்பேன்" என உணர்ச்சி பொங்க பேசியிருந்தார். |
| பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட 11 பயிற்சி நீதிபதிகள் நீக்கம்: உத்தரபிரதேச அரசு Posted: 21 Sep 2014 03:53 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாநில நீதித்துறை சர்வீசஸ் தேர்வுகள் மூலம் 40 மாவட்டங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய சிவில் நீதிபதி, ஜூனியர் சிவில் நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட்டு பதவிகளுக்காக 22 பெண்கள் உள்பட 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் லக்னோ நகரில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி |
| அமெரிக்கா செல்லும் நரேந்திரமோடி பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கும் திட்டம் இல்லை Posted: 21 Sep 2014 02:16 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் டெல்லியில் இருந்து 25-ந் தேதி புறப்பட்டு, 26-ந் தேதி நியூயார்க் போய்ச் சேருகிறார். 27-ந் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று பொதுச்சபை கூட்டத்தில் பேசும் 6-வது உலகத்தலைவர் நரேந்திர மோடி. |
| கோவாவில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடமாட்டம்: பா.ஜ.க. கடத்தலா? டெல்லியில் பரபரப்பு Posted: 21 Sep 2014 01:49 PM PDT டெல்லியில் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் பா.ஜ.க., பா.ஜ.கவுக்கு தாவும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்காக வலைவீசி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திடீரென்று கோவாவுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த தகவல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| ஸ்ரீநகரில் தேசிய மாநாடு கட்சி தொண்டர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை Posted: 21 Sep 2014 01:22 PM PDT காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்கட்டா பகுதியில் நேற்று மதியம் லத்தீப் அகமது குப்காரி என்ற தேசிய மாநாடு கட்சி தொண்டரை தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த |
| டெல்லி முகாமில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை Posted: 21 Sep 2014 12:55 PM PDT ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எஸ்.பி.நாயக்(45) மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார். தென்மேற்கு டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் தங்கியிருந்த அவர் நேற்று திடீரென்று தன்னிடமிருந்த 'ஏ.கே.47' ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். |
| சிவசேனாவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி: மோடி தலைமையில் பா.ஜனதா அவசர ஆலோசனை Posted: 21 Sep 2014 12:22 PM PDT மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் சிவசேனாவுடன் இழுபறி ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிமன்றக் குழு டெல்லியில் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தியது. 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த சனிக்கிழமை தொடங்கி |
| பெண்களின் கண்ணியத்தை பொருத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் திட்டவட்டம் Posted: 21 Sep 2014 12:16 PM PDT ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் கண்ணியத்தை பொருத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பெண்களுக்கான எதிரான கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான நிகழ்வுகள் குறித்து 'அரசியல் பண்டிதர்கள்' கற்பிக்கும் காரணங்களை வன்மையாக கண்டித்துள்ள அவர், இதைப்போன்ற பண்டிதர்களின் தவறான விமர்சனங்களால் |
| லக்னோ பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு Posted: 21 Sep 2014 10:39 AM PDT உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ அருகேயுள்ள மோகன்லால்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் நேற்று 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 தொழிலாளர்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |