Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆபாசத்திற்கு எதிரான சீனாவின் வேட்டை… 18 லட்சம்!

Posted: 21 Sep 2014 10:01 AM PDT

china-flag

china-flagஆபாச படங்கள், விபச்சார தகவல்களை பறிமாறும் சுமார் 18 லட்சம் இணையதள முகவரிகளை சீன அரசு மூடியுள்ளது. இணையதளத்தில் பரவும் ஆபாசத்தை கட்டுப்படுத்த சீன அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி இணையதளம் மூலமாக விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் செயல்படும் இணையதள நிறுவனங்களும், அரசின் வேண்டுகோளை ஏற்று சுய பரிசோதனை செய்து கொண்டு, தங்களது வெப்சைட்டுகளில் இடம் பெற்றிருந்த ஆபாச படங்களை அகற்றியுள்ளன. இதுதவிர சீன அதிகாரிகள் கட்டாயமாக பல வெப்சைட்டுகளை மூடியுள்ளனர். ஆக மொத்தம் 18 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஆபாசத்திற்கு எதிரான சீனாவின் வேட்டை தொடருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பில்கேட்சை உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக்கிய மைக்கேல் லார்சன்!

Posted: 21 Sep 2014 09:56 AM PDT

larson

larsonமைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சை உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக மாற்றியதன் பின்னணியில் மைக்கேல் லார்சன் என்ற ஊழியரின் பங்கி இன்றியமையாதது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். ஆண்டுதோறும் இவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேச் செல்கிறது. இந்நிலையில், பில்கேட்சின் இந்த அபரிமிதமான முன்னேற்றத்தில் மைக்கேல் லார்சன் முக்கியப் பங்கு வகிப்பதாக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பில்கேட்சிடன் பணிக்குச் சேர்ந்தார் மைக்கேல் லார்சன். அப்போது பில்கேட்சின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்தான். சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், தனது கடும் உழைப்பால் பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தினார். கடும் நெருக்கடி சமயமொன்றில் பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்டை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தின் வருமானம் அதிகரித்தது. இன்று பில்கேட்சின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. லார்சனின் திறமையால் கிடைத்த பணமே இன்று பில்கேட்ஸின் அறக்கட்டளையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை! சி.சந்திரகாந்தன்

Posted: 21 Sep 2014 09:50 AM PDT

pilleyan_mahinda

pilleyan_mahindaவடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாகாணங்கள் ஒன்றாக இணைந்து செயற்படக் கூடிய சாத்தியம் சட்ட ரீதியாகவும் கிடையாது வடக்கு கிழக்கை மீள இணைக்கும் பிரச்சினையானது ஓர் அரசியல் ரீதியான பிரச்சினை. கிழக்கு வாழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் கீழ் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், வடக்குடன் இணைப்பதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து வரும் கோரிக்கையானது அரசியல் ரீதியானது எனவும் அடுத்த தேர்தல்களை இலக்கு வைத்து இவ்வாறு கோரி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மீள இணைப்பானது தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல எனவும் முஸ்லிம்கள் அதற்கு இணங்க மாட்டார்கள். இரண்டு முதலமைச்சர்கள் இருக்கின்ற இடத்தில் ஒரே முதலமைச்சர் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதேவேளை கிழக்கு வாழ் சிங்கள மக்களும் வடக்குன் இணைவதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாத தாத்தாவின் காதல் விளையாட்டு! கப்பல் ஏற்றிய மகள்!

Posted: 21 Sep 2014 09:46 AM PDT

old-man

old-manகனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பல்லுக் கட்டுவதற்காக வந்த 60 வயதுத் தாத்தா யாழ் நகரப் பகுதில் நின்ற யுவதி ஒருவரை தனது மகளின் வீட்டுக்கு கூட்டி வந்து பாலியல் லீலைகள் செய்து விட்டு அவளுக்கு 5 பவுண் தனது தங்கச் சங்கிலியையும் கொடுத்தனுப்பிய சம்பவம் நல்லுார்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. கனடாவில் பல்லுக் கட்டுவதற்காக பெருமளவு பணம் செலவாவதாகவும் அதனைக் காரணம் காட்டி தனது இரண்டாவது மகளுடன் கனடாவில் குடியேறிய தாத்தா தனது மனைவியையும் தனியே கனடாவில் விட்டுவிட்டு யாழ் நல்லூர்ப் பகுதியில் உள்ள தனது இன்னொரு மகளின் வீட்டுக்கு கடந்த மாதம் வந்துள்ளா். இதன் பின்னா் தாத்தா மன்மத லீலைகள் செய்தவண்ணம் இருந்துள்ளார். மகள் உயா் பதவி வகிக்கும் அரச உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும் மருமகனும் அரச உத்தியோகத்தராக இருப்பதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் குறித்த தாத்தா தனது மகளின் ஸ்கூட்டியை எடுத்து பகல் வேளைகளில் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவின் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாததால் மகள் அதிர்ச்சியடைந்து கேட்டதாகவும் அதன் போது தாத்தா தவறி வீழ்ந்து விட்டது எனத் தெரிவித்து சமாளித்ததாகவும் தெரியவருகின்றது. தாத்தாவின் நடவடிக்கைகளை தொடக்கத்தில் இருந்து அவதானித்து வந்த அயல் பகுதியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் குடும்பஸ்தா் தாத்தா சில வேளைகளில் வீட்டிற்கு யுவதிகளுடன் வருவதாக மகளுக்கு தெரிவி்த்துள்ளார். இதன் பின்னா் மகள் நடாத்திய விசாரணைகளின் போதே தாத்தா தனது தங்கச் சங்கிலியை யுவதிக்கு தாரை வார்த்துக் கொடுத்தது அம்பலமானது. கஸ்டப்பட்ட மாணவிக்கே தான் உதவி புரிந்ததாக சமாளிக்க முற்பட்ட தாத்தாவை மகள் அடுத்தநாளே கொழும்புக்கு அழைத்துச் சென்று கனடாவிற்கு விமானம் ஏற்றியதாகத் தெரியவருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™