மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மறுமணம் செய்த மருமகளுக்கு ரூ.100 கோடி சொத்து தானம் வழங்கிய பாஜக எம்.பி.
- தூர்தர்ஷனில் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு
- திருப்பதி மலைப்பாதையில் சந்திரபாபு நாயுடுவுடன் சென்ற பாதுகாப்பு கார்கள் மோதல்
- மராட்டிய தேர்தலில் திருப்பம்: ராஜ்தாக்ரேவுடன் பேச்சு நடத்த உத்தவ்தாக்ரே அழைப்பு
- முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் சென்றடைந்தார்: நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு
- கேரளாவில் அரசியல் கொலைகளை மாநில அரசு தடுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்
- திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
- சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பெங்களூர் நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு
- என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆவணமும் இல்லை: சிபிஐ கோர்ட்டில் கனிமொழி உறுதி
- 7 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
- தேர்வுக்குழு மூலம் நீதிபதிகளை நியமிப்பதே சிறந்தது: தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கருத்து
- அவமதிப்பு வழக்கில் 2 விஞ்ஞானிகள் மீது விதித்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
- ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும்: உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
- அரியானாவில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்: ஹூடா
- காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 4 தீவிரவாதிகள் கைது
- மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் திடீர் ராஜினாமா
- தொழிற்சாலைகள் தொடங்க தெலுங்கானாவில் 5 லட்சம் ஏக்கர் நிலம் தயார்- சந்திரசேகர ராவ்
- ஓம் பிரகாஷ் சவுதாலா அக்டோபர் 17-ம் தேதிக்குள் சரண் அடைய நீதிமன்றம் உத்தரவு
- கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க விரைவில் உத்தரவு- ராஜ்நாத் சிங்
| மறுமணம் செய்த மருமகளுக்கு ரூ.100 கோடி சொத்து தானம் வழங்கிய பாஜக எம்.பி. Posted: 26 Sep 2014 11:09 PM PDT குஜராத் மாநிலம் போர் பந்தர் தொகுதி பா.ஜனதா எம்.பி. வித்தல் ரடாடியா, இவரது மகன் கல்பேஷ். இவருக்கு மணிஷா (24) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். 9 மாதங்களுக்கு முன் கல்பேஷ் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார். 24 வயதிலேயே விதவையாகி விட்ட மணிஷாவுக்கு மறுமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதனால் |
| தூர்தர்ஷனில் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு Posted: 26 Sep 2014 10:34 PM PDT பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் நியூயார்க் போய்ச் சேர்ந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தையொட்டி டெல்லி தூர்தர்ஷன் செய்தி சேனலில் சிறப்பு நிகழ்ச்சி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அப்போது மோடியை பற்றி நிகழ்ச்சியின் பின்னணியில் செய்தி வாசிப்பாளர் பேசிக் கொண்டு |
| திருப்பதி மலைப்பாதையில் சந்திரபாபு நாயுடுவுடன் சென்ற பாதுகாப்பு கார்கள் மோதல் Posted: 26 Sep 2014 10:25 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்றசவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவம் தொடங்கும் முன் ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு 7மணிக்கு முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து வழங்கினார். பின்னர் ஏழுமலையானையும், பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய |
| மராட்டிய தேர்தலில் திருப்பம்: ராஜ்தாக்ரேவுடன் பேச்சு நடத்த உத்தவ்தாக்ரே அழைப்பு Posted: 26 Sep 2014 10:18 PM PDT மராட்டிய மாநில சட்ட சபை தேர்தல் அக்டோபர் 15–ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 25 ஆண்டுகளாக மராட்டிய மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதீய ஜனதா– சிவசேனா கூட்டணி சமீபத்தில் முறிந்தது. இது போல் 15 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்து விட்டது. |
| முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் சென்றடைந்தார்: நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு Posted: 26 Sep 2014 10:14 PM PDT தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தபோது கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு விசாரணையை சென்னையில் அமைக்கப்பட்ட தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா முன்னிலையில் இறுதி வாதத்தை முதலில் தொடங்கிய ஜெயலலிதாவின் வக்கீல் குமார், 25 நாட்கள் வாதாடி பல்வேறு முக்கியமான தகவல்களை, விவரங்களை எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான |
| கேரளாவில் அரசியல் கொலைகளை மாநில அரசு தடுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 26 Sep 2014 09:42 PM PDT கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மனோஜ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த கேரள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று சி.பி.ஐ. விசாரிக்க கேரள அரசு அனுமதி |
| திருப்பதி பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா Posted: 26 Sep 2014 09:26 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி–பூதேவி சமேத மலையப்பசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். |
| சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பெங்களூர் நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு Posted: 26 Sep 2014 09:15 PM PDT முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. இதையடுத்து, பெங்களூர் நகரம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. |
| என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆவணமும் இல்லை: சிபிஐ கோர்ட்டில் கனிமொழி உறுதி Posted: 26 Sep 2014 08:00 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளில், தி.மு.க.வுக்கு சொந்தமான கலைஞர் டி.வி. பெற்ற ரூ.200 கோடி பற்றிய வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கை சி.பி.ஐ. நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வாதம், டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு நேற்று |
| 7 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 26 Sep 2014 05:19 PM PDT நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழங்களில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தாண்டன் குழு 126 பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்தது. இதில் அடிப்படை வசதியில்லாமல் இருந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை அளித்தது. |
| முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு Posted: 26 Sep 2014 12:26 PM PDT முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா இன்று ஆஜர் ஆவதால் கோர்ட்டு வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது |
| தேர்வுக்குழு மூலம் நீதிபதிகளை நியமிப்பதே சிறந்தது: தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கருத்து Posted: 26 Sep 2014 12:07 PM PDT நீதிபதிகள் அடங்கிய தேர்வுக்குழு மூலமாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில், அந்த முறைக்கு பதிலாக, நீதித்துறை ஆணையம் மூலம் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, இன்று ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, நேற்று அவர் அளித்த பேட்டியில், |
| அவமதிப்பு வழக்கில் 2 விஞ்ஞானிகள் மீது விதித்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை Posted: 26 Sep 2014 11:43 AM PDT சென்னை ஆவடியில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் 'கிளார்க்காக' வேலை பார்த்தவர் ஜோசப்ராஜ். இந்த நிலையில் அந்த பள்ளிக்கூடத்தை ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூடிவிட்டது. |
| ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும்: உலக தங்க கவுன்சில் அறிவிப்பு Posted: 26 Sep 2014 10:20 AM PDT 2014-ஆம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. இதுபற்றி உலக தங்க கவுன்சிலின் இந்திய இயக்குநர் விர்பின் ஷர்மா கூறுகையில், 'இந்த ஆண்டின் முதல் பாதி தங்கத்திற்கு சற்று சவாலாக |
| அரியானாவில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்: ஹூடா Posted: 26 Sep 2014 08:54 AM PDT அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா நம்பிக்கை தெரிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அசாம் சட்டசபைக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தனது பாரம்பரிய தொகுதியான காகி சம்ப்லா கிலோய் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பூபிந்தர் சிங் |
| காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 4 தீவிரவாதிகள் கைது Posted: 26 Sep 2014 07:33 AM PDT காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீநகரில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ள சோபோர் நகரின் பாட்டாபோரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். |
| மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் திடீர் ராஜினாமா Posted: 26 Sep 2014 06:44 AM PDT மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், முதல்வர் பிருத்விராஜ் சவான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றது. காங்கிரசுடனான 15 ஆண்டு கால கூட்டணியையும் முறித்துக்கொண்ட அக்கட்சி, சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. |
| தொழிற்சாலைகள் தொடங்க தெலுங்கானாவில் 5 லட்சம் ஏக்கர் நிலம் தயார்- சந்திரசேகர ராவ் Posted: 26 Sep 2014 06:16 AM PDT ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக தேர்வு பெற்றார். அத்துடன் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். ஜி.எம்.ஆர். குழுமத்தின் சுலிச் வர்த்தக பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சந்திரசேகர ராவ் கூறியதாவது:- தெலுங்கானாவில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 5 லட்சம் ஏக்கர் நிலம் |
| ஓம் பிரகாஷ் சவுதாலா அக்டோபர் 17-ம் தேதிக்குள் சரண் அடைய நீதிமன்றம் உத்தரவு Posted: 26 Sep 2014 05:48 AM PDT அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா வரும் அக்டோபர் 17-ம் தேதிக்குள் சரண் அடையும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் இந்திய தேசிய லோக் தளம் தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம், 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. |
| கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க விரைவில் உத்தரவு- ராஜ்நாத் சிங் Posted: 26 Sep 2014 05:25 AM PDT கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் மனோஜ் கொலை செய்யப்பட்டார். இவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ''மனோஜ் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறினார். மேலும், ''இதுபோன்ற அரசியல் கொலைகள் நடைபெறும் இடத்தில் நேர்மையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |