மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது
- உ.பி.யில் மின்வெட்டு: ராகுல்காந்தியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
- ஸ்ரீகாளஹஸ்தி அருகே திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் மணமகன் ஓட்டம்
- இன்று முதல் 4 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓணம் விருந்து
- மகாராஷ்டிராவில் கழுகுகளுக்கான 7-வது உணவகத்தை திறக்கும் வனத்துறை
- கல்வி தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்: பிரணாப் முகர்ஜி
- அல்கொய்தா மிரட்டலை சந்திக்க இந்தியா தயார்: விமானப்படை தளபதி பேட்டி
- சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம்
- தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சாமி சிலைகளை மீட்டு ஒப்படைத்த ஆஸ்திரேலிய பிரதமர்
- காஷ்மீரில் மழை, வெள்ளத்துக்கு 88 பேர் பலி: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு
- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 80 லட்சம் வாழ்த்து எஸ்.எம்.எஸ்.கள்: பிரதமர் மோடி அனுப்பினார்
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது
- காஷ்மீரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து 25 பிரேதங்கள் மீட்பு
- பிரதமர் மாணவர்களுடன் உரையாடுவதில் என்ன தவறு? வெங்கையா நாயுடு கேள்வி
- ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது
- டெல்லி முதல் மந்திரியாக ஜகதீஷ் முகிக்கு அதிக வாய்ப்பு
- அல் கொய்தா பரபரப்பு வீடியோ: அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு
- சீனா, பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து ராணுவ தளபதி பிரதமர் மோடியுடன் பேச்சு
- சிறுவர்களுக்கு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்தது பாரத ஸ்டேட் வங்கி
- டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வை அழைப்பது ஜனநாயக கற்பழிப்புக்கு சமமானது:ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு
| மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது Posted: 05 Sep 2014 10:44 PM PDT மும்பையைச் சேர்ந்தவர் வாசுதேவ் நம்பியார். சிவசேனா கட்சியின் துணைத் தலைவரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு படிக்கும் 15 வயது மாணவியை வாசுதேவ் நம்பியார் ஆசைவார்த்தை கூறி கற்பழித்தார். தொடர்ந்து மாணவியை மிரட்டியே கற்பழித்து வந்துள்ளார். இதை வெளியில் சொன்னால் பள்ளியில் இருந்து நீக்கி விடுவேன் என்றும் மிரட்டல் |
| உ.பி.யில் மின்வெட்டு: ராகுல்காந்தியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் Posted: 05 Sep 2014 10:13 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி அந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களிடம் குறை கேட்டுவரும் ராகுல் காந்தி, அங்குள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது பரதீய கிசான் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமானோர் அங்கு வந்து மின் தடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீகாளஹஸ்தி அருகே திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் மணமகன் ஓட்டம் Posted: 05 Sep 2014 09:36 PM PDT ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த வரதய்யபாளையம் மண்டலம் தாதம்பேடு பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜாராம் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது, மணமகனுக்கு ரூ.1½ லட்சம் வரதட்சணையாக தருவதுடன், மணப்பெண்ணுக்கு 10 பவுன் நகைகள் போட்டு அனுப்புவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. |
| இன்று முதல் 4 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓணம் விருந்து Posted: 05 Sep 2014 09:26 PM PDT பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை, ஓணம் பண்டிகையையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து சன்னதியில் அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டினார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று 6–ந்தேதி முதல் வருகிற 9–ந்தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவில் நடைதிறந்திருக்கும். இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மாலய தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ப |
| மகாராஷ்டிராவில் கழுகுகளுக்கான 7-வது உணவகத்தை திறக்கும் வனத்துறை Posted: 05 Sep 2014 09:20 PM PDT குறைந்துவரும் அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்க இந்திய வனத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் 'சர்வதேச பிணந்தின்னி கழுகுகளின் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படும் இன்று கழுகுகளின் வரத்து அதிகமாகக் காணப்படும் மகாராஷ்டிர மாநிலத்தின் நக்சல் பாதிப்பு உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் இந்திய வனத்துறை அலுவலகம் அவைகளுக்கான ஏழாவது உணவகத்தைத் திறக்க உள்ளது. ஏற்கனவே மரக்போடி, மடேடுகும், நிம்கோன், |
| கல்வி தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்: பிரணாப் முகர்ஜி Posted: 05 Sep 2014 08:09 PM PDT நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்வித்துறையில் சாதனை படைத்த 357 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:- |
| அல்கொய்தா மிரட்டலை சந்திக்க இந்தியா தயார்: விமானப்படை தளபதி பேட்டி Posted: 05 Sep 2014 07:40 PM PDT ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் அது தன் புனித போரை தொடங்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசிய வீடியோ வெளியானது. இதுதொடர்பாக அமெரிக்க ஊடகங்களும், புலனாய்வு அமைப்புகளும் தகவல் வெளியிட்டன. இந்தியாவில் அல்கொய்தாவி |
| சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம் Posted: 05 Sep 2014 04:52 PM PDT தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஆர்.எம்.லோதாவின் பதவிக்காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் 64 வயதான எச்.எல்.தத்து புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு |
| தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சாமி சிலைகளை மீட்டு ஒப்படைத்த ஆஸ்திரேலிய பிரதமர் Posted: 05 Sep 2014 04:11 PM PDT தமிழகத்தின் கோயில்களில் இருந்து திருடிச் செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இந்திய அரசிடம் ஒப்படைத்தார். அந்த சிலைகளை மீட்டுத் தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கையையடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அவற்றை மீட்டுத் தரும்படி அந்நாட்டு அரசை |
| காஷ்மீரில் மழை, வெள்ளத்துக்கு 88 பேர் பலி: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு Posted: 05 Sep 2014 03:28 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2-ம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஜம்மு பகுதியில் ஜீலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிற மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பாலங்கள் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. ஜம்முவின் 10 மாவட்டங்களும் காஷ்மீரின் 5 மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்களை சுமார் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் தரைவழியாகவும், விமானங்கள் மூலமாகவும் காப்பாற்றி, கரை சேர்த்தனர். |
| மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 80 லட்சம் வாழ்த்து எஸ்.எம்.எஸ்.கள்: பிரதமர் மோடி அனுப்பினார் Posted: 05 Sep 2014 02:56 PM PDT ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள 80 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குபிரதமர் நரேந்திர மோடி நேற்று எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். களைப்படையா உழைப்பின் மூலம் பல தலைமுறைகளுக்கு கற்பிக்கும் பணி வாயிலாக அறிவை பரவச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களை மோடி தனது வாழ்த்துச் செய்தியில் பெரிதும் பாராட்டியுள்ளார். இதே போல், பிரதமர் அலுவலகத்தின் மூலமாக நேற்று 11 லட்சம் இ-மெயில்கள் வாயிலாகவும் |
| இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது Posted: 05 Sep 2014 01:52 PM PDT இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டும் கையெழுத்திட்டனர். உலகில் யுரேனியம் தாதுவை அதிகம் கொண்ட 3-வது மிகப்பெரிய நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. அணு மின்சக்தி உற்பத்திக்கு மிகவும் |
| காஷ்மீரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து 25 பிரேதங்கள் மீட்பு Posted: 05 Sep 2014 12:44 PM PDT ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மழைவெள்ளம் சூழ்ந்து பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ரஜோரி மாவட்டம் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக 63 பேர் ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில், மணமகன், மணமகள் உள்பட பலர் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. |
| பிரதமர் மாணவர்களுடன் உரையாடுவதில் என்ன தவறு? வெங்கையா நாயுடு கேள்வி Posted: 05 Sep 2014 11:59 AM PDT பிரதமர் மோடி ஆசிரியர் தின சிறப்பு உரையாற்றினார். அவற்றின் ஒரு பகுதியாக நேற்று மாலை பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த கலந்துரையாடலை ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் |
| ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது Posted: 05 Sep 2014 11:59 AM PDT வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அயூப் கான் என்பவனை கடந்த ஜூலை மாதம் கைது செய்த போலீசார், திகார் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த அயூப் கான், நேற்று காலை சுமார் 6 மணியளவில் புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவளை துடிதுடிக்க கத்தியால் குத்திக் கொன்றான். |
| டெல்லி முதல் மந்திரியாக ஜகதீஷ் முகிக்கு அதிக வாய்ப்பு Posted: 05 Sep 2014 11:41 AM PDT டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்ற 49 நாட்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து, அதற்கான குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் அனுப்பிய அவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும்படி வலியுறுத்தினார். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. |
| அல் கொய்தா பரபரப்பு வீடியோ: அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு Posted: 05 Sep 2014 11:00 AM PDT இந்தியாவில் அல்-கொய்தா அமைப்பின் கிளை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக உள்ள அய்மன் அல் ஜவாஹிரி கூறியுள்ளார். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 55 நிமிடம் ஓடும் வீடியோ காட்சி |
| சீனா, பாகிஸ்தான் எல்லை நிலவரம் குறித்து ராணுவ தளபதி பிரதமர் மோடியுடன் பேச்சு Posted: 05 Sep 2014 10:46 AM PDT ராணுவ தளபதி தல்பீர் சிங், சமீபத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். இன்று பிரதமர் மோடியை அவர் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவும் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கருதப்படுகிறது. சில முக்கியமான |
| சிறுவர்களுக்கு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்தது பாரத ஸ்டேட் வங்கி Posted: 05 Sep 2014 10:23 AM PDT 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கியில் தனியாக கணக்கு தொடங்கி, அதனை பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. சிறுவர்கள் வங்கி கணக்கை தொடங்க ரிசர்வ் வங்கி வழிகாட்டல்களை வெளியிட்ட பின்னர் 18 வயதுக்கு குறைவான சிறுவர் சேமிப்புக் கணக்கை |
| டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வை அழைப்பது ஜனநாயக கற்பழிப்புக்கு சமமானது:ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு Posted: 05 Sep 2014 10:19 AM PDT டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்ற 49 நாட்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, டெல்லியில் ஆட்சி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |