Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கை ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது: பிரித்தானிய தமிழர் பேரவை!

Posted: 26 Sep 2014 03:39 AM PDT

Brithaniya-Tamilar

Brithaniya-Tamilarஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட வாய்மொழி மூலமான அறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட அவர், இதுதொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தனது கருத்துக்களை வழங்கியுள்ளார். குறித்த அறிக்கையில் உரிமை மீறல் தொடர்பாக பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம் ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது முக்கியமான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையாக உள்ளது. எனினும், இந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை மட்டும் பார்க்காமல், தமிழ் மக்கள் மிகக் குறுகிய காலகட்டம் தான் இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இன்னும் ஐந்து கிழமை கால எல்லை முடிவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் முன்வைக்க வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான அறிக்கை! ஏற்க மறுக்கும் இலங்கை 13வது திருத்தம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்: ஐ.நாவில் இந்தியா இலங்கையின் மனிதஉரிமை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் பிளவு பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல் ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ் எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார் ராஜபக்சவைக் கையாள்வது மேற்குலகத்திற்கு பெரிய விடயமல்ல: ச.வி.கிருபாகரன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ. நாவில் அருட்தந்தை இமானுவேல் அற்றிய உரை!

Posted: 26 Sep 2014 03:35 AM PDT

immanuvel

immanuvelபோரில் வெற்றியடைந்த பின் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனப்பிரச்சினைக்கு துரித அரசியல் தீர்வுகாணப்படும் எனவும் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் உறுதியளித்திருந்தாக உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இமானுவேல் தெரிவித்துள்ளார்.

எனினும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் குறிப்பாக வடக்கு கிழக்கில், கடந்த 5 வருடங்களில் மனித உரிமை மீறல்களை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அரசாங்கம் அடிப்படைவாத குழுக்களை பயன்படுத்தி வருகிறது எனவும் அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:

பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல் ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் கலந்து கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.

கிறிஸ்தவர்கள் இனங்களுக்கிடையில் உள்ள நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு முயற்சிப்பவர்கள் இதன் காரணமாக இலங்கை திருச்சபை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ நா வில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை என அருட் தந்தை இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் கனேஸ் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை அவசியம் என தாக்கல் செய்த அறிக்கை ஒரு முன்னேற்றகரமான விடயமாக இருக்கின்றது என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஸ் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையும் பொதுசன வாக்கெடுப்பும்: பொங்குதமிழ் பிரகடனம் வலியுறுத்தல்!

Posted: 26 Sep 2014 02:58 AM PDT

us

usஇனவழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இன அடையாளத்தைப் பேணுவதற்கும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்திய பொங்குதமிழ் பிரகடனம் , ஈழத்தமிழ் மக்களது பொதுசன வாக்கெடுப்புக்கான சனநாயக உரிமையினையும் அனைத்துலக சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா உரைக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரியும், நியூயோர்க் ஐ.நா பொதுச்சபை முன் இடம்பெற்றிருந்த பொங்குதமிழ் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வின் பிரகடனத்திலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முரசறையப்பட்ட பொங்குதமிழ் பிரகடனத்தின் முழுவடிவம்

பொங்குதமிழ் பிரகடனம் – 2014

அன்பார்ந்த தமிழீழ மக்களே !தமிழக மக்களே! உலகத் தமிழ் மக்களே!

பொங்குதமிழ் உணர்வெழுச்சியோடு நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாய் ஒன்றிணைந்திருக்கின்றோம்.
பொங்குதமிழ்! ஈழவிடுதலைப் போராட்ட தடத்தின் மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ளது.

இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளான தமிழீழத் தாயக மக்கள், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் தங்களின் அரசியல் பெருவிருப்பினை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியாக பொங்கியெழுந்திருந்தனர்.

அன்று, தமிழர் தாயகத்தில் பெருக்கெடுத்த மக்கள் எழுச்சி, நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழர் தேசங்களெங்கும் எழுச்சிப் பெருக்கெடுத்திருந்தது. அதன் தொடர்சியாக நீட்சியாக இன்று ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியுற்று நிற்கின்றது.

பொங்குதமிழ் !மக்கள் தமிழீழ மக்கள் எழுச்சியின் வடிவம்!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என அறைகூவிய தியாகி திலீபனின் அறவழிப்போராட்த்தின் நினைவேந்தல் காலமாகவும் இந்நாட்கள் அமைகின்றது.

இந்நாளில் தமிழகத்திலும் ஐந்த அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழர் எழுச்சிப் பேரணி எழுச்சிக் கோலம் பூண்டுநிற்கின்றது.

தமிழீழத் தாயக மக்கள் தங்களின் மனவெழுச்சியினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத அரசியல் வெளியற்ற நிலையில், புலத்திலும் தமிழகத்திலும் சமாந்திரமாக முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம், உலகின் மனச்சாட்சியினை மீண்டும் ஒருதடவை தட்டட்டும்.

எம்மினத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் நடாத்திய இனஅழிப்புக்கு நீதிகேட்டு, அனைத்துலக விசாரணையினை அனைத்துலக சமூகத்திடம் கோரியிருந்தோம்.

இன்று ஐ.நா மனித உரிiமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும், இலங்கை தொடர்பிலான அனைத்துலக விசாரணையின் முதலறிக்கையாக வாய்மொழியறிக்கை, ஐ.நா மனித உரிமைச்சபையில் இப்பொங்குதமிழ் நாளில் முன்வைக்கப்படுகின்றது.

வரலாற்றில் இந்நாள் பல்வேறு வகையிலும் முக்கியத்தும் உள்ளதாக அமைகின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் அனைத்துலகத்திடம் நாம் முன்வைத்த கோரிக்கையினை, இந்நாளில் மீண்டும் ஒருதடவை முன்வைக்கின்றோம்.

நாம் கோருவதெல்லாம் நமது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், தம்மைத் தாமே ஆளுமை செய்யும் உரிமை உடையவர்களாக இப்பூமிப்பந்தில் ஏனைய சுதந்திர மனிதர்களைப் போல் வாழும் உரிமையினைத்தான்.

நாம் கோருவதெல்லாம் நமது தேசத்தின் மீது இனஅழிப்பு புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனைத்தான். எமது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதனைத்தான்.

நாம் கோருவதெல்லாம் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ அரசை அமைக்க அங்கீகாரமும் ஆதரவும் தாருங்கள் என்பதனைத்தான்.

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் வடிவமாக விளங்கிய நடைமுறைத் தமிழீழ அரசினை, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்களத்துக்கு துணைநின்ற, அதே அனைத்துலக சமூகத்திடமே நாம் நீதி கோருகிறோம்.

அதனால்தான் அனைத்துலக பொதுமன்றமான ஐ.நா பொதுச்சபை முன், பொங்குதமிழராய் இனஅழிப்புக்கு பரிகார நீதிகோரி நாம் அனைவரும் அணிவகுத்து நிற்கின்றோம்.

இப்பொங்குதமிழின் எழுச்சி முரசமாக நாம் அறைகூவுவது ஈழத் தமிழர்களுக்கான பரகார நீதியின் முதற்படியாக, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் அமைத்துள்ள இலங்கை தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு, நாம் அனைவரும் சிங்கள இனஅழிப்பின் சாட்சியங்களை வழங்குவோம்!

ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சனநாயக உரிமையான பொது வாக்களிப்புக்கான வாய்ப்பினை, இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு உள்ளான ஈழத் தமிழர்களாகிய எமக்கும் கிடைக்க, ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகளுக்கும், அனைத்துலக சமூகத்திடமும் வழிசமைக்க வேண்டுகின்றோம்!

இலங்கைதீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியனவற்றில் இருந்து, தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இனஅடையாளத்தைப் பேணுவதற்கும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திடமும் ஐ.நா அங்கத்துவ நாடுகளிடம் நாம் கோருகின்றோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என பொங்குதமிழ் 2014ன் பிரகடனம் அமைந்திருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பௌத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் எழுதப்பட்ட புராணம் “மகாவம்சம் ஒரு மீளாய்வு” நூல் வெளியீட்டு விழா!

Posted: 26 Sep 2014 02:53 AM PDT

mahavamsam_released

mahavamsam_releasedமுன்னாள் சட்ட விரிவுரையாளர் தம்பு கனகசபையால் எழுதப்பட்ட "மகாவம்சம் ஒரு மீளாய்வு" என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார். நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியம், "முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன். இலங்கையை ஒரு பௌத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம். ஏக பௌத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை. சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன. அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர். அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன். துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள். பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான். அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பௌத்தர்களின் மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார். இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது. இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது. தமிழ் மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் "புன்னெறி" (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது என தெரிவித்துள்ளார். நூலின் முதல் படியை ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர் சட்டத்தரணி கரி ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூயோர்க்கில் ஒபாமாவை சந்தித்த மஹிந்த!

Posted: 26 Sep 2014 02:49 AM PDT

obama_mahinda_meeting

obama_mahinda_meetingஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் மிஷேல் ஒபாமா வழங்கிய வரவேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒபாமாவும் நியூயோர்க் சென்றுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சகிதம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியாருடன் எடுத்துக்கொண்ட உத்தியோகபூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பத்து வயது மகளுக்காக $100 மில்லியன் வருமானத்தை இழக்க தயாரான தந்தை!

Posted: 26 Sep 2014 02:42 AM PDT

erian

erianஉலகின் மிகப்பெரிய நிதி நிறுவன ஆலோசகராக இருந்த ஒருவர் தனது பத்து வயது மகளுக்காக வேலையை உதறிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் இனி ஜாலியாக காலத்தை கழிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 56 வயது Mohamed El-Erian, என்பவர் உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனமான PIMCO investment என்ற நிறுவனம் உள்பட பல நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை செய்து வருகிறார். இவருடைய ஆலோசனையை நம்பி நிதி நிறுவனங்கள் $2 டிரில்லியன் பணத்தை பலவகையிலும் முதலீடு செய்துள்ளன. இவருடைய வருட வருமானம் $100 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பத்து வயது ஒரே மகள் எழுதிய கடித்தத்தில் இதுவரை தான் 28 நிகழ்ச்சியில் தந்தையின் அருகில் இருப்பதை இழந்திருப்பதாகவும், இனியும் இதுமாதிரியான இழப்புகளை தன்னால் சகித்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளதால் உடனடியாக அந்த கடித்ததை பார்த்து நெகிழ்ந்த Mohamed El-Erian, தன்னுடைய அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, இனிமேல் மகள் மற்றும் மனைவியின் சந்தோஷத்திற்காக வாழ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™